பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் வறுமையின் விழிம்பை நோக்கி இழுத்துவரப்படும் நிலையில் நிறவாதம் நிறுவனமயப்படுத்தப்பட்டு அரசே அதனை மக்கள் மத்தியில் விதைத்துவருகிறது. எனப்படும் உணவகங்களில் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை வரலாறு காணத அளவு அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் உணவைப் பெற்றுக்கொண்டவர்களின் தொகை 19 வீதத்தால் அதிகரித்துள்ளது. 1,084,604 தடவைகள் மூன்று வேளை உனவு வழங்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலமைக்கு வெளி நாட்டவரே காரணம் என்ற பொய் அரசு உட்பட பல்வேறு அதிகாரமட்ட நிறுவனங்களால் பரப்பப்படு வருகின்றது.
இந்த நிலையில் திருப்பி அனுப்பப்படுவதற்காகத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பான மனித உரிமைகள் மீறும் விதிமுறைகளை பிரித்தானிய அரசு ஏற்படுத்தியுள்ளது.
தலைமை அதிகாரிகளின் அனுமதியுடன் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கோ அன்றி அதற்கு மேலதிகமாகவோ தனிமைச் சிறையில் அடைத்துவைக்கப்படலாம். அவ்வாறு அடைத்துவைக்கப்படும் போது அவர்களுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால் நிர்வாகம் அதனை வழங்குவது குறித்துக் கருத்தில் கொள்ளலாம். என புதிய அரச சட்ட வரைபு கூறுகின்றது.
ஒரு நோயாளியின் வலியை நிர்வாகம் உணர்ந்து கொண்டால் மட்டுமே மருத்துவ வசதி என்கிறது பிரித்தானிய அரசு.
சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் பாலியல் வதைக்கும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் புதிய சட்டவரைபு வெளியாகியுள்ளது.
Yes I agree while the detainees in prisons in Russia, Cuba, North Korea and China are treated like angels how dare these British morons do this. It is totally unacceptable.