தமிழ்ப் பேசும் மக்களின் இனப்படுகொலையை சிங்கள அதிகாரவர்க்கம் மட்டுமே திட்டமிட்டு நடத்தவில்லை. இன்று தமிழர்களின் மத்தியிலுள்ள புல்லுருவிகளின் இறுக்கமான வலையமைப்புக்களின் ஊடாக இனச் சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றது என்பது மறுபடி ஒரு முறை ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. வெற்று வார்த்தைகள், வெற்றுத் தீர்மானங்கள் ஊடாக மக்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு மக்களை அழித்து கொழுக்கும் கூட்டம் ஒன்று கழுகுகள் போல மக்களைச் சுற்றிவருகிறது.
இவர்களுக்கு எதிரான போராட்டங்களும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாவிட்டால் போலி தேசிய முகமூடி அணிந்த கயவர் கூட்டம் மக்களையும் மண்ணையும் அழித்துத் துவம்சம் செய்துவிடும்.
இலங்கை ஒற்றையாட்சி மாகாண சபையை ஏற்றுகொண்டு ஆட்சி செய்யும் கொள்ளைக் கூட்டத்தின் வரலாற்றுத் ‘துரோகம்’ ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். யாழ்ப்பாண மண் அழித்து கடாந்தரையாக மாறும் நிலை உருவாகும்.
வடமாகாண சபை யாருக்கானது?
சுற்றாடலை கையாளும் ஆபத்தான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் உலக நிறுவனங்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு அந்த மண்ணை அழித்தமை தற்செயலானதல்ல. எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் பெற்றோலியக் நச்சுக் கழிவுகளை அகற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஒரு நிறுவனமாகும். எம்ரிடி வோக்கஸ் இன் தாய் நிறுவனமான எம்ரிடி கப்பிடல் மலேசியாவில் தலைமையகத்தக் கொண்டுள்ளது.
இந்த நிறுவனம் சுன்னாகம் அனல் மின் நிலையத்தை நடத்தும் வியாபாரத்தை ஆரம்பித்த நாளிலிருந்து அங்கிருந்து வெளியேறும் எண்ணைக் கழிவை உரிய முறையில் வெளியேற்றமல் மக்கள் குடியிருப்புக்களை நாசப்படுத்தியது. சுன்னாத்திலிருந்து பல மைல் சுற்றாடல் வரை அதிபார டீசல் கழிவுகள் நீரை நஞ்சாக மாற்றியது. நிலத்தின் ஆழத்திலுள்ள சுண்ணாம்புப் படுக்கைகளில் நிரந்தரமாகப் படிந்த டீசல் கழிவுகளால் வளமான நிலம் பயிர்ச்செய்கைக்கு உதவாத நிலமாக மாற்றப்பட்டது.
இதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகிய எம்.ரி.டி வோக்கஸ் என்ற கிரிமினல் பல்தேசிய நிறுவனம் அவர்களின் வாயை மூடுவதற்கு தேவையானவற்றைச் செய்துகொடுத்தது, பல மில்லியன்கள் டொலர்களில் புரண்டிருக்கலாம் என உள்ளகச் செய்திகள் வெளியாகின.
இயற்கை வளம் அழிந்தது..
சுன்ன்னாகத்திலிருந்து திருனெல்வெலி வரைக்கும் கிணறுகளில் எண்ணைக் கழிவுகள் மிதந்தன. சுத்தமான நீரைப் பருகிவந்த மக்கள் போத்தல் தண்ணீரில் தஞ்சமடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. லண்டனில் பறை விடுதலைக்கான குரல் என்ற அமைப்பின் போராட்டம் ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் முன்னால் நடைபெற்றது. பல்வேறு சுற்றுச் சூழல் குற்றங்களுடன் நேரடித் தொடர்புடையை இலங்கையரான நிர்ஜ் தேவா என்பவர் எம்.ரி.டி வோக்கஸ் இன் இயக்குனர்களில் ஒருவர்.
பிரித்தானியாவில் ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினரான நிர்ஜ் தேவா இன்றைய இலங்கை அரசின் உயர்மட்ட ஆலோசகர். ரனில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும் சிறீலங்கன் ஏயர் லைன்சின் இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
ஏற்கனவே வெளியான சுன்னாகம் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து நிர்ஜ் தேவாவிற்கு எதிரான வழக்குத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் வடமகாண அரசு நேற்று(07.12.2015) போலி அறிக்கை ஒன்றை அவசர அவசரமாகத் தயார் செய்து வெளியிட்டுள்ளது.
எண்ணை மிதந்த கிணறுகளை வடமாகாண சபை அமைச்சர்கள் பல தடவைகள் நேரடியாகப் பார்வையிட்டுள்ளனர். ஆய்வறிக்கைகள் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. சுன்னாகம் நீரை மாகாண சபைக்குக் கொண்டு சென்று உறுப்பினர்களைப் பருகச் சொல்லி சமூக ஆர்வலர்களின் குழு ஒன்று கேட்ட போது அவர்கள் அருந்த மறுத்த வரலாறுகளும் உண்டு.
நடந்தது என்ன?
சுன்னாகம் பகுதியையும் சுற்றாடலையும் சேர்ந்த மக்கள் 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தவிர, மருத்துவர் முரளி வல்லிபுரநாதன், துவாரகன் போன்ற சமூக ஆர்வலர்கள் சுன்னாகம் அழிவுகளை மையப்படுத்தி ஆய்வுகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தனர்,
இதனைத் தொடர்ந்து வடமாகாண சபை அவசரமாக ஒரு நிபுணர் குழுவை ஆரம்பித்தது. ஏற்கனவே இலங்கை அரசின் தேசிய நீர்வழங்கல் சபை உட்பட பல்வேறு அமைப்புக்கள் நடத்திய ஆய்வுகளில் நீரில் எண்ணிக் கழிவுகள் கலந்துள்ளன என ஆதாரபூர்வமாகத் தெரிவித்திருந்த போதும் விக்னேஸ்வரனின் ஆசியோடு புதிய நிபுணர் குழு ஒன்று ஆய்விற்காக ஆரம்பிக்கப்பட்டது. இக் குழு கிழக்கு பல்கலைகழக கலாநிதி த.ஜெயசிங்கம், யாழ்.பல்கலைக்கழக இரசாயன வியல் துறைக் கலாநிதி கு.வேலாயுத மூர்த்தி, விவசாய பீடத்தைச் சேர்ந்த கலாநிதி நளினா ஞானவேல்ராஜா, பொறியியல் பீடத் தலைவர் கலாநிதி அ.அற்புதராஜா உள்ளிட்ட ஒன்பது பேரை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்டது.
அக்குழுவில் அங்கம் வகிப்பவர்களுக்கும் நீர் பரிசோதனைக்கும் எந்தத்தொடர்ப்பும் இல்லையென்றும் அவர்கள் வடமாகாண சபை உறுப்பினர்களின் அடியாட்கள் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி வட மாகாண சபையில் போலி நிபுணர் குழுவின் முதலாவது அறிக்கை வெளியானது, அந்த அறிக்கையின் அடிப்படையில் சுன்னாகம் நீலக்கீழ் நீரில் நஞ்சு கலந்திருக்கவில்லை என, இதுவரை வெளியான ஆய்வுகள் அனைத்தையும் புறக்கணித்து நிபுணர்குழு பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு எம்,ரி,டி வோகஸ் என்ற மல்ரி பில்லியன் நிறுவனத்தின் ஊதுகுழல் போன்று செயற்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சாகமடைந்த எம்.ரி.ரி வோக்கஸ் தாம் சுத்தமானவர்கள் என அறிக்கைவிடுத்தது.
2011 ஆம் ஆண்டிலிருந்து வெளியான பல்வேறு ஆய்வு அறிக்கைகளிலும், இலங்கை அரசின் தேசிய நிர் வழங்கல் சபையின் அறிக்கையிலும் நிலக்கீழ் நீரில் எவ்வாறான நச்சுப் பதார்த்தங்கள் கலந்திருக்கின்றன என்ற அறிக்கை வெளியாகியிருந்தன. ஒன்றோடு ஒன்று தொடர்பற்ற அனைத்து ஆய்வுகளிலும் ஒரெ வகையான முடிவுகளே முன்வைக்கப்படன.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களும் கண்டனங்களும் தொடர்ந்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் கபட நோக்கத்துடன் இலங்கை அரசின் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் அடிப்படையில், சுன்னாகம் பகுதியிலுள்ள பல கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்களும் கிறீஸ் படிமங்களும் காணப்படுவது உண்மையென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை உறுதிப்படுத்தியிருப்பதால் அக்கிணறுகளின் நீரை மக்கள் அருந்த வேண்டாமென நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார்.
அத்துடன் இக்கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், இப்பகுதி கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லையென வடக்கு மாகாண சபையின் நிபுணர் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்படுகின்ற நிலையில், அவ்வறிக்கையை நான் கேட்டும் கூட இதுவரைக்கும் தன் கண்ணில் காட்டவில்லையெனவும் குற்றம்சாட்டினார்.
கூடவே பாதிக்கபட்ட மக்களுக்கு எம்.ரி.டி வோகஸ் நிறுவனத்திடமிருந்த இழப்பீடு பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார். வழமை போல அவை காற்றில் பறக்கவிடப்பட எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு கொழும்புத் துறைமுகத்தின் பராமரிப்புப் பணிக்கான பில்லியன்கள் பெறுமதியான ஒப்பந்தம் கடந்தவாரம் இலங்கை அரசால் வழங்கப்பட்டது.
கடந்த ஏப்பிரல் மாதம் இலங்கை அரசின் அந்த அறிக்கையின் பின்னர் வடமாகாண அரசு தனது போலி நிபுணர் குழுவை புதிய ஆய்விற்கு ஆணையிட்டது.
அதன் அறிக்கை நேற்று (07.12.2015) வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சுன்னாகம் நீரில் அதிபார கழிவு டீசல் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை என முழுப் பூசணிக்காயை மட்டுமல்ல அதன் செடி கொடிகளையும் சேர்த்தே சோற்றினுள் புதைத்துள்ளது.
அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பதாக தூய குடி நீருக்கான செலணி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த அமைப்பையும் நிலக்கீழ் நீரில் நஞ்சு கலந்துள்ளமையை ஆதாரபூர்வமாக நிறுவிய எவரையும் அழைக்காது, காதும் காதும் வைத்தது போன்று 07.12.2015 அன்று புதிய அறிக்கையை வடமாகாண் சபை யாழ் நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வெளியிட்டது.
எம்.ரி.டி வோக்கஸ் நடத்திய ஊழித் தாண்டவத்தால் நிலமும் நீரும் மாசடையவில்லை எனக் கூறும் நிபுணர் குழு, மக்கள் நீரை அருந்தலாமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியது எனக் கையை விரித்துள்ளது.
நமது திடீர் தேசிய வாதி விக்னேஸ்வரன், நிபுணர் குழு அறிக்கையெல்லாம் வெளியாவதற்கு முன்பாகவே நீர் நச்சாகியமைக்கு எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் மின்னுற்பத்தி காரணமல்ல்ல என தடாலடியாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அழிப்பதற்கு பச்சைகொடி காட்டிய விக்கியும் குழுவும்…
இன்று வட மாகாண சபையின் அறிக்கையின் அடிப்படையில் எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்திற்கு எதிரான குற்றஙகள் அனைத்தும் பெறுமானமற்றதாக்கபட்டுள்ளன. அந்த நிறுவனம் தேவைப்படும் போது மீண்டும் மின்னுற்பத்தை ஆரம்பித்து வட மாகாணம் முழுவதையும் அழிக்கலாம். இயயற்கையின் கொடையான நீரை அருந்திய மக்கள் இன்று பல்தேசிய நிறுவனங்கள் தயாரிக்கும் இரசாயன போத்தல் நீரைப் பருக நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, போத்தல் நீர் வழங்கும் நிறுவனங்கள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எவ்வகையான ஒப்பந்தங்களை கொண்டுள்ளன என்பது போன்ற செய்திகள் வெளியாகவில்லை.
எழுவருட காலத்திற்கு சமுகவிரோதக் கும்பல்கள் ஒரு பிரதேசத்தையே அழித்துச் சிதைத்துவிட்டு இன்று வல்லூறுகளின் துணையோடு புனிதப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசு வன்னியில் நடத்திய இனப்படுகொலையின் பின்னர், திட்டமிட்டு சிறுகச் சிறுக நடத்தப்படும் இனப்படுகொலையின் மற்றொரு ஏஜண்டாக வடமாகாண சபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர் குழாமும் என இந்த வரலாற்றுத் துரோகம் நிறுவியுள்ளது.
நீதிபதியாகவிருந்த காலத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்கிய விக்னேஸ்வரனை அரசியலுக்கு அழைத்துவந்தமைக்கான பலனை அவரின் பின்னாலுள்ள அதிகாரவர்க்கம் அனுபவிக்கிறது. மிகவும் நுட்பமான வகையில், தன்னை அரச எதிர்ப்பாளனாகக் காட்டிக்க்கொள்ளும் விக்னேஸ்வரனை அவரின் குருவான பாலியல் சாமி பிரேமானந்தாவின் ஆச்சிரமத்திற்கு மக்கள் அனுப்பிவைப்பார்கள்!
can you get a copy of the Expert’s report?
please do not mislead the public. Majority of the people have full confidence in CM. Report is in the public domainm go into the detail and criticise if possible. These days every layman has become expert in every field. pl keep your politics out. thank you.
Kumar,எத்தனையோ பெயா்களை நீங்கள் பயன்படுத்த முடியும் போயும் போயும் இன்னொருவருடய பெயாின் பின்னால் ஒளிந்து கொள்ளமுற்படுவதேனோ?
மேற்படி கட்டுரையை விமர்சித்து காரசாரமான எதிர்வினை ஒன்றை எழுதி இருந்தேன் இனிஒரு பிரசுரிக்கவில்லை. தொடர்ந்து எனது பல கட்டுரைகள் , எதிர்வினைகளை இனிஒரு பிரசுரிக்காமல் விட்டுள்ளது. மக்கள் மத்தியில் இனிஒரு தவறான கருத்துருவாக்கத்தை மேல்கொள்கிறது என்ற எனது சந்தேகங்களை இந்த பிரசுர மறுதலிப்பு உண்மையாக்குகிறது என்ற சந்தேகம் என்னுள் வலுக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் இனிஒருவை கேள்விக்கு உள்படுத்தும் எனது செயல் பாட்டை பிறிதொரு தளம் ஒன்றில் கடுமையாக மேல் கொள்ள வேண்டிவரும்.
S.G.ராகவன் (கனடா)
இனி ஒருவுக்கு கருத்துநெருக்கடி , கருத்து பஞ்சம் ஏற்படும் போதெல்லாம் கருத்து பதிவு செய்பவர்களின் கருத்துரிமையில் கை வைத்து விடுவார்கள் .எந்த வரம்பு மீறல்களும் இல்லாத வகையில் கருத்து தெரிவிதிருந்தாலும் அந்த கருத்தை எதிர்கொள்வதற்கு தைரியமில்லாமல் எனது கருத்தை வெளியிடாது பல தடவை இருட்டடிப்பு செய்துள்ளார்கள் .
இதில் மற்றவர்களை ஆயுத பாஸிசவாதிகள் , கருத்து பாஸிச வாதிகளென வசை பாடுவதற்கு ஒரு குறைச்சலுமில்லை . இதனால்தான் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு போயிருக்கிறார்கள் .
S.G.Ragavan
“இந்திய சப்பாத்தியை தின்று விட்டு குசுவும் நெடி போல் கட்டுரையாளரின் எழுத்து வாசனையும் சப்பாத்தி திண்டு ஏவறை விட்டவன் மாதிரியும் …….. குசிவினவன் மாதிரியும்……………………”
விக்கி என்ன பிடல் காஸ்ரோவா?… என்று ஆரம்பிக்கும் உங்கள் எழுத்து நீக்கப்பட்டுள்ளது. தமிழ் அழகான மொழி அழகான வார்த்தைப் பிரயோகங்கள் தமிழில் நிறையவே உண்டு. பொதுத்தளத்தில் இவ்வாறான சொற் பிரையோகங்களைத் தவிர்ப்பதை நாம் வழமையாகக் கொண்டுள்ளோம், உங்களது கருத்தை பொதுவான மொழி நடையில் எழுதினால் பதிவை அனுமதிக்கலாம். தவிர, வேறு எந்தத் தளத்திலும் இனியொருவை… விமர்சிப்பது தொடர்பாக எமக்கு ஆட்சேபனை கிடையாது.
பொது வெளியில் போடக்கூடாததை மாத்திரம் போட்டுவிட்டு போடக் கூடியதை கத்தரித்த மர்மம் என்ன?. பொது வெளியில் பேசக் கூடிய நல்ல தமிழை மாத்திரம் பேசும் பண்பை இழக்கும் வகையில் உங்களின் கட்டுரைகள் வாசகர்கள் ஆகிய எங்களை மன வேதனைக்கு உள்ளாக்குகிறது அல்லது நிதானம் இழக்கச் செய்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என இனிஒருவை கேட்டுக் கொள்கிறேன்.
S.G.இராகவன் (Canada)
இனியொருவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்பது சுமந்திரன் தொடர்பாக வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் எழுதிய கட்டுரை தேர்தலின் இறுதி காலத்தில் வெளிவந்தபோது தெரிந்தது (சுமந்திரனின் அரசியல் வெட்டவெளிச்சமாக தெரிந்தபோதும், அவரை மறைமுகமாக ஆதரிக்கும் விதமாகவே இக் கட்டுரையை இனியொரு வெளியிட்டது).
முற்போக்கு இடது சாரிகளாக காட்டிக்கொள்ளும் இனியொருவின் ஆசிரியர்கள், விக்னேஸ்வரனை இவ்வளவு ஆக்ரோசமாக விமர்சிக்கும் போது இன்னும் சில விடயங்கள் துலக்கமாக தெரிகிறது/புரிகிறது, மேலும் விக்னேஸ்வரனை விமர்சிக்குமளவுக்கு இனியொரு வேறு எவரையும் விமர்சிக்கவில்லை – நீங்கள் ஏதாவது தரவுகள் காட்டலாம் ஆனால் இனியொரு தொடங்கிய காலம்தொட்டு ஒரு பார்வையாளனாய்/வாசகனாய் இருப்பவன் என்ற வகையில் நான் அதை உணர்கிறேன்.
விக்னேஸ்வரன் தொடர்பாக சமந்தா பவரின் அண்மைய tweet, அவர் ராஜதந்திரிகளுக்கு ஒன்றும் மக்களுக்கு இன்னொன்றும் சொல்லி நிப்பவராகக் காட்டவில்லை மேலும் அவருடைய கருத்துக்கள் அவைகளுக்கு கூட உவப்பானதாக இல்லை ஆக இனியொருவின் விக்னேஸ்வரன் மீதான விமர்சனத்தை எந்த அடிபடையில் புரிந்து கொள்வது?
ஒருகாலத்தில் பாதிரியார் ஜகத் கஸ்பார் மிகத் தீவிரமாக தமிழ்த்தேசியம்/புலிவிசுவாசம் பாடிகொண்டே இருந்தார் பின்னர் யுத்தத்தின் இறுதிநாட்களில் அவர் செய்த திருவிளையாடல்கள் யாவரும் அறிந்ததே. அதேபோன்று எல்லோருடைய அம்மணங்களும் நிகழ்ச்சி நிரல்களும் வெளித்தெரியும் அதை எந்த கோவணம் கொண்டும் மறைக்க முடியாது.
என் அறிவுக்கு எட்டியவரையில் இனியொரு செய்யும் விமர்சனம் கூட புலிகளின் பாணியினதே (இது அனேகமாக தமிழரின் பொதுப்புத்தி, இதற்கு இனியொருவின் ஆசிரியர்கள் விதிவிலக்கா என்ன?? ) ஒருவரை நீ துரோகி என்று பட்டம் சூட்டி எதிர்த்தரப்புக்கு தள்ளிவிடுவதே அது!! அதைவிடுத்து நாம் எல்லோரும் ஒரு பொது கருத்துருவாக்கத்துக்கு வரமுடியாமல் ஏன் மனப்பிறழ்வுகளுடனே வாழ்கிறோம் ??
நமக்கு சோறு போடுறவர்களின் மேல் எப்போதுமே அதீத பிரியம்!!
தேர்தலின் இறுதிக் கணத்தில் வைத்தியர் முரளி வல்லிபுரநாதன் சுமந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து எழுதிய எழுதிய கட்டுரைக்கும் பதிலிறுத்து இன்னும் பல விடயங்கள் அடங்கிய கட்டுரை என்னால் எழுதப்பட்டது. அதனையும் இனிஒரு பொது வெளியில் பேசக் கூடாது ? என கூறி பிரசுரிக்காமல் விட்டு விட்டது.
ராகவன், கிறுக்கன்…
https://inioru.com/biggest-disaster-after-mullivaykal/
இனியொரு ஆசிரியரின் பதில் என்னவோ நேற்றுத்தானே இந்த பாடம் சொல்லித்தந்தேன் இன்னும் புரியவில்லையா திரும்பவும் படி எண்ற மாதிரி இருக்கு!!
அய்யா; சுண்ணாகம் நீர் பிரச்சினை தொடர்பாக நம் எல்லோருக்கும் பலத்த சந்தேகங்கள் அய்யப்பாடுகள் உள்ளன அதை தீர்த்துவைக்கவேண்டிய கடமை/பொறுப்பு வடமாகாண சபைக்கும் அதன் முதலமைச்சர் ஆன விக்கினேஸ்வரனுக்கும் உண்டு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இங்கு எனது பின்னூட்டமும், ராகவனது பின்னூட்டமும் கேட்டு நின்றது, விக்கினேஸ்வரன் மீதான தொடர்ச்சியான விமர்சனங்கள் பற்றியதே??
இராஜதந்திரிகளின் உடனான சந்திப்புகளில் விக்னேஸ்வரன் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக முன்வைப்பதாகவே தோன்றுகிறது.
இதனுடைய பக்க விளைவுகள் தான் அவர் குறி வைய்க்கப்படுவதற்க்கான காரணங்களா??
S.G.Ragavan, கிறுக்கன்
சுன்னாகம் பிரச்சனையில் ஒருவருக்கும் சந்தேகங்கள் இல்லை. மிகத் தெளிவான ஆய்வுகள் 30 எண்ணைக் கிணறுகளில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகளும் ஆய்வு முறையும், முழு அறிக்கையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அதனை மூடி மறைப்பது தொடர்பான சந்தேங்களே உள்ளன, அதற்கான முயற்சியில் முதலில் விக்னேஸ்வரனும், பின்னர் நிபுணர்குழுவின் துணையுடன் வட மாகண சபையும் செயற்படுகிறது. ராஜதந்திரிகளுக்கு என்று தனியான திட்டங்கள் உண்டு, அவர்கள் முழுமையான கள ஆய்வுகளுடன் தங்களது திட்டங்களை நிறைவேற்றவே இலன்ங்கைக்கு வருகிறார்கள். விக்னேஸ்வரன் மட்டுமல்ல, யார் பேசினாலும் எதுவும் நடக்காது என்று விக்னேஸ்வரனுக்கே தெரியும். அவர் குழந்தை அல்ல. அமெரிக்க நிதியில் இயங்கும் பசுமைத் தாயகம் என்ற அமைப்பே இது நாள் வரையில் புலம்பெயர் அமைப்புக்களை ஐ.நா விற்குக் கூட்டிச் சென்று ராஜதந்திரிகளுடன் வெளிப்படையாகப் பேசியது. இன்று நடந்தது என்ன? நமக்கு முன்னே நிறைய உதாரணங்களும் படிப்பினைகளும் உண்டு. நாம் தான் கற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
இலங்கை அரசின் மாகணத்திற்குரிய நிர்வாகப் பிரிவான மாகாண சபையைப் பொறுப்பெடுத்து நடத்தும் விக்னேஸ்வரன் மட்டுமல்ல, நூற்றுகணகானவர்கள் இதையெல்லாம் வெளிப்படையாகவே பேசுகிறார்கள்.
இங்கு பேசுவதல்ல பிரதானம், இறுதியில் எங்கு சென்றடைகிறோம். என்பதற்கான கணிப்பிட்டே அவசியம். ஜெயலலிதா இனப்படுகொலைத் தீர்மானம் நிறைவேற்றிய போதும் இனியொரு அதனை எச்சரித்திருந்தமை குறிப்பிடத்கக்கது. இன்று ஈழத் தாய் வேடமணிந்த ஜெயலலிதாவின் சுய ரூபத்தை வெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது.
அமொிக்க,இந்திய அரசுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப சம்பந்தா் குழு அரசியல் காய்களை நகா்த்த முனைவது வெளிச்சம். அரசியல் யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி சிங்கள போினவாதிகள் குழம்பாதவகையில் சில தீா்வுகளை வழங்க உறுதி வழங்கப்பட்டிருக்கலாம் இதற்கு பதிலாக போா்க்குற்ற விசாரணைகளை மறந்துவிடும்படி வேண்டப்பட்டிருக்கலாம் இதில் முன்னைய இயக்கக்குழுக்களுக்கோ திரு. விக்கினேஸ்வரனுக்கோ உடன்பாடோ நம்பிக்கையோ இல்லை என்பதே என்கருத்து இதன் எதிரொலியே ராஜபக்ஸ தோல்வியைத்தழுவியும் கூட இனக்கொலை சம்பந்தப்பட்ட தீா்மானத்தை நிறைவேற்றியதும் அதையிட்டு கொழும்பும் இந்தியாவும் அமொிக்காவும் தமது ஆதங்கத்தை வெளியிட்டதும்.ஆக திரு.விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளில் நோ்மை உள்ளதாகவே நானும் உணா்கிறேன் இருந்தாலும் வல்லவா்களின் முன்னால் இது சாத்தியமா என்பதே கேள்வி.
இனியொருவின் குற்றச்சாட்டான சுண்ணாகம் நீா் பிரச்சனையின் உண்மையை மக்களுக்கு தொியப்படுத்த வேண்டியது வடமாகாண சபையின் கடமை அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது.
சவாலை ஏற்கத் தயாரா?
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உண்மையகப் போராடுபவர்கள் தலைமை ஏற்றுவிடக் கூடாது என்ற நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்தியாவின் ஆசியுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டவர் விக்னேஸ்வரன். இதுவரைக்கும் மக்களுக்காக எதனைச் சாதித்தார். இந்தியாவின் ஊழல் ராணி ஜெயலலிதா போல அப்பப்போ அறிக்கை விடுவார். சரியாகக் கவனித்துப் பார்த்தால் தெரியும். விக்னேஸ்வரன் இதுவரை செய்தது ஒன்றே ஒன்று தான். இனப்படுகொலை தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமே. அது எப்போது நடந்தது? சுன்னாகம் பிரச்சனையில் நீரில் மாசு இல்லை என எல்லா ஆய்வுகளையும் மீறி விக்னேஸ்வரன் தான் தோன்றி தனமாக யாருடையதோ நலனுக்காக அறிக்கை வெளியிடுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக! புலம்பெயர் ‘கல்லாப்பட்டி’ தலைவர்களும் ராஜதந்திரிகளிடம் இனக்கொலையாளிகளைத் தண்டியுங்கள் என்று தான் பேசுகிறார்கள். விக்னேஸ்வரனுக்கும் அவர்களுக்கும் ஒன்று தெரியும், ராஜதந்திரிகளுடன் கதைப்பது மரத்துடன் கதைப்பதைப் போல். அவர்கள் தங்களுக்கு எது இலாபமோ அதைச் செய்வார்கள். சரி, விக்னேஸ்வரனின் வட மாகாண சபையால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகளில் ஒன்றைக் கூறுங்கள், சவல் விடுகிறேன். ! நூற்றுக்கணக்கான தீமைகளை நான் வேண்டுமானால் பட்டியலிடத் தயார்.!
கட்டுரை நீரில் எண்ணெய் கலந்திருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகின்றது. ஒரு வாதத்திற்காக எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் மின்னுற்பத்தியைக் கைவிட்டாலும் அங்குள்ள நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. அங்கு மலசல கூடத்திலிருந்து வரும் நீர் நிலத்தடி நீருடன் கலந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே குடிநீர் பற்றி நீண்டகாலத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அடுத்ததாக அங்குள்ள கழிவு எண்ணெய் மின்னுற்பத்தியுடன் மட்டும் தொடர்புடையதா அல்லது எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் வேறெங்கும் கிடைத்த கழிவு எண்ணெயை குடாநாட்டில் கொட்டியதா என்பதும் தெளிவு படுத்தப்பட வேண்டும். ஏனனில் எம்.ரி.டி வோக்கஸ் என்ற நிறுவனம் பெற்றோலியக் நச்சுக் கழிவுகளை அகற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் ஒரு நிறுவனமாகும் என்று கட்டுரை குறிப்பிடுகின்றது.
கடைசியாக கடந்த சில மாதங்களாக குடாநாட்டில் மின்னுற்பத்தி இல்லை என்று நம்புகின்றேன். இதுவும் “நிபுணர்” குழுவின் முடிவில் தாக்கம் செலுத்தலாம்.