தமிழ் நாடு முழுவதிலும் ஆபாசமும் வன்முறையும் நிறைந்த சினிமாக் கலாச்சாரம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் போது மதுபானக் கடைகளை மூடக் கோரிப் பாடல் பாடிய தோழர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருக்கின்ற குறைந்தபட்ச ஜனநாயக இடைவெளியைப் பயன்படுத்தி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் கோவனைக் கைது செய்து தமிழ் நாடு அரசு வன்முறையைத் தூண்டுகிறது.
ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட 1991 ஆம் ஆண்டின் பின்னர் தமிழகத்தில் ஆட்சியைக் கையகப்படுத்திக்கொண்ட ஜெயலலிதா அரசு ஈழ ஆதரவாளர்களைத் தேடித்தேடிக் கைது செய்து சிறையிலடைத்தது. அவ்வேளைகளில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தமிழ் நாடு முழுவதும் ஜெயலலிதாவின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தியது. அமைப்பின் தோழர்கள் மீது போலீஸ் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அவ்வேளையில் ஜெயலலிதா அரசின் ஈழ ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கோவனின் பாடல்கள் மக்கள் மத்தியில் புதிய அரசியல் எழுச்சியை ஏற்படுத்தின.
தமிழ் நாடு முழுவதும் இன்று தொலைக்காட்சிகளும், ஊடகங்களும் கோவனின் கைது தொடர்பான தொடர்ச்சியான தகவல்களை வெளியிடுகின்றன. அனைத்துக் கட்சிகளும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காகக் குரல்கொடுத்துவரும், தொடர்ச்சியான போராடங்களை நடத்திவரும் கோவனை விடுதலை செய்யக் கோரியோ அன்றி, மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவாகவோ இதுவரை புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மூச்சுக்கூட விடவில்லை.
கலை என்ற பெயரில் வன்முறையையும் ஆபசத்தையும் எதிகால சந்ததிகள் மத்தியில் விதைக்கும் சினிமாக்காரர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அழைத்து அரசியல் நாடகமாடும் தமிழ் அமைப்புக்களுக்குக் கோவனைத் தெரிந்திருக்க நியாயமில்லை.
கோவனைக் கைது செய்வதற்கு காரணமான பாடல்: