தமிழகத் தொழிலாளர்கள் ஆந்திராவில் கொலைசெய்யப்படதைக் கண்டித்து பறை விடுதலைக்கான குரல் அமைப்பு லண்டன் இந்தியத் தூதரகத்தின் முன்னால் போராட்டம் ஒன்றை நடத்தியது. இந்திய மற்றும் ஆந்திர அரசுகளுக்கு எதிரான முழக்கங்களுடன் இப் போராட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு அமைப்புக்களைச் சார்ந்தோர் தனி நபர்களாகப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். பறை இசையுடன் நடத்தப்பட்ட போராட்டம் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமாகி மாலை ஐந்து மணிக்கு நிறைவுற்றது.
தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பிரித்தானிய காலனி ஆதிக்க அரசினால் பயிற்றுவிக்கப்பட்ட இந்திய அரச படைகள் என்கவுன்டர் என்ற போலி மோதல்களில் கொல்லப்படுகின்றனர்.
பொதுவாக பெரு வியாபார நிறுவனங்களின் நலன்களுக்காகவும், மாபியாக்களிடையேயான மோதல்களிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்ட 20 தமிழகத் தொழிலாளர்களின் உயிரையும் தமது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வாக்குப் பொறுக்கி வியாபாரிகள் மத்தியில் பறை – விடுதலைக்கான குரலின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.