Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

நியூஸ் 18 சதி : பேசுங்கள் …ஊடக நண்பர்களே : மருதையன்

இனியொரு... by இனியொரு...
07/21/2020
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

நியூஸ் 18 குணா, செந்தில், ஆசிஃப் ஆகியோரை வெளியேற்றுமாறு “பார்ப்பனக் கும்பினியார்” இட்ட உத்தரவை பனியா கம்பெனி நிறைவேற்றவிருக்கிறது என்ற செய்தி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

இவர்களைக் குறி வைத்து கொஞ்ச நாட்களாக பங்களா நாய்கள் குரைத்தன. ஒதுக்குவதற்கோ, நீக்குவதற்கோ வெளிப்படையாக சொல்லத்தக்க காரணம் எதுவும் அவர்களிடம் இல்லை என்பது எதிரிகளின் பலவீனம். அதுதான் நமது பலம். எதிரிகளை வெளிப்படையாக விமர்சிக்கும் தைரியம் ஊடகத்துறையினரிடம் இல்லை என்பது நமது பலவீனம். இதுதான் எதிரிகளின் பலம்.

நியூஸ் 18 தமிழ் சதிக்கு முன்னதாக SV சேகரின் இன் டிவிரட் பதிவு
நியூஸ் 18 தமிழ் சதிக்கு முன்னதாக SVசேகரின் இன் டிவிரட் பதிவு

நியூஸ் 18 குறி வைக்கப்படுவது இது முதல் முறையல்ல. எஸ்.வி சேகர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனத் திமிருடன் பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசியதை பத்திரிகையாளர்கள் எதிர்த்தார்கள். சிலர் சேகர் வீட்டின் மீது செருப்பை வீசினார்கள், கல்லெறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டு வந்தது. இது வரம்புமீறிய நடவடிக்கை என்று சில பத்திரிகையாளர்கள் கண்டித்தார்கள். சிலர் வருத்தமும் தெரிவித்தார்கள்.

“பிழைப்பதற்கான வழிகள் எனப்படுபவை மென்மேலும் மானங்கெட்டவையாக மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மானமுள்ளவர்கள் இன்னமும் நாட்டில் எஞ்சியிருக்கிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறோம். கல்லெறிந்த பத்திரிகையாளர்களே, தமிழ்ச் சமூகத்தின் மானத்தைக் காப்பாற்றியமைக்கு எங்கள் கோடானுகோடி நன்றிகள்” என்று ம.க.இ.க வின் சார்பில் அப்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன். இன்றும் அதையே வலியுறுத்துகிறேன்.

யாராவது ஒருவரேனும், அநீதி இழைக்கும் நிர்வாகத்தின் மீது “கல்” எறியுங்கள். தொலைக்காட்சியின் “நடுநிலை – நேர்மை” என்ற நடிப்புக்குப் பின்னால் இருக்கும் வண்டவாளங்களை சந்திக்கு கொண்டு வாருங்கள்.

000

ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பிலிருந்த சித்தார்த் வரதராஜனை தகுதியிறக்கம் செய்தார்கள். அதனை எதிர்த்து அவர் பதவி விலகினார். தனது விலகலுக்கு காரணமாக அமைந்த சம்பவங்களை பொதுவெளியில் உடைத்தார். “மோடிக்கு முதல் பக்க கவரேஜ் கொடுக்கவில்லை, சு.சாமியின் அறிக்கைகளை வெளியிடவில்லை” என்ற வெட்கக் கேடான விசயங்களெல்லாம் அவருடைய தகுதியிறக்கத்துக்குக் காரணமாக இருந்தன என்ற உண்மை அம்பலமானது.மோடி அரசு ஏபிபி சானலை எப்படி வழிக்கு கொண்டு வந்தது என்பதை பிரசூன் பாஜ்பாய், எழுதினார்.

மோடிக்கு “தண்ணி” காட்டிய கரண் தபாரை, எல்லா தொலைக்காட்சிகளும் ஓரங்கட்டின. இன்று வயர் இணையதளத்தில் எல்லைப் பிரச்சனை தொடர்பாக அவர் எடுக்கும் பேட்டிகள், மோடியை துன்புறுத்துகின்றன. கரண் தபார் படத்தைப் போட்டு “சீனக் கைக்கூலி” என்று வசை பாடுகிறது ஆர்கனைசர். தனக்கு கொலை மிரட்டல் வந்தவண்ணமிருப்பதாக  என்.டி.டி.வி ராவிஷ் குமார் சொல்கிறார்.

என்.டி.டி.வியின் நிதி ராஸ்தான், ஹார்வர்டில் ஆசிரியப்பணிக்குச் செல்கிறார். ஊடகப்பணியிலிருந்து வெளியேறுகிறார். இருப்பினும், பாஜக வின் சம்பித் பாத்ராவை “விவாத அரங்கிலிருந்து வெளியேறு” என்று அவர் கம்பீரமாக உத்தரவிட்ட காட்சி இன்னும் நம் கண்ணில் நிற்கிறது.

வட இந்தியாவில் பாஜக வை எதிர்த்து நிற்பவர்கள் தம் உயிரையே பணயம் வைத்து வேலை செய்கிறார்கள். “புலம்பெயர் தொழிலாளிகளுக்கு ரேசன் விநியோகிக்கப்படவில்லை” என்று அம்பலப்படுத்தியதற்காக இமாச்சல் பிரதேச தைனிக் ஜாக்ரன் பத்திரிகை நிருபர் மீது “பாண்டமிக் ஆக்ட்” இல் வழக்கு.  இது பற்றி அவர் மோடிக்கு புகார் செய்தார். விளைவு – இன்னொரு வழக்கு.  55  செய்தியாளர்கள் கொரோனா  செய்திகளுக்காக மட்டுமே வழக்கை சந்திக்கிறார்கள்.

வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழகம் சொர்க்கம். உங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக யாரேனும் ஒருவராவது உடைத்துப் பேசுங்கள். அந்த நடவடிக்கைதான் எதிரிகளை அச்சுறுத்தும்.

000

ஊடகங்களில் முதலாளிகள் போடுவது பணம் மட்டும்தான். செய்திகள், நிகழ்ச்சிகள் மூலம் நிறுவனத்தை வளர்த்து, மக்கள் மத்தியில் அந்த ஊடகத்துக்கு ஒரு அங்கீகாரத்தையும் நம்பகத்தன்மையையும் ஏற்படுத்தியவர்கள் நீங்கள். அந்த மதிப்பை அவர்கள் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

சில கைத்தடிகள் மூலம் உங்களை மதிப்பைக் குலைக்கிறார்கள். பின்னர் அதிகாரபூர்வமற்ற முறையில் வெளியேற்றுகிறார்கள். உண்மையை அம்பலப்படுத்தி விட்டு வெளியெறுங்கள். அதுதான் சுயமரியாதையுள்ள நடவடிக்கை. நடந்து கொண்டிருப்பது “உங்கள் தனிப்பட்ட விவகாரம்” என்று நீங்கள் கருதினால் அது பெரும் தவறு. தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் சதியையும் சதிகாரர்களையும் பற்றிய உண்மைகளை வெளியிடாமல் இருப்பது, நிச்சயமாக உங்கள் தனிப்பட்ட விவகாரம் அல்ல.

பேசுங்கள். நீங்கள் இன்று வெளியேற்றப்படுவதைப் பற்றி மட்டுமல்ல, நீங்கள் பணியாற்றிய காலத்தில் திரைமறைவில் நடந்த எல்லா உண்மைகளையும் பேசுங்கள்.

தமிழகத்தில் அடித்தளமே இல்லாத பாஜக வையும், பல அநாமதேயங்களையும் தமிழக தொலைக்காட்சிகள்தான் ஆளாக்கி நிறுத்தின. “ஊடக முதலாளிகளின் ஆதாயம்” என்ற ஒரு காரணத்தைத் தவிர இந்த  பார்ப்பனக் கைக்கூலித்தனத்துக்கு வேறு எந்த நியாயமும் இல்லை. “இது ஊடகநெறிக்கு எதிரானது” என்று பேசுபவர்கள் “காலச் சூழ்நிலை புரியாத முட்டாள்கள்” என்று சொல்லத்தக்க அளவுக்கு இதுவே “புதிய ஊடக நெறியாக” மாறி விட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடக்கும்போது எல்லா தொலைக்காட்சி காமெராக்களும் களத்தில்தான் இருந்தன. போலீஸ் உத்தரவிட்டவுடனே எல்லோரும் முகம் திருப்பிக் கொண்டனர். எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகளும் ஒளிபரப்பப் படவில்லை. வேன் மீது ஏறிநின்று சுடுவதை யாரோ ஒருவர் முகநூலில் வெளியிட்டார். அது ஒன்றுதான் அந்த கோரமான படுகொலைக்கு ஆதாரம். எல்லா தொலைக்காட்சி காமெராக்களும் போலீசு அராஜகத்தை மறைப்பதற்குத்தான் பயன்பட்டன. கூடங்குளம், இடிந்தகரை துப்பாக்கிச் சூட்டின்போதும் இதுதான் நடந்தது.

