பாலஸ்தீனியம் ஐக்கிய நாடுகள் சபையில் தன்னை ஒரு நாடாக அங்கீகரிக்கச் சொல்லி விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. இதனை இரு பிரதேச நாடு எனக் கூறலாம். மேற்கு வங்கிப் பகுதியிலும் காசாவிலும் பாலஸ்தீனியர் வாழ்கின்றனர். இது வரை காலமும் பாலஸ்தீனியம் ஒரு பார்வையாளராக வாக்களிப்பற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் சபையில் உள்ளது. பாலஸ்தீனியத்தின் கோரிக்கையை எதிர்க்கும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நிச்சயமாக இஸ்ரேல், அவற்றுடன் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளும் முன்னிலையில் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக உள்ள மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கின்றன. அதாவது உலக சனத்தொகையில் 75 வீதமான மக்;கள் வாழும் நாடுகள் பாலஸ்தீனியத்தை ஆதரிக்கின்றன. இருந்தும் என்ன பயன்?
முன்னால் அமெரிக்க அதிபர் கிளின்டன் இவர் பாலஸ்தீனியரின் நண்பரல்ல. புரட்டாதி 23, 2011 இஸ்ரேல் பிரதமரின் ஐக்கிய நாடுகள் சபை பேச்சின் பின்னர் அவர் கூறியது இது “Netanyahu does not want negotiations… he’s just not going to give up the West Bank”. (இஸ்ரேலிய பிரதமருக்கு பேச்சுவார்த்தைகள் தேவையில்லை. மேற்கு வங்கிப் பகுதியை அவர் ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டார்.) இஸ்ரேலிய அதிகாரிகள் அடிக்கடி கூறிக்கொள்வது “Israel wants peace but cannot find a partner for peace..” இஸ்ரேலுக்கு peace தேவையில்லை. பாலஸ்தீனியத்தின் இன்னமொரு piece தான் தேவை. பாலஸ்தீனிய ஆலோசகர் Michael Tarazy கூறியது We are negotiating about sharing a pizza and in the meantime Israel is eating it.” ( நாங்கள் பீசாவை பங்கு போட பங்கு போட பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். அதே சமயம் அதே பீசாவை இஸ்ரேல் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றது)
2
சில பின்னோக்கிய நினைவுகள்
முதலாம் உலகப்போரின் பின்னர் பிரித்தானிய சாமராஜ்ஜயத்தில் ஒரு பகுதியாக பாலஸ்தீனியம் மாறியது. 1947 கார்த்திகை 29ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற வாக்களிப்பில் 55 வீதம் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் 44 வீதமான நாடுகள் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாகவும் வாக்களித்தன. 1948 இஸ்ரேல் 78 வீதமான பாலஸ்தீனிய பிரதேசத்தை கைப்பற்றியது. ஜோர்டான் மேற்கு வங்கி பிரதேசத்தையும் எகிப்து காசாப் பிரதேசத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1967ல் நடைபெற்ற ஆறு நாள் போர் மேலும் பல பிரதேசங்களையும் சிரியாவின் GOLAN HEIGHTS பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது. Gaza Strip, Sinai Peninsula (Egypt) West Bank, East Jerusalem (Jordan)ஆகிய பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது. 1974 கார்த்திகை 22ம் நாள் non-state entity ஆக பாலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்டது. 1993ல் பாலஸ்தீனிய அதிகார சபை உருவாக்கப்பட்டது. மேற்கு வங்கி, காசா ஆகிய பிரதேசங்களை நிர்வாகிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. எனினும் இஸ்ரேலுக்கான வரி செலுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் இஸ்ரேலின் கட்டப்பாட்டுக்குள்ளேயே இருக்கின்றன.
கடந்த காலங்களில் 1956இ 1967இ 1982இ 2006இ 2008இஸ்ரேல் அரபு நாடுகள் மீதும் பாலஸ்தீனியத்தின் மீதும் போர் தொடுத்;தது. இதன் விளைவாக பல பிரதேசங்களை கைப்பற்றியது. 1973ல் மாத்திரமே அரபு இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டது.
3
புரட்டாதி 23 ம் நாள் நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தில் உரையாற்றிய பாலஸ்தீனிய அதிபர் முகமட் அபாஸ் “சமாதானத்திற்கும் எனது மக்களின் இறைமைக்கும் நல்லதொரு வாழ்விற்குமாக இதனை முன்வைக்கின்றேன்” என்றார். அவர் மேலும் பேசுகையில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இதே காலகட்டத்தில் இதே சபையில் உறுப்பினர்களால் ஒரு சமாதான முன்னெடுப்பு முன்வைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் இந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்க அதிபர் பராக் ஒபமா நேரடி கண்காணிப்பில், Quartet ( நால்வர் தொகுதி எனப் பொருள் படும். ஐக்கிய நாடுகள், ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ய+னியன், ருசியா ஆகியன அடங்கும். 2002ல் மத்திய கிழக்கிற்கான நால்வர் தொகுதி மட்றீட்டில் நடைபெற்ற மாநாட்டில் அமைக்கப்பட்டது) மற்றும் எகிப்து ஜோர்டான் ஆகிய நாட்டு பிரதிநிதிகளுடன் வோசிங்கடனில் புரட்டாதி மாதம் ஆரம்பமானது. நாங்களும் திறந்த மனதுடன் பல பக்க நியாயங்களை கேட்கும் மனப்பான்மையுடன் உள்ளார்ந்தமாக கலந்து கொண்டோம். சமாதான மாநாடு தொடங்கி சில வாரங்களிலேயே இது முறிவடைந்து விட்டது. கடந்த காலங்களில் எங்களது மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. சூறையாடப்பட்டுள்ளன. 1993 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஒப்பந்தத்தின் பின்னர் பல தடவைகள் சமாதான நடவடிக்கைகள் முறிவடைந்துள்ளன. ஆனால் இன்னமும் எங்களுக்கு சமாதானத்தில் நம்பிக்கையுண்டு.
உலக சமாதானத்தில் எங்களுக்கு அக்கறையுண்டு. எங்களது மக்களுக்காக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தைரியம் எங்களுக்கு உள்ளது. எங்களது மக்களுக்கு சரித்திரப+ர்வமாக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி தேவை.
நாங்கள் பாலஸ்தீன பிரதேசத்தை அமைக்க ஏற்றபோது 1967ல் இஸ்ரேலால் அபகரிக்கப்பட்ட நிலத்தின் 22 வீதமே எம்மிடமிருந்தது. அதனைக் கொண்டே பாலஸ்தீனிய பிரதேசத்தை அமைத்தோம். எங்களது நோக்கமே எங்களது மக்களின் இறைமை அங்கீகரிக்கப்படவேண்டும். கிழக்கு ஜெருசலேத்தை தலைநகரமாக் கொண்ட நாடு அமைக்கப்படவேண்டும். எங்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலம் மீள கிடைக்க வேண்டும். நாங்கள் பயங்கரவாத்தை எதிர்க்கின்றோம் அதனை ஆதரிக்கமாட்டோம். எங்களது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக, அவர்களது சுபீட்சமான அமைதியான பாதுகாப்புடன் வாழ்விற்காக போராடுகின்றோம். காவலரண்களையும் மதில்களையும் எங்களை பிரிப்பதற்கு பதிலாக இரு தரப்பு மக்களுக்கும் உரையாடல் மூலம் பாலமைப்போம். நான் பாலஸ்தீனிய மக்கள் சார்பாக இஸ்ரேலையும் இஸ்ரேலிய மக்களையும் கேட்டுக் கொள்வது நாங்கள் இணைந்து சமாதானத்தை ஏற்படுத்துவோம்;. (இது அவரது பேச்சின் நேரடி மொழிபெயர்ப்பல்ல, சுருக்கமே.) அதே சமயம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் பலமின்மையும், குரலின்மையும் பாலஸ்தீனியம் கவனிக்கத் தவறவில்லை.
இவரது பேச்சு முடிந்த பின்னர் உறுப்பினர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இதன் பின்னர் பேசிய இஸ்ரேலிய பிரதமர் “நான் கைதட்டல் பெறுவதற்காக இங்கு பேசவில்லை. உண்மையை பேசவே வந்துள்ளேன்” என்றார்.
4.
இந்த கோரிக்கை பல படிகளில் ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானிக்கப்படும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை முதலில் இதனை அங்கீகரித்து பின்னர் பாதுகாப்புச் சபைக்கு இதனை அனுப்பும். பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் அனைவரும் அங்கீகரித்த பின்னர் இது ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்படும். ஐக்கிய நாடுகள் சபையில் மூன்றில் இரண்டு அங்கத்தவர்கள் இதனை அங்கீகரிக்க வேண்டும். அங்கத்தவரற்ற அங்கத்தவராக வேண்டுமெனில் 193 பேர் கொண்ட பொதுச் சபையில் சாதாராண பெரும்பான்மை கிடைத்தாலே போதுமானது.
கார்த்திகை 1947ல் ஐக்கிய நாடுகள் சபையில் சரத்து 181 அங்கீகரிக்கப்பட்டு இஸ்ரேல் என்ற நாடு உருவானது. இன்று அதே சபையில் அதே சரத்தை மையமாக வைத்து பாலஸ்தீனியம் கோரிக்கை வைக்கின்றது.
