Sunday, March 8, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

2500 மக்களை ஒரே இரவில் பிணமாக்கிய நில நடுக்கமும் பொறுப்புக் கூறவேண்டியவர்களும்

இனியொரு... by இனியொரு...
04/29/2015
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள்
0 0
0
Home பிரதான பதிவுகள் | Principle posts

nepalநேபாளத்தில் நேற்று -25.04.2015- நடைபெற்ற நில நடுக்கத்தில் 2500 பொது மக்கள் மாண்டு போயினர். 6000 பேர்வரை படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேபாளம் முழுவதிலும் உணரப்பட்ட இந்த நில நடுக்கம் அதன் தலை நகரான கட்மண்டூவை நேரடியாகவே தாக்கியுள்ளது. நேபாளத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்துக் கோவில் உட்பட ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கு நேபாள அரசிடம் போதுமான உபகரணங்கள் கிடையாது. நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

கட்மண்டூவில் தண்ணீர் வசதிகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகளின் சொர்க்க புரியான நேபாளத்தில் நட்சத்திர விடுதிகள் தவிர அனைத்துப் பிரதேசங்களும் இருளில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சனியன்று நடந்த பேரவலத்தின் பின்னரும் இன்று வரை ஆங்காங்கு நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் கட்மண்டூவில் மக்கள் தெருக்களில் இரவும் முழுவதும் கூடியிருப்பதாக நேபாளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவோயிஸ்டுக்கள் மன்னராட்சியை தகர்க்கும் வரை மன்னரின் தனிப்பட்ட சொத்தாகத் திகழ்ந்த நேபாளம் என்ற நாட்டில் பெரும்பாலான கட்டடங்கள் தற்காலிகத் தங்குமிடங்கள் போன்று செங்கல் அடுக்குகளால் கட்டப்பட்டிருந்தன. நில நடுக்கத்தால் இலகுவாகத் தகர்ந்து போகும் நிலையிலேயே இக்கட்டடங்கள் காணப்பட்டதால் கட்மண்டூ, தம்பெல், பக்தாபூர் போன்ற பகுதிகள் தூசு மண்டலாமாகக் காணப்படுறது.

நேபாளத்தில் மாவோயிஸ்டுக்கள் நடத்திய ஜனநாயகப் புரட்சிக்குப் பின்னதாக மன்னரின் மாளிகை உணவு விடுதி மற்றும் பல்பொருள் அங்காடிகளாக மாற்றப்பட்டிருந்தன. நில நடுக்கத்தில் மன்னரின் மாளிகைக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்பது மன்னராட்சியின் கோரத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இந்திய அரசின் அடிமை நாடாக  நேபாளம் இருந்துவந்தது. நேபாளம் ராமனின் மனைவி சீதைக்குச் சீதனமாகக் கொடுக்கபட்டதாக நேபாளத்தில் இதிகாசக் கதைகள் கூறுகின்றன. நேபாளப் பள்ளிகளில் இந்து மதப் பாடங்களிலும் இப்படியே கற்பிக்கப்படுகிறது. சாதிகளால் பிளவுண்டுள்ள நேபாள சமூகத்தில் சிறுபான்மைப் பிராமணர்களே ஆதிக்கத்திலுள்ளனர்.

மன்னர் மற்றும் மன்னராட்சியைச் சுற்றியிருந்த மேட்டுக்குடி நேபாளிகள் தமது அமெரிக்காவில் உயர்கல்வி கற்பவர்களாகவிருந்தனர். கட்மண்டூவைச் சுற்றியுள்ள தனியார் பள்ளிகள் மேற்கு நாடுகளின் விலையிலேயே கல்வியை விற்பனை செய்கின்றன

நேபாளப் புரட்சி நிறைவுற்றதும் அமெரிக்க ஆதரவு தன்னார்வ நிறுவனங்கள்(NGO) நேபாளத்தைச் சூழ்ந்து கொண்டன. அரச அதிகாரத்தின் ஒரு பகுதியை உதவி என்ற பெயரில் தமது கைகளில் எடுத்துக்கொண்ட தன்னார்வ நிறுவனங்கள் நேபாளத்தை மீண்டும் சிதைக்க உதவின. இன்று நேபாளத்தில் போதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமலும், நிர்வாகக் கட்டமைப்புக்கள் மேற்கொள்ளப்படாமலும் தன்னார்வ நிறுவனங்கள் ஆட்சி செலுத்த ஆரம்பித்தன. அண்ணளவாக 45 ஆயிரம் தன்னார்வ நிறுவனங்களின் ஆட்சியின் கீழ் நேபாளம் இயக்கப்படுகின்றது. மாவோயிஸ்டுக்கள் நடத்திய ஜனநாயகப் புரட்சியின் பலனைத் தன்னார்வ நிறுவனங்கள் ஊடாக அமெரிக்கா அறுவடை செய்துகொண்டது.

இதனால் நேபாளத்தில் கிராமங்கள் வரையிலான அரச நிர்வாக அலகுகள் இல்லை. இயற்கை அழிவுகள் ஏற்படும் போது மக்களின் அவரச உதவிகளைக் கையாள்வதற்கு அரசு தகமையற்ற நிலையிலேயே உள்ளது. வெளி நாடுகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நிவாரண உதவிகளைக் கூட மக்களிடம் எடுத்துச்செல்ல இயலாத நிலையிலேயே அரச நிர்வாகம் உள்ளது. அரசைக் கேள்வி கேட்கவோ எதிராகப் போராடவோ தன்னார்வ நிறுவனங்கள் பயிற்றுவிப்பதில்லை.

தங்கி நிற்கும் சமூகத்தையே அவை உருவாக்கின இதனால் ஊழல் மலிந்த நாடு ஒன்றையே மன்னராட்சிக்குப் பிந்திய ஆட்சி நடத்திவந்தது. புதிய மக்களின் தேவைக்கேற்ற கட்டுமானப் பணிகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. மலைப்பகுதிகளைக் கொண்ட நேபாளத்தில் போதிய பாதுகாப்பின்றிக் கட்டப்பட்டிருந்த அனைத்துக் கட்டடங்களும் மண்ணோடு மண்ணாகின.

எரி பொருட்கள் இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுவதால் நில நடுக்கம் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் இந்தியாவிலிருந்து உணவு மற்றும் எரிபொருட்கள் வருவதற்குத் தாமதமாகியுள்ளது. இந்தியா எரிபொருட்களை மட்டுமல்ல, அரசியலையும் இராணுவத்தையும் கூட நேபாளத்திற்கு ஏற்றுமதி செய்கிறது. நேபாள இராணுவத்தை காலனியத்திற்குப் பிந்திய காலம் முழுவதும் இந்தியாவே பயிற்றுவித்தது. நேபாள இராணுவத் தளபதிகள் டெல்லியில் சொத்துக்களைக் குவித்துக்கொண்டார்கள். இந்திய அரசும் இச் சொத்துக்குவிப்பிற்கு துணை போனது.

சூறாவளி, நில நடுக்கம் போன்றவற்றால் ஒவ்வொரு வருடமும் அமெரிக்கா போன்ற நாடுகள் தாக்கப்படுவதுண்டு. ஆனல் அங்கெல்லாம் இவ்வளவு தொகையான பாதிப்புக்கள் ஏற்படுவதில்லை. அதற்கான திட்டமிடலும் கட்டுமானமும் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்கும். நேபாளத்தின் நிலைமை வேறானது 1934 ஆம் ஆண்டில் நேபாளத்தில் நில அதிர்வு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தும் திட்டமிடப்பட்ட முறையில் நேபாளம் உருவாக்கப்படவில்லை.

நில நடுக்கம் ஆயிரக் கணக்கில் உயிர்களைப் பலி கொண்டமைக்கு நேபாளத்தைப் பலவினப்படுத்திய இந்தியாவும் அமெரிக்க ஏகாதிபதியமும் அவற்றின் கைக்கூலிகளுமே பொறுப்பானவர்கள்.

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
பிரான்ஸில்… மே தினம் !

பிரான்ஸில்… மே தினம் !

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...