1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மறைந்த லெனின் உலகத்தில் முதல் முதலில் பெரும்பான்மை மக்களான ஒடுக்கப்பட்ட மக்களின் புரட்சியை – தொழிலாள வர்க்கப் புரட்சியைத் தலைமை தாங்கியவர்களுள் ஒருவர்- மட்டுமன்றி, உலகம் குறித்த கார்ல் மார்க்சின் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை நடைமுறைப்படுத்தியவர். உலக மக்ககளின் விடுதலைக்கு லெனின் வழங்கிய தத்துவார்த்த பங்களிப்பின் தொடர்ச்சி இன்றைய உலகச் சூழல் மீண்டும் கோரி நிற்கின்றது.
சிங்களவர்கள் என்றால் அவர்கள் பிறப்பிலேயே எதிரிகள், சாதி என்பது மனிதனின் பிறப்புரிமை போன்ற மிகவும் பழமைவாத பிற்போக்குக் கருத்தியலுக்கு எதிராக சமூகத்தை விஞ்ஞானபூர்வமாக அணுகுதல் எவ்வாறு என்பதை முதலில் தெளிவான கோட்பாடாக முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ்.
இன்றைய சமூகம் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கும் அது நாளை எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் ஒவ்வோரு சமூகத்தின் குறித்த நிலைகளையும் முன்வைத்து ஆராய்வது எவ்வாறு என்பதை அவர் கற்றுத்தந்தார். இன்றோ உலகத்தின் பெரும்பான்மை பழமைவாத கருத்துக்களைப் பற்றிக்கொண்டுள்ளது.
சமூகத்தை ஆட்சிசெய்கின்ற அதிகாரவர்க்கமும் அதற்கு தத்துவார்த்த பலத்தை வழங்கும் கல்வியாளர்களும் உலகத்தை இயக்கத்தை ஆராய்வதற்கும் நாளைய உலகம் எவ்வாறு மாற்றமடையும் என்பதையும் புரிந்துகொள்ள மார்க்சியதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
அமரிக்க மத்திய உளவு நிறுவனமான CIA அண்மையில் வெளியிட்ட ஆய்வு ஒன்று 2025 இல் உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என்பதை ஆராய்கிறது. மார்க்சிய தத்துவத்தைப் பிரயோகித்த அவர்கள் நாளைய உலகம் எவ்வாறு அமைந்திருக்கும் என ஆராய்கிறார்கள். அங்கு உற்பத்தி உறவுகளின் நிலை எப்படியிருக்கும் எனக் கூறுகிறார்கள்.
அடிப்படையில் மார்கிசியம் என்பது உலகத்தைப் இன்றைய நிலையைப் புரிந்துகொள்வதற்கும் நாளை அது எவ்வாறு மாற்றமடையும் என்பதை அறிவதற்கும் வகை செய்வது மட்டுமல்ல மாற்றத்திற்கான தடைகளையும் அதனை புரட்சியின் ஊடாக எவ்வாறு வெற்றிகொள்வது என்பதையும் கூறுகின்றது.
சமூக மாற்றம் தவிர்க்க முடியாததும், இயல்பானதுமாகும். ஒவ்வோரு தடவையும் சமூகம் மாற்றமடையும் போதும், பழமைவாத சக்திகள் தமது அதிகாரத்தை மீளமைக்க முயல்வது இயல்பு. சமூகத்தின் இயல்பான மாற்றத்தை அதிகாரத்தைக் கையகப்படுத்தியிருபோரும், பழமைவாதிகளும் தடைசெய்ய முற்படுகின்ற போது அந்தத் தடைக்கு எதிராகப் போராடுகின்ற நிலைக்கு மக்கள் வந்து சேர்கிறார்கள். சமூகத்தின் இயல்பான வளர்ச்சியை முன்னோக்கி நகர்த்த அவர்களை அமைப்பாக்குவதற்கு புரட்சிகரக் கட்சியும், அவர்கள் மத்தியிலான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட வெகுஜன அமைப்புக்களும் அவசியம் என்பதை மார்க்சியம் முன்வைக்கிறது.
கார்ல் மார்க்ஸ் தனது வாழ் நாள் முழுவதும் தத்துவார்த்த உழைப்புக்கு மத்தியில் புரட்சிகரக்கட்சிகளைத் தோற்றுவிக்க முயன்றார். அந்தப் பணி ரஷ்யாவில் புரட்சியாளர்களின் தலைமையில் முதலில் வெற்றிபெற்றது. ரஷ்யாவின் சூழலுக்கு ஒப்ப தத்துவார்த்த அடிப்படையை வழங்கிய பலருள் லெனின் பிரதானமானவர்.
லெனினின் பங்களிப்பு இன்று வரைக்கும் பல அரசியல் சிக்கல்களுக்கு விடை தருகிறது.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் முன்வைத்த கோட்பாட்டு வகையிலான முடிவுகள், உலகத்தில் முதல் தடவையாக தேசிய இனங்கள் குறித்துப் பேசியது. சோவியத் ரஷ்யாவில் தேசிய இனங்களுக்கு பிரிந்துசெல்லும் உரிமையை அங்கீகரிப்பது மட்டுமே சோசலிசப் புரட்சி வெற்றி பெறுவதற்கான முன் நிபந்தட்னை என்றார். கார்ல்மார்க்ஸ் முயன்றதை லெனின் தேசியப் பிரச்சனையிலும் முன்னெடுத்தார். ரஷ்யாவில் சமூக ஜனநாயகப் புரட்சியை வெற்றி கொள்வதற்கான முன்நிபந்தனையாக ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றார். அத் தேசிய இனங்களை பாட்டாளிவர்க்கக் கட்சியில் கீழ் ஒடுக்குமுறைக்கு எதிராக அணிதிரட்டுவதற்கான தத்துவத்தை முன்வைத்தார்.
இன்று தேசிய இனப்பிரச்சனை என்பது இலங்கையில் மட்டுமல்ல, மத்திய கிழக்கிலும், ஆபிரிக்காவிலும், சீனாவிலும், இந்தியத் துணைக்கண்டத்திலும் பல திரிபுகளுக்கு உட்பட்டுத்தப்படுகின்றது.
ஏகாதிபத்தியமும் அதன் உப நிதி நிறுவனங்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களைச் சீர்குலைக்கின்றன.
இன்று முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜே.வி.பி போன்ற இடதுசாரிக் கருத்துக்களைப் பொறுக்கிக்கொண்ட இனவாதிகள் கூறுவது போன்றே ரோசா லக்சம்பேர்க், புக்காரின், பிளக்கானோவ் போன்றோர் லெனினின் கருத்துக்களுக்கு எதிராக கிளர்ந்தனர். பெரும்பான்மைத் தேசிய இனத்தின் தொழிலாளர்களை சுயநிர்ணைய உரிமைக்கான முழக்கம் அன்னியப்படுத்தும் என்றனர்.
தொழிலாளர்களைப் பிளவுபடுத்தி சோசலிசப் புரட்சியைச் சிதைக்கும் என்றனர். இதற்கெல்லாம் எதிரக லெனினும் அவரைத் தொடர்ந்து ஸ்டாலினும் நடத்திய கோட்பாட்டு யுத்தங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த உறிதியான முடிவிற்கு வருவதற்கு உதவியது.
இலங்கையில் இனவாதம் அழிந்து போவதற்குரிய முன்நிபந்தனை அங்கு சிங்களத் தொழிலாளர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை உணர்ந்துகொள்வதும் அதனை ஆதரிப்பதும் மட்டுமல்ல தேசிய விடுதலைப் போராட்டத்தை தொழிலாள விவசாயிகள் அணி முன்னெடுப்பதே ஆகும்.
வன்னி அழிப்புக்களின் பின்னர் ராஜபக்ச பாசிச ஒடுக்குமுறையை சிங்கள உழைக்கும் மக்கள் உணர ஆரம்பித்தனர்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.
இலங்கை அரசிற்கும் அதன் பின்பலமாகத் தொழிற்படும் அமரிக்க இந்திய சீன அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவப்படுத்தப்படுகிறதோ அதே அளவு முன்னுரிமை திரிபுவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் எதிரான போராட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும்.
சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி போன்று கலர் கலராக பெருத்த பணச் செலவில் அல்ல, எங்காவது மூலை ஆர்ப்பாட்டமில்லாமல் சிறிய குழு தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்று குரல் எழுப்பினாலே தமிழ் இனவாதம் சரிய ஆரம்பிக்கும்.
இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது
இனவாதிகள் தொடர்ச்சியாக தமது சாம்ராஜியத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை அடையாளத்திற்கான போராட்டமாக மாற்றுவதற்கும் ஜெவீபி போன்ற இனவாதிகள் துணைசென்றனர். சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல் எழுவதை இடது சாரி ‘சொல்லாடல்களைப்’ பொறுக்கி வைத்திருந்த ஜே.வி.பி என்ற இனவாதக் கட்சியும், இன்று அதன் பிரதியெடுத்த அரசியலை முன்வைக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியும் திட்டமிட்டு தடைசெய்கின்றன. இந்த இருகட்சிகளும் சுய நிர்ணய உரிமையை மட்டுமல்ல அதிகாரப் பரவலாக்கலைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு இடைவெளிகளுக்குள் இலங்கையில் இடதுசாரி இயக்கங்களில் பின்னடைவை ஏற்படுத்திய ஜேவிபி . கிளர்ச்சிகளின் முன்மாதிரி அபாய அறிவிப்பு.
இலங்கையில் ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் தலைமகள் முன்னெடுத்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் தேசிய விடுதலைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்படவில்லை. அவற்றிற்கு குறைந்தபட்ச தேசியத்தன்மை அதன் உண்மையான உள்ளர்த்தில் இருந்திருக்கவில்லை.
பிந்தங்கிய நிலப்பிரபுத்துவ சமூகம் ஒன்றில் மக்கள் தமது அடையாளத்தை கிராமங்களை மையப்படுத்தியும், தொழிலை மையப்படுத்தியும், மதங்களை முன்னிறுத்தியும் உருவமைத்துக்கொள்வார்கள். இவை அனைத்தையும் தகர்த்து தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின.
தேசிய அரசுகள் தேசியப் பொருளாதாரத்தை, நிலப்பிரபுத்துவ மற்றும் அன்னிய மூலதன ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்தன. தேசிய முதலாளிகளின் தேவைக்காக அவர்களின் ஆதிக்கத்தில் தேசிய அரசுகளும், தேசிய உணர்வும் உருவானது. சிறிய அடையாளங்களின் தொகுப்பாக தேசிய அடையாளம் உருவானது. ஐரோப்பாவில் தேசிய அரசுகள் ஏகபோக அரசுகளாக மாற்றமடைந்த போது நிலப்பிரபுத்துவ காலத்தில் காணப்பட்ட குறுகிய அடையாளங்களை மீளமைத்து முதலாளித்துவ உருவாக்கத்தின் கோரத்திற்கு எதிராகக் குரல் எழுப்பிய நீட்ஷே போன்றவர்களிடமிருந்து கடன்வாங்கிய கருத்துக்களின் அடிப்படையில் பின்னவினத்துவம் போன்ற சமூகவிரோதக் கோட்பாடுகள் தோன்றின.
அதே வேளை ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், உலகம் முழுவதிலும் தேசிய முதலாளிகள் அன்னிய மூலதனத் தரகர்களால் விழுங்கப்பட்டு தேசியம் என்பதும் சந்தைப் போட்டி என்பதும் மத்தியதரவர்க்கத்தின் மேல் அணிகளிடையே மட்டுமே காணப்பட்டது. இதனால் தேசிய இனங்களிடையே முரண்பாடுகள் தோன்றின. இந்த முரண்பாடுகளை ஆழப்படுத்தி பயன்படுத்திக்கொண்டவர்கள் அன்னிய மூலதனத்தின் தரகர்களும் ஏகபோகங்களுமே.
ஒரு புறத்தில் பெருந்தேசிய ஒடுக்கு முறையும் அழிப்பும் திட்டமிட்டு நிகழ்த்தப்பட மறுபுறத்தில் ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டங்க ள் அன்னிய சக்திகளால் கையகப்படுத்தப்பட்டன.
மத்தியதரவர்க்க அணிகளால் தலைமை தாக்ங்கப்பட்ட போராட்டங்களை அன்னிய சக்திகள் தமது தேவைக்கு ஏற்ப பயன்படுதின தேவை முடிந்த வேளைகளில் அழித்தன.
தேசிய விடுதலைப் போராட்டம் என்பது தேசியப் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தும். அன்னிய மூலதனத்தையும் ஏகாதிபத்க்தியங்களையும் எதிரியாக எதிர்கொள்ளும். அன்னிய தரகுகள் இதனைத் தலமைதாங்க முடியாது. தமக்கு எதிரான போராட்டத்தைத் தாமே எப்படித் தலைமை தாங்குவது? ஆக, இலங்கைச் சூழலில் சமூகத்தின் கீழணியிலுள்ள உழைக்கும் மக்களே போராட்டத்தைத் தலைமை தாங்கியிருக்க முடியும். இதனை அறிந்துவைத்திருந்த இந்தியாவும் அமரிக்கா போன்ற ஏனைய நாடுகளும், தமது தரகுகளின் போராட்டமாக தேசிய விடுதலைப் போராட்டத்தை மாற்றியமைத்து லட்சக்கணக்கான மக்களோடு அதனை அழித்துச் சாம்பலாக்கினர்.
இதனால் தேசிய விடுதலைப் போராட்டம் அன்னிய சக்திகளின் ஆதரவோடு இனக்குழு அடையாளப்போராட்டமாக மாறியது. தேசிய இனத்தின் பண்புகளான சுய பொருளாதாரம், அன்னிய மூலதனத்திற்கு எதிரான நிலை என்பவற்றைக் கொண்டிருக்கவில்லை. இனக்குழு அடையாளத்திற்கான பிந்தங்கிய போராட்டம் அந்த இனக்குழு சார்ந்த தமிழ் நாட்டின் ஒரு பகுதியினரையும் கவர்ந்தது. அவர்களின் தலைமையும் அன்னியத் தரகுகளே. போராட்டத்தின் முழு வடிவமுமே தமிழ் இனக்குழுவின் இனவாதப் போராட்டமாகியது. இந்த இனவாதம்
பேரினவாதத்தைப் பலப்படுத்தியது. சிங்களமக்கள் மத்தியில் இனவாத வேர்களுக்கு தீனிபோட்டது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் ஏகாதிபத்தியத்தின் ஐந்தாம்படையின் போராட்டமானது.
லெனின் கூறுவது போல தேசிய முதலாளிகள் உள்ளூர்ச் சந்ததையைக் கயகப்படுத்துவார்கள், அரசியல் ரீதியாக அதனைச் தேச மக்களை இணைத்துக்கொள்வார்கள். அதுதான் தேசிய இயக்கங்களின் பொருளாதார அடிப்படை… இதற்கெல்லாம் எதிர்த்திசையில் பயணித்த தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டம் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டு அன்னியர்களை அண்ணார்ந்து பார்த்துகொண்டிருக்கும் நிலை உருவாகியுள்ளது.
உலகில் பெரும்பான்மையான ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில் குறைந்தபட்ச ஒன்றிணைவாவது இதுவரை ஏற்படவில்லை. இன்னும் எதிர்காலம் இருள் சூழந்ததாகவே உள்ளது. தேசிய விடுதலை இயக்கங்கள் ஊடாகவும், தமிழர் கட்சிகள் ஊடாகவும் விதைக்கப்பட்ட அதே பிந்தங்கிய சிந்தனை இன்னமும் கோலோச்சுகிறது. இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டு ஒன்பது வருடங்களின் பின்பும் ஒரு அங்குலம் கூட முன்னோக்கி நகரவில்லை.
லெனின் மறைந்த ஜனவரியில் அவர் முன்வைத்த விடுதலைக்கான கோட்பாடுகளின் அடிப்படைகளையாவது புரிந்துகொள்ள முற்படுவோம்.
சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள வில்லை என்பதற்காக ஜே.வி.பி மற்றும் அதனில் இருந்து பிரிந்த சோசலிசக் கட்சியினரை இனவாதிகள் என குறிப்பிட முனைவது அந்தக்காலத்தில் தமிழீழத்தை முன்வைக்காத இயக்கங்களை ஜே.ஆர் இன் கைக்கூலிகள் என விமர்சித்ததற்கு ஒப்பாகும். எனவே விமர்சனங்களை பொறுப்போடு முன்வைக்கவும்.
Lenin did not build the Russian Empire. He just captured the State Power there. He formed the Soviet Union in 1920 as they defined the Citizenship in the United States of America in that year. Leon Trostsky is Jewish and he built the Red Army for Lenin by reading books. Josef Stalin is Georgiana and his autocracy only benefitted Mao Zhe Dong. Nikita Krushev is Ukranian who fuelled the arms race by his rancorous rhetoric. Leonid Breshnev the Russian gave SALT – Strategic Arms Limitation Talks. Andrei Gro,yko the Russisn promoted Mikail Gorbechoc who gave START – Startegic Arms Reduction Talks. Boris Yelstin the Russian made all Europeans feel cool. Vladimir Putin the Russian brought respect back to Russia. Eduard Shervadnadze the Georgian did not know that James Baker is an All American Hustler from Texas.
நாவலன்,இந்தக் கட்டுரை குறிக்கும் இன்றைய முன்னிலை சோசலிசக் கட்சி,ஜே.வி.பி.குறித்து நீங்கள் மதித்ததுஞ் சரியே.
இலங்கையில்,தமிழ்பேசும் மக்கள் மீதான சிங்களவினவாதவொடுக்குமுறைக்கெதிரானத் தமிழ் தேசியவினத்தின் எதிர்ப்பரசியல்-போராட்டம் யாவும்”தமிழீழம்”என்ற தனியரசுக்கான கனவில் தரகு முதலாளிய வர்க்கத்தின் தலைமையினால் வியாபாரமாக்கப்பட்டு முள்ளிவாய்க்காலில் மொத்தமாக விற்றுத் தீர்க்கப்பட்டிருக்கிறது.
“தேசிய முதலாளிய வர்க்கம்”
இன்றைய உலகவொழுங்கில் தேசிய முதலாளியம் என்றுரையாட அப்படியானவொரு வர்க்கத்தின் மூலதனத் திரட்சி உண்டா?
தரகு முதலாளியமாகவுருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய முதலாளியவுருவாக்கமானது இறக்குமதி செய்யப்பட்ட சுயமுரண்பாட்டிலெழாதவொரு பொறிமுறைதானே.நவ காலனித்துவத்தின் இன்றைய அரசியல்-பொருளாதாரச் சச்சரவுகள் மிகப் பெரும் ஏகாதிபத்திய நிலைக்குள் வந்துவிட்ட ஐரோப்பிய-அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மூலதனத்துக்குள் பிரதிபலிகத் தொடங்கிவட்டது.
மூன்றாமுலக நாடுகளிலும் குறிப்பாக, வளர்ச்சியடையும் நாடுகளிலும் தரகு முதலாளியமாக உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டுமானமானது தேசிய முதலாளிய வர்க்கத்தை எப்பவோ தொடைத்தெறிந்துவிட்டது.இந்த வெற்றியில் ஏகாதிபத்திய வல்லதேசங்கள் தமது சந்தையைப் பாதிக்காதவொரு பொருளாதார[ Infrastructure ] உறவுகளை இலங்கை-இந்திய மற்றும் ஆபிரிக்கத் தேசங்களில் உருவாக்கிவிட்டது.இது அந்நிய-ஏகாதிபத்திய எதிர்ப்பைச் செய்யும் எந்த அரசியலையும் சாதிக்கக்கூடிய வலுவை இத்தேச மக்களுக்குள் விட்டுவைக்கவில்லை!
ஏகாதிபத்தியம்,தனது பொருள் உற்பத்திகளை,அதன் உப பாகங்களையும்,மற்றும் அறிவுத்துறைசார் சேவைத் துறையில் ஒரு பகுதியைக்கூட இத்தகைய வளர்முக நாடுகளுக்குப் பிரித்து வழங்கியுள்ளது.இதைத் துறைசார் [Management processes ]மொழியில் Outsourcing என்கிறோம்.
மேற்குலகம் ஆசியாவின்-ஆபிரிக்காவின் தொழிலாளர்களைச் சுரண்டவும்-குறை கூலியுழைப்பைத் திருடுவதற்குத்தாம் Outsourcing ஆரம்பிக்கப்பட்டதென நாம் தட்டையானவொரு பார்வையை வைத்திருக்கிறோம்.இது ஒருபகுதியுண்மையைக்கொண்டது.
மேற்குலகத்துள் பல தேசங்கள் மூலவளத்தில் ஏழைத் தேசங்கள்.இவைக்குத் தமது தொழிற்சாலைக்கான மூல வளங்களை வளர்முக நாடுகளிலிருந்து தொடர்ந்து அகழ்ந்து தமது தேசங்களுக்குக் கொணரவேண்டும்.அவ்வண்ணஞ் செய்யும் உற்பத்திப் பொருள்களை விற்கவும் ஒரு சந்தை அவசியமாகவும்,அதைப் பாதுகாக்கவும் கருத்தியல் மனிதர்களும்-உணர்வும்[ The Code of Business Ethics ] அவசியமாகிறது.
Outsourcing சும்மா கூலியுழைப்பை இலக்காகக்கொண்டதல்ல!ஏகாதிபத்தியமானது மூன்றாமுலகில் எங்ஙனம் தரகு முதலாளிய வர்க்கத்தைத் தோற்றுவித்துத் தம்மை நிலைப்படுத்தியதோ அதே போல் இத்தகைய தேசங்களிலொரு கணிசமான “தரகுத் தொழிலாள” வர்க்கத்தையும் உருவாக்கிவிட்டிருக்கிறது.இது அவசியம் ஏகாதிபத்தியத்துக்கு.
Outsourcing தரகுத் தொழிலாள வர்க்கத்தை உருவாக்கி அதன் உணர்வைத் தனது நலனுக்காகத் தயாரித்துத் [From the standpoint of labor, outsourcing may represent a new threat, contributing to worker insecurity, and reflective of the general process of globalization and economic polarization . ]தமக்கெதிரான திசையில் செல்லுந் தொழிலாளவர்க்கத்தைப் பிளந்து தனக்கு ஆதரவானவொரு தொகைத் தொழிலாள வர்க்கத்தைத் தயாரித்துவிட்டது.
அடுத்து, Outsourcing ஊடாக மேற்குலகஞ்சார் எண்ணங்களை,அதற்கான லொபி நினைவிலி மனைதையும்,அதுசார்ந்த சித்தாந்தவுணர்வையும் இத்தகையத் தரகுத் தொழிலாள வர்க்கத்திடம் உருவாக்குகிறது.இன்று அந்நிய மூலதனத்தை ஆதரிக்கும் business process outsourcing தொழிலாளிகள் கணிசமாக திரண்டுள்ளார்கள்.இதற்கூடாக மேற்குலகத்துக்கான ஆதரவுத்தளத்தை பலதளத்தில் [Law and regulation]உருவாக்கி இயக்குவதனாற்றாம் இந்த Remote In-Sourcing மூலம் தமது மண்ணில் தொழிலாளி வேலையிழப்பினும் இதன் மூலம் தமது ஆதிக்கம் மூன்றாம் உலகில் தொடர்ந்து நிலவுவதற்கான ஆளும் வர்கத்தையும்,தொழிலாளி வர்க் கத்தையும் அது தயாரித்து இயக்கும்போது தேசிய முதலாளிய வர்க்கம்-முதலாளியம் என்பதெல்லாம் அடியுண்டு போகிறதே!
ப.வி.ஸ்ரீரங்கன்
30.01.13
outsourcing குறித்து கீன்ஸ் இலிருந்து இன்றுவரை பலர் கூறியுள்ளார்கள். கூலி உழைப்பிற்கான போட்டியை ஏற்படுத்துவதே இதன் அடிப்படையான காரணம். பல்தேசிய நிறுவனங்களுக்கு இது தேவையானது. முகாமைத்துவப் புரட்சியின் பின்னர் முன்றாமுலக தரகுகள் முகாமையாளர்களாக மாறியுள்ளனர். இது குறித்து இன்னும் நீண்ட விவாதம் தேவை. தேசிய முதலாளைத்துவ வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளில் இருந்ததில்லை. அது ஒவ்வொரு தடவையும் எழுச்சிகொள்ள முற்படும் போது தேசிய இன முரண்பாடு தூண்டிவிடப்படுகிறது. பெருந்தோட்ட தொழிற்துறையைத் தொடர்ந்து இலங்கையில் தேசிய முதலாளிகளாக எழுச்சிகொள்ள முனைந்த கராவ சாதியினர் மீதான ஒடுக்குமுறைக்கும் தேசிய இன முரண்பாட்டிற்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. இது குறித்தும் விவாதங்கள் தேவை.
//சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.//
சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதே இலங்கையில் புரட்சி நடப்பதற்கான முன்னிபந்தனையாக இருக்க முடியும். இவ்விடயம் சம்பந்தமாக முன்னிலை சோசலிசக் கட்சியினர் தொடர்ந்தும் விவாதங்களில் ஈடுபட்டே வருகின்றனர். அவர்களால் முன்னெடுக்கப்படும் சமவுரிமை இயக்கம் இனவாதத்திற்கெதிராக கறாரான செயற் திட்டங்களை வகுத்திருப்பதுடன் காத்திரமான அரச எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறது. ஆகவே எமது விமர்சனங்கள் நேர்மையானதும் பக்கச் சார்பற்றதாகவும் இருந்தால் மட்டுமே ஆக்கபூர்வமானதாக அமையும். இப்படி ஒரு இனவாத முத்திரை குத்துவதற்கு உண்மையிலேயே பல காரணங்கள் இருக்குமாயின் அவற்றைப் பகிரங்கமாக வைக்கலாமே.
தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை பற்றிப் பேசவே மாட்டோம் அப்படி பேசினால் சிங்கள மக்கள் மத்தியில் நாம் அரசியல் செய்ய முடியாது என்பவர்கள் நேர்மையானவாகளாக இருக்க முடியுமா? சிங்கள மக்களிடம் ஊன்றப்பட்டுள்ள இனவாத உணர்வை நீக்க சிங்கள மக்கள் மத்தியில் அல்லவா அரசியல் வேலை செய்ய வேண்டும்? அழிந்து சிதைந்து குற்றுயிராய் உள்ள தமிழ் மக்களிடம் வந்து இனவாதத்தை ஒழிக்க வாருங்கள் என கேட்டால் நம்பவா முடியும்?
இந்திரன், தமிழ் கண்ணன்,
நீங்கள் கட்டுரையை முழுமையாகப் படித்ததாகத் தெரியவில்லை. தேசிய இனங்கள், தேசிய இன முரண்பாடு, அதற்கான தீர்வு போன்றவையும் அதற்கு எதிராகப் போராட மறுக்கும் பேரினவாதத்தால் ஆட்கொள்ளப்பட்ட பெருந்தேசிய வாதிகளைப் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. தவிர ||இனியொரு 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஜேவிபி ஐ பேரினவாதிகள் என்று பல தடவை எழுதியுள்ளோம். ஜேவிபி உடன் கொள்கையளவில் எந்த முரண்பாடுமற்ற முன்நிலை சோ. கட்சி ஐ பேரினவாதிகள் என்றதும் நீங்கள் அக்கறை கொள்வது எனக்குப் புரியவில்லை.||
இப்போது மேலும் சில முன்னிலை சோ. கட்சியின் கருத்துக்களை தருகிறேன்.
1. ‘தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் நாம் சுய நிர்ணய உரிமையையோ அதிகாரப் பரவலாக்கலையோ ஏற்றுக்கொள்ளவில்லை’ – பிரேமகுமார்
குறிப்பு: நாளை ராஜபக்சவே முன்வைந்து தமிழர்களுக்கு தனி அலகு ஒன்றை கொடுத்தாலும் முன்னில சோ. கட்சி அதற்கு எதிராகப் போராடும்.
2. நீங்கள் இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்துவீர்களா என முன்னிலை சோ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிபுது ஜெயகொடவை பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்டபோது அவரது பதில்:
‘பிரிவினை வாதிகளை அழித்து வெற்றிகண்ட இராணுவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு நாங்கள் கனவுகாண மாட்டோம்’
பேரினவாத அரசு சிறுபான்மைத் தேசிய இனங்களை இனச்சுத்திகரிப்பு செய்யும் அதே வேளை ஜேவிபி உம் முன்னிலை சோ கட்சியும் அதற்கு எதிராகப் போராடுபவர்களை பிரிவினை வாதிகள், தமிழ் இனவாதிகள் என்று கட்டிவைக்க முற்படுகிறது. கட்டிவைத்தவர்கள் மீது மகிந்த குண்டுபோடுகின்றார். இது பேரினவாதம்.
தமிழ் அடையாளம் சார்ந்த இனவாதத்தையும் ‘பேரினவாதத்தையும்’ (இரண்டும் ஒன்றல்ல) அழிக்கவேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சிறிய குழு ஒன்று சுய நிர்ணய உரிமைக்காகக் குரல் எழுப்பினாலே போதும். முப்பது வருடப் போராட்டம் நடத்தியவர்கள் 2013 இல் இன்னும் சுய நிர்ணய உரிமை வழங்குவதா இல்லையா என இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது கேலிக்குரியது. அவர்களின் நிலைப்பாட்டை குமாரும், ஜெயகொடவும் தெளிவாக முன்வைத்துள்ளார்கள்.
குறுகிய அடையாளங்களும், ஆள்பிடி அரசியலும் பிரேம் குமாரை தமிழ்ப் பேசும் மக்களின் சிறிய வட்டத்துக்குள் அறிமுகப்படுத்தியுள்ளது. அது ஆபத்தில்லை ஆனால் சிங்கள மக்கள் மத்தியில் இவர்களது பிரசன்னம் ஆபத்தானது. சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எழுகின்ற இடதுசாரிகளை அழிக்கும், அவர்களின் கீழணிகளை இனவாதிகளாக்கும் அபாயகரமானது.
இந்த இருவரின் பதில்களின் முலம் முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்தவர்கள் எப்படியான அரசியலை கொண்டிருகிறார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது.இவர்களை பேரினவாதிகள் என்று அழைப்பதில் என்ன தவறு இருகின்றது. ஜெய கொட வின் island பத்திரிகை பேட்டியின் போது தான் இன்னமும் j V P யின் போளிட்புரோ உறுபினராக இருபதாக கூறுகின்றார் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த ராணுவத்தை வீரர்களாக காட்டும் இவரின் விருப்பம் எங்களுக்கு புரிகின்றது. முள்ளி வாய்க்கால் படுகொலையின் பின்பும் பேரின வாதிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலை மாற்ற தயார் இல்லை என்பது புரிகின்றது பேரினவாதத்திற்கு எதிராக.குரல் கொடுபவர்களை இவர்களின் தொங்கு சதைகள் தமிழ் இனவாதிகளாகவும் குறும் தேசிய வாதிகளாகவும் முத்திரை குத்துகிறார்கள் இத்துடன் நிற்காமல் வர்க்க அரசியல் வகுப்பு எடுகின்ரர்கள்.தங்களுக்கு மாத்திரம் தான் லெனின் தனியாக சுயநிர்ணய உரிமை பற்றி வகுப்பு எடுத்ததாகவும் சொல்லிக் கொள்கிறார்கள்l
//2. நீங்கள் இலங்கையில் ஆயுதப் போராட்டம் நடத்துவீர்களா என முன்னிலை சோ. கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பிபுது ஜெயகொடவை பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்டபோது அவரது பதில்:
‘பிரிவினை வாதிகளை அழித்து வெற்றிகண்ட இராணுவத்திற்கு எதிராகப் போராடுவதற்கு நாங்கள் கனவுகாண மாட்டோம்’//
எங்கே எப்போது என்று தெரியப்படுத்துவீர்களா?
Only a fool will consider an armed struggle as an option in this country. We have a strong army which defeated the world’s most ruthless terrorist group in the world. And we do not think the people of this country will endorse recourse to violence. War is over. -Pubudu http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=35567
நீங்கள் முன்னிலை சோஷலிச கட்சியின் உண்மையான பக்கத்தை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காடடுகிறிர்கள். தமிழ் மக்கள் மத்தியில் முன்னேறிய பிரிவு என்று சொல்லிக்கொள்பவர்கள் மவுனமாக இருகிறார்கள்.மற்றும் புரட்சியை தத்து எடுத்தவர்கள் என்று சொல்லிகொல்பவர்கள் தமிழ் மக்களுக்கு இல்லாத ஒன்றை இருப்பதாக காட்ட முனைகிறார்கள்.
தமிழ் மக்களுடன் இணைந்து வேலை செய்ய முன்வரும் சிங்கள இடதுசாரிகள் ஒடுக்கப்படுகின்ற இனமான தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை முதலில் அங்கீகரிக்க வேண்டும்.இது ஒரு முன்நிபந்தனை ஆகும்.சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து சென்று தனியாக வாழ்வதா என்பதை தமிழ் மக்கள் மக்கள் தான் தீர்மானிக்க முடியும். ஒடுக்கும் பேரின வாதிகள் தீர்மானிக்க முடியாது. எங்களின் உரிமையை அங்கீகரிக்க தயார் இல்லாத முன்னிலை சோசலிசக் கட்சி எந்த முகத்துடன் தமிழ் மக்களை தங்களுடன் வேலை செய்ய முன்வரும் படி அழைக்கின்றது.
“முன்னணிக்கான அரசியல் திட்டமும்,அதன் நோக்கமும்” .
முன்னிலைச் சோசலிசக்கட்சி குறித்தும் அதன் கோட்பாட்டுரீதியான தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயவுரிமை மறுப்பையும்குறித்து நாம் விவாதிப்பதற்குத் தமிழரங்க இரயாவின் சுத்து மிகப்பெரிய பங்களிப்பைச் செய்கிறது.
இரயாகரன் குழுவின் அரசியல்-சித்தாந்தம் அதன் வழியான அவர்களது அரசியல் நடவடிக்கையானது ஒன்றுக்கொன்று முரண்ணாகவும்,காலத்துக்குக் காலம் “பிளேட்டை மாத்திப்போடும்” வியூகத்தைக் கொண்டிருக்கிறது. அப்பப்பத் தோன்றும் அணிதிரட்சிக்கொப்பவும் தமது எஜமானர்களது நலன்களுக்குத் தோதாகவும் தொடர்ந்து இவர்களால் நகர்த்தப்படும் பரப்புரைகள் மக்களுக்கு-அதாவது, பரந்து பட்ட மக்களது விடுதலைக்குக் குறுக்கேற்கும்எதிர்ப் புரட்சியாக மையமுறக் காத்திருக்கிறது.
இந்தக் துரோகத்தை-எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தைக் குறித்து நாம் நிறையவே பேசியாகவேண்டும்.
முன்னிலைச் சோசலிசக் கட்சியையும்,அதன் வாலான சம உரிமை இயக்கத்தையும், தம்மைiயும் ரோசா லுக்சம்பேர்க்-லெனினுக்கும் இடையில் நடந்த ஒத்துழைப்பு, நட்பு-முரண் ஆகியதளத்தில் வைத்துத் தாம் ஒத்துழைப்பதாகவும், ஆதரிப்பதாகவும் கயிறு திரிக்கும் இந்தக் குழுவானது மொத்தத்தில் புலத்திலுள்ளவருக்குப் புரட்சி பூவைக் காதில் சொருகிறது.
ரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து மு.சோ.க.வை இரயாகரன் வகுப்பெடுக்கும் நிலைக்கு நல்ல பதிலை, சுவிஸ் மனிதம் இரவி குமார் குணரத்தினத்தைப் பார்த்துக் கேட்ட கேள்விகளிலிருந்து நாம் காணமுடியும்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு மௌனமாகவிருந்து அதை ஆதரித்த இவர்களது இனவாதப் போக்கையும்,சந்தர்ப்பத்தையும் தோலுரித்த சுவிஸ் இரவி, “குமார் அந்த நேரத்தில் கட்சியைவிட்டே வெளியேறியிருக்கவேண்டுமென” மிகச் சரியான விவாதத்தைத் தொடக்கியுள்ளார்.இங்கே, குமார் கூறிய பதிலை முகத்துக்கு நேரே மறுத்தொதுக்கி நிராகரித்த இரவி, நம்பிக்கையைத் தருகிறார்.
ஆனால்,இரயாகரன் குழுவோ மிகக் கெடுதியாகச் சதிவலை பின்ன ஒன்றையொன்றுகுள் திணித்துத் திரித்து முன்னிலை சோசலிசக் கட்சியை குழந்தை-பால் குடியென்று சொல்லித் தமது சதி அரசியற் பாத்திரத்துக்கு நடைமுறைசார்ந்து திடீர் புரட்சிகரக் கட்சியின் பிறப்பாக மு.சோ.க.வை இணைத்து, முரசு கொட்டித் தம்மை அதன் முன் புரட்சிகரச் சக்தியாக்கிறது.தார்மீக அறமேயற்ற இந்த இரயாகரன் குழுவானது சுயநிர்ணயங்குறித்துத் தொடர்ந்து திரிக்கும் போக்குக் குறித்து நாமும்-அவர்களும் நினைவுகொள்வது கடினந்தாம்.
கடந்த செப்ரெம்பர் 2009ஆம்ஆண்டு பாரிசில் நடந்த சந்திப்பில் நாம் இவர்களுக்கிடையிலான சந்திப்பில் “முன்னனணிக்கான அரசியல் திட்டமும்,அதன் நோக்கமும்”எனும் அரசியல் கோட் பெற்று விவாதித்தோம்.அந்த 16 பக்கப் பிரசுரத்தில் உள்ளடக்கப்பட்ட திட்ட வரைவுகளைக் குறித்தும்,இன்றைய இவர்களது சுயநிர்ணய விளக்கத்தைக் குறித்தும் பார்த்தால் இவர்கள் காலத்துக்குக் காலம் பக்கஞ் சாய்ந்து பிழைக்கும் சந்தர்ப்பவாதிகள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
” 7.2: சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வுதான்,தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும்.இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது.இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.(முன்னணிக்கான திட்டம்-2009 .பக்கம்:5) ” என்று இரயாகரன் குழு திட்டமுரைத்தது அன்று.
இன்று, சுயநிர்ணயத்தை மறுக்கும் முன்னிலை சோசலிசக் கட்சியை ரோசா லுக்சம்பேர்க்கோடிணைத்து “தமிழ்த் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை எதிர்த்து, வழங்க மறுக்கும் இலங்கை ஆளும்வர்கத்துக்கு ஒத்திசைவாகப் புரட்சி பேசும்” மு.சோ.க.வை ஆதரிக்கும் இராயாகரன் குழு, “தமிழ்பேசும் தேசியவினத்துக்குச் சுயநிர்ணயத்தை மறுத்து,இதுவல்லாத எதுவும்,ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்குட்பட்டவையாக இருக்கும்”என்று தாம் வைத்த முன்னணித்திட்ட வரைவையே தலைகீழாக்கி விட்டு இன்று, இப்படி எழுதுகிற பிழைப்புவாதி இரயாகரனது சந்தர்ப்பவாதத்தை இங்கே பாருங்கள்:
// இப்படி இருக்க “சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவாதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி.” என்று, ஒரு வர்க்க கட்சியை திரித்து காட்டுகின்ற பித்தலாட்டங்கள் அரசியல் அடிப்படையற்றவை. “சுயநிர்ணய உரிமையை ஆதரி”த்தால் அதை திரிபுவாதி அல்ல என்று கூறமுனைகின்ற இழிவான அரசியல் அர்ப்பத்தனத்தைத்தான் இங்கு நாம் காணமுடியும்.
இந்த அரசியல் தர்க்கம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்களை, இனவாதிகள் அல்ல என்கின்றது. திரிபுவாதிகள் அல்ல என்கின்றது. இது தான் மூடிமறைத்த தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளின் உண்மை முகம். சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்கும் குறுந்தேசியம் வரை, இனவாதிகள் அல்ல என்று இந்த அரசியல் கண்ணோட்டத்தை இந்த தர்க்கம் வரையறுக்கின்றது.
மறுதளத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அதற்கான நடைமுறையும் அவசியமானது. சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி நிற்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடும் பொது அரசியல் தளத்தில் தான், சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமைக்கு எதிராகவும் போராட முடியும்.
கோட்பாட்டு அளவில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் நடைமுறையில் இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு கட்சியின் செயல் தந்திரத்தை இனவாதமாக திரிபுவாதமாக சித்தரிப்பது அபத்தம். அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க, கோட்பாட்டுரீதியான அரசியல் ஆயுதத்தைக் கொண்டிராமை என்பது தொடர்ந்து விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை ஏற்க வைக்கும் போராட்டம் என்பது கூட, அவர்களின் இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான நடைமுறைப் போராட்டத்தின் ஊடாகத்தான் சாத்தியம். வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல.
சுயநிர்ணயத்தை ஏற்காமையை வைத்து அரசியல்ரீதியாக முத்திரை குத்துகின்ற இழிவான போக்கே இங்கு அரசியலாகின்றது. “இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது” என்று கூறுவதன் மூலம், முன்னிலை சோசலிசக் கட்சியை அதன் அரசியல் கூறாக காட்ட முனைகின்றனர்.//-முன்னிலை சோசலிசக் கட்சி இனவாதிகளா!? திரிபுவாதிகளா!? சந்தர்ப்பவாதிகளா!?-பி.இரயாகரன்
தொடர்ந்து || முன்னணிக்கான திட்டம்.பக்கம்:9 இல் இப்படி வரைகின்றனர் அன்று 2009 இல்:
7.தமிழ் மக்களின் சுயநிர்ணயவுரிமை அங்கீகரக்கப்பட வேண்டும்.தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சி அமைப்பை உருவாக்க வேண்டும்.
8. சுயநிர்ணயம் என்பது பிரிந்துபோவதையும்,ஐக்கியப்பட்டு வாழுவதையும் அடிப்படையாகக் கொண்டதென்பதைப் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.
9:சுயநிர்ணயம் என்பது தேசியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக்கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ” என்று ,திட்டம் வரைந்த இரயாகரன் குழுவோ ஒன்றுக்கொன்று முரணாக நின்று கருத்தாடுகிறது.
இவர்கள் திரிபு வாதிகள்-எதிர்ப் புரட்சியாளர்கள்.அந்நியச் சக்திகளது கூலிக் குழுக்கள் என்பதற்கான சகல தரவுகளையும் இவர்களே பின்னும் சதிக்குள் நாம் இனங்காணமுடியும்.
இப்போது நமது கேள்வியெல்லாம்,சுயநிர்ணயத்துக்கு மாற்றானதெல்லாம் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும் என்று நீங்கள் சொன்னதையேதாம் நாமும் முன்னிலைச் சோசலிசக் கட்சிக்கும் சொல்கிறோம்.தமிழ்பேசும் தேசியவினத்தின் சுயநிர்ணயவுரிமையை மறுக்கும் இலங்கைப்பாசிச அரசுக்குத் துணைபோவதற்காகவே முன்னிலை சோசலிசக்கட்சி தமிழர்களது சுயநிர்ணயவுரிமையை மறுக்கின்றனரென்பதை” சுயநிர்ணயமல்லாது எதுவும் ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும்,அவர்களின் தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்”என்ற தங்கள் கருத்தின் தளத்திலிருந்து நாம் உரைக்கும்போது இஃதெப்பட்டிப் பேரினவாதிகளோடு கூட்டுச் சேர்வதாகும் திருவாளர் இரயாகரன் அவர்களே?
ஓ,இலங்கையில் தேசிய முதலாளியம் இல்லாதவொன்றென்பதால் அது சார்ந்த சுயநிர்ணயமும் இல்லாமல் போய்விட்டதோ இப்போது? இருந்தாலும் இருக்கும்.உங்களுக்கு மட்டுமே சந்தர்பத்துக்கேற்பச் சுத்தத் தெரியுமே!
“சீச்சீ, சுயநிர்ணயங் குறித்த புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் கருத்துகள் இவை.அதிலிருந்து நாம் கிஞ்சித்தும் விலகவில்லை.ஆனால் பெரும் பகுதி மக்களிடம் அரசியலையும்-புரட்சிகர முன்னெடுப்பையுஞ் செய்யும் முன்னிலை சோசலிசக் கட்சியுடன்”இனவாதத்தை”போக்கும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்காக நாம் அவர்களுடன் இணையும்போது குறைந்தபட்ச உடன்பாடும்-நட்பும் ,சமாதான சகவாழ்வும்கொள்கிறோமென” வும் சுத்துவதை வருங்காலத்தில் தவிர்ப்பதற்கான உங்களது இன்றைய சுயநிர்ணய விளக்கமும் புரியத் தக்கதே.
இப்படியொரு ஏவல்-அந்நியக் கைக்கூலிப் பிழைப்பைவிட்டு உடல் வருத்திக் கூலி வேலைசெய்து கஞ்சி குடிக்கும் வாழ்வு மேலானது இரயாகரன்.
இதுவொன்றேதாம் மக்களைக் கொல்லாத-காட்டிக்கொடுக்காத நியாயமான மனிதனின் கடமை.
இதைவிட்டுப் புரட்சியென்று பொய்பேசி ,எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை வகிக்கும் உங்களது வரலாற்றை நாம் எழுத வேண்டுமென்ற காலமிருந்தால் அதை யாரால் மாற்றமுடியுமென நாம் வேதாந்தம் உரைக்கப்போவதில்லை.மாறாக, உங்களைது “தமிழீழப் போராட்ட”ப் பாத்திரத்துள் புதிய ஜனநாயகப் புரட்டை வேரோடறுத்துச் சாய்க்கும்வரை எமது போராட்டம் தொடரும்.
மக்களை அந்நியருக்காகச் சாகத் தூண்டும் உங்களைக்போன்ற பல் நூறு ஏவற் படைகளை நாம் மக்கள் முன் நிறுத்தித் தமிழ்பேசும் மக்களே உங்களனைவரையும்தண்டிக்குமொரு சூழலை மிக விரைவாக்குவது நமது முதற் கடமை!
எதிர்ப் புரட்சியாளர்கள் வரலாற்றில் சறுக்கியவர்களல்ல. மாறாகப் புரட்சிக்குரிய நிலவரத்தைத் திட்டமிட்டுச் செயற்கையாகப் படைத்து அதன்வழியாகத் தம்மைப் புரட்சிகரச் சக்தியாகக் காட்டிப் புரட்சியைச் சிதைத்தபடியே தம்மைப் புரட்சியாளர்களெனத் தொடர்ந்து நிரூபித்துப் பற்பல புரட்சிகரக் கட்சி நாமத்துடன் உலகெல்லாம் விரிந்து வாழ்பவர்கள். இது, புட்சிகரத் தோழமைக்குள் நியாயப்படுத்தப்பட்ட தோழமையாக விரித்து வைக்கும் சதி முதலாளித்துவத்து இருப்புக்கான வியூகத்தின் தெரிவிலொரு வழியாகும்.எனவேதாம், மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில்:” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம் [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ]”. என்பது. இதன்வழி நமது சிந்தனையாளர்கள் பலர் 2009 வரை ஆழ்ந்த மௌனத்தைப் புலிப்பாசிசத்தின் முன் கடைப்பிடித்தபோது அதன் கிளைகள்-வேர்கள்-விழுதுகள் தற்போது புரட்சிகரச் சக்தியாகப் படங்காட்டிப் பின்னும் சதிவலையைக்கூடப் புரட்சியென நம்பும் நம் மக்களை விட்டில் பூச்சியாகவே நாம் இனம் காணவேண்டும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
01.02.2013
ஸ்ரீ ரங்கன், ரயாகரநினதும் முன்னணியினதும் சுத்து மாத்து அரசியலை அழகாக தோலுரித்து காட்டி உள்ளீர்கள். இவரின் தொழிலே அடிக்கடி பிளேட்டை மாற்றுவதுதான்.இவர் கடைசியாக வைத்திருக்கும் பதிவை வாசிப்பவர்களுக்கு தெரியும் இவரின் சுத்து மாத்து அரசியல் நிலைப்பாட்டை
முன்னிலை சோசலிசக் கட்சி சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி, இனவாதத்தை எதிர்த்துப் போராடும் ஆயின் சம உரிமை இயக்கத்திற்கு எத்தனை ஸ்ரீ ரன்கங்கள் ஆதரவு கொடுக்க தயராயிருப்பீர்க்ள்? .
.
குறிப்பு: ராயகரன் ஆதரிப்பதால் மட்டும் இதனை எதிர்க்கவேண்டும் என்பதும் முற்போக்கானது அல்ல.
இவ்வளவு நீளமான தத்துவார்த்த விவாதங்களை ரயாகரனுக்குள் குறுக்குவதைத் தான் கொச்சப்படுத்தல், தனிநபர் தாக்குதல், குழுவாதம் இப்படி எல்லாம் அழைக்கிறோம். உங்களுக்கு மேலே கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து விவாதிக்க முடியுமானால் விவாதியுங்கள் அல்லது போத்து மூடிக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். ஜேவிபி யை இனவாதிகள் என்று சொன்ன போது நீங்கள் எங்கே போனீர்கள். இப்போ எப் எஸ் பி கும் ஜே வி பிக்கும் ஒரு வித்தியாசம் கூட இல்லாத நிலையில் ரயாகரனை கொண்டுவந்து அவதூறு செய்கிறீர்கள். ஏன் எப் எஸ் பி உங்களது அடையாள சிக்கலையும் தீர்த்து வைக்கிறதோ? அடையாள சிக்கல் எங்கள் ஒவ்வொருவரயும் எவ்வளவு பாதிக்கிறது என்று கூற நிறைய உண்டு. இனியாவது இதயசுத்தியோடு நடந்துகொள்ளுங்கள்.
இவ்வளவு நீளமான தத்துவார்த்த விவாதங்களை ரயாகரனுக்குள் ///thank you SN is not = சபா நாவலன்
எங்கப்பன் குதிரிட்குல்லில்லை
ரங்கன் ரஜா போன்றவர்களை அங்கீகரிக்கவும் அவர்களோடு சேர்ந்துகொள்ளவும் இவ்வள நாளும் யாரும் கிடைக்கவில்லை. இப்போ முன்னிலை சோசலிஸ கட்சி கிடைத்துள்ளது. முன்னிலை சோசலிஸ கட்சி வைக்கும் இனவாத கருத்துக்களைப் பார்த்து சாதாரண தமிழர்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள். அங்கீகரிக்க ஆள் தேடித்திரியும் ரஜா வுக்கும் சோசலிஸ கட்சிக்கும் ஏற்பட்ட உடன்பாடு மட்டுமே இப்போ நடப்பது. இதைவிட சில எஞிஒ காசு கொஞ்சம் நோர்வே பக்கங்களில் கிடைகலாம். நீங்கள் சொல்வது போல ஏகாதிபத்தியம் என்றது எல்லாம் இல்லை.
