இலங்கை அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அதிகாரத் தரகராகச் செயற்பட்டவரும் பரபப்புச் செய்தியாளருமான வித்தியாதரன் ஆரம்பித்துள்ள புதிய கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவராக பிரபாகரனின் மெய்பாதுகாவலராகச் செயற்பட்ட வேந்தன் அல்லது சிவானந்தன் நவீந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இத் தகவல்களை இலங்கை அரசின் லேக் ஹவுஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இலங்கை ஒற்றையாட்சிப் பாராளுமன்றத்தில் ஆசனங்களைக் கைப்பற்றும் நோக்குடன் வித்தியாதரனால் பயன்படுத்தப்பட்ட வேந்தன் போரில் இரண்டு கால்களையும் இழந்தவர். தவிர, காமினி அல்லது ராசையா தர்மகுலசிங்கம் என்ற மற்றொரு கால்களை இழந்த விடுதலைப் புலிகள் உறுப்பினரும் போட்டியிடுகிறார்.
இலங்கை பேரினவாத பாராளுமன்றத்திற்குச் சென்று தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாக மக்களை ஏமாற்றும் வித்தியாதரன் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒற்றையாட்சியை அங்கீகரிக்கின்றன.
மக்களதும் போராளிகளதும் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் இக் கும்பல்கள் போராட்டத்தின் நியாயத்தையே கேள்விக்கு உட்படுத்துகின்றன.
எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குத் தம்மை ஏமாற்றப்போகிறவர்கள் யார் என மக்கள் தெரிந்தெடுப்பதற்குப் பதிலாக தேர்தலைப் புறக்கணித்தால்,
1. பிழைப்பு வாதிகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற செய்தியை மக்கள் உலகிற்குச் சொல்லலாம்.
2. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் பாராளுமன்ற ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள மக்களுக்கும் உலக மக்களுக்கும் தமிழ்ப் பேசும் மக்கள் தெளிவுபடுத்தலாம்.
3. குறைந்தபட்சம் ஒற்றையாட்சி முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான களமாக தேர்தல் புறக்கணிப்பை மக்கள் பயன்படுத்தலாம்.
4. தேர்தல் முறையில் நம்பிக்கையில்லை என்ற சுலோகத்தை முன்வைத்தால் மட்டுமே வாக்குப் பொறுக்கும் நயவஞ்சகர்களுக்கு வெளியில் மக்கள் சார்ந்த அரசியல் உருவாகும்.
தேர்தல் புறக்கணிப்பு தொடர்பான பதிவு:
வல்லூறுகள் எச்சரிக்கை!… ஏன் தேர்தலைப் புறக்கணிப்பது அவசியம்?
NGO ஊடாக மக்களைச் சூறையாடும் ஏகாதிபத்தியங்கள்:
பொது பல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கிய சதி உறுதியாகிறது :வேறு எந்த அமைப்புக்கள்?
அமெரிக்காவிற்கு போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டது எப்படி: