தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு எதிராகப் பாடியமையே கோவன் கைது செயப்பட்டத்ற்கான காரணம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார். தவிர, வழக்கின் முதலாவது எதிரியாக வினவு இணையத்தளத்தின் உரிமையாளர் கண்ணையன் ராமதாஸ் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
அவரை தமிழக அரச படைகள் தேடிவருகின்றன. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழேயே இந்த இருவர் மீதான பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா என்ற தனி நபரைப் பாதுகப்பதே தேசியப் பாதுகாப்பு என்ற நிலை உருவாகியுள்ளது.
தமிழக அரசு மக்கள் குடியிருப்புக்களிலும், பள்ளிகளின் வாசலிலும் மதுபானக் கடைகளை நடத்திவருகின்றன. அதற்கு எதிராக மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு போராட்டங்களை நடத்திவந்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இப் போராட்டங்கள் ஜெயலிதா அரசின் நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலலிதா, தனது அடியாள் படைகளை ஏவி கோவனைக் கைது செய்துள்ளார்.
தனது அரசால் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளக் கடைகளை மூடக் கோரிப் பாடலிசைத்த கோவனைக் கைது செய்தும், அதனைப் பிரசாரப்படுத்தும் இணையத்தள உரிமையாளரைத் தேடியும் வரும் ஜெயலலிதாவின் பாசிசத்திற்கு எதிராக தமிழ் நாடு முழுவதும் குரல்கள் எழ ஆரம்பித்துள்ளன.
தமிழ் நாட்டின் அருவருக்கத்தக்க இந்த அவமானத்திற்கு எதிராக மக்கள் கலை இலக்கியக் கழகம் போராட்டங்களை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.