இந்த கொம்பனி சமூக விரோதிகள். புலிகளாவது அடக்குமுறையை எதிர்த்து போராடினார்கள். சோசலிஸ்ட் கட்சியின் கூட்டத்தை கூட்டி ஆள்காட்டவேண்டிய தேவை இருக்கிறது. அங்கு போகப் போறவர்களை எல்லாம் சமூக விரோதியாக அடையாளம் காட்ட போகிறார்கள்.
சிறீரங்கன் ரயாவுக்கு எழுதிக்கொடுக்க புதிசீவிகள் தேவை சிறி அதில் ஒருவர். நீங்களும் அதில் ஒருவர் தானோ என்ற சந்தேகம் இருந்தது. உங்களை போன்ற நேர்மையான புத்தி சீவிகளை ரயா கடாசிவிட்டு சிவசேகரம் போன்ற சந்தர்ப்ப வாதிகளோடு சேர்ந்துள்ளார். ஆனால் நீங்களும் ரயாவை நியாயபடுத்தினீர்கள் தானே.
தேசிய விடுதலை மற்றும் சமூக விடுதலை :
தேசிய விடுதலையை முன்னெடுப்போரிற்கு இருக்க வேண்டிய தனித் தனி தன்மைகள், பண்புகள்,தகைமைகள் எவை ?.
.
சமூக விடுதலையை முன்னெடுப்போரிற்கு இருக்க வேண்டிய தனித் தனி தன்மைகள், பண்புகள்,தகைமைகள் எவை ?
.
.
. மற்றும்
தேசிய விடுதலையின் தொடர்ச்சியாக சமூக விடுதலையை முன்னெடுப்போரிற்கு இருக்க வேண்டிய தனித் தனி தன்மைகள், பண்புகள்,தகைமைகள் எவை ?
.
.
சமூக விடுதலையின் தொடர்ச்சியாக தேசிய விடுதலையை முன்னெடுப்போரிற்கு இருக்க வேண்டிய தனித் தனி தன்மைகள், பண்புகள்,தகைமைகள் எவை ?
1. கொள்கையில் உறுதியாக இருப்பது.
2. சில்லரை சலுகைகளுக்காகவும் அடையாள நெருக்கடிக்காகவும் சோரம் போகாமல் இருப்பது.
3. சந்தர்ப்பவாதிகளுக்கும் வியாபாரிகளுக்கு எதிராகவும் கருத்தியல் யுத்ததை உறுதியாக நடத்துவது.
4. மக்கள் மீது நம்பிக்கையும் பற்றும்.
5. கொள்கையைத் தவிர எதனையும் இழக்கத் தயாராக இருப்பது
இவை இருந்தால் மற்றவை தானாக வரும்.
கொள்கை:: தேசிய விடுதலை ? சமூக விடுதலை ?shall we difine?
or do you think both should have the commonதன்மைகள், பண்புகள்,தகைமைகள் ?வாழைப்பழ கதை சொல்லி தப்பிக்க முயலும் இடதுசாரிகளை (செந்தில்களை) இனியும் கேட்க நான் தயாரில்லை. மௌலி அண்ணா HELP ME
கொள்கை:: தேசிய விடுதலை ? சமூக விடுதலை ?shall we re difine?
your conditions are appilicable to any struggle
வாழைப்பழ கதை சொல்லி தப்பிக்க முயலும் இடதுசாரிகளை (செந்தில்களை) இனியும் கேட்க நான் தயாரில்லை. மௌலி அண்ணா HELP ME .
இடதுசாரிகள் பற்றி பேசும் பொழுது =================தேவன் அவர்களே நீங்கள் கோண்டாவில் வேளாள மேலாதிக்கதுக்கு சேவை செய்தவராமே உண்மையா? நீங்கள் அந்த கோண்டாவில் தேவனா? உங்கள் முழுப் பெயர் என்ன ??? please be honest
தமிழ் மக்களின் போராட்டத்தை அழிப்பதற்க்கு துணை போன அமெரிக்கவிற்கும் j v p யில் இருந்து துணை போன முன்னிலை சோசலிசக் கட்சியை சேர்தவர்களுக்கும் என்ன வேறுபாடு? எந்த புள்ளியில் இவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள்.
முன்னிலை சோசலிசக் கட்சி என்ற குழந்தைக்கு பால் ஊட்டும் பொழுது தமிழ் மக்கள் கவனமாக ஊட்டுமாறும் தமிழ் இனவாதிகள் கள்ளிப்பாலை கலப்படம் செய்து, ஆற்றலும் வளமும் கொண்ட குழந்தையை கொன்றுவிடுவார்கள் எனறு இராஜகரன் எச்சரிக்கை செய்துள்ளார்
முலம் – பிரான்ஸ் செய்தி பிரிவு
ஜனநாயகன்,மறுக்கவில்லை!இரயாகரனை நியாப்படுத்தியதுண்டு.அதன்வழியாயகத்தாம் அவரது எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தை மிக இலகுவாகப் புரியதக்கதாகவிருந்தது.அந்தத் திசைவழியில் பயணித்து ஆராயும்போது அவரது எதிர்ப்புரட்சிகரப் பாத்திரம்-புலிக்குக் கைகாட்டும் பாத்திரம் என்.எல்.எப்.ரி.க்குள்ளிருந்தே ஆரம்பமாகிறது.பின்பு,அவர் மிக நெருக்கமான புலிப் பினாமியாக மாறுவதற்கும்,புரட்சிகரச்சக்திகளை உள்வாங்கிச் சிதைக்கவும் புலிகாளல் தயாரிக்கப்பட்டபோது,இரயாகரன் புலிகளால் கைது செய்யப்படுமளவுக்கான புலி எதிராளியாகப் படங்காட்டப்பட்டது.பின் புலி மறியலிலிருந்து தப்புவதாகவும்,தொடர்ந்து புலிகளாற் தேடப்படுவதுமாகப் படங்காட்ட அப்பாவிப் புரட்சிகர இளைஞர்களே அவரை மறைத்துவைத்து காத்திருக்கிறார்கள்.இது,உண்மையான புரட்சிகரச் சக்திகளை ஏமாற்றிய நாடகம்.
இப்படிப் புலிகளால் தேடப்படுவதுமாதிரி வித்தைகாட்டிய புலிகள் தங்களுக்கானவொரு ஆட்காட்டியை,எதிர்ப் புரட்சிகரக் குழுவை என்.எல்.எப்.ரி.க்குள் இப்படிப் பலரை உருவாக்கியபோது கட்டன் நசனல் வங்கிக் காசும்,நகைகளுமாகவொரு ஆட்காட்டிக் குழு நமக்குள் புலிகளால் இறக்கப்பட்டது.அப்போதுதாம் விஸ்வாநந்த தேவளும் கொல்லப்பட்டு அவரது சடலம்கடலினுள் தாழ்க்கப்பட்டிருந்தது.இதன் பின் இந்தப் பினாமி புலிகளுக்காகப் புலிகளை விமர்சித்தப்படி,புரட்சிகரச் சக்திகளை உள்வாங்கிச் சிதைத்தும்,தூற்றியும்-ஆட்காட்டியும், குலைத்தெறிந்ததும் ஏவற் படையாக இருந்துகொள்கிறது. 90களின் ஆரம்பத்திலிருந்து புலம்பெயர் தளத்தில் இது ஆரம்பமாகிறது.2009 இல் புலி அழியும்போது அதற்குத் தலைசாய்த்துப் புதிய இலக்கணமும் எழுதியபோது அதை அம்பலப்படுத்தியவனும் நானே!
// துரோகமிழைக்காது போராடி மரணிக்கும் புலிகளின் நிலை மதிப்புக்குரியது -பி.இரயாகரன் //
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5584:2009-04-06-21-31-03&catid=277:2009
// யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற.//
ஒய்யாரக் கொண்டையாம்,உள்ளே ஈரும்,பேனுமாம்.-ப.வி.ஸ்ரீரங்கன்
http://www.srisagajan.blogspot.de/search/label/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF
இதே நாடகம்,குமார் குணரெத்தினத்தினது புரட்சிகரப் பாத்திரத்துக்கும் பொருந்துகிறது.இலங்கை அரசால் கைதி-விடுதலை என்று சதிவலை பின்னப்பட்டு முன்னிலைச் சோசலிசக் கட்சியும் உருவாகிப் புரட்டுகிறது.
im happy to see this kind of arguments. in 80s we all remained silence with all the opportunist, which would not be the case again. congratulations guys!!
please be honest//
if you are honest to tamils,and only to tamils then I’ll let you know..
.
if you are honest to tamils, then you wouldn’t have asked this stupid question about my caste without any facts or reasons to prove that I thevan is pro வேளாள மேலாதிக்கம். .
