இன்டர்போல் போலிசின் தேடப்படுவோர் வரிசையில் பட்டியலிடப்பட்ட கே.பி ஐக் கைதுசெய்யுமாறு ஜே.வி.பி தொடர்ந்த வழக்கு இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விஜித மலகொட மற்றும் ஏ.எச்.எம் நவாஸ் ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. கே.பி இன் கடவுச் சீட்டை முடக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். கே.பி ஐக் கைது செய்வதற்கான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்பட்வில்லை.
கே.பி இன் விவகாரத்தில் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள், இன்றைய அரசில் அங்கம் வகிப்பவர்கள் உட்பட பலரின் பெயர்கள் உள்ளடங்கியிருப்பதால் அவை வெளியாகலாம் என்ற காரணத்தல் கே.பி கைது செய்யப்படவில்லை என இலங்கை உளவுத்துறையை ஆதாரம் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவிர கே.பி இலங்கைக்கு வந்தமைக்கான சட்டபூர்வப் பதிவுகள் இல்லை எனவும் இவை அதி உயர் பாதுக்காப்பு ஏற்பாடுகளுடன் தொடர்புடையவை எனவும் குறிப்பிட்ப்பட்டுள்ளது. தவிர, இலங்கை அரசின் பாதுகாப்பினுள் கைதியாகவே இன்னும் வாழ்வதாகக் கூறும் கே.பி தாய்லாந்திற்கு இரண்டுதடவை சென்று திரும்பியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஆக, மலேசியாவில் கே.பி கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுசெல்லப்பட்டது திட்டமிட்ப்பட்ட நாடகமே என்பது தெளிவாகிறது. தவிர, இறுதி நேரத்தில் கே.பி ஐரோப்பிய அமெரிக்க உளவு நிறுவனங்களுடன் தொடர்பிலிருந்தார். சனல் 4 தொலைக்காட்சி கே.பி ஐத் தொடர்புகொண்டது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒன்றுகூடலில் கலந்துகொண்டார்.
இவை கே.பி இன் இலங்கைப் பயணத்திற்கும் மேற்கு நாடுகளின் உளவு நிறுவனங்களுக்கும் நேரடித் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகங்களும் உறுதியாகும் நிலையிலுள்ளன.
கே.பி கைதான வேளையில் மலேசியாவில் அவரோடு தொடர்பிலிருந்தவர்களும்., கே.பி இலங்கை சென்ற பின்னரும் அவருடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் மாபியக்களும் புலிகளைக் காட்டிக்கொடுத்ததில் பங்கு வகித்திருக்கலாம் என்ற உண்மைகளும் இதன் பின்புலத்தில் மறைந்துள்ளது.
ஜே.வி.பி இவ்விடயத்தில் தொடர்ந்து சட்டரீதியாகப் போராடினால் பல உண்மைகள் வெளிவரலாம். இவை அனைத்தையும் மூடி மறைப்பதற்காக இலங்கையில் ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் உளவுத்துறையின் துணையோடு கே.பியை அழித்துவிடலாம். உணமைகளை வெளிக்கொண்டுவருவதற்காக கே.பியைப் பாதுகாப்பதும், சட்டத்தின் முன்னால் நிறுத்துவதும் தேவையானதாகும்.
குரங்கன் பத்மநாதன் (கே.பீ) இன் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக தமிழர் இன அழிப்பின் பின்னால் இயங்கும் விஷமிகள் பலரையும் கூட்டி சர்வதேச நாசகார வேலைப்பாட்டை ஈழத்தை மையப்படுத்தி முன் நகரும் ஐ.சி.ஜி அமைப்பு 2011இல் எழுதியதை வைத்து விளங்கிக் கொள்வது இன்றைய முக்கிய தேவை.
மூத்த இந்திய ஊடகவியளாளன் (senior Indian journalist familiar with the deal) என கீழே குறிப்பிடப்படுவது அதிகமாக இனவழிப்பாளன் நாராயணசுவாமி ஆகவே இருக்க வேண்டும்.
டீ.பீ.எஸ் ஜெயராஜ்-ஐ விட இன்னொரு இந்திய உளவாளி கே.பீ-ஐ ஸ்ரீ லங்காவில் வைத்து First Post-க்கு ஒளிப்பதிவு பேட்டி கண்டமையும் குறிப்பிடப்படவேண்டியது.
டீ.பீ.எஸ் ஜெயராஜ் பிரசுரித்த முதல் அட்தியாயத்தில் இன்னொரு இனவழிப்பாளன் ப.சிதம்பரத்துடன் மே 2009 இந்தியத் தேர்தல் சம்பந்தமாக ஆடிய நாடகம் பற்றி ஒன்றுமே வெளிவராததும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் – இணைப்பு கீழே.
http://www.crisisgroup.org/~/media/files/asia/south-asia/sri-lanka/206%20india%20and%20sri%20lanka%20after%20the%20ltte
In early May, according to Crisis Group interviews and press reports, P. Chidambaram through intermediaries in Tamil Nadu was in discussions with the LTTE’s top international official, Kumaran Pathmanathan (K.P.) over a possible ceasefire.
Chidambaram reportedly drafted a surrender statement for the LTTE that included a unilateral declaration with two main points: the Tigers would agree to stop fighting and surrender its arms to a third party;
and they would accept a political settlement instead of a separate state. In an interview with the noted Tamil journalist D.B.S. Jeyaraj, K.P. claimed that Chidambaram guaranteed that New Delhi would pressure Colombo to accept the deal.
According to a senior Indian journalist familiar with the deal, “K.P. tried to convince Prabhakaran to retreat and live to fight another day” but the deal faltered after P.Nadesan, the LTTE’s top political chief at the time, shared details of the draft agreement with Vaiko and Pala Nedu-
maran, two staunchly pro-LTTE Tamil Nadu politicians supporting the opposition BJP-AIADMK alliance.
On the heels of Jayalalithaa’s promise to send Indian troops to create a separate Tamil state in Sri Lanka if the AIADMK was elected, Vaiko and Nedumaran convinced the LTTE that a Congress-brokered ceasefire would all but ensure its re-election, thus preventing an AIADMK-backed BJP government from coming to its rescue or securing it better terms of surrender.
Ignorant of the political realties of the time, most notably the BJP’s opposition to Tamil Eelam, Prabhakaran walked away from Chidambaram’s deal
டீ.பீ.எஸ் ஜெயராஜ் 2010 ஆக்ஸ்ட் -இல் வெளியிட்ட கதை:-
http://dbsjeyaraj.com/dbsj/archives/1607
First Post 2011 மே -இல் வெளியிட்ட கதை வசனம்:-
http://www.firstpost.com/politics/full-text-kp-interview-14180.html
ஒளிப்பதிவுகளின் ஒரு பாகம்:-