முன்னை நாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள் சிலர் கட்டவிழ்த்துவிட்ட விச ஊசி வதந்தி இனியொரு வெளியிட்ட ஆதாரபூர்வமான தகவல்களால் பிசுபிசுத்துப்போனது.
“விஷ ஊசி விவகாரம் : மரணித்த போராளிகளின் விபரங்களும் பொய்களும்“
போராளிகளில் பலரை மரணபயத்திற்கு உட்படுத்திய இந்த வதந்தியின் பின்னணியில் வட மாகாண சபையைச் சேர்ந்த சிலர், சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.
போராளிகளைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் வடமாகாண சபையின் விக்னேஸ்வரனும் அவரை இயக்கும் நிமலன் கார்த்திகேயன் குழுவினரும் நடவடிக்கைகளை கடந்த ஏப்பிரல் மாதத்திலிருந்து முடுக்கி விட்டிருந்தனர். போராளிகள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தி மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் அவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்கும் தந்திரோபாயமே விச ஊசி என்ற வதந்தியின் பின்புலம் என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
இந்த நிலையில் வடமாகணத்தில் இதுவரை மருத்துவப் பரிசோதனையை மேற்கொண்ட புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்படவில்லை என வடமாகண மாவட்ட வைத்தியசாலை விசேட பரிசோதனை வைத்தியர்கள் இன்று கூறியுள்ளனர்.
இதனைத் திரிபு படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சார்ந்த செய்தி வியாபார இணையம், உள் நாட்டு மருத்துவர்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனப் போராளிகள் தெரிவித்ததாக அடுத்த பொய் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட போராளிகளில் இதுவரை மரணித்த ஐந்து போராளிகளின் பெயர் விபரங்களை இனியொரு வெளியிட்ட பின்னரும் கட்டவிழ்த்துவிடப்படும் புதிய வதந்திகளின் பின்னணி முழுமையாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
ஆரம்பத்தில் இனியொரு கூறியது என்னவென்றால், இப்படி ஒரு பொய்யான செய்தியை உருவாக்கி பின்பு அது உண்மை இல்லை என்று தெளிவுபடுத்துவதன் மூலம் இராணுவத்தினா் குற்றமற்றவா்கள் என்பதுடன் இதே போலவே இனக்கொலையையும் இராணுவம் நடத்தவில்லை என்று நிரூபிப்பாா்கள் என்று ஆனால் இன்று விக்னேஸ்வரன் போராளிகளை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே இதை செய்கின்றாா் என்கின்றது. ஏன் அவா் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயல்கின்றாா்?? அத்தோடு சந்தேகிப்பதாக கூறுவதை வைத்து உண்மை என்று நாம் எப்படி நம்ப முடியும் இனப்படுகொலையை விசாாிக்க வெளிநாட்டினா் தேவை என்று ஏன்றுக்கொள்ளும் இனியொரு இந்த உண்மையை கண்டறிய நமது மருத்துவா்களே போதும்
என்கின்றீா்கள்ஏன் அரசாங்கம் தமிழ் மருத்துவா்களைத்தான் அனுமதிப்பாா்கள் என்ற நம்பிக்கையா எல்லாவற்றையும் பாா்க்கும்போது
நீங்கள் யாவருமே தமிழா் தலைவிதியை வைத்து போலி அரசியல் நடத்த முனைகின்றீா்களோ என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
குமார்,
இது தொடர்பாக முன்னமே உங்களுக்குப் பதிலளித்துள்ளோம். தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட 107 போராளிகள் மரணித்துள்ளதால் ஏனைய போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டுள்ளதாக உருவாக்கப்பட்ட வதந்தியின் அடிப்படையிலேயே இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது, இந்த நிலையில் முன்னை நாள் போராளிகள் பலர் இது தவறான தகவல் என இனியொருவிற்குத் தெரிவித்தது மட்டுமன்றி மரணித்தவர்களின் முழு விபரத்தையும் வழங்கினர். 12 முகாம்களிலும் ஆக, 5 போராளிகளே இதுவரை மரணித்துள்ளனர் என நாம் ஆதார பூர்வமாக வெளிப்படுத்தினோம். இந்த 5 பேரைத் தவிர ஒருவராவது மரணித்திருந்தால் எமக்கு ஆதாரத்தைச் சமர்ப்பியுங்கள். நாம் எமது முடிவை மறுபரிசீலனை செய்கிறோம். ஆக, வதந்திகளின் அடிப்படையில் உருவாக்கபட்ட கட்டுக்கதையே இது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்வதும் எமது கடமை, ஊடகம் என்பது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவது மட்டுமன்றி அதன் தவறான தகவல்களின் பின்புலத்தையும் அறியத்தரவேண்டும். தவிர, விக்னேஸ்வரனை இயக்குவதாகக் கூறும் நிமலன் கார்த்திகேயன் மலேசியாவில் வசிக்கும் ஒரு முன்னை நாள் போராளியைத் தொடர்புகொண்டு, போராளிகள் தொடர்பாகத் தகவல்கள் சேகரிப்பதற்காக வடமாகாண சபை ஒருவரை நியமிக்கப் போவதாகவும் அதற்கு அவரை இணைத்துக்கொள்ள விரும்புவதாகவும் கேட்டுக்கொண்ட ஆதாரங்கள் எம்மிடமுண்டு. விச ஊசி விவகாரம் தொடர்பாக பல போராளிகள் அச்சமடைந்தும், அரசியல்வாதிகள் மீதுகோபத்துடனும் பல தகவல்களை எம்முடன் பரிமாறிக்கொண்டனர் என்பது உண்மை. அவற்றை சரி தவறு என ஆராய்ந்ததன் பின்பே செய்தி வடிவில் வெளியிட்டோம்.