.
what made you to tink that ,I thevan is pro வேளாள மேலாதிக்கம்? why? why did you raise this question towards me? are you suffering from caste issue in Tamil Eelam?let me know,I’ll show you how to solve that suferings.
there is some rumers circulating about some one called thevan from Kondavil , please provide your name then we can claryfy
rumers circulating about some one called thevan ///கற்பனை இடது சாரியுமல்ல, கனவு காணும் தமிழ் தேசியவாதியுமல்ல..
.
cast and religion //சாதி, மொழி, இன வெறியனுமல்ல, and ஆஸ்தியவாதியுமல்ல..
.
இன்று இருக்கும் நிஜமான சமூகத்தை, (கற்பனை கனவுகளை கலைந்த) ஒரு படி முன்னகர்த்தினால் திருப்திப்படும் ஜாதர்த்தவாதி ஆக இருக்க விரும்பும் ஒருவன்.அவ்வளவே.
don’t waste your time to find fault on THEVAN to dilute my political views:NAMELY anti PULI(VP) for you. .
.
for some one (sn)else(ANTI EGO)
இடதுசாரிகள் பற்றி பேசும் பொழுது //கற்பனை இடது சாரிகளிட்கும்(anti சர்வதேசியம்………,) ,கனவு காணும் தமிழ் தேசியவாதிகற்கும்(anti lobby politics:ie tamils for labour,cons, OBAMA….. India,GOSL….. or any power) இடையில் கலந்த கலவை தான் இந்த தேவன்.
.
Mr Thevan main obstacle in our community for left politics is cast and religion. we cannot acheive anything towards left politics without talking about cast and religion the main ingrediants of anti left .
குமார் குணரட்னம் போன்றவர்கள் தாம் ஜேவிபி யில் இருந்தபோது நடந்த பொதுமக்கள் மீதான அராஜகங்களுக்கு சுய விமர்சனம் செய்து கொண்டு அவற்றிற்கான தண்டனைகளை அனுபவிக்க வேண்டும்.
Any one talking about left politics must be prepared to discuss about impact of cast and religion in our community .
These two elements are the main ingreadiants for anti left politics.
those who are unwilling or get upset about talking this matters are simply enemies of left politics. they are like George Orwell who infiltrated in the left movement .
very good LOGIC MOULI as expected from low IQ person like you: ..
.
1.leftists are wrong therefore pro VP ists are right…
.
2.leftists wrong and we pro VPists also wrong therefore we leftists and vpists are same….
.
3.leftists are wrong and failed therefore they can’t say anything wrong against VP. உம்ம்ம்ம்ம் அழுதுடுவேன் .
// முப்பது வருடப் போராட்டம் நடத்தியவர்கள் 2013 இல் இன்னும் சுய நிர்ணய உரிமை வழங்குவதா இல்லையா என இன்னும் விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது கேலிக்குரியது.//
இந்த விடயம் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் தமிழ் தேசிய சக்திகள் முழுமையாக இணைந்து வேலை செய்வதற்குத் தடையாகவே இருக்கும். ஆனால், முப்பது வருடங்களாகப் போராடிய ஒரு இனம் தேசமாக பரிணமித்து விட்டதா இல்லையா என்று சில காலங்களுக்கு முன் நடாத்திய விவாதங்களை எந்த வகையில் அடக்குவது?
தேசமாக மட்டுமல்ல தேசிய இனமாகக் கூட இன்னும் மூன்றாம் உலகநாடுகளில் உள்ள தேசிய இனங்கள் முழுமையடையவில்லை. இந்த முழுமை அடைவதற்குரியை முறைக்மை முற்போக்கானது மட்டுமல்ல தேவையானதும் கூட. //பிந்தங்கிய நிலப்பிரபுத்துவ சமூகம் ஒன்றில் மக்கள் தமது அடையாளத்தை கிராமங்களை மையப்படுத்தியும், தொழிலை மையப்படுத்தியும், மதங்களை முன்னிறுத்தியும் உருவமைத்துக்கொள்வார்கள். இவை அனைத்தையும் தகர்த்து தேசங்களும் தேசிய அரசுகளும் உருவாகின.//
இது கட்டுரையிலும் கூற்ப்பட்டுள்ளது. முதலாளித்துவ சமூகத்தில் காணப்பட்ட தேசிய இனங்கள் நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களைக் கொண்டுள்ள எமத்கு சமூகத்தில் இல்லை. அதனை வளர்ச்சியடையச் ஊக்குவிப்பது இயக்கங்களின் வேலைதிட்டங்களின் ஒரு பகுதி. முன்னர் சண்முகதாசன் இதே கருத்தைக் கொண்டிருந்தார் என ரவீந்திரன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். பாசறை என்ற சிறிய மார்க்சியக் குழுவின் வேலைத்திட்டதிலும் இதே கருத்துக்கள் காணப்பட்டன. தேசிய இனங்களாக வளர்ச்சிய்டையும் முறைமையைப் புரிந்துகொண்டிருந்தால் வடக்குக் கிழக்கு பிரதேச முரண்பாடுகளைக் கூடத் தவிர்த்திருக்கலாம்.
இலங்கையில் சிங்கள தேசம் இன்னும் தேசமாகப் பரிணமிக்கவில்லை என்று வரையறுப்போமாயின் அது தேசம் என்றால் என்னவென்று நாம் கொடுக்கும் வரைவிலக்கணத்தின் குறைபாட்டையே சுட்டி நிற்கிறது. சரி ஒரு வாதத்திற்கு தமிழ் தேசம் இன்னும் தேசிய இனமாக பரிணமிக்கவில்லை என்றே வைத்துக் கொள்வோம். தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமை குறித்து லெனின் முன்வைத்த கோட்பாட்டு வகையிலான முடிவுகள் எப்படி இந்த இனக் குழுமத்திற்குப் பொருந்தும்?
Indran, இவை குறித்து லெனினும் பின்னதாக ஸ்டாலினும் தெளிவாகக் கூறியுள்ள்னர். நான் மீண்டும் கூறுவதை விட நீங்களே அவற்றைப் படிப்பது நேரிடையான புரிதலைத் தரும். தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் இனக் குழுக்கள் அல்ல. தேசிய இனங்களாக வளரும் நிலையில் உள்ளவர்கள். ஏற்றுமதி செய்யப்பட்ட முதலாளித்துவத்தின் வளர்ச்சி இன்மையால் அவர்களின் தேசிய இனத்திற்கான வளர்ச்சி இன்னும் பூர்த்தியடையவில்லை. வரைவிலக்கணங்களை வகுத்துகொண்டு எதையும் சூத்திரமாக்காதிர்கள். வரலாற்றை பொருள் முதல்வாத அடிப்படையில் அணுக முற்படுதல் என்பது அறிவியல் பூர்வமான ஆய்வு முறை. வரலாற்றில் முதலாளித்துவக் கட்டத்திற்குரிய மக்கள் கூட்டமே தேசிய இனம்.
மூலதனச் சந்தை உருவான காலத்தில் கிராமங்களிலிருந்தும் தொலைவுகளிலிருந்தும் மக்கள்: தொழில் நகரங்களை நோக்கி சாரி சாரியாக இடம் பெயர்ந்தனர். வெவ்வேறு மத வழிபாடு, பண்பாடு, மொழி போன்றவற்றைக் கொண்ட மக்களிடையே குழப்பங்கள் உருவாகின. சமூகத்தின் தேவையாக இவர்களிடையே பொதுவான தொடர்பு மொழியை முதலாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய அரசும், ஏனைய சமூக நிறுவனங்களும் ஊக்குவித்தன. பண்பாடுகளின் தொகுப்பாக கலாச்சாரம் உருவானது.
இந்த வளர்ச்சியும், இடப்பெயர்வும், முதலாளித்துவ இயங்கு திறனும் இலங்கை போன்ற நாடுகளில் உருவாகாமையால், ஸ்டாலின் பால்கன் நாடுகளிக் குறிப்பிடுவதற்கு இன்னும் குறைந்த நிலையிலேயெ தேசிய இனங்களின் வளர்ச்சி காணப்பட்டது.
பெருந்தேசிய ஒடுக்குமுறை அவர்களைத் தேசியக் கருத்தியலுக்குள் இணைத்துள்ளது. தேசிய விடுதலைப் போராட்டதினதும், சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தினதும் மிகப் பிரதானமான அங்கமாக அவர்கள் தேசிய இனமாக முழுமைபெறுவதறான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும். இது அன்னிய மூலதன ஆக்கிரமிப்பிற்கு எதிரானதானதாகவே தனது அடிப்படைப் பண்பைக் கொண்டிருக்கும்.