தெற்கு சூடான் உருவாகி மூன்று மாதங்களில் பாதுகாப்பு கவுன்சில் அங்கீகாரம் வழங்கிவிட்டது. வட கொரியா 46 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. Nauru பசுபிக் தீவு 21 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சிறிய நாடு. இந் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றுள்ள நாடு. அவுஸ்திரேலியா பல சமயங்களில் அகதி அந்தஸ்து கோருபவர்களை இந்த நாட்டில் தடுத்து வைத்திருந்துள்ளது. இவ்வாறு பல தமிழர்கள் இத் தீவில் தடுத்து வைத்திருக்கப்பட்டனர். Nauru போல மக்கள் தொகை குறைந்த Kirbati, Tuvalu, Vanuatuபோன்ற நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள். தைவான், கோசாவா நாடுகளும் காத்திருக்கின்றனர். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் பாலஸ்தீனியத்தின் கோரிக்கை முக்கியமானது. அங்கீகரிக்கப்படவேண்டியது. 1933 ஆழவெநஎனைநழ Montevideo Convention on the Rights and Duties of States ன் படி ஒரு நாட்டிற்கு நிரந்தரமாக வாழும் மக்களிருக்க வேண்டும். திட்டவட்டமான எல்லைகளைக் கொண்ட பிரதேசம் இருக்க வேண்டும். அரசாங்கமிருக்க வேண்டும். மற்றைய நாடுகளுடன் தொடர்புகளை மேற்கொள்ளக் கூடியதாக இருத்தல் வேண்டும். 1967 பாலஸ்தீனிய எல்லைகளின் படி முதல் மூன்றும் பாலஸ்தீனியத்திடமிருந்தது. எனவே ஒரு நாட்டிற்குரிய அம்சங்கள் பாலஸ்தீனியத்திடமிருக்கின்றது.
5.
பாலஸ்தீனியத்தின் கோரிக்கையை இஸ்ரேல் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. நேரடிக் காரணம் மிக நீண்டகால போர்ப்பகை கொண்ட பாலஸ்தீனியத்துக்கு “நாடு” என்ற அந்தஸ்து வழங்குவதை இஸ்ரேலியர்கள் ஒரு போதும் ஏற்கமாட்;டார்கள். இது மனோரீதியானது. இந்நிலை பாலஸ்தீனியத்துக்கு மாத்திரமல்ல, நாடாக அங்கீகரிக்கப்படின் 1967ல் அபகரித்த பல பிரதேசங்கள் மீள கொடுக்க வேண்டும். அபகரித்த பிரதேசங்களில் சுமார் ஆறு லட்சம் ய+தர்கள்; வாழ்கின்றனர். பாலஸ்தீனியத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பதை நிறுத்த வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்கள் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக பாலஸ்தீனியம் வழக்குகளை தொடரும். ரோம் ரெரற்றி (Treaty of Rome- ஐரோப்பிய வர்த்தக வலயம்) யில் அங்கத்துவம் பெறின் பல இஸ்ரேலிய தலைவர்களை சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கத் நிறுத்தும்.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் இஸ்ரேலின் நட்பு நாடுகளாக இருந்த துருக்கியும் எகிப்தும் இன்று எதிரணியில் உள்ளன. எகிப்திய மக்கள் கிளர்ச்சியின் தொடர்ச்சி இஸ்ரேலுக்கு எச்சரிக்கையை கொடுத்துள்ளது.
6.
ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீது பாலஸ்தீனத்துக்குள் கருத்து வேறுபாடுகுள் உள்ளன. A West Bank/Gaza state with East Jerusalem as its capital. இதுவே சாரம்சம் குயவயா (Fatah (the governing party of the Palestinian Authority in the West Bank,) the Popular Front for the Liberation of Palestine, the Democratic Front and the Palestine People’s Party (formerly the Communist Party), the Palestinian National Initiative, led by Mustafa Barghouti ஆகிய அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கின்றன. காசாப் பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ் இதனை எதிர்க்கின்றது. இவர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீது நம்பிக்கையி;ல்லை. ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்படுகின்றது என்பது ஹமாசின் கருத்து. Fatah அதாவது ஆளும் அமைப்பு தங்களுடன் கலந்துரையாடவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இரு நாட்டு சமாதானம் ஏற்புடையதல்ல. அத்துடன் வெளியே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஆறு மில்லியன் பாலஸ்தீனியர் திரும்பிவரும் அதிகாரம் தெளிவுபடுத்தப்படவேண்டும் என மேலும் ஹமாஸ் தெரிவிக்கின்றது. Fatah கருத்தளவில் இஸ்ரேல் என்ற நாடை ஏற்றுக் கொள்கின்றது. ஹமாஸ் இஸ்ரேல் என்ற நாட்டின் இருப்பையே நிராகரிக்கின்றது.
அதே சமயம் மிகத் தெளிவாக இவர்கள் அனைவரும் ஒரு கருத்;தை தெளிவாகக் கூறுகின்றனர் “தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் பாலஸ்தீனத்துக்கு தீர்வை கொண்டு வராது. மேலும் பாலஸ்தீனத்தை பல கூறுகளாக உடைக்கும்” என்கின்றனர். அதே போன்று ஹமாஸை ஆதரிக்கும் ஈரானும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கின்றது. ஈரானின் பாலஸ்தீனியம் மிகப் பெரியது. இஸ்ரேல் தனதாக்குய பகுதிகளையும் உள்ளடிக்கியது. ஆனாலும் ஐ.நாவில் பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாகவே வாக்களிக்கும்.
7.
பாலஸ்தீனிய கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் பல விளைவுகள் ஏற்படலாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எகிப்தில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்துக்குள் இஸ்ரேலிய மக்கள் புகுந்து இஸ்ரேலிய தூதரை இஸ்ரேலுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அதே போல் ஐரோப்பாவின் புதிய பொருளாதார பலமான துருக்கியும் இஸ்ரேலுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஈரானும் இஸ்ரேலை பதம் பார்க்கும். ஹமாஸ் அமெரிக்க எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும். இது வரை காலமும் சமாதானம் அமெரிக்கா என நினைத்த பாலஸ்தீன மக்களும் வன்முறைக்கு திரும்புவர். இது இன்று அரேபிய நாடுகளில் தோன்றியுள்ள மக்கள் எழுச்சியுடன் இணைந்து மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.
பிரென்ச் அதிபர் Nicolas Sarkozy தனது உரையில் நேரடியாகவே அமெரிக்காவை சாடியுள்ளார். பாலஸ்தீனிய-இஸ்ரேல் சமாதானத்துக்கு ஒரு நாட்டை தங்கியிருக்க முடியாது. இது கூட்டு முயற்சி. அரேபிய நாடுகள் ஐரோப்பிய நாடுகள் இதில் பங்குபற்ற வேண்டும் என்பது இவரது கருத்து. இதற்கு முன்பாக நால்வர் தொகுதியில் இந்த நாடுகள் அங்கம் பெற்றிருந்தும் சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை இவர் கவனிக்கத்தவறிவிட்டார். நால்வர் தொகுதி பிரதிநிதியாகவுள்ள முன்னால் பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயரை பாலஸ்தீனிய அதிகாரி “இஸ்ரேலின் பிரிதிநிதி” என குற்றஞ்சாட்டியிருந்தார். இதிலிருந்து இவர்களது சமாதான ப+ச்சுக்கள் எந்தளவிற்கு இருந்துள்ளன என்பதை தெரிந்து கொள்ளலாம். 1991 வரை அமெரிக்கா பாலஸ்தீனிய சமாதானப் பேச்சுக்கள் எதுவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்கா ஒரு போதும் உண்மையான சமாதான தூhராக செயற்படவில்லை. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தெற்கு சூடான் சர்வசன வாக்கெடுப்புக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவ நாடாக தெற்கு சூடான் இடம் பெறவும் அங்கீகரித்தது. தனது சுய நலன்களுக்கான தூதராகவே அமெரிக்கா செயற்படுகின்றது. 2012ல் நடைபெறவுள்ள அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் Rick Perry அதிபர் ஒபமாவை கண்டித்துள்ளார். இவர் பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட முடியாது எனக் கூறியுள்ளார். இவருக்கு 2009ல் னுநகநனெநச ழக துநசரளயடநஅ விருது இஸ்ரேல் அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ஒபமாவின் கருத்துக்களும்; தீர்க்கமற்றவை. கடந்த வைகாசியில் இவர் இஸ்ரேலின் இருப்பை பாலஸ்தீனியமும் அரபு நாடுகளும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்;றார். ய+த நாடு என்பதை பாலஸதீனியமும் அரபு நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும்;. இஸ்ரேல் எனப்படும் பகுதியில் 20 வீதமானவர்கள் ய+தர்கள் அல்லாதவர்கள். ய+த நாடு எனப்படும் பொழுது மற்றவர்கள் அந்நியப்படுத்தப்படுகின்றார்கள். இவர்கள் இஸ்ரேலின் பிரசைகளில்லையா?இஸ்ரேல் ஏற்கனவே ஒரு நாடாக உள்ளது. அப்படி இருக்க ஏன் இந்த ய+த நாடு என்ற கோசம்? யூதம் என்று பெயர் மாறும் பொழுது அதன் நிறமும் மாறுகின்றது. இன்றைய இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றனர். அதே போல் இஸ்ரேலிலும் ய+தர்கள் அல்லாதவர்கள் வாழ்கின்றனர். அவ்வளவே.
இப்பொழுது பாலஸ்தீனியத்தில் உள்ள அதிகாரங்கள் ஒரு மாநில அரசுக்குள்ள அதிகாரங்களை விடக் குறைவானவையே. பாலஸ்தீனிய அரசு பெறும் வரிகளை மேற்பார்வை செய்வது இஸ்ரேலே. தனது பிரதேசத்தைக் கூட வரையறை செய்ய முடியாத நிலையில் உள்ளது பாலஸ்தீனிய அரசு.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்களை நிறுத்த அமெரிக்கா இது வரை எதுவும் செய்யவில்லை. முதலில் 1967 எல்லைப் பிரகாரம் தீர்வு என்றார். பின்னர் மக்களின் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்றார். 2010ல் ஒபமா ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய போது அடுத்த வருடம் இந் நேரம் புதிய பாலஸ்தீனியம் மலர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என நம்பிக்கை தெரிவித்தார். பேச்சுவார்த்தைகள் சில வாரங்களில் முடிவுக்கு வந்த போது மௌனமாக இருந்தார். 1993ல் இதே போன்று ஒஸ்லோவில் வாக்குறிதியளிக்கப்பட்டது. அமெரிக்கா இறுதி வரை இஸ்ரேலையே ஆதரிக்கும். இந் நிலை நீடிக்கும் வரை சமாதானப் பேச்சு வார்த்தைகள் வெறும் கண் துடைப்பு.
பாலஸ்தீனியத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகளை அமெரிக்கா மிரட்டவும் தயாராகிவிட்டது. போர்த்துக்கல் தனது தடுமாறும் பொருளாதாரத்துக்கான நிதியுதவியை முடங்கச் செய்யும் என அச்சம் தெரிவித்துள்ளது. இந்த மிரட்டல்கள் பாலஸ்தீனியத்தின் மீதும் செய்துள்ளன. இஸ்ரேல் பாலஸ்தீனியத்தின் வரிகளை கொடுக்காது. அதே போன்று அமெரிக்காவும் பாலஸ்தீனியத்துக்கான நிதி உதவிகளை நிறுத்தும். ஆனால் இவற்றை எதிர்பார்த்துதான் பாலஸ்தீனியம் களத்தில் இறங்கியுள்ளது.
8.
பாலஸ்தீனிய அதிபருக்கு; தான் முன் வைக்கும் கோரிக்கைக்கு என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியும். பொதுச் சபை அங்கீகாரம் என்பது “முழுமையான நாடாக அங்கீகரிக்காவிடிலும்” வத்திக்கான் போன்ற வாக்களிக்க முடியாத நாடாக அங்கீகரித்தல் என்பது பெரிய வெற்றியே. தற்போதைய நிலையை விட ஒரு படி மேலானது. இது கிடைப்பதை பாதுகாப்புச் சபையால் தடுக்க முடியாது. மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி 75 வீதமான அங்கத்துவ நாடுகள் அங்கீகரிப்பின் மேற்கு நாடுகளுக்கு இது ஒரு இழப்பே. முக்கியாக இஸ்ரேலுக்கு பெரும் இழப்பாகும். இதளால் இஸ்ரேலை சர்வதேச நீதிமன்றத்துக்கு அழைக்கலாம்.
முழு நாடாக பாதுகாப்புச் சபை நிராகரிப்பின் உலகை நோக்கி ஒரு கேள்வியையும் சமாதான பேச்சுக்களின் நம்பிக்கையீனத்தையும் போலியையும் போட்டு உடைக்கின்றது. பாலஸ்தீனியத்தின் இந்த நடவடிக்கையின் வெற்றியே இது. அரபு நாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் தோன்றியுள்ள அமெரிக்க எதிர்ப்பானது அமெரிக்க வீற்றோவை பாவித்தால் மேலும் அதிகரிக்கும்.
பாலஸ்தீனியம் இஸ்ரேலையும் அமெரிக்காவையும் ஒரு இக்கட்டான கட்டத்தில் தள்ளியள்ளது. பாலஸ்தீனியத்தின் நிலை வாழ்வா? சர்வா? என்பது.
ரதன் தவறான தகவல்களை பதிவிலிட்டு/ உண்மை தகவலை மறைத்து பலஸ்தீன பயங்கரவாதிகளுக்கு பரிந்து பேசுகிறார்.
பலஸ்தீனகளின் தாயகப்பிரதேசம் இன்றைய ஜோர்தானிலேயே இருக்கிறது. இந்த உண்மை கட்டுரையளாருக்கு தெரியாத! 1967ல் அரபு உலக பின்னனியுடன் இஸ்ரேலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க துணிந்த 12 நாடுகள் மீது தனியொரு நாடாக இஸ்ரேல் அதிரடிதாக்குதலை நடத்தி நாசகார திட்டத்தை தகர்த்தது (தற்பாதுகாப்பு) தெரியாத? இஸ்ரேலின் இந்த புத்திசாதுர்யத்தால் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இஸ்ரேல் என்றநாடும் யூதஇனமும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கப் பட்டிருக்கும். இதை பலஸ்தீன பயங்கரவாதிகளின் ஆதரவு சக்திகள் மிக ஆவலுடன் எதிர்பார்த்ததை கட்டுரையாளர் மறந்தும் சொல்ல மாட்டார்.
இஸ்ரேல் எனும் சிறிய நிலப்பரப்பையும் சிறியமக்கள் தொகையையும் கொண்ட தேசத்தை அரபு பயங்கரவாதிகள் முழுமையாக விழுங்கி ஏப்பமிடதுடிக்கிறார்கள். இந்த பேராபத்திலிருக்கும் இஸ்ரேல் எனும் தேசத்தை காக்கவேண்டிய பொறுப்பு மனுதர்மம் மனிதநேயமுள்ளவர்களின்கடமை.
துர்அதிஸ்டவசமாக இன்றைய உலகென்பது தமது சுயநலத்தை முன்னிறுத்தியே இயங்குகின்றது என்பதை ஐநாசபையில் பலஸ்தீன பயங்கரவாதிகள் விடயத்தில் பார்க்கலாம். மனிதவுரிமையை மதிக்காத அரபுநாடுகள் முஸ்லீம்நாடுகள் ரசியா சீனா இந்தியா சிறிலங்கா போன்ற காட்டுமிராண்டி நாடுகளே பலஸ்தீன பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்கள்.
1967ல் இஸ்ரேலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க துணிந்த நிலையில் இவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் தகுமே. எனியும் இஸ்ரேலை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க கனவு காண்பவர்கள் ஒருவிடயத்தை கவனத்தில் எடுக்க மறுக்கிறார்கள்.அணுஆயுத வலிமைபெற்ற இஸ்ரேலும் இவர்களை போல் இரக்கமின்றி முடிவெடுத்தால் நிலைமை என்னவாகும்??
ஈழத்தமிழர்களின் கையேறு நிலையை இஸ்ரேலும் யூதமக்களும் அடையவேணும் என சிந்திப்பவர்கள் நிட்சயம் சைக்கோதனமானவர்களே!
இந்து அடிப்படை வாதிகளைப் போல, இஸ்ரேலிய சியோனிஸ்டுக்களைப் போல, இஸ்லாமிய அடிப்படை வாதிகளைப் போல 30 வருடப் போராட்டம் நிர்மலன் போன்ற கொடூரமான பயங்கரவாதிகளையும் வளர்த்து வைத்திருக்கிறது என்பதற்கு மேலே உள்ள குறிப்பு நல்ல உதாரணம். நோர்வேயில் அப்பாவிகளைச் சுட்டவனுக்கும் நிர்மலனுக்கும் பெரிய வேறுபாடில்லை. இவை எமது சமூகத்தின் நச்சுக் கிருமிகள்.
மூன்று இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பலஸ்தீன பயங்கரவாதிகளும் இவர்களை ஆதரிக்கும் போலி இடதுசாரிகளும் அதிஉன்னத உத்மர்கள்.
இஸ்ரேல் எனும் சிறிய நிலப்பரப்பையும் சிறியமக்கள் தொகையையும் கொண்ட இஸ்ரேல் தேசத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்க வெறிபிடித்தலையும் பலஸ்தீன பயங்கரவாதிகளும் அதன் ஆதரவாளர்களும் அகிம்சைவாதிகளிற்கு உண்மை நியாயத்தை சொல்லும் நிர்மலன் பயங்கரவாதியாக தெரிவது வாஸ்தவம்தான்.
உங்களால் முடிந்தால் எனது கருத்திற்கு பதில் கருத்தை சொல்லுங்கள். இல்லை வெறும் சேறடிப்பை மட்டும் உங்களால் தொடர முடியுமெனில் அதைதொடருங்கள். உங்கள் பரிதாபநிலையை விளங்கி கொள்கிறேன்.
The most important think in this matter , there was no country called Israel before 1947. It is occupied from palestine and the tragedy is palestine now fights for thier own country.
ஆம் நண்பரே 1947 வரை பாகிஸ்தான் காஸ்மீர் என்ற நாடு இருக்கவில்லை. இந்தியா காஸ்மீரை ஆக்கிரமித்தது போல் நாளை பாகிஸ்தான் பங்களாதேஸை இந்தியா ஆக்கிரமித்தாலும் சரியா?
ஜேசுநாதருக்கு முற்பட்ட காலத்திலேயே யூதர்கள் ஜெருசலம் பகுதியில் வாழ்ந்திருக்கிறார்கள். அப்போ அது யூதர்களின் மண்ணாகவே இருந்திருக்கிறது. ரோமரின் வீழ்ச்சியை அடுத்தே அராயியர்கள் அப்பிரதேசத்தை ஆக்கிரமித்தனர்.
அவர்கள் ஆரம்பத்தில் வன்முறையை நாடவில்லை. எல்லாவற்றையும் மேர்சியா பார்ப்பார் என்றுதானே 2000 ஆண்டுகளாக நாடோடி வாழ்கை வாழ்ந்தனர்.
1947ல் கூட தமது தாயக பிரதேசத்தை பெரும்பணம் கொடுத்து காணி வாங்குவதன் மூலமே மீட்க முற்ப்பட்டனர். அவர்கள் மீது வன்முறையை திணித்தது மட்டுமல்ல அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க துணிந்தவர்கள் அரபு பயங்கரவாதிகளே! அதை தடுக்கவே தற்பாதுகாப்பு யுத்தம் செய்ய முற்பட்டனர். உண்மையில் யூத இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உலத்திலுள்ள மனிதாபிமானம் நீதி நியாயமுள்ளவர்கள் பெரும் கடமையாகும்.
பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே இருந்திருக்கவில்லையே. சினிமாக்களிலும், சமயநூல்களின் மூலமும் வரலாற்றை படித்தால் பாமரத்தனமாகவே சிந்திக்கத்தூண்டும். நன்றி
“உண்மையில் யூத இனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உலத்திலுள்ள மனிதாபிமானம் நீதி நியாயமுள்ளவர்கள் பெரும் கடமையாகும்.
” உங்கள் பு.தலைவர் யூதமக்களை வேட்டையாடிய கிட்லரின் ரசிகன் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். புலிகளின் ராணுவ சல்யூட்டும் நாஜிகளிடமிருந்து கடன்வங்கியது என்று ஐயர் எழுதியதாக நினைவு. அப்போ ” மிருகம் பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை……..?”
உங்கள் கேள்வியும்,நினைவும் உண்மைச் செய்திகளாக வரிக்க முடியாதவை.
ஆதலால் கருத்துகளைக் கருத்துகளால் மோதுங்கள்;தூற்றல்களாலல்ல.
Dear sir, if one day red indians rise with money and weapon power will today’s americans
vacate their land give it to them. Will britan give australia to their natives.
இதில் கருத்து எழுதும் நிர்மலன் என்பவர் பிரித்தானியாவில் வாழும் சீவரத்தினம் நிர்மலன் தானா என்பதை உறுதிப்படுத்தினால் நிர்மலனின் கருத்துக்கு சரியான பதில் தருகிறேன்.
ஆக உங்களிடம் கருத்தை வெட்டியோ/ ஒட்டியோ பேச திராணியில்லை. சீவரத்தினம் நிர்மலன் என்பவர் மீது தனிமனித தாக்குதல் நடத்தும் சேறடிப்புத்தான் முடியமென்கின்ற கையாளாகத்தனம்தான் இருக்கிறது! ஐயோ பாவமே!
அப்போ நான் அவன் இல்லை கதைதானா? மாபெரும் உண்மை.
தானா என்பதை உறுதிப்படுத்தினால் /////
prof !
மிகத் தவறான கருத்து,
கருத்தும் கருத்தும் மோதட்டும்.
சீவரத்தினம் நிர்மலன் ஆக இருந்தால் ஒரு கருத்தும், வேறு ஒரு நிர்மலன் ஆக இருந்தால் வேறு ஒரு கருத்தும் என்பது கருத்துப் பரிமாற்றமல்ல.
நண்பரே! கருத்துமோதல் என்பது வேறு. கடைந்தெடுத்த கயவாளிட்தனதுடன் கருத்துக்கள் எப்படி மோதுவது?
எப்படி மோதுவது?
///
கருத்தும் கருத்தும் மோதட்டும்;பெயரை பற்றி கவலை படத்தேவையில்லை:
இதுவே என் கருத்து.
வம்பு,!! நீர் வேறு ஒரு வம்பிட்குள் இழுக்கிறீர்.
1.கடைந்தெடுத்த கயவாளிட்தனம் என்று நீர் கருதினால், கடைந்தெடுத்த கயவாளிட்தனதுடன் ஏன் கருத்து பரிமாறப் போகிறீர் ?
2.
எனக்கும் நிர்மலனின் நிறைய(99%) கருத்துகளில் உடன்பாடில்லை.அது சீவரத்தினம் நிர்மலன் ஆக இருந்தால் என்ன அல்லது வேறு ஒரு நிர்மலன் ஆக இருந்தால் என்ன.
பெயரை பற்றி கவலையில்லை.
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற உண்மையான பெயருடையவர் வந்து பிரபாகரன் என்ற பெயரில் வந்து மாற்று கருத்தாளர்களின் கொலையை கண்டிப்பது போலும் தன்னை ஜனநாயக வாதியாகவும் காட்டி பதிவிடலினை செய்தால் ஏற்பீர்களா தேவன்?
அதேபோல் பொதுவில் நன்கு அறியப்பட்ட அல்லது பொது சேவையில் அல்லது பொதுத்தளத்தில் செயற்படுபவர்கள் தங்களை யாரென அறிமுகப்படுத்தி கருத்துப்பரிமாறுவது குறிப்பிட்டவரின் உண்மையான செயற்பாட்டுக்கும் அவர் எழுதும் கருத்தையும் மதிப்பிட உதவும். மாறாக பொதுத்தளத்தில் ஒன்றும் புனை பெயருக்குள் இன்னொன்றுமாக கருத்து நிலைப்பாட்டை கொண்டிருப்பதை மதிப்பிடுவது தனி நபரை சேறடிப்பது அல்ல.
ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்று இருக்ககூடாது அல்லவா?
பொதுத்தளத்தில் சபா. நாவலன் என்று புலிகளது பிழைகளை விமர்சித்துக்கொண்டு நாவலன் என்ற பெயரில் புலிகளை புகழ்ந்து எழுதினால் எப்படியோ இதுவும் அப்படியே.
நிர்மலன் என்ற பெயரில் முன்னரும் எழுதிய பல கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதிய சிலர் நான் குறிப்பிட்ட சீ. நிர்மலனை தாக்குவது போன்ற கருத்துக்களை முன்னர் அவதானித்திருந்தேன். அதனடிப்படையிலேயே கேட்டிருந்தேன்.
இறுதியாக A to X முன் பெயருடைய எந்த நிர்மலனாகிலும் பலஸ்தீன மக்களின் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்க முற்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு. பலஸ்தீன போராட்டம் தொடர்பிலும் இஸ்ரேல் என்ற சியோனிச நாடு பற்றிய அடிப்படை தெரியாதவரே இந்த கற்றுக்குட்டி நிர்மலன் என்பது வெள்ளிடைமலை.
பலஸ்தீன மக்களின் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரிக்க முற்பட்டிருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு. பலஸ்தீன போராட்டம் தொடர்பிலும் இஸ்ரேல் என்ற சியோனிச நாடு பற்றிய அடிப்படை தெரியாதவரே இந்த கற்றுக்குட்டி நிர்மலன் என்பது வெள்ளிடைமலை..///
இது கருத்து பரிமாறல். இந்த கருத்திற்கு சீவரத்தினம் நிர்மலன் என்ன சிவலிங்க நிர்மலன் என்ன வேண்டிக்கிடக்கு .
அஹ்து:நிர்மலனின் ஆதி ,அந்தம், என்ன பின்னணி என்பன தேவையில்லை.
கருத்தும் கருத்தும் மோதட்டும்;பெயரை பற்றி கவலை படத்தேவையில்லை:
இதுவே என் கருத்து.
கற்று தேர்ந்த prof
அவர்களே! என்னை கத்துக்குட்டி என்று சொல்வதுடன் மட்டும் விடயம் முடிந்துவிடாது. பலஸ்தீன போராட்ட நியாயத்தை எடுத்து சொல்ல வேண்டியது உங்கள் கடமை.
//பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கு முன்னர் இந்தியா என்றொரு நாடே இருந்திருக்கவில்லையே.//vampu
நான் மாத்திரம் இல்லையென்றா சொல்கிறேன்? இல்லையே. இந்தியாவிருக்கவில்லை பாகிஸ்தான் இருக்கவில்லை பங்களாதேஸ் இருக்கவில்லை. அதற்காக தற்போது தனித்தனி தேசங்களாகவுள்ள இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஸ் போன்றவற்றின் இருப்பை மறுக்க முடியாதோ அதேபோல் 1947 வரை இருந்திராத ஆனால் இன்றிருக்கும் இஸ்ரேல் எனும் தேசத்தின் இருப்பை தற்போது மறுக்க முடியாது.
//சினிமாக்களிலும் சமயநூல்களின் மூலமும் வரலாற்றை படித்தால் பாமரத்தனமாகவே சிந்திக்கத்தூண்டும்//
உங்களிருக்கும் அதே பாமரதனத்தை கண்டுகொள்ள முடியாதளவிற்கு நீங்களிருப்பது படுசோகம்தான்.உங்களின் தனிப்பட்ட சினிமா சமய விருப்பு வெறுப்புகளிற்கப்பால் மனிதவரலாற்றின் நாகரீககாலமென்பது அந்தந்த காலகட்டத்தில் நிலவிய நம்பிக்கைகளின் (சமயம்) அடிப்படையிலேயே இனம் காணப்படுகிறது. சுமேரியநாகரீகம் பாரசீகநாகரீகம் சிந்துவெளி நாகரீக தொல்லியல் சான்றுகள் அங்கு வாழ்ந்த மக்களின் சமயநம்பிக்கைகள் ஈனத்தாளிகள் மூலமே இனம் காணப்படவும் உதவியது.
ஏன் கனக்க போவான் இன்றைய உலகின் காலகட்டமே கிமு-கிபி என்ற அடிப்படையிலேயே உலகால் வரையறுக்கப்படுகிறது. மகாவம்சம் முதற்கொண்டு வரலாற்றுப்பதிப்புக்கள் மத அடிப்படையிலேயே இருக்கிறது.
//” உங்கள் பு.தலைவர் யூதமக்களை வேட்டையாடிய கிட்லரின் ரசிகன் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கின்றேன். புலிகளின் ராணுவ சல்யூட்டும் நாஜிகளிடமிருந்து கடன்வங்கியது என்று ஐயர் எழுதியதாக நினைவு.//
இருக்கலாம்? கிட்டலரின் மோசமான பக்கங்களை மட்டும் நீங்கள் தெரிந்து வைத்திருப்பது. மற்றவர்களின் தவறில்லையே! 95 சதவீத ஈழத்தமிழரின் பெருவிருப்பை பெற்ற தலைவர். கிட்லரிடமிருந்து நல்லவற்றை மட்டுமே எடுத்திருந்தார். அதே போல் யூதமக்களிடமிருந்தும் நல்லவற்றை எடுத்துக்கொள்ள தவறவில்லை. அதனால் அவர் ஈழத்தமிழரின் பெருவிருப்பை பெற்ற தலைவர் ஆனார். கெட்டவற்றை மாத்திரம் பொறுக்கிய தாங்கள் தமிழர்களின் விரோதியாக இன்றும் உள்ளீர்கள்.
சிந்திக்க தெரிந்த மிருகம்தான் மனிதன். சிந்தனை எவ்வகைப்பட்டதோ அப்படியாகிறார்கள். மக்கள் நலனை முன்னிறுத்தியவர்கள் அந்த மக்களால் நேசிக்கப்படுகிறார்கள். சுயநலத்தை முன்னிறுத்தியவர் சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட வரலாற்றை உங்கள் வடிவில் இன்றும் பார்க்க முடிகிறது.
//கருத்துமோதல் என்பது வேறு. கடைந்தெடுத்த கயவாளிட்தனதுடன் கருத்துக்கள் எப்படி மோதுவது?
//
யார் கடைந்தெடுத்த காவாலிஎன்பதை ” உங்கள் பு.தலைவர் ” எனும் சொற்பிரயோகம் தெளிவாக இனம்காட்டுகிறது.
கருத்தும் கருத்தும் மோதட்டும் கருத்தியல் ரீதியில் ஒரே கருத்தோ அல்லது ஒத்த கருத்தோ உள்ளவர்கள்தான் தமக்குள் பகிரங்கமாக கருத்துப் பரிமாற்றங்களை நடத்த வேண்டுமென்பதில்லை. முற்றிலும் மாறுபட்ட கருத்துள்ளவர்களும் பரிமாற்றங்கள் செய்து கொள்ளலாம், ஆனால் இப் பரிமாற்றங்கள் கருத்துப் போராட்டங்களாக அமையும். இதன்படி, முன்வைக்கப்பட்ட ஒரு கருத்தியல் கட்டுமானத்தை வளர்த்தெடுப்பதற்காகவும் பரிமாற்றங்கள் நடைபெறலாம், நிராகரிப்பதற்காகவும் பரிமாற்றங்கள் நடைபெறலாம். நடைபெறலாம் என்பதல்ல, நடைபெறவேண்டும், நடத்தப்படவேண்டும். இதை மிக அழுத்தமாகவே சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், அப்போதுதான் மௌனம் சாதிப்பது, இருட்டடிப்புச் செய்வது, புறங்கூறித்திரிவது போன்ற கோழைத்தனமான கீழ்த்தரச் செயல்களை இல்லாமல் செய்யமுடியும்.
யாருடனான கருத்துப் போராட்டமாக இருந்தாலென்ன, கருத்துப் பரிமாற்றமாக இருந்தாலென்ன அவற்றிற்கென சில பொதுவான பண்புகள் உண்டு. அவை ஆக்கபூர்வமானவையாகவும் அறிவுபூர்வமானவையாகவும் இருக்கவேண்டும். அவை தனிநபர் தாக்குதல்களாக இருக்கக் கூடாது. ஆக்கபூர்வமானது என்பது எதைக் குறிக்கிறது? மேலும் வளர்த்தெடுப்பதாக இருந்தால், முன்வைக்கப்பட்ட கருத்தினில் உள்ள முரண்களை அல்லது குறைகளை சுட்டிக்காட்டுவதாகவும், நிறைகளை உறுதிப்படுத்துவதற்கான மேலதிக ஆதாரங்களையும் தர்க்கங்களையும் முன்வைப்பதாகவும் இருக்கவேண்டும். நிராகரிப்பதாக இருந்தால், அவ் நிராகரணம் புதியதோர் கருத்தை உருவாக்குவதாகவும் அல்லது நிலவும் கருத்துக் கட்டுமானத்துக்கு சாதகமாக மேலதிக தர்க்கங்களை முன்வைப்பதாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் ஆக்கத்தை நோக்கமாகக் கொள்ளாத அழிவு, நாசகாரச் செயலே தவிர அது அழிவல்ல. இதுதான் கருத்தியல் கட்டுமானத்தை வளர்ப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துப் போராட்டமாக இருக்கும்.:::
நன்றி கைமண்
Thevan 2
எனது பின்னூட்டத்திற்கு பதில் பின்னூட்டமாக ஒரு மேற்கோளை பதிவிலிட்டுள்ளீர்கள். இதனூடு எனக்கு தனிப்பட்ட முறையில் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இஸ்ரேல் எனும் நாட்டையும் யூதஇனத்தையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதை நோக்காக கொண்ட செயற்பாடு நிட்சயம் பலஸ்தீன பயங்கரவாதமே. சிங்கள அரசபயங்கரவாதம் மேற்கொள்ளும் தமிழின அழிப்பை ஆதரிப்பதும் பலஸ்தீனர்களின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடே.
எனது இந்த நிலைப்பாடு மனுதர்மத்தின் நேர்மையின் பாற்பட்டது என உறுதியாக நம்புகிறேன். இதை மறுப்பவர்கள் அதற்கான உரிய காரணத்தை முன்வைக்கலாமே!
கண்மூடித்தனமாக பலஸ்தீன பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களிற்குதான் உங்கள் மேற்கோளை சமர்பியுங்கள்.
////1948 இஸ்ரேல் 78 வீதமான பாலஸ்தீனிய பிரதேசத்தை கைப்பற்றியது. ஜோர்டான் மேற்கு வங்கி பிரதேசத்தையும் எகிப்து காசாப் பிரதேசத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1967ல் நடைபெற்ற ஆறு நாள் போர் மேலும் பல பிரதேசங்களையும் சிரியாவின் GOLAN HEIGHTS பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றியது. Gaza Strip, Sinai Peninsula (Egypt) West Bank, East Jerusalem (Jordan)ஆகிய பகுதிகளையும் இஸ்ரேல் கைப்பற்றியது.////
நிர்மலன்!
இந்த கருத்து பற்றிய உமது நிலைப்பாடு என்ன?
உமது
நிலைப்பாடு மனுதர்மத்தின் நேர்மையின் பாற்பட்டது என உறுதியாக நம்புகிறீறா?
முதலாளித்துவத்தால்,போசிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட புலிகளையும் , புலிகளின் ஊதுகுழல்களையும், விக்கி பீடியாக்களையும் நம்பி அதுதான் சரித்திரமாக்கும் என இறால் கணக்காக தலையிலே கழிவுகளைச் சுமப்பதுமட்டுமன்றி,தாங்களும் பின்னப்பட்ட போலிக்கதையின் பிதாமகர்களாக உளறிக்கொண்டிருப்பது தாங்க முடியாத நாற்றத்தைத் தருகிறது. இன்னொருத்தர் பகுதி பகுதியாகப் பிரித்தெடுத்து,யூத வரலாற்றிலிருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் எனப் பாடமே நடாத்த வெளிக்கிட்டுள்ளார்இந்தப் பன்னாடைகளுக்கு இஸ்ராயீல்கள் என்பவர்கள் யார்?யூதர்கள் என்பது யாரைக் குறிக்கும் ?கிறிஸ்தவமும், இஸ்லாமிய மதமும் -நீங்கள் சொல்வது போலவே ஈசா(அலை), நபி(ஸல்) அவர்கள், ,அல்லது அவர்களின் வரவின் பின்தான் தோன்றியதெனில், அவர்கள், எந்தமக்களிடம் மதத்தைப் பிரச்சாரப்படுத்தினர்?எகிப்தை ஆண்டுகொண்டிருந்த பிர்-அவுன் எனும் கொடுங்கோலனிடம் அடிமைப்பட்டிருந்த இஸ்ராயீல் மக்களை மீட்டெடுத்த மூஸா (அலைஅவர்களால், தௌராத் வேதத்தில் எதிர்வு கூரப்பட்ட ஈசா நபி இஸ்ராயீல் இனத்தில் வந்துதிக்கவில்லை என்று சொல்லித்தான்,இஸ்ராயீல் மன்னன் சிலுவையில் அறைய உத்தரவிடுவது. உங்களது திருப்திக்காக, நீங்கள் சொல்வதன்படியே வைத்துக் கொண்டு பார்த்தாலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், முஸ்லிம் மதத்தை அப்போதுதான் கொண்டுவந்தாரெனில், முஸ்லிகளாக அவர்களின் பின்னே அணிதிரண்டவர்கள் யார்?
தனக்குத் தெரியாததைத் தெரியாது என ஒப்புக்கொள்வது அப்படி ஒன்றும் பெருந்தன்மைக்குரியதல்ல. உண்மையாக வாழ்வதன்அடிச்சுவடிஅது. புலிச் சிந்தனையை இன்னும் காவுபவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதில்லை. ஒட்டமானின் முஸ்லிம் கிலாபத் ஆட்சி என்பதன் பொருள் என்னவெனில், எல்லாமுஸ்லிம் நாடுகளும் துருக்கிய கலீபா ஒட்டமானிடம் தங்கள் நாட்டு அமீர்களை(பிரநிதிகளை,)பை-அத்து(சத்தியப் பிரமாணம் செய்ததன் மூலம் ஓரணியில் நின்றிருந்ததுதான்.
1940 களில் மேற்குலகு அமெரிக்கா,ரஷ்யாவெங்கிலும் யூதர்களை அவர்களின் அதீத வட்டித்தொழிலின் கொடூரத்தால், விஷ வாயுகொண்டு கூட்டம் கூட்டமாக கொன்றோழித்துத் துரத்தியபோது பாலஸ்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கை என்ன?அவர்களின் வாழ்க்கை முஸ்லிம்களுடன் எப்படி இருந்தது?இன்றைக்கும் ஈரானில் உள்ள 30 ,000 க்குமேற்பட்ட யுதர்கள் இஸ்ரேல் வர விரும்பாது வாழ்கிறார்கள் என்பதாவது தெரியுமா?அன்றைய ஹிஜாஸ் தேசத்தின் அமீர்களான சஊத் தும்,அத்துல் வஹ்ஹாபும் பிரித்தானிய அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்த்தத்துக்கமைய ஓட்டாமானின் சாம்ராஜ்யத்தைச் சிதைக்கத் துணைபோன இன்றைய சஊதிக்கு இன்னமும் வருடாந்தம் பிரித்தானியா கொடுக்கும் தொகைக் கணக்கில் அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய வரலாறின் நதிமூலம் அறிவீரா?நீலக் கண்ணின் நயவஜ்ஜசகப் படியே பாலஸ்தீனத்தை சஊதிடம் கொடுக்காமல், தங்கள் தூதர் ஈசா நபியைச் சிலுவையில் அறைந்ததாக நம்பி யுதர்களை நிம்மதியாகத் தூங்க விடாமல் வைத்திருக்க சுற்றிவர முஸ்லிம்களை வைத்துக்கொண்டு ஆயுத வியாபாரிகள் யுத ,அராபிய முதலாளிகளிடம் ஆயுத வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன்,இன்றைக்கு எரிபொருளுக்கு மாற்றீடு செய்யும்படி அமெரிக்க வால் ஸ்ட்ரீட் (wall street )இல் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.இரும்பு,எண்ணெய் வியாபாரிகள் அதைவிட்டும் மக்களின் தேவைகுறையாதபடி வங்கிகளினூடக ஆட்டிக் கொண்டிருப்பதையே பொருளாதாரச் சிதைவு என்கிறார்கள். சுதந்திரம்,நவீனம்,விடுதலை,ஜனநாயகம் என அனைத்து பரப்புரைகளிலும் (மீடியாக்கள்) மீட்டிக்கொண்டிருக்க, இதற்கப்பால் ஒரு சந்தோசகர வாழ்வு உண்டா எனச் சிந்திக்கும் திராணியையே மக்களில் இல்லாமல் ஆக்கியதுதான் முதலாளித்துவத்தின் வெற்றி.
சுதந்திரம் நவீனம் விடுதலை ஜனநாயகம் என உங்களுடன் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத விடயங்களை நீட்டி முழக்குபவரே! உங்கள் பின்னூட்டத்திற்கு விலாவாரியாக பதில் தருகிறேன். அதற்கு எதுவாக கீழ்காணும் விடயங்கள் தொடர்பாக உங்கள் கருத்தை பதிவு செய்வீர்களா!
1) ஒருநாட்டையும் அதன் பூர்வீக குடிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பது என்பது பயங்கரவாதமா! இல்லை நியாயமான போராட்டமா!
2)நாசிகளின் கொலைமுகாமில் இருந்து உயிர்தப்பி வந்தவர்களை அரபுநாடுகள் கொன்றொழிக்க எடுத்த முயற்சி பற்றிய தங்கள் கருத்தென்ன!
3)இஸ்ரேல் பலஸ்தீன மோதலை காரணம்காட்டி 10இலட்சம் யூதர்களை துரத்திய அரபு முஸ்லீம்களின் செயல் எந்தவகைப்பட்டது!
4)அரபு முஸ்லீம்களினாலும் நாசிகளினாலும் வதைபட்ட (ஒடுக்கப்பட்ட) யூதர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்!
5)தமிழின அழிப்பாளர்களான சிறிலங்கள அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பலஸ்தீன பயங்கரவாதிகளின் செயற்பாடு உங்களிற்கு நியாயமாகப்படுகிறதா!
ஈழத்தமிழர்களை வேரோடு அழிக்க நினைப்பவர்கள் புலம்பெயர் தமிழர்கள் தான்.
புலத்தில் ஈழத்தமிழர்களை சாட்டி எத்தனை மில்லியன்களை பதுக்கி வைத்திருக்கிறீர்கள் நிர்மலன். ஊனமுற்றவர்களுக்கு வாழ்விழந்த விதைவைகளுக்கு எடுத்துவிடுங்களேன். அதில் ஒரு துளியை ஒரு புரியை இழக்கி விட்டால்லோ போதுமென நான் நினைக்கிறேன் தோஸ்து.
அவர்கள் நிறைவடைவார்கள். அது தான் உங்களால் முடியாத காரியமே!. வேதனையில் சுகம் அனுபவிப்பவர்கள் அல்லவா? தாங்கள்.
ராசா ! என் பங்கு எங்கே ?மகிந்த மாமாவிடம் சொல்லிக்குடுப்பன். புலிகள் பிழை எம் தலைமைகள் பிழை நம் போராட்டம் நடத்திய விதம் பிழை தான். அதற்க்காக மகிந்தவின் கோவணமும் கொடியும் தான் தமிழரின் விடிவு, ஒரே வழி என்று தயவு செய்து கூறாதையும்.
தேவன்2 அவர்களே! ஒரு வரலாற்றை குறித்த ஒரிரு சம்பவங்களுடாக அறிந்து கொள்ள முற்படுவது அவ்வளவு ஆரோக்கியமான பார்வையில்லை என்பது எனது கருத்து.
யூதர்கள் தமது வரலாற்று தாயகத்தை மீட்பதற்கு வன்முறையை நாடியவர்களல்ல. ஐரோப்பியர்களால் அவர்கள் சந்தேக கண்கொண்டு பார்க்கப்பட்ட காரணங்களில் முதன்மை காரணங்களிலொன்று அவர்களது மனம்தளராது மத நம்பிக்கை.கிட்லரின் கட்டாய இராணுவசேவையை தமது மேர்சிய மீட்பரது நம்பிக்கை சார்ந்து ஏற்க மறுத்ததுதான். கிட்டலருக்கு இவர்கள் பால் கடும் சந்தேகம் கோபமும் வர முதன்மைகாரணங்களிலொன்று.
தாம் வன்முறை பாதையை நாடக்கூடாது மேர்சிய தங்களை அனைத்துன்பங்களிலும் இருந்து மீட்பார் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையே அவர்களது இருபது நுhற்றாண்டு அவல வாழ்விற்கு காரணம். அதை தகர்த்து முடிவிற்கு கொண்டுவரக்காரணமாக இருந்தது மேற்குநாடுகளின் யூதஇனஅழிப்பும் அரபுப்பயங்கரவாதிகளின் யூதஇனஅழிப்பும்.
இஸ்ரேல் தேசத்தை நிலப்பெறுமதியை காட்டிலும் பல மடங்கு கூடுதலான பணம் கொடுத்தே அரேபிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வாங்கினார்கள். இந்த உண்மையை நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள். பணத்தாசை பிடித்த அரேபிய கொள்ளையர்கள் பகலில் தமது ஆக்கிரமிப்புநிலங்களை விற்றுவிட்டு இரவுகளில் அதைவாங்கிய யூதர்களை கொன்று மீள ஆக்கிரமித்தனர். யூதர்கள் தமது பணத்தை மட்டுமல்ல உயிரையும் அரேபிய கொள்ளையர்களிடம் இழப்பது வாடிக்கையானது. இந்த அநியாயத்தை பொறுத்து பொறுத்து பார்த்த யூதர்கள் ஒரு கட்டத்தில் தம்மை பாதுகாக்க முற்பட்டனர். முடிபு கலவரங்களாக ஆரம்பித்து போராக உருமாற்றம் பெற்றது. மேர்சியா மீட்பரை விடுத்து தற்பாதுகாப்பை கையில் எடுத்தனர்.
இனி நீங்கள் கேள்விகுட்படுத்திய காலகட்ட நிகழ்வு பதிப்பை பார்ப்போம்.ஆதாரம் விக்கிபிடீயா
“1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.
இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.
இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் ‘மேற்குக் கரை’ என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.
போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.
பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாடினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)
யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்”
இதனூடக எனது நிலைப்பாடு மனுதர்மத்தின் நேர்மையின் பாற்பட்டது என உறுதியாக நம்புகிறேன். நானொரு ஈழத்தமிழன்.எம்மையொத்த ஒரு ஓடுக்கப்பட்ட அழிவின் விழிம்பில் நின்ற யூத இனத்தின் நியாயங்களை உணர்வுகளை புரிந்து கொள்கிறேன்.
///பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாடினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)
யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்”////
ஆகவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நேர்மையின் பாற்பட்டது என உறுதியாக நம்புகிறேன்.
இது தான் உங்கள் கருத்தா?
//ஆகவே இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நேர்மையின் பாற்பட்டது என உறுதியாக நம்புகிறேன். இது தான் உங்கள் கருத்தா?//
அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டவர்களும் நாசி வதைமுகாமிலிருந்து தப்பி வந்தவர்களும் தமது தாயக பூமியில் மீள் குடியேறுவதற்கு பெயர் ஆக்கிரமிப்பா??? நாளைக்கு தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் தமது பிரதேசங்களில் குடியேறுவதை “ஆக்கிரமிப்பு” என்பீர்கள் போலுள்ளது.
எனி எனது கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்!
1) ஒருநாட்டையும் அதன் பூர்வீக குடிகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பது என்பது பயங்கரவாதமா! இல்லை நியாயமான போராட்டமா!
2)நாசிகளின் கொலைமுகாமில் இருந்து உயிர்தப்பி வந்தவர்களை அரபுநாடுகள் கொன்றொழிக்க எடுத்த முயற்சி பற்றிய தங்கள் கருத்தென்ன!
3)இஸ்ரேல் பலஸ்தீன மோதலை காரணம்காட்டி 10இலட்சம் யூதர்களை துரத்திய அரபு முஸ்லீம்களின் செயல் எந்தவகைப்பட்டது!
4)அரபு முஸ்லீம்களினாலும் நாசிகளினாலும் வதைபட்ட (ஒடுக்கப்பட்ட) யூதர்களை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறீர்கள்!
5)தமிழின அழிப்பாளர்களான சிறிலங்கள அரச பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பலஸ்தீன பயங்கரவாதிகளின் செயற்பாடு உங்களிற்கு நியாயமாகப்படுகிறதா!
இப்பொழுதுதான் இரண்டு நாடுகள்
வரப்போகிறதே. யூதரின் சியோர் சினத்தை எதிர்காலம். முஸ்லிம்களின் ஒரு பக்கம் பேசும்
தன்மையை எதிர்க்கலாம் .அதனால் யூதர் எங்கிருந்தோ வந்தவர்களாகி விட மாட்டார்கள்
பால ஸ்திநியர்கள் சியோனிச வாதிகளின் ஆட்சியின் கீழ் வாழவும் தேவை இல்லை.
அவர்களுக்கு ஒரு பிரதே சம் இவர்களுக்கு ஒரு பிரதேசம் நல்ல ஒழுங்கு ஏன் இந்த தர்க்கம்.