இதுபோன்ற இருட்டடிப்புகள் இன்னும் எத்தனை, அரசியல் விவாதங்களின் நிகழ்ச்சி நிரல்கள் எப்படியெல்லாம் செட்-அப் செய்யப்பட்டன என்பது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். உங்கள் பேச்சுதான் அந்த ஊடகத்தின் நம்பகத்தன்மையை பொதுவெளியில் கேள்விக்குள்ளாக்கும்.

000

ஊடகத்துறையில் கொரோனாவைச் சொல்லி ஆட்குறைப்பு செய்து நூற்றுக்கணக்கானோரை வெளியேற்றுகிறார்கள். அப்போதும் ஊடகத்துறையினர் சங்கமாகத் திரளவில்லை. எதிர்ப்புக் குரல் எழுப்பவுமில்லை. இதற்கு என்னதான் முடிவு?

“வெளியில் இருப்பவர்கள் பேசலாம். உள்ளே இருப்பவர்கள் பேசினால் இன்னொரு ஊடகத்தில் எப்படி வேலை கிடைக்கும்?” என்று மிகவும் இயல்பாக பலர் கேள்வி எழுப்புகிறார்கள். இது ஊடகத்துறையில் தொழிற்சங்க இயக்கமே இல்லாமல் போனபின், கடந்த சில பத்தாண்டுகளில் வந்திருக்கும் “புதிய இயல்புநிலை”.

ஊடகத்துறையில் ஜனநாயகமே இல்லாத இந்த இயல்புநிலையை அப்படியே பராமரித்துக் கொண்டு, பாஜக வுக்கு எதிராக மட்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது எப்படி சாத்தியம்?

நான் கூறுவது குற்றச்சாட்டும் அல்ல, அறிவுரையும் அல்ல.

இன்று குணசேகரன், செந்தில், ஆசிஃப் ஆகியோருக்காக தமிழ்ச் சமூகத்திலிருந்து இத்தனை குரல்கள் எழுவதற்குக் காரணம் உங்கள் பங்களிப்பு. இந்த எதிர்வினை அதற்கான அங்கீகாரம். நீங்கள் பேசாவிட்டாலும் நாங்கள் பேசுவோம். ஏனெனில் இது மக்கள் பிரச்சனை.

“இந்த சானல்களை மக்களும் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும்” என்று முகநூல்களில் எழுதுகிறார்கள். இவ்வாறெல்லாம் நடக்கத்தான் செய்யும் என்று எதிரிகளுக்கும் தெரியும். அதற்கான மாற்று மருந்துகளுடன்தான் பாசிஸ்டுகள் இந்த ஆட்டத்தையே தொடங்கியிருப்பார்கள்.

பார்ப்பனர்களை மட்டும் வைத்து சானல் நடத்தினால் அது தியாகய்யர் உற்சவம் போலவும், மியூசிக் அகாதமி கச்சேரி போலவும் அக்ரகாரத்தில் முடங்கி விடும் என்பது அவாளுக்கும் தெரியாதா?

வீடணர்கள் இல்லாமல் ராமனுக்கு வெற்றி கிடையாது. தமிழகத்தில் வீடணர்களுக்கா பஞ்சம்? இந்த அநீதியை எதிர்த்து நியூஸ்18 இலிருந்து எத்தனை பேர் வெளியே வரப்போகிறார்கள், எத்தனை பேர் தங்கள் தோலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உங்களைக் கைகழுவப் போகிறார்கள் – பார்ப்போம்.

கைகழுவுகிறவர்கள் குற்றவுணர்ச்சிக்கு ஆளானதுபோல சில நாட்கள் நடிப்பார்கள். பிறகு, தங்களை நியாயப்படுத்திக் கொள்வதற்காக முதலாளியை நியாயப்படுத்தி பேசத் தொடங்குவார்கள். அந்த சத்சூத்திரர்கள் பேசத்தொடங்குவதற்கு முன்னால் நீங்கள் பேசவேண்டும். “பார்ப்பன பாசிச எதிர்ப்பின் அரணாக தமிழகம் இருக்கிறது” என்ற நம்பிக்கை இந்தியாவின் பிற மாநிலங்களில் இருக்கிறது. அந்த நம்பிக்கை பொய்த்துவிடக்கூடாது. அதற்காகவாவது நீங்கள் பேசவேண்டும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் :  சபா நாவலன்

குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...