இலங்கை இடதுசாரிகளின் வரலாற்றில் அந்த நாட்டின் சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமை மற்றும் தன்னாட்சி என்பன அடிப்படையிலேயே நிராகரிக்கப்பட்டு வந்துள்ளது. சிங்கள – தமிழ் இடதுசாரிகள் மார்க்சிய இயக்கங்கள் என்று தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டாலும், மார்சியம் முன்வைக்கும் சுய நிர்ணைய உரிமைக் கோட்பாட்டைத் தமது வசதிக்கேற்ப நிராகரிக்கின்றன. மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் போன்ற மாமேதைகள் உலகத்திற்கு அறிமுகம் செய்த தேசிய இனங்களின் பிரிந்துசெல்லும் உரிமையைக் கோட்பாட்டு அடிப்படையில் நிராகரிக்கும் இடதுசாரிக் கட்சிகள் அதற்கான போராட்டத்தை ஏகாதிபத்திய சார்பு அணிகளிடம் ஒப்படைத்தன. இதனால் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஏகாதிபத்தியங்கள் தேவைக்காகப் பயன்படுத்தப்பட்டு அழிந்து போனது.
மேம்போக்காக முற்போக்காகத் தெரியும் ஜே.வி.பி போன்ற கட்சிகளின் கருத்து அதன் பின்புலத்தில் ஜனநாயக மறுப்பையே ஆதராமாகக் கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் நேற்று மாலை கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற நல்லிணக்கமும் நாட்டின் எதிர்காலமும் என்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் ஜே.வி.பியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதுவரை ஆட்சியில் இருந்த சிங்களத் தலைவர்கள் இனவாதத்தை மூலதனமாக கொண்டு தமது ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்து வந்தனர் எனத் தெரிவித்தார்.
சிங்களச்சட்டம் யாழ். நூலக எரிப்பு என்பவை இனவாதத்தை தூண்டி சுயலாப அரசியலை பலப்படுத்தவே உதவியது. இதனால் ஏற்பட்ட யுத்தம் அப்பாவி சிங்கள, தமிழ் சமூகத்தை பலியாக்க காரணமாகியது.
இப்போதய நல்லாட்சி அரசுகள் கூட பொறுப்பற்றுச் செயற்படுகின்றது.காணாமல் போனவர் குறித்து பொருத்தமற்ற பதில்களை பிரதமர் வழங்குகிறார். கேபி, டக்ளஸ், கருணா போன்றவர்களிடம் கப்பல்களையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு அவர்களை வெளியே விட்டவர்கள், அவர்கள் துப்பாக்கி வழங்கப்பட்ட இளைஞர்களை இன்றும் உள்ளே வைத்திருக்கிறார்கள்.
உயர்பாதுகாப்பு வலயம் என்று ஏராளமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளது. இங்கே என்ன நடக்கிறது. அதிகாரத்தை காப்பாற்றுவதற்கான ஆட்சி நடக்கிறது. நல்லிணக்கத்துக்கான வழிகளை யார் திறப்பது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடி நல்லிணக்கம் மிகுந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.
சுய நிர்ணைய உரிமையை என்ற அடிப்படை ஜனநாயகத்தை நிராகரிக்கும் ஜே.வி.பி உடப்ட எந்தக் கட்சியும் இடதுசாரி இயக்கங்கள் எனக் கூறிக்கொள்வது பேரினவாதிகளுக்கு மட்டுமே துணை செல்லும்.
The article put the blame on all Leftists. It was the Communist Party(when it was) decided at its Point Pedro Conference the right of self-determination. The successors M-L New Democratic Party still maintain . Marxists never advocate cessation AT ALL TIMES. In the Sri Lanka context we do not advocate Separation. Sri Lanka is a multi-national country.