அமெரிக்கா இந்திய உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு வன்னியில் நடைபெற்ற இனவழிப்பின் போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீதான அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படுவதாகத் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. இது எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை அடுத்த மாதம் 25ம் நாள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்க இப்போது சமர்ப்பிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பைத் தலைமை தாங்கிய ராஜபக்ச அரசைத் தண்டிப்படதற்காக ஐ.நாவையும் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளையும் நம்பிச் செயற்படுமாறு கடந்த ஆறு வருடங்களாக தமிழ் தலைமைகள் மக்களை ஏமாற்றி வந்தன. தகவல்களையும் மனித உரிமை தொடர்பான பிரச்சனையையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போரின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளான அமெரிக்காவும் அதன் நேச அணிகளும் தமது தேவைக்கு ஏற்ப அதனைப் பயன்படுத்த ஆரம்பித்தன.
ராஜபக்சவை மிரட்டி தமக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ள போர்க்குற்ற விசாரணை நாடகம் பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்களதும், போராளிகளதும் இழப்பும் தியாகமும் ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு பயன்படுத்தப்பட்டு போர்க்குற்ற விசாரணை கிடப்பில் போடப்படும் என இனியொரு உட்பட பலர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். ஒரு புறத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் தமது பிழைப்பிற்காகவும் மறுபுறத்தில் அவர்களின் எஜமானர்களான ஏகாதிபத்திய நாடுகள் தமது ஆதிக்கத்திற்காகவும் பயன்படுத்திக்கொண்ட போர்க்குற்ற விசாரணை நாடகம் இப்போது முடிவடையும் நிலையை எட்டியுள்ளது.
வன்னி இனப்படுகொலை தொடர்பாக உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்,இனப்படுகொலை இனச்சுத்திகரிப்புத் தொடர்பாக போராட்டப் பொறிமுறை ஒன்றை ஏனைய ஜனநாயக முற்போக்கு சக்திகளுடன் இணைந்து உருவாக்கவும் தவறிய தமிழ்த் தலைமைகள் அனைத்தையும் சிதைத்துச் சீரழித்துள்ளன.
வன்னிப் படுகொலைகள் தொடர்பாக மக்கள் மத்தியிலிருந்த இறுதி நடவடிக்கையும் அழிக்கப்பட்டுவிடும் நிலை தோன்றியுள்ளது. இந்த அழிப்பை பிரபாகரனின் பெயராலும் புலிகளின் அடையாளத்தாலும் நடத்தி முடிக்கத் துணை சென்றவர்கள் தமிழ்ப் பிழைப்புவாதத் தலைமைகளே.
அப்போ சர்வதேச அளவில் யாரைத்தான் நம்புவது ?
பிரேரணையை கொண்டு வந்த அமெரிக்காவை நம்பக்கூடாது , ஒத்துப்போக கூடாது என்றால் வேறு யார் இலங்கைக்கு எதிராக பிரேரனை கொண்டு வருவார்கள் ?
#
ரஷ்யாவா ? சீனாவா ?
அதையும்தான் சொல்லி விடுங்களேன் ?
அரசுகள் எதனையும் நம்பாமல் இருப்பது தான் புத்திசாலித்தனம். எங்களை நம்புவோம். எங்களைப் போல ஒடுக்கப்பட்டுள்ள மக்களை நம்புவோம். மக்களில் தங்கியுள்ள அமைப்புகளை நம்புவோம். இணைந்து செயற்படுவோம்.
மங்கள அண்மையில் ஒரு கருத்துச் சொல்லியிருந்தார்.”எமது அரசு இந்தியா சார்பாக நடப்பதாகச் சிலர் சொல்லியிருந்தனர். அது தவறு. நாம் எமது நலனிலிருந்தே எதனையும் அணுகுகிறோம். நாம் இலங்கை சார்பானவர்கள்” இதனையே சகல நாடுகளிற்கும் பிரயோகிக்கலாம். ஒரே ஒரு விடயத்தை மட்டும் கவனிக்கவும்: அவர்களது மொழியில் நாடு என்றால் அங்குள்ள முதலாளிகள் என்று பொருள். மக்கள் அல்ல.
இனியொருவின் இந்த கேள்வி குழந்தைபிள்ளைத்தனமானது.