தேவன்2 நீங்கள் எங்கு தமிழ் கற்றீர்கள் என்பதை எனக்கும் சொல்லுங்கள்!. உங்கள் அழகியதமிழ் காதில் தேன்மதுரமாகப் பாய்கிறது. தமிழ் பாஷையில் இவ்வளவு வாஞ்சையுடன் கருத்துப் பகரும் நீங்கள் வன்னிமக்களின் உயிர்வாழ்விலும் கொஞ்சம் கரிசரணை இருக்கக் கூடாதா?.
நீங்கள் சொன்ன தமிழாலேயோ மகிந்தா மூன்றுலட்சம் மக்களையும் கட்டி இழுத்து மறுவாழ்வு கொடுத்தார். இல்லையேல் வேலுப்பிள்ளை குடும்பத்தின் நலன்களுக்காக முள்ளிவாய்க்கால் கடைக்கரை மண்ணில் கருவாடாக உலத்தி யெடுத்திருப்பார் உங்கள் தேசியத்தவைர்.
யாழ்பாணத்தில் உள்ள மேட்டுகுடி மட்டும்தான் தமிழன் என்கிற மாயயை விட்டு தள்ளுங்கள். பணம் பண்ணுவதே அரசியல் ஆக்குவதை நிறுத்துங்கள். எந்த நேரமும் பணம் பங்கு பற்றிதான் நினைப்பா? மானிடத்திற்கும் மனிதநேயத்திற்கும்
முதல் இடம் கொடுங்கள். அரசியலை கற்றுக்கொள்ளுங்கள். அதை உணர்வாக்குங்கள். அதன் பிறகு உங்கள் கை எழுதத் தொடங்கட்டும்.
இதை தாங்கள் மனப்பூர்வமாக உணராத வரை குரங்கு பூமாலை கோர்க்க புறப்பட மாதிரியே உங்கள் கையில் தமிழ்.
அன்பரே! செத்த பாம்பை அடிப்பதை விடுத்து திட்டமிட்ட சிங்களகுடியேற்றங்களை பற்றியும், காளான் போல முளைவிடும் புத்தவிகாரைகளையும், நிலப்பறிப்புகளை(கொழும்பு உட்பட)யும், பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ? ஈ.பி.டி.பி கூட சர்வதேசபுரட்சிகர கட்சியின் ஒரு அங்கமாக அமையக்கூடிய தகுதிகொண்டது என்று கருதுகிறீர்களா? துமிந்த சில்வா, பாரத இவர்கள் கூட சர்வதேச புரட்சியாளர்களா?
நாகரீகம் தெரியாதவருக்கு இதுதான் நாகரீகம் என புலப்படுத்த முன்பட்டதே!.நீங்கள் நாகரீகமான முறையில் அணுகுகிறீர்கள். வரவேற்கிறேன். அன்பரே என்பதும் அழகான சொல்லல்லவா?
அன்பரே! சர்வதேச புரட்சிக்கு அழைப்பு விடுகிறவன் முதலாளித்தவ அமைப்பு முறைக்கு எதிராக போர்குரல் எழுப்புபவானகவே இருப்பான். அவன் பின்ணனியில்
இனங்களே மதங்களோ அடையாளமாக ஒருபோதும் இருக்க முடியாது. அப்படி பட்டவன் சர்வதேசிய குரலை சர்வதேசிய புரட்சியை ஏற்படுத்த குரல் கொடுக்க முடியாது. இதுவே நான் தங்களுக்கு நான் சொல்லும்சர்வதேச புரட்சியின் விபரம்.
உங்களை ஒரு கேள்விதான் கேட்கிறேன். இலங்கைத்தீவில் தமிழன் வாழமுடியாத இடம் எதுவோ? கொழும்பில் வாழவில்லையா? கண்டியில் வாழவில்லையா? காலி அம்பாறையில் வாழவில்லையா? அனுராதபுரம் வவுனியாவில் வாழவில்லையா? தமிழன் இலங்கையில் மட்டுமல்ல உலகம் பூராவும் நீக்கமற வாழ்விடத்தை தேடிவிட்டான்.
இதில் புத்தகோவில் வருகிறது. நிலம் பறிபோகிறது என்பது கடந்துபோன தமிழ் அரசியல் தலைவர்களும் செம்மறி கூட்டமாக தமிழ்தேசிய கூட்டடமைப்பும் உங்களுக்கு- உங்கள் மனச்சாட்சிக்கு குற்றவாளிகளாக தெரியவில்லையா தாசன் அவர்களே!
அதே புராணம் அதே சந்திரன் ராசா
ஒருவன் தான் விரும்பியதை செய்வதற்கு சனநாயக நாட்டில் உரிமையுண்டு அதில் அடுத்தவருடய நலன்கள் பாதிக்கப்படுகின்றதா என்பதில் ஒரு மனிதனோ,சமூகமோ அரச இயந்திரங்களோ மிகவும் கவனம் செலுத்துவது அவசியம் இலங்கை எங்கும் தமிழன் சென்று வாழ்ந்தான், எப்படி வாழ்ந்தான்?? வீட்டை வாங்கியோ கடையை வாங்கியோ தனது சொந்த உளைப்பில் வாழ்ந்தான் ஆனால் ஒர் அரசு தான் நினைத்தபடி எந்த கேள்வியோ தயக்கமோ இன்றி யாரும் பாதிக்கப்படுகின்றார்களா இல்லையா என்றில்லாமல் ஆணவத்துடன் ஒரு இன மக்களை மட்டும் குடியமா்த்த முடிவு செய்வதை மேற்கூறிய தமிழனின் நிலையோடு ஒப்பிடுவது மனநோயால் பாதிக்கப்பட்டவா்களாலேயே முடியும்.
ராசா நீங்கள் எந்த இடமோ நானறியேன் ஆனால் நீங்கள் நன்றாக யாழ் மனிதா்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் டக்ளஸின் தற்போதய மனநிலையை வெளிப்படுத்த முற்படுவதும் வெளிச்சமாக தெரிகிறது.உங்களிடம் அரசியல் இல்லை கொள்கை இல்லை வெறும் பாதிப்பினால் பழிவாங்கத்துடிக்கும் புலம்பலே தெரிகிறது அத்தோடு கொஞ்சம் மூலதனமும் வாசித்துள்ளீா்கள் என்பதை மறுக்கமுடியாது.
தம்பி சந்திரன், தேசிய, இனமொன்றின் நிலத்தை பறித்து அவர்களை அவர்கள் பிரதேசத்திலே சிறுபான்மை
ஆக்குவது இன அழிப்பின் ஓர் அங்கம். அதுகூடப் புரியாது உளறி உமது அறியான் மையை ஏன் பறை
சாற்றுகிறிர்கள்.
இலங்கையில் தமிழன் தேசியயினமென்றால் சிங்களமக்கள் எந்தயினமோ? வடபகுதியில் இருந்து விரட்டபட்ட முஸ்லீம்கள் எந்த இனமோ? இலங்கைதீவின் மத்தியில் ´இருநுறுவருட வாழ்வை கொண்டிருக்கும் மலையக மக்கள் எந்தயினமோ? ஆகயாழ்பாணத்தான் மட்டும்தான் உங்களுக்கு தேசியயினமாக தெரிகிறதோ? இது உங்களுக்கு உங்கள் அறியாமையாகத் தெரியவில்லையா மாசில்லாத…மணியே!.
கையில் வைத்திருக்கும் கடவுச்சீட்டுக்குத் தான் எந்தயினத்தின் பெயரை குத்துவது?
பேரினவாதம் இனஅழிப்பு என பிரச்சாரம் செய்கிறீர்ககளே அப்படியொரு அரசு இலங்கையில் இருந்தால் கோட்டைபுகையிரதநிலையத்தில் இறங்கி கட்டுநாயக்கா விமானத்தில் ஏறுவதற்கு எப்படி இந்த இனஅழிவுப் அரசு அனுமதித்திருக்கும்? யாழ்பாணத்துயரசில் வாதி எப்படியெல்லாம் அரசியல் பண்ணுகிறான் என்பது தெரியவில்லையா?
என்னைப்பார்த்து உளறுவதாக சொல்லுகிறீகளே! இந்த கேள்விக்காண விடைகள் உங்களுக்கு எதை நினைவு படுத்துகிறது மாசிலாமணியே!.
சிறிலங்கா தேசபக்தரே! முதலில் இலங்கைத்தீவில் எத்தனை இனங்கள் உண்டென சிறிலங்கா அரசியல்யாப்பு சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
அடுத்தவது சிங்களவரின், சிறிலங்கா முஸ்லீம்களின், மலையகத்தமிழரின் இன அடையாளத்தை யார் மறுத்தது! அதைவிட யாழ்பாணத்தமிழர் ஒரு தனியினமென யார் சொன்னது!
எதையுமே கருத்தில் எடுக்காது வாய்க்கு வந்தபடி பேசுவது நிட்சயம் அறியாமைதான்.
இனவழிப்பு/ இனச்சுத்திகரிப்பென்பது தனிய இனப்படுகொலை செய்வது மட்டுமல்ல. ஒரு இனத்தை அதன் பூர்வீக நிலத்திலிருந்து நிரந்தரமாக துரத்துவதும் இனவழிப்புத்தான்.
உயிர்தப்பி வெளிநாடு வர முனைந்தவர்களில் எத்தனை தமிழர் காணமல் போகடிக்கப்பட்டனர் சிறையில் அடைக்கப்பட்டனர் இலட்சக்கணக்கில் இலஞ்சம் கொடுக்க நிர்பந்திக்கப்பட்டனர் என்பது தெரியாத! ஈபிடிபி கிரிமினல் கும்பலின் வாழ்கையே தமிழரிடையே பறிக்கப்படும் பணத்தில்தான் நடக்கிறதென்பது அடுத்தவருக்கு தெரியாது என நினைத்தீர்களா!
இலட்சக்கணக்கான ஈழத்தமிழருக்கு எந்த அடிப்படையில் மேற்குலகு அகதிதஞ்சம் வழங்கியதென்பதை சிந்தித்தீர்களா! சிங்களத்தின் எலும்புத்துண்டிற்கு வாலட்டுபவர்களிற்கு ஏது சுயசிந்தனை! ஏது சுயகெளரவம்!
