No Fire Zone என்று தொடர்ச்சிய பிரித்தானியத் தொலைக்காட்சியில் வெளியான வன்னிப்படுகொலைகள் குறித்த ஆவணப்படம் இப்போது முழுமையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சட்ட உரிமம் தொடர்பான சிக்கல்களால் இப்போது பிரித்தானியாவில் மட்டுமே இதனைப் பெற்றுக்கொள்ளலாம் எனினும் சிலவாரங்களுக்கு உள்ளாகவே உலகம் முழுவதும் இது விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இனவழிப்பின் இறுதி மாதங்களில் மக்களின் அவல வாழ்வைச் சித்தரிக்கும் இந்த ஆவணம் பல நீண்ட வருடங்களுக்கு உலகத்தின் சமூக உளவியலை மாற்றும் திறன் கொண்டது. இலங்கை இனப்படுகொலை அரசின் போர்க்குற்றங்களையும் சில புலிகளின் போர்க்குற்குற்றங்களையும் இந்த ஆவணப்படம் ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது.
இறுதியாக வெளியான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் 70 ஆயிரம் தமிழ் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் 70 ஆயிரம் தமிழ் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்றுவரைக்கும் இலங்கை அரசின் திட்டமிட்ட இனசுத்திகரிப்பு தொடர்கின்றது. இந்த இரத்த பூமியில் மனிதப் பிணங்களைக் கடந்து சென்று பொது நலவாய நாடுகள் தமது உச்சி மாநாட்டை நடத்துகின்றன.
Please give exact link