பலமானவா்களின் கைகளில் இந்த உலகம் உள்ளது அவா்களிடமிருந்து சிறிய நாடுகளோ அல்லது சிறுபான்மை இனங்களோ விடுபட்டு வாழ்வதென்பது மிகவும் கடினம் என்பதை பல சம்பவங்கள் நமக்கு உணா்த்தி நிற்கின்றன இறுதியாக கியூபாவின் நிலையை நாம் பாா்க்கலாம்.
என்னதான் பொருளாதார தடைகள் வெற்றியளிக்கவில்லை என்று கூறினாலும் கியூபாவினால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்பதையும் நாம் ஒத்துக்கொள்ளவேண்டும்.
நாம் போராடவேண்டுமே தவிர யாரையும் நம்பி பிரயோசனமில்லை என்றால் நாம் அறுபது வருடங்களாக போராடினோம் என்றோ அல்லது முப்பது வருடங்களாக போராடினோம் என்று சொல்கிறோமே அதில் எதை சாதித்தோம் அல்லது அந்தப்போராட்டம் மக்கள் சாா்ந்ததல்ல ஆகவே மக்களை இணைத்து இடது சாாியவளியில் போராடினால்தான் இவா்கள் நமது விடுதலையை அங்கீகாிப்பாா்கள் என்கின்றீா்களா?
அமொிக்கா கொண்டுவந்த பிரேரணைகளை ரஸ்ஷயாவும் சீனாவும் எப்போதுமே எதிா்த்தன அதற்கு நாம் கூறிய நியாயம் என்னவென்றால் அவா்கள் அமொிக்காவின் முடிவுகளிற்கு எதிராக நிற்பது வழமை என்று அப்படியானால் இப்போது அமொிக்கா இலங்கைக்கு சாதகமான முடிவை எடுக்கப்போகுதென்றால் இவா்கள் என்ன செய்யப்போகின்றாா்கள் தமிழருக்கு தமிழீழமே முடிவென்று கூறப்போகின்றாா்களா ?
உலக அரங்கில் இன்னும் அமொிக்காதான் அழிப்பவனும் ஆக்குபவனுமாக உள்ள நிலையில் நாம் சும்மா தவழைகள் போன்று கத்துவதால் நடக்கப்போவது எதுவும் இல்லை.
குமார்
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? அமெரிக்கா சீனா ரஷ்யா இந்தியா ஆகிய பலம் வாய்ந்தவர்களில் ஒருவரை நம்புவோம் என்றா?
அவர்களில் யாருக்கும் எங்களைப்பற்றி எந்தவொரு கவலையுமில்லை. அவர்களைப் பொறுத்தவரை அவர்களிடையே நடைபெறும் சதுரங்க ஆட்டத்தில் நாமெல்லாரும் பகடைக் காய்கள். அவ்வளவு தான்.
“நாம் மக்களை இணைத்து இடது சாரிய வழியில் போராடினால் தான்” என்று கேள்வி கேட்க முன் அப்படியென்றால் என்ன என்று அறிந்து கொள்ளுங்கள். “இவா்கள் நமது விடுதலையை அங்கீகாிப்பாா்களா” என்கிற அவாவிற்கு இடமிருக்காது.
இலங்கை மக்களின் விடுதலை இந்தியப் பூகோள அரசியலுடன் நெருங்கிய தொடர்புடையது.
திரு Voter
நம்புவதற்கும் எதிா்பாா்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக நான் கருதுகிறேன் இதையே பிடல் காஸ்ற்ரோவும் அண்மையில் அமொிக்காவின் கியூபா மீதான மாற்றத்தையிட்டு கூறியிருந்தாா் அதாவது அமொிக்காவின் மாற்றத்தை வரவேற்கிறேன் ஆனால் முழுதாக நம்பமுடியாது.
தமிழினத்தின் நிலை அதாவது புலம், புலம்பெயா்ந்தவா்கள் நான், நீங்கள் யாவருமே இப்போதய நிலையில் வல்லரசுகளின் சதுரங்க விளையாட்டில் ஒரு காய் நழுவி பாலுக்குள் விழுந்து விடாதா என்று எண்ணவேண்டிய ஒரு துா்ப்பாக்கிய நிலையில் உள்ளோமேயல்லாது யாரையும் நம்பவில்லை.
இலங்கை தமிழ் மக்களின் விடுதலை இந்திய பூகோள அரசியலுடன் நெருங்கிய தொடா்புடயதென்பதை 30 வருடங்களுக்கு முன்பே உத்தரப்பிரதேச பள்ளத்தாக்குகளின் இடையில் சிலா் பாடம் நடத்த நாங்கள் படித்திருந்தோம் ஆதலால் அது ஒன்றும் புதிதல்ல.