உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான பிரதான ஏதுவாக உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வதாக ஒன்றியம்தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வுகாணப்படவில்லை என ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சகல இன சமூகங்களுக்கும் இடையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் என்ன நடைபெறப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பே இந்த அறிக்கை. ஆயிரமாயிரம் மக்களைப் படுகொலை செய்துவிட்டு உலக அரங்கில் சர்வதேச அதிகாரங்களுடன் இணைந்து உலாவரும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை போலி நம்பிக்கைகளுக்கு ஊடாக மழுங்கடிக்கும் அரசியல் வியாபாரிகளின் அமரிக்க ஆதரவு லொபி அரசியல் இத்தோடு முற்றுப்பெற வேண்டும்.