தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் தனது வாழ்நாளை அர்ப்பணித்துப் புரட்சிப் பாடல்கள் இசைத்த கோவன் என்ற பாடகரை ஜெயலலிதா அரசு கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது. இதற்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக நேற்று -09.11.201- லண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகத்தின் முன்பாக கோவனை விடுதலை செய்யக் கோரி போராட்டம் ஒன்று நடைபெற்றது.
பறை முழக்கத்துடன் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்ட இப் போராட்டத்தின் போது இந்தியத் தூதரகத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அனுமதி கேட்கப்பட்டது. அவ்வேளையில் அனாகரீகமாக நடந்துகொண்ட இந்தியத் தூதரக அதிகாரிகள் பறை விடுதலைக்கான குரல் அமைப்பினரை திட்ட ஆரம்பித்தனர்.
அறிக்கை சமர்ப்பிக்க முற்பட்ட வேளையில் கதவை அடித்து மூடி வெளியேற்றினர். இறுதியில் போராட்டத்திற்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரியின் விடாத முயற்சியால் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தனது கடமை நாட்களில் பல்வேறு போராட்டங்களுக்குப் பாதுகாப்பு அதிகாரியாகக் கடமையாற்றியதாகவும், இதுவரையில் தூதரக அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொண்டதைக் சந்திததில்லை எனவும் போலிஸ் அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தெரிவித்தார்.
இந்திய பார்ப்பனீய அதிகாரவர்க்கத்தின் திமிர் நாடுகடந்தும் வெளிப்படுத்தப்படுகிறது என்பதற்கு இதுவெல்லாம் உதாரணங்கள். இந்திய மக்களை உலக நாடுகள் முழுவதும் அவமானப்படுத்தும் இந்த அதிகாரவர்க்க அடியாள் படைகள் கோவனின் குரலை ஒடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
பறை விடுதலைக்கான குரல் அமைப்பைச் சார்ந்த ஒருவர் கருத்துத் தெரிவித்த போது, இந்தியத் தூதரகத்திடமிருந்து ஒரு வாரத்திற்குள் பதில் கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.
இந்திய ‘ஜனநாயகத்தின்’ அருவருப்பான முன்முகம்: