சிங்கப்பூர் என்ற சிறிய நகரத்தை ஆசியாவின் வர்த்தக மையமாகக் கட்டியெழுப்பிய சர்வாதிகாரி லீ குவான் யூ 23.03.2015 திங்களன்று உடல நலக் குறைவால் காலமானார். ஆசியப் பிராந்தியத்திற்கான நாணயமாற்றுப் பரிவர்த்தனை மையம் ஒன்றை அமெரிக்கா தலைமையிலான ஏகபோக அரசுகள் தேடிக்கொண்டிருந்த வேளையில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் என்ற பகுதி வெளியேற்றப்பட்டது.. அந்த நகரப்பகுதியை தனது தேவைக்கேற்ற ஒரு நாடாக ஏகாதிபத்தியங்கள் தெரிவு செய்துகொண்டன. அந்த நகரத்தை நாடாக மாற்றுவதற்குத் தெரிவு செய்யப்பட்ட நபர் லீ குவான் யூ என்பவராவார்.
லீ ஆட்சிக்கு வந்ததும், கருத்துச் சுதந்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன. ஊடக சுதந்திரம் அரசின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் கொண்டுவரப்பட்டது. குடும்ப ஆட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. எதிர்க் கட்சிகள், விமர்சித்தவர்கள் எல்லாம் சிறையிலடைக்கப்பட்டனர்.
சிங்கப்பூரில் பணம் படைத்தவர்கள் வியாபாரம் செய்வதற்கும், வாழ்வதற்கும், சுற்றுலாப் பயணம் செய்வதற்கும், அவர்களுக்கு வேலையாட்களை வைத்துக் கொள்வதற்கும் உரிமை வழங்கப்பட்டது. மாற்றுக் கருத்துக்களுக்கும், அரசியலுக்கும் சிங்கப்பூரில் சுதந்திரம் வழங்கப்படவில்லை.
இலங்கையில் கடந்த பத்து வருடங்கள் ஆட்சி நடத்திய ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சிக்கு ஈடான ஒரு ஆட்சி முறைமையே லீ குவானின் ஆட்சி காலத்தில் நிலவியது. அதிலும் முதல் பத்தாண்டுகளில் அழிந்து போனவர்கள் பலர்.
முன்னைய சோசலிச நாடான சீனா சிங்கப்பூர் போன்ற சர்வாதிகார ஆட்சி முறையையே தனது புதிய ஆட்சி முறையாகக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
லீ குவான் யூ இன் மகனும் பிரதமரின் ஊடகச் செயலாளருமான லீ ஹெசியன் லூங் 23.03.2015 காலை 3:18 இற்கு சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் லீ மரணமடைந்து விட்டதாக அறிவித்தார்.
மக்கள் நடவடிக்கைக் கட்சி என்ற் கட்சியைத் தோற்றுவித்த லீ, 1959 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமாரானார். சிங்கப்பூரில் அமெரிக்காவின் பல்தேசிய நிறுவனங்களுக்குச் சேவை செய்வதற்காக, தனியர் மயப்படுத்தப்பட்ட ஆங்கில மூலக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க மூலதனம் சிங்கப்பூரில் பல தொழில்களை ஆரம்பிக்கப் பயன்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் ஆரம்பிக்கபட்டன. பெற்றோலியச் சுத்திகரிப்பு ஆலைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல மூலதனக் கொள்ளைக்காரர்கள் மறு விசாரணையின்றி சிங்கப்பூரில் குடியேற அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யா, பங்களாதேஷ், மியான்மார், மலேசியா, சிம்பாப்வே போன்ற நாடுகளில் கருத்துச் சுதந்திரம் சிங்க்ப்பூரை விட சிறந்தாக இருப்பதாகக் குறித்துக்காட்டப்பட்டிருந்தது. இன்று வரைக்கும் எதிர்க்கட்சிகளும் மாற்றுக் கருத்தாளர்களும் சிங்கப்பூரில் அனுமதிக்கப்படுவதில்லை. ‘சிங்கப்பூரை யார் ஆட்சி செய்கிறார்களோ அவர்கள் கையில் இரும்பை வைத்திருக்க வேண்டும்’ என்ற லீ குவானின் கூற்று இன்றும் பிரபலம் வாய்ந்தது.
சிங்கப்பூர் என்ற சிறிய நகரத்தை தனது தேவைக்காக நாடாக மாற்ற அமெரிக்கா லீ குவானை பிரதமராக நியமித்தது. ஆசியாவின் சிறிய நகரத்தை பணம் படைத்த நகரமாக மாற்றியமை வளர்சியோ முன்னுதாரணமோ அல்ல.
ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு நேர்காணலில் லீ குவான் கூறியதை வைத்துக்கொண்ட் அவரைத் தமிழ் உணர்வாளராக்கிவிட்டனர் தமிழ் தேசியக் கோமாளிகள். நாளை ராஜபக்ச புலிகள் வாழ்க என்றால் அவருக்கும் அஞ்சலி செய்த்தத் தயங்கமாட்டார்கள்.
உலகில் மக்களுக்காகப் போராடி மரணித்துப்போன ஆயிரக்கணக்கானோரை கண்டுகொள்ளாத மனிதாபிமானற்ற தமித் தேசிய வியாபாரிகள், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து நீக்கம் செய்யப்பட்டால் மட்டுமே வெற்றிகான பாதையில் நடந்து செல்ல முடியும்.
மறைந்தாலும் – மறையாத மன்னன்!
சிங்கப்பூர் ஓர் சிறிய பகுதி.
அதை ஒரு மீனவ கிராமம் என்றே சொல்லலாம். அதுவும் கொள்ளயர் அதிகம் வாழ்ந்த பகுதி என்றால் வியப்பாக இருக்கும்.
மலேசியாவில் இருந்து பிரிந்த போது – எப்படி முன்னேற்றலாம் என சிந்தித்த லீ அவர்கள் , வணிக நாடாக உருவாக்குகிறார்.
நாட்டின் நிரந்தர தன்மைக்காக, எதிர்க் கட்சிகளை இல்லாமல் செய்கிறார். குடி தண்ணீர் கூட, மலேசியாவிலிருந்தே பெறப்பட வேண்டிய நிலை. துறைமுகம் ஒன்றை மட்டுமே வைத்து – வணிக மையமாக , சிங்கப்பூரை லீ கட்டி எழுப்புகிறார்.
மலேசியாவிலிருந்து – நாடு பிரிந்த போது வந்தவர்கள் ; சிங்கப்பூரர்களாகிறார்கள். மலே – சீன – இந்திய (தமிழர் இந்தியராகவே கருதப்படுகின்றனர்.) யுரேசியர் என பல்லின சமூகமாக உருவாகிறது.
பொது மொழி ஆங்கிலம். இரண்டாம் மொழி தாய் மொழி. இந்தியர்களுக்கு தமிழ். தாய் மொழியை விரும்பாதோர் மற்றொரு மொழியை கற்கலாம்.
716.1 km² பரப்பளவே கொண்ட நிலத்தை ஆளாளுக்கு எடுத்தால் மக்களுக்கு வாழ இடம் இருக்காது. மாடி வீடு திட்டத்தின்படி அனைத்து மக்களுக்கும் வாழ வீட்டை அரசு கொடுக்கிறது. திருமணமாகும் தம்பதிகளுக்கு – அவர்கள் சொந்தமாக அரசிடமிருந்து தமது சேமலாப நிதி மூலம் வீடொன்றை பெறலாம்.
காரில்லா மக்கள் வாழலாம் – வீடில்லா மக்கள் சிங்கப்பூரில் இல்லை. வாகனங்களை மக்கள் விரும்பிய போது – வாழ வீடு வேண்டுமா? இல்லை சொகுசு கார் வேண்டுமா என லீ அவர்கள் மக்களிடம் கேட்டார். அதன் தாக்கமாக உருவானது MRT ரயில் திட்டம்.
சிறய நாட்டை – சிங்கார பூமியாக்கிய பெருமை லீ அவர்களை சாரும். தவிர இனவாதமற்ற பல்லின கலாச்சாரத்தை பேண – விகிதாசார அடிப்படையில் தொடர்ந்து பயணிக்க அறிவு படைத்தவர்களை நாட்டுக்குள் உள் வாங்கினார். ஒரு இனம் தனித்து வாழ விடாது – கலந்தே வாழ வழி செய்தார். அது கலகமே இல்லாத கலாச்சாரத்தை காக்க உதவியது. ஆரம்ப கால சைனா டவுண் – அரபு வீதி – சிராங்கூன் போன்ற சில இன அடிப்படை தளங்களை தவிர்த்து இனங்கள் குழுவாக வாழ லீ அவர்கள் விடவில்லை. ஆனால் சரித்திரம் பேச இருக்கட்டுமே என சிலர் சொன்னதற்கு ; லீ அவர்கள் இடம் தந்தார்.எனவே சரித்திர ஆவணமான இப்பகுதிகளை தவிர்த்து ; அனைத்து பகுதிகளிலும் – இனவாதத்தை இல்லாமல் செய்யும் நோக்கம் – ஆரம்ப காலத்தில் இருந்தது.
ஏதாவது ஒரு இனம் குழுவாக இருந்தால் – இனவாதம் தலை தூக்கலாம் என இலங்கையை வைத்தே லீ கணிக்கிறார். எனவே சரித்திர ஆவணமான இப்பகுதிகளை தவிர்த்து ; அனைத்து பகுதிகளிலும் – இனவாதத்தை இல்லாமல் செய்யும் நோக்கம் – ஆரம்ப காலத்தில் இருந்தே கண்டு கொண்டார்.
சிங்கை ஒருவிதத்தில் கமியூனிச தன்மை கொண்ட நாடுதான். காரணம் லீ அவர்கள் – கமியூனிசவாதியாக அரசியலுக்குள் பிரவேசித்தவர். அவரது ஆரம்பம் தொழிற்சங்கத்திலிருந்தே உருவாகிறது. மலேசிய டாக்சி தொழிலாளர் சங்கதிலிருந்தே லீயின் அரசியல் உருவாகிறது. அவரோடு இருந்தவர்கள் இராசரத்தினம் ( இலங்கை தமிழர்) மற்றும் தேவநாயர். டாக்சி தொழில் சங்க தலைவராக தேவநாயரே இருந்தார்.
எந்தவொரு இனத்துக்கும் பாகுபாடு ஏற்படக் கூடாது என்பதற்காக – போலீசார் ரோந்து செல்லும் போதோ அல்லது ஒரு குற்றத்தை விசாரிக்கும் போதோ ; இந்திய – சீன – மலாய் போலீசார் என முக் கூட்டு ஒருங்கிணைந்தே செல்வதை சட்டமாக்கினார்.
ஊழலற்ற ஒரு அரசை நிறுவ லீ எடுத்த முயற்சி ; சிங்கப்பூரை – சிங்கார பூமியாக்கியதென்றால் மிகையில்லை.
581.5 km² ல் உருவான ஒரு தேசத்தை உலக அரங்கில் பார்க்க வைத்த பெருமை லீ அவர்களையே சாரும். தனது நாட்டை உருவாக்க ; கடும் போக்காளராக இருந்த லீ – உண்மையில் மிக இனிமையானவர். உண்மையானவர். சுயநலம் அற்றவர்.
மறைந்தாலும் – மறையாத மன்னன்!
ஒன்று தெரியுமா தோழரே…..(நீர் புதிய கம்யூனிஸ்டாய் இருந்தால் உமக்கு தெரிய வாய்ப்பில்லை….)உலகத்திலேயே லெனின், ஸ்டாலின், மாசேதுங்-இவர்களைவிட பெரிய சர்வாதிகாரிகள் யாரும் இல்லை
“தமிழர்கள் அறிவாளிகள் என சான்றளித்தவர். ஆனால் பயனற்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடுவதால் அறிவின் பலனை அனுபவிக்க முடியாதவர்கள் என்றும் கணித்தவர்.”
ஏனைய நாடுகள் கனவு மட்டுமே காணக் கூடிய சமூக ஒழுங்கை முழுமையாக நிலைநாட்டியவர் என்பது லீ குவான் யூவுக்கு சூடப்படும் மிகப்பெரிய புகழாரம்.
நிவேதா நேசன்” அவர்களே .. நீங்களும் உங்கள் திறமையை லீயை விமர்சிக்கும் பயனற்ற விடயத்தில் வீணாக்குகிண்றீர்களா.