அமரிக்காவின் பன்நாட்டு நிறுவனங்களுக்கு எதிராக 19.09.211 ஆரம்பிக்கப்பட்ட “‘Occupy Wall Street’ ” இயக்கம் இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவைப் பெற்ற போராட்டமாக மாற்றமடைந்துள்ளது. நேற்றைய தினம் (05.10.2011) பெருமளவிலான தொழிற்சங்கங்களும் சமூக அமைப்புக்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டன.
நியூ யோர்க் ஆளுனர் விடுத்த பத்திரிகைச் செய்தியில் ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏற்கனவே வெற்றிபெற்றுவிட்டார்கள் என ஒப்புத தெரிவித்திருக்கிறார்.
19வது நாளாகத் தொடர்ந்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் போது நூற்றுக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். பல தடவைகள் பொலீசாருக்கும் காவல் துறையினருக்கும் மோதல்கள் நடைபெற்றன.
இதன் நேரஞ்சலை இனியொருவின் சுவரொட்டிப் பகுதியில் காணலாம்.