அடிமைப்படுத்துவதன் ஊடான பொருளாதார நலன்களையே தமது எதிர்காலப் பொருளாதாரத் திட்டமாக முன்வைத்துள்ளன. இந்த நாடுகள அனைத்துமே கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தமது முழு வலுவையும் பிரயோகிக்கவில்லை என்ற குற்றத்திற்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய வகையான கொரோனா வைரஸ் பரவி வருவதாக சுகாதார அமச்சின் செயலாளர் ஹான்ட்கோக் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரிவித்திருப்பதாகவும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சுகாதாரச் செயலாளர், புதிய வைரசை தடுப்பு மருந்து கட்டுப்படுத்துமா போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் நிலையில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
60 வேறுபட்ட நகராட்சிப் பிரதேசங்களில் 1000 தொற்றாளர்கள் புதிய வைரசின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்றுவரை 1.87 மில்லியன் நோயாளிகளை கொரோனா தாக்கியுள்ள அதேவேளை 14.12.2020 அன்று மட்டும் 20,263 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
புதிய கொரோனா வைரசின் தாக்கத்தால் லண்டன் சார்ந்த பகுதிகளில் பொது முடக்கம் மேலும் திவிரப்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது. லண்டன், எசெக்ஸ் மற்றும் ஹார்ட்போர்ட் ஷையர் போன்ற மாவட்டங்களில் தீவிர பொது முடக்கம் அமுலுக்கு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.