இலங்கையின் அண்மைய வரலாற்றில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் பேரணி இன்று ஐந்தாவது நாளாக பெரும் மக்கள் திரளின் ஆதரவுடன், இராணுவம், போலிஸ் மற்றும் அரசின் அச்சுறுத்தலுடன் தொடர்கிறது. இப் பேரணி ஒருவகையான மத சாயத்துடன் நடத்தப்படாலும், உள் முரண்பாடுகளில் சிக்கியிருந்த சிறுபான்மைத் தேசிய இனங்களின் இணைந்து நடத்துவதும். மலையக மக்களின் கூலி உயர்வு பிரதான முழக்கமாக முன்வைக்கப்பட்டிருப்பதும் புதிய நம்பிக்கை தரும் அரசியலை முன்வைக்கிறது. இதனை சிங்கள மக்களையும் இணைத்துக்கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கூட முன்னிறுத்தி ராஜபக்ச கும்பலைப் பலவீனப்படுத்தலாம்.
இதன் மறுபக்கத்தில் சிங்கள பௌத்த பேரினவாத அரசு இப் போராட்டம் புலம்பெயர் புலிகளால் தூண்டிவிடப்படுவதாக சிங்கள மக்கள் மத்தியில் தனது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஊடாக தனது பலத்தைச் சரியவிடாமால் பாதுகாத்துக்கொள்கிறது. ராஜபக்ச அரசையும் பேரினவாதத்தையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் நாடிலிருந்து போராட்டத்திற்கு ஆதரவாக புலிகளின் தொடர்ச்சி நானே எனக் கூறும் சீமான் என்ற அரசியல் கோமாளியின் அறிக்கை வெளியிடப்பட்டது. நேற்று போராட்டத்திற்கு ஆதரவாக புலி வியாபாரம் ஆரம்பித்துவிட்டது, வாகனப் பேரணி ஒன்று பிரித்தானியாவில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சில மணி நேரங்களில் புலிகளின் கொடியுடன் ஒரு குழந்தை பேசுவதாக காணொளி வெளியிடப்பட்டது. ஆக, இவர்கள் அனைவரும் பேரினவாத அரசின் ஆதரவாளர்களா என்ற கேள்வி எழுகிறது. போராடும் மக்களைத் தமது வியாபார நலன்களுக்காகக் காட்டிக்கொடுக்கும் இக் கும்பல்கள் பேரினவாத பாசிச இலங்கை அரசின் திட்டத்திற்கு ஏற்ப செயற்படுகின்றன.
இன்றைய ராஜபக்ச காட்டுமிராண்டி அரசின் உருவாக்குவதற்கு புலம் பெயர் புலிகளின் பங்களிப்பு பிரதானமானது. அதனை வீழாமல் பாதுகாக்க இந்தக் கும்பல் முயற்சிக்கிறது.