Wednesday, May 14, 2025
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

குருதியுறைந்த ஜூலைப் படுகொலைகள் : சபா நாவலன்

இனியொரு... by இனியொரு...
07/23/2020
in தேசியம் குறித்து, பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
71
Home அரசியல் தேசியம் குறித்து

பிரித்தானியக் குடியேற்றத்தின் பின்னான காலம் நெடுகிலும் தனது தேசிய அடையாளத்திற்காக மரணத்துள் வாழ நிர்பந்திக்கப்பட்ட மக்கள் கூட்டம் தான் இலங்கைத் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர்.வன்னி இனப்படுகொலைகள் வரைக்கும் நகர்த்திவரப்பட்ட மனிதப் பேரவலங்களின் முன்னறிவிப்பே ஜுலைப் படுகொலைகள். இன்று தமிழ்ப் பேசும் மக்களுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. மீண்டும் அப் படுகொலைகள் வரலாற்றுச் சுழற்சியில் இடம்பெறலாம் என்ற அச்சம் ஒவ்வொருவரதும் ஆழ் மனதில் குடிகொண்டுள்ளது. அச்சம் தரும் வகையில் பௌத்த அடையாளங்கள் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் முளைத்துக்கொண்டிருக்க நல்லிணக்கம் குறித்துப் பேசுகிறது இலங்கையரசு. இன்னும் எப்போதாவது படுகொலைகள் நடைபெறலாம் என்று அச்சம் கொள்வதற்கான குறியிடுகளாக இவை கருதப்படுகின்றன. இத்தனை அழிவுகளுக்குப் பின்னரும் ஒற்றையாட்சியையும், பௌத்த சிங்கள மேலாதிக்கவாதத்தையும் தனது உறுதியான கோட்பாடாக முன்வைக்கும் இலங்கை அரசும் அதன் அடிமைகளும் வரலாற்றைத் திரும்பிப்பார்க்க மறுக்கின்றனர்.

1956 இல் தான் முதல் படுகொலையைச் எதிர்கொண்டனர். 1952 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பிரதமரான டி,எஸ்.சேனாநாயக்கவினால் 7.2 மில்லியன் டொலர் செலவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்லோயத் திட்டத்தின் பின்னணியில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைப்பதற்கான பேரினவாத நோக்கமே அடிப்படையாக அமைந்தது.

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கான முதல் பரீட்சாத்த முயற்சியாக இது கருதப்படலாம். பட்டிப்பளை ஆறு என்ற தமிழ்ப் பெயர் கல் ஓயா என்று சிங்களத்தில் மாற்றப்படிருந்தது.

150 குடும்பங்களைக் குடியேற்றும் நோக்கோடு, ஏறத்தாள நாற்பதாயிரம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் வழங்கும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர்கள், முஸ்லீம் தமிழர்கள், வேடர்கள், சிங்களவர் போன்ற இனக் கூறுகளைக் கொண்ட நிலமற்ற குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. குடியேற்றம் நிகழ்ந்த போது சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியிலிருந்தது. சிங்கள மொழியை மட்டும் ஆட்சிமொழியாக மாற்றும் தனிச் சிங்களச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட ஜூன்.1956 இல் கல் ஒயா குடியேற்றங்கள் முற்றுப் பெற்றிருந்தன. 50 வீதமான சிங்களக் குடும்பங்களை கொண்டிருந்த இத்திட்டத்தில் குடியேற்றப்பட்ட தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் மத்தியில் அதிர்ப்தி நிலவிவந்தது. வளமற்ற பகுதிகளில் அவர்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.

கொழும்பில் தனிச் சிங்களச் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் அதற்கு எதிராகப் போராடிய தமிழ்த் தேசிய வாதிகளை இலங்கை அரச குண்டர் படையினர் தாக்கிய சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது.

ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.

கல் ஓயாவில் இதன் எதிரொலியை காணக்கூடியதாக இருந்தது. குடியேற்றப்பட்ட தமிழ்- சிங்கள இனப் பிரிவுகளிடையே சிறிய வன் முறைகள் ஏற்பட்டன. 10ம் திகதி ஜூன் மாதம் கொழும்பு சிங்கள நாழிதழ்கள் சிங்கள யுவதி ஒருவர் பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக செய்த் வெளியிட்டிருந்தன. 11ம் திகதியில் சிங்களக் குடியேற்ற வாசிகள் மத்தியில்ருந்த காடையர்கள் தமிழ்ப் பேசும் சிறுபான்மையினரைக் கோரமாகக் கொலைசெய்ய ஆரம்பித்தனர். காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இரண்டு நாட்களுக்குள் 150 அப்பாவித் தமிழர்கள் அனாதைகளாகக் கொன்று குவிக்கப்பட்டனர்.

1983.julyஒரு புறத்தில