கேப்ஜெமினி (Capgemini) எனும் ஆலோசனை நிறுவனம் புதன் கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையின்படி, “மிகஅதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்” எண்ணிக்கை அமெரிக்காவில் 2014-ல் 8.6 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிறுவனத்தின் 2015 அமெரிக்க செல்வம் பற்றிய அறிக்கையானது, அத்தகைய “மிக அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்” (HWNI) எண்ணிக்கை, அல்லது 1மில்லியன் டாலர்கள் கொண்டவர்கள் அல்லது அதற்கும் மேலாக முதலீடு செய்யக்கூடிய சொத்துக்கள், 4.4 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளன மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த செல்வம் 9.4 சதவீதம் அளவில் கூடுதலாகி 15.2 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.
முக்கியமாக, மக்கள் தொகையில் 1சதவீதத்திற்கும் சற்றே அதிகமாக உள்ள இந்த சமூகத்தட்டின் வளம்பெறலின் விரிவாக்கமும், வழக்கமான குடும்ப வருமானம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகின்ற போதும் கூட அதிகரித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு கழகம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில், அமெரிக்காவில் நடுத்தர குடும்பத்தின் வருமானம், 2013-ல் 54,462 டாலர்களாக இருந்ததிலிருந்து 2014-ல் 53,657 டாலர்களாக குறைந்து, இந்த எண்ணிக்கை 2007லிருந்து, அதாவது 2008 பொருளாதாரப் பின்னடைவுக்காலத்திற்குப் பின்னர் இருந்து 6.5 சதவீதஅளவில் வீழ்ச்சி அடைந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியும் வெள்ளை மாளிகையும் ஆறு ஆண்டுகளாக “பொருளாதார மீட்சி” என்று குறிப்பிட்டு வந்ததிற்கு அப்பால், உத்தியோகபூர்வ வேலையின்மை வீதம் “இயல்பு” மட்டமான 5 சதவீதத்திற்கு திரும்பிவிட்டது, ஒரு பாரம்பரிய குடும்பத்தின் வருமானம் ஒபாமா ஜனாதிபதி பதவிக்காலத்தின் பொழுது வருடத்திற்கு வருடம் வீழ்ச்சி அடைந்துவருகின்றது.
கேப்ஜெமினி அறிக்கை அமெரிக்காவானது மற்ற எந்த நாடுகளையும்விட மிக செல்வம் படைத்த பணக்கார மிகப் பணக்காரர்களை அதிகம் தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்று குறிப்பிட்டது. 2007க்குப் பின்னர் “அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்” (HWNI) க்காக உருவாக்கப்பட்ட அனைத்து செல்வத்திலும் 28.6 விகிதத்தினை வைத்திருக்கின்றபோது உலக மக்கள் தொகையில் 5 சதவீதத்தினர் மட்டுமே கொண்டிருக்கின்றது.
மில்லியனர்களின் எண்ணிக்கையை சீனாவின் சதவீதஅளவில் ஒப்பிட்டால் அமெரிக்க உயர்வானது குறுகிக்கூட போய்விடுகிறது. சீனாவின் “அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்” இன் எண்ணிக்கை நாட்டின் பங்குவிலைகளில் ஏற்பட்ட ஊகவணிக ஓட்டத்தின் விளைவாக 17.5 சதவீதம் வளர்ந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இரண்டுமே உலகின் ஏனைய பகுதிகளைவிடவும் மிக விரைவாகவே மில்லியனர்களை தோற்றுவித்துள்ளன. அவற்றின் “அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள்” 6.7 சதவீதம் அளவில் அதிகரித்துள்ள அதேவேளை, அந்நிறுவனத்தின்படி அவர்களின் செல்வமோ கடந்த ஆண்டு 7.2 சதவீதம் அளவில் அதிகரித்துள்ளது.
முதலீடு செய்யக்கூடிய செல்வமுடைய மில்லியனர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட உயர்வானது பங்குகளின் மதிப்பில் தொடர் வளர்ச்சிக்கு சமாந்தரமாக உள்ளது. பங்குகளின் மதிப்புக்கள் கடந்த ஆண்டு 11 சதவீதம் அதிகரித்தன. இந்த நிகழ்வுப்போக்கு ஏழாண்டுகால வங்கி பிணையெடுப்புகளாலும் அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கியால் வகித்த முன்னிணிப்பாத்திரத்தித்துடன் உலக மத்திய வங்கிகளால் வட்டிவீதம் பூச்சிய அளவிற்கும் அளவுரீதியாக தணிக்கும் முறையும் மேற்கொள்ளப்பட்டதால் தூண்டிவிடப்பட்டது.
மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டிவீத அதிகரிப்பை மெதுவாக தொடங்கும் நோக்கம் இருந்தபோதிலும், இந்த கொள்கைகள் உலகளாவிய வகையில் தொடர்ந்து விரிவடைந்தன மற்றும் தீவிரமடைந்தன. வியாழன் அன்று ஐரோப்பிய மத்திய வங்கி தலைவர் மாரியோ டிராகி மேலும் வட்டிவீத குறைப்பை அறிவித்தார், இது வங்கியின் மட்டக்குறி வட்டிவீதங்களுள் ஒன்றாக ஆனது. சொத்து வாங்குவதில் “பணத்தை புளக்கத்தில் விடும்” முறையை விரிவாக்குவதற்காக டிராகி இன்னுமொரு அறிவிப்பை செய்வார் என எதிர்பார்த்த உலக நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்பதன் மூலம் பதில்கொடுத்தன.