சிங்களத்தின் எலும்புத்துண்டிற்கு வாலட்டுபவர்களிற்கு ஏது சுயசிந்தனை! ஏது சுயகெளரவம்! அ
தனை புலியின் என்று வாசிக்குமாறு தாழ்மையுடன் விண்ண்ப்பம்
ஒரு நாட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்கலாம்தானே. தேசிய சிறுபான்மை இனம் வேறு.
யாருக்கு எழுதுகிறேன் அ ஆ வளுக்கு நான் எழுத விரும்பவில்லை.
யார் சொன்னது ஒருநாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் இருக்க கூடாது என்று. யாழ்ப்பாண மேட்டுக்குடியின் தேசிய இனம் எதுதான் என்று கேள்வி கேட்கிறேன்?.
தமிழனே தமிழனை அடக்கிவைத்துக் கொண்டு சிறுபாண்மையினத்திற்கு சுகந்திரம் வேண்டும். பிரிந்து போகறோம் அப்படித்தான் எழுதியிருக்கிறது என்றால்… சாதியால் ஒடுக்கிவைத்திருக்கிற மக்களும் மலையக மக்களும் கிழக்குமக்களும் இந்த யாழ்பாணமேட்டு குடியின் அரசியலை நம்புவார்களா?
ஆயிரம் வருடங்கள் கூடிவாழ்ந்த தமிழ்முஸ்லீம் சமூகத்தை நாதியில்லாமல் விரட்டியடித்தாயிற்று. கல்வியறிவில் கீழ்மைப்படுத்தி குளிர்க்கு ஒதுற்குவதற்கு
திண்ணையும் கொடுக்காமல் சயினட்கட்டி பலிஎடுத்தாயிற்று. மிகுதியை ஊனமாக தெருவில் அலைவிட்டாயிற்று. சிறுபான்மையினமே யாழ்பாணமேட்டுக்குடிக்கு சுகந்திரமும் ஒரு கேடா? யாருக்கு கதையளக்கிறீர்கள். உங்கள் நிரந்தர வாசஸ்தலமே! கொழும்பும் ஐரோப்பா அமெரிக்காவும் தானே!
சுகந்திரம் வேண்டும் தான். தமிழ்மக்களின் அடக்கியொடுக்கப்பட்ட மக்களுக்கு. யாழ்பாணமேட்டுக்குடிக்கல்ல. அறுபது வருடங்களுக்கு மேலாக சிங்களமக்களை பகைமை பாராட்டி அரசியல் வளர்த்து இளநீர்புடுங்கி தாகம் தீர்த்த காலம் மலையேறிவிட்டது. இனிவரும் காலங்களை தாங்கள் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
சந்திரன்ராசா! நீங்கள் எதை “யாழ்ப்பாண மேட்டுக்குடி” என வரையறை செய்கிறீர்கள்? வடகிழக்கிலுள்ள தமிழர்களில் மிகப்பெரும்பாலானோர். தமது மனிதவுரிமை சுயநிர்ணய உரிமையை கேட்டுத்தான் போராடுகிறார்கள். அதுதான் இங்குவிடயமே. அதைவிடுத்து நீங்கள் கற்பனை கதைசொல்லாதீர்கள் “யாழ்ப்பாண மேட்டுக்குடி” என. உங்கள் கற்பனை உண்மையானால் ஈபிடிபியும் அதன் ஆதரவாளர்களும் போலிதமிழ்க் கொம்முனிசிட்டுக்களும் தவிர்ந்த 90 வீத ஈழத்தமிழர் “யாழ்ப்பாண மேட்டுக்குடி” யாகவெல்லோ இருத்தல் வேண்டும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே!
//சாதியால் ஒடுக்கிவைத்திருக்கிற மக்களும் மலையக மக்களும் கிழக்குமக்களும் இந்த யாழ்பாணமேட்டு குடியின் அரசியலை நம்புவார்களா?//
விடயம் வடகிழக்கு பூர்வீக தமிழரைப்பற்றியது. அதில் வலிந்து மலையகத்தமிழரை சேர்க்கிறீர்கள். சரி உங்கள் விருப்பிற்கே வருவோம்! ஏன் இலங்கைவாழ் சிறுபான்மையினங்களின் சுயநிர்ணய உரிமையை சிங்களப்பேரினவாதம் மறுக்கிறது. அதுவொரு ஐனநாயக விரோதமாக உங்களிற்கு தெரியவில்லையா!
“சாதியால் ஒடுக்கிவைத்திருக்கிற” மக்கள் சொன்னார்களா தமக்கு சுயநிர்ணய உரிமை வேண்டமென்று? தமிழீழக் கோரிக்கைக்கு ஆதராவாகத்தானே எல்லோரும் ஒற்றுமையாக வாக்களித்தார்கள். இல்லையென நீங்கள் மறுத்தால் வடகிழக்கு மற்றும் மலையகத்தமிழரிடம் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி அவர்களின் அரசியல் விருப்பை அறிய ஏன் சிங்களப் பேரினவாதம் மறுக்கிறது? அதையேன் நீங்கள் ஆதரிக்கிறீர்கள்.
//ஆயிரம் வருடங்கள் கூடிவாழ்ந்த தமிழ்முஸ்லீம் சமூகத்தை நாதியில்லாமல் விரட்டியடித்தாயிற்று//
எங்கே விரட்டியடித்தாச்சு வடகிழக்கில் சிறிலங்காமுஸ்லீம் இப்பவும் வாழவில்லையா! சிறிலங்கா அரசியல் யாப்பின் படியும். அந்த மக்களின் 99வீதத்தினரும் தம்மை இலங்கைச்சோனகர்/ சிறிலங்காமுஸ்லீம் எனத்தான் அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். நீங்கள் அவர்களது விருப்பையும் சிறிலங்கா அரசியல் யாப்பையும் மீறி “தமிழ்முஸ்லீம்” என அடையாளப் படுத்துவது அடுத்தவரின் உரிமையை விருப்பை மதிக்காத காட்டுமிராண்டித்தனம்.
//சிறுபான்மையினமே யாழ்பாணமேட்டுக்குடிக்கு சுகந்திரமும் ஒரு கேடா?//
தமக்கு சுதந்திரம் தேவையா! இல்லையா! என்பது வடக்கிழக்கு தமிழர்களின் ஐனநாயக தெரிவே தவிர சிங்கள பேரினவாதத்திற்கு வாலாட்டும் சந்திரன்ராசா முடிவெடுக்க முடியாது. கட்சியின் அடையாளம் “ஈழமக்கள் ஐனநாயகம்” வாலட்டும் நாட்டின் அடையாளம் “சிறிலங்கா ஐனநாயக சோசலிச குடியரசு” ஆனால் பேசுவதோ சர்வாதிகாரம்.செய்வதோ கிரிமினல்தனம். இந்நிலையில் “மார்க்சிசம்” உங்களுக்கொரு கேடா!
கட்டுரையாளர் பல முக்கிய விடயங்களை தொடக்கூட முனையவில்லை. எழுந்தமானத்திற்கு ஏப்பம் விடுகிற இக்கட்டுரை யசீர் அரபாத்தையும், கமாஸ்பிரிவினைவாதிகளையும் கூட இனம் காட்டவில்லை. ஐநா அங்கீகரித்து விட்டால் எல்லாம் முடிந்து போய்விடும் என்கின்ற நிலமையில் பலஸ்தீனம் இல்லை.பலஸ்தீனத்திற்குள் பல இராசாக்கள் முறுக்கேற்றியவாறு இருக்கிறார்கள்.பிரச்சனைகளை தீர்க்க அவர்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. பல பிராந்தியங்கள் பெருமளவு பணத்தைக் கொடுத்து யூதர்கள் வாங்கியவை.யூதர்களோடு சமரசமாக ஒருபோதும் கமாஸும் அவர்களை ஏவும் முல்லாக்களும் விருப்பியதில்லை.பின்னூட்டம் போடுகிற பலரும் கட்டுரை சாராத தங்களின் நீட்டுமுடக்குகளை பதிபவர்களாயிருக்கின்றார்கள்.கண்டியில தமிழன் இருக்கின்றான் கொழும்பில தமிழன் இருக்கின்றான்.எதுக்கு அவன் ஒரு தேசிய இனமாக இருக்க வேணுமென்று மிகச்சுளுவாகத் தான் இங்கிலாந்தில் இருந்து கொண்டு கருத்துக்கக்குகிற சந்திராசாக்கள் பலஸ்தீனத்திற்கு பாலகாவடி எடுப்பது ரொம்ப டூமச்
பலஸ்தீன பயங்கரவாத பக்தர்களிற்கும் இஸ்லாமிய ஆதரவாளர்களிற்கும் கீமேயுள்ள தகவல்கள் சமர்ப்பணம்.
1)இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1இ027 பலஸ்தீன கைதிகள் விடுதலை இஸ்ரேல் தனது இராணுவ வீரர் ஒருவருக்காக 1இ027 பலஸ்தீன சிறைக் கைதிகளை விடுவிக்க முன்வந்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் அரசுக்கும் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
2)எகிப்தில் கிறிஸ்தவர்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதல்களில் 27 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அமைதி காக்கும்படி எகிப்து தலைமை அமைச்சர் எசாம் ஷராப் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கெய்ரோவில் அஸ்வான் மாகாணத்தில் தேவாலயம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குலை அடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. முஸ்லிம்களே தாக்குதலை நடத்தனர் என்று கிறிஸ்தவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
பலஸ்தீன பயங்கரவாத பக்தர்களிற்கும் இஸ்லாமிய ஆதரவாளர்களிற்கும் கீமேயுள்ள தகவல்கள் சமர்ப்பணம் செய்டதவர் புலி என்னும் அகிம்சை வாதி, அடுத்தநொபல் பரிசு இவர்களுக்கு தான்