ராஜபக்ச அரசினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் மீதான தடையை மறு பரிசீனைக்கு உட்படுத்த வேண்டும் என இலங்கையின் வெளி நாட்டமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தர். இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை விரிவுபடுத்த உறுதிபூண்டுள்ள நிலையில் இது மிகவும் முக்கியமான நடவடிக்கை எனத் தெரிவித்தார். இலங்கையை ஒரு தேசமாகக் கட்டியெழுப்புவதில் தமிழ், சிங்கள, முஸ்லீம் புலபெயர்ந்தவர்கள் முக்கிய பாத்திரத்தை வகிக்க முடியும் என மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள பெரும்பாலான புலி வியாபாரம் நடத்தும் நபர்களும், ஊடகங்களும், அமைப்புக்களும் தமது வயிற்றுப் பிழைப்பிற்காக இலங்கை அரசுடன் உடன்பாட்டிற்கு வந்திருந்தன.
மக்கள் மத்தியில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் போன்று வெறியைத் தூண்டிவிட்டு பண்பாட்டுச் சிதைப்பிலும், அரசியல் புரட்டுக்களிலும் ஈடுபட்டுவந்த பலரின் நடவடிக்கைகள் ராஜபக்ச ஆட்சி மாற்றத்துடன் நிறைவிற்கு வந்துள்ளது. மக்கள் இவர்களை இனம் காண ஆரம்பித்ததும் பேரினவாத இலங்கை அரசுடன் கைகோர்க்க ஆரம்பித்துள்ளனர்.
சமூகத்தின் மத்தியில் அபாயகரமான பேர்வளிகளாகச் செயற்படும் இவர்களில் பலர் இலங்கை அரச உளவுத்துறைகளால் ஏற்கனவே கையாளப்பட்டு வந்ததற்கான போதிய ஆதாரங்கள் பலரிடம் உள்ளன. இவர்கள் மங்கள சமரவீரவின் தடை நீக்கத்துடன் கூட்டத்தோடு கூட்டமாக பேரினவாதத்திடம் தஞ்சமடைவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.