அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் துணை நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து ஈழப் போராட்டத்தைப் பல தசாப்தங்களாகக் கையாண்டுவந்தன. ஒரு புறத்தில் இலங்கை அரசையும், மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தனித்தனியாகக் கையாண்ட ஏகாதிபத்திய நாடுகள், வன்னி இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தின. அதன் பின்னர் கடந்த ஆறு ஆண்டுகளாக மகிந்த ராஜபக்ச அரசின் ஊடாக ஜனநாயக முற்போக்கு சக்திகளை அழித்தன.
மகிந்தவின் பங்கு நிறைவேறியதும் அவரை மாற்றி புதிய நிர்வாகிகளை ஏகாதிபத்திங்கள் நியமித்துள்ளன. அவர்களுக்கான ஆலோசனைகளையும் ஆதரவைம் அமெரிக்காவும் ஏனைய அதிகாரவர்கத்தின் பிரதிநிதிகளும் வழங்கி வருகின்றனர்.
இந்த வகையில் இலங்கையில் அமெரிக்காவின் அதி முக்கிய ராஜதந்திரிகள் தங்கியுள்ளனர்.
இப்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இலங்கையை சென்றடைந்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணை தொடர்பான அனுபவம் மிக்க ரொனி பிளேர் உடன் நிஷா பிஸ்வால் ஆகியோரின் அனுசரணையுடன் இலங்கை அரசு செயற்படும்.
இலங்கை அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் என அனைத்தையும் ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட ஒரே குரலில் பேசும் தளத்தைக் கடந்த ஆறு வருடங்களாக உருவாக்கும் முயற்சி இன்று வெற்றிபெற்றுள்ளது.