சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் அண்மையில் கொள்வனவு செய்த வாகனங்களை விடுதலைப்புலிகள் போர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு தகவல்களின் அடிப்படையில் விடுதலைப்புலிள் இந்த வாகனங்களை இந்த வாரத்தின் ஆரம்பத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் நோர்வேயின் தேசிய உதவி நிறுவனம் மற்றும் கிளிநொச்சியில் இயங்கும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மண் வெட்டும் இயந்திரம், 4 ட்ரக் வாகனங்கள், உழவு இயந்திரம்,
சில லேண்ட்குரூசர் ஜீப் வண்டிகள், மோட்டார் சைக்களில்கள் உள்ளிட்ட வாகனங்களை விடுதலைப்புலிகள் பெற்றுக்கொண்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிட்டப்பட்டுள்ளது.
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டு பகுதியில் மனிதநேய பணிகளில் ஈடுபடும் நோக்கில் பெற்றுக்கொண்டதாகவும் எனினும் விடுதலைப்புலிகள் இந்த வாகனங்களை பதுங்குகுழிகளை வெட்டவும், அகழிகளை நிர்மாணிக்கவும், தமது படையினரை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தி வருவதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது