இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றிய வடமாகாண சபை விக்னேஸ்வரன் அதன் மறுபக்கத்தில் போலி நிபுணர் குழுவை அமைத்து சுன்னாகம் நீரில் நஞ்சு இல்லை என நிறுவ முயன்றமை தெரிந்ததே. இந்த வாரம் அரசியல் கைதிகள் தொடர்பான அதிரடி அறிக்கை ஒன்றுடன் விக்கி தனது பணியை நிறுத்திக்கொண்டார். சுன்னாகம் அனல் மின்னிலையத்தை நடத்திய பல்தேசிய நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரும் பிரித்தானிய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சியின் ஐரோப்பியப் பாராளுமன்ற உறுப்பினருமான நிர்ஜ் தேவா இன்றைய இலங்கை அரசின் நெருங்கிய ஆலோசகர்.
நிலமை இவ்வாறிருக்க, யாழ்ப்பாண நாழிதழ் ஒன்றில், வட மாகாண சபை அமைத்த நிபுணர்குழுவைக் காணவில்லை எனக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. புலம்பெயர் நாடுகளுக்குப் பயணம் செய்து பிழைப்பிற்காகத் தமிழ்த் தேசியம் பேசிய வேளையில் அவரின் நிபுணர்குழு இலங்கையில் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள் தோன்றியுள்ளன.
சுன்னாகத்திலிருந்து பல மைல்கள் தொலைவு வரைக்கும் நச்சுக் கழிவுகள் நாளுக்கு நாள் பரவி வருகின்றது. நீரும் நிலமும் நாசப்படுத்தப்பட்டு வருவதை இதுவரை ஒருவரும் கணக்கில் எடுத்துக்கொண்டதில்லை.