இந்தியாவில் மோடி அரசு ஆட்சிக்கு வந்தால் விடுதலை ஈழம் கிடைத்தது போலத் தான் என்று 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஒரு கூட்டம் முழங்கிக்கொண்டிருந்தது. இன்றும் தூறல் போல அதே கூட்டம் ஆங்காங்கு அழிவின் ஆரம்ப கட்டங்களை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. இன்று கௌரி லங்கேஷ் என்ற ஊடகவியலாளரும், அனீதா என்ற இளம் தமிழச்சியும் நமது தேசத்தின் கொல்லைப் புறத்தில் மோடி அரசின் இந்து பாசிசத்தால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் காவிக் கும்பலின் எதேச்சதிகாரம் ஒவ்வோரு மனிதாபிமானியையும், ஜனநாயகவாதியையும், முற்போக்காளனையும் மிரட்டுகிறது. ஒரு வகையில் சமூகத்தின் அதிகார சக்திகளின் ஆதிக்க சிந்தனையாகவிருந்த பார்பபனீயம் இன்று சமூகத்தின் சட்ட ஒழுங்குமுறையாக நிறுவனமயப்படுத்தபட்டுக்கொண்டிருக்கிறது.
இந்திய பாரதீய ஜனதா அரசின் பாசிசம் இந்தியா முழுவதும் தலைவிரித்தாடுகின்றது. உணவு, உடை, கல்வி கலாச்சாரம் என்ற எல்லாத் துறைகளிலும் அது தனது விச வேர்களைப் பரப்பியிருக்கின்றது.
இந்திய மேட்டுக்குடிகளையும், ஆதிக்க சாதியின் அதிகார மட்டத்தையும் மருத்துவத் துறைக்குள் அதிகமாக நுளைப்பதற்கான, குலக் கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான இந்து பாசிச அரசின் திட்டமே நீட் தேர்வு என்பதை பாரதீய ஜனதாவின் உறுப்பினர்களில் பலர் மறைமுகமாகச் சொல்கிறார்கள்.
இந்தியா எங்கும் நீட் அறிமுகப்படுத்தப்பட்டாலும், தமிழகம் மட்டும் போராட்டத்திற்குத் தயாராகிவிட்டது எங்கோ ஒரு மூலையில் மனித குலத்திற்கு நம்பிக்கை தருகிறது.
பாரதீய ஜனதா ஆர்.எஸ்.எஸ் கிரிமினல் அரசின் கட்டுப்பாட்டிலுள்ள உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு தேவையா இல்லையா என்ற வழக்கு நிலுவையிலுள்ள போதே, அதற்கன வழக்குகளை உச்ச நீதிமன்றம் தடை செய்கிறது.
இன்று நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டங்களுக்கான தடையைப் பிறப்பித்திருக்கிறார்கள்.
சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக தடை உத்தரவைப் பிறப்பித்திருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறுகிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டமாகட்டும், நெடுவாசல் போரட்டமாகட்டும், இவை போன்ற அரச எதிர்ப்பு போராட்டங்களாகட்டும் தமிழகம் சட்ட ஒழுங்கை மீறியதில்லை. மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கைக்குக் கூடப் பாதிப்பற்ற வகையில் நடை பெறும் போராட்டங்களைத் தடை செய்வதன் ஊடாக மோடியின் பயங்கரவாத அரசு வன்முறையைத் தூண்டுகிறது. அமைதி வழிப் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
இனிமேல் பாரதிய ஜனதா தலைவர்கள் சாரயக் கடைகளுக்கும், இரவு விடுதிகளுக்கும் கூட போலிஸ் படையின் பலத்த பாதுகாப்புடன் சென்று வர வேண்டிய வன்முறைச் சுழலை உச்ச நீதிமன்றமும் அதன் எவலாளியான மோடியின் வன்முறை அரசும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தம் ஒன்றின் அவசியத்தை பாரதீய ஜனதா – இந்து பாசிச அரசும் அதன் புதிய அடிமையான எடப்பாடி அரசும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஆமாம் ஆமாம்…ரெண்டுபயலுங்களும் தேசவிரோதிங்க…….