நிதிசந்தைகளால் தூண்டிவிடப்பட்ட பிரதிபலிப்பிற்கு விடையிறுப்பாக டிராகி, வெள்ளி அன்று உலக பங்குகள் கேட்கும் திரள்வை தூண்டும் வகையில், எதிர்காலத்தில் மேலும் பணத்தை புளக்கத்தில் விடும் முறையை செய்வதற்கு ECB தயார் நிலையில் உள்ளதாக தெளிவுபடுத்தினார்.
கேப்ஜெமினி அறிக்கை “அண்ணளவாக மில்லியனைக் கொண்டவர்களுக்கும்” அதிக நிகர மதிப்புடைய தனிநபர்கள் என்று அழைக்கப்படுபவர்களுக்கும் இடையிலான ஒப்பீட்டளவிலான சமூக பலத்தில் கடும் வேறுபாடு இருப்பதை மட்டும் குறிப்புக்காட்டியது.“
ஆனால் இந்தவார இறுதியில் (Institute for Policy Studies (IPS)) கொள்கை ஆய்வுக்கான நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இன்னொரு அறிக்கை, பரந்த அளவிலான அமெரிக்க மற்றும் உலக செல்வமானது கையளவே உள்ள அதி செல்வந்த தன்னலக்குழுக்களால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டியது.
“அமெரிக்காவின் 20 அதிசெல்வந்தர்கள் – தனி ஒரு Gulfstream G650 சொகுசு ஜெட்விமானத்தில் வசதியாக அமரக்கூடிய ஒரு குழு – 57 மில்லியன் வீடுகளில் உள்ள மொத்தம் 152 மில்லியன் மக்களும் சேர்ந்த அமெரிக்க மக்கட்தொகையின் கீழ்நிலையில் உள்ள அரைப் பங்கினரை விடவும் அதிகம் செல்வத்தை இப்பொழுது கொண்டுள்ளனர்” என அவ்வறிக்கை குறிப்பிட்டது. IPS அறிக்கையானது, அமெரிக்காவில் உள்ள 400 அதிக செல்வம் படைத்தவர்கள் தங்களின் செல்வ வளர்ச்சி ஒரு புதிய பதிவுச்சான்றான மட்டத்திற்கு $2.34 டிரில்லியன் அளவு வளர்ச்சிபெற்றுள்ளதாக குறிப்பிட்ட, ஃபோர்ப்ஸ் இதழால் அக்டோபரில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின் ஆய்வாகும்,
“ஃ போர்ப்ஸ் 400 பேர் நாட்டின் ஒன்றிணைந்த 194 மில்லியன் என வியத்தக்களவிலான மக்களின்” அதாவது கனடா மற்றும் மெக்சிகோவின் ஒன்ன்றிணைந்த மக்கள் தொகையைவிடவும் அதிகமான, நாட்டின் அடிமட்டத்து 61 சதவீத மக்களின் செல்வத்தை விடவும் அதிகம் கொண்டுள்ளனர்” என்று IPS மேலும் குறிப்பிட்டது.
ஃபோர்ப்ஸ் விபரங்கள் கூட அமெரிக்காவில் உள்ள சமூக சமத்துவமின்மையை குறைமதிப்பீடு செய்வதுபோல் இருக்கிறது. ஆய்வாளர் Gabriel Zucman 8 சதவீத தனிநபர் செல்வமானது நாடுகள் கடந்து தொழில் நடக்கும் நிலையில் வரியிலா சொர்க்கத்தில் உள்ளன, அதனால் வரிவிதிக்கப்படாது உள்ளன என்று கணக்கிட்டிருக்கிறார்.
செல்வத்தின் பேரளவிலான இந்த ஒருங்குவிப்பானது ஒபாமா நிர்வாகத்தின் கீழ் குறிப்பிடத்தக்க வகையில் விரைவுபடுத்தப்பட்டது, அவருடைய கொள்கைகள் தொழிலாளர்களின் நலனைப் பலியிட்டு அமெரிக்க சமூகத்தை மேலாதிக்கம் செய்யுதம் நிதிய தன்னலக்குழுக்களால் செல்வத்தை விரிவுபடுத்தலையும் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
புஷ் நிர்வாகம் கொண்டுவந்த வால்தெருவை வரிசெலுத்துவோரின் நிதியால் பிணை எடுத்தலை நீட்டித்ததையும் விரிவுபடுத்தியதையும் தமது முதலாவது வணிக ரீதியிலான ஆணையாக செய்த பிறகு, ஒபாமா நிர்வாகமானது அமெரிக்க மோட்டார் தொழிற்துறையை மறுசீரமைப்பதற்கான முதலாவது முன்நிபந்தனையாக இருந்த வறுமைக் கூலி வேலைகள் என்பதை அகற்றுவதை செய்தது. ஏழை மற்றும் குறைந்த வருமான முள்ளவர்கள் நலம்பெறும் சமூக வேத்திட்டங்களை துடைத்தழிக்கும் வெட்டுக்களை அமல்படுத்த காங்கிரசின் குடியரசுக்கட்சியினரோடு சேர்ந்து அது வேலை செய்தது.
இந்த கொள்கைகளின் விளைவாக, ஒபாமா நிர்வாகத்தின் சமூக மரபுரிமையானது சமூகத்தின் ஒரு முனையில் நிதியாதிக்க தன்னலக்குழுக்களின் செல்வத்தில் ஒரு பரந்த அளவிலான அதிகரிப்பும், மற்றொரு புறம் உழைக்கும் மக்களின் பாரிய பெரும்பான்மையின் ஏழ்மையும் ஆக இருந்து வருகிறது.
http://www.wsws.org/tamil/articles/2016/jan/160105_num.shtml