1960 ஆம் ஆண்டு தோல்வியடைந்த மாணவர் எழுச்சியின் பின்னர் பிரான்ஸ் அரசின் ஆட்சி கோட்பாடு நிறவாதத்தையும் இணைத்துக்கொண்டது. மக்ரேபியன் அராபியர்களுக்கு எதிராக முன் நிறுத்தப்பட்ட இனவாதம் நிறுவனமயப்பட்டு 90 களின் பின்னர் பிரான்ஸ் என்பது நிறவாத அரசாகவே மாறிவிட்டது. கடந்த பிரஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் பிரான்ஸ் பிரஞ்ச்க்காரர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்த நிறவாதக் கட்சியான தேசிய முன்னணி இரண்டாவது பெரிய கட்சியாகப் பதிவானது.
மத்திய வயதைச் சார்ந்தவர்களில் 40 வீதமானவர்கள் தம்மை நிறவாதிகளாக வெளிப்படையாகக் கூறியதாக கருத்துக்கணிப்புக்கள் கூறின. இஸ்லாமியர்களுக்கு எதிரான அரசியலை முன்னெடுத்த “மைய” அரசியல் வாதியான இம்மானுவல் மக்ரோன், மத சுதந்திரத்திற்கு எதிரான அருவருப்பான கருத்துக்களை முன்வைத்தார்.
தேசிய முன்னணியின் நிறவாதக் கருத்துக்களை தன்ன்கப்படுத்திக்கொண்ட மக்ரோன் என்ற “மைய” அரசியல் கோமாளி, மதச் சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்களை நிறைவேற்றினார்.
27.11.2020 அன்று தனது கலையகத்திற்கு சென்ற கறுப்பின பிரஞ்சு இசைக் கலைஞன் ஒருவரை பிரஞ்சு நிறவாத போலிஸ் தாக்குதலுக்கு உட்படுத்திற்று. மிருகத்தனமாக போலிஸ் கும்பலால் முகத்தில் தாக்கப்பட்ட இச் சம்பவம் உலகின் மனிதாபிமானிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திற்று.
இதற்கிடையில் கடமையிலிருக்கும் போலிஸ் அதிகாரிகளை நிழல் படம், வீடியோ போன்றவற்றில் பதிவு செய்யும் எவரையும் கிரிமினல் குற்றத்தின் கீழ் சிறையில் அடைக்கும் புதிய சட்டமூலத்தை மக்ரோன் அரசு முன் மொழிந்தது. இதற்கு எதிரான போராட்டத்தில் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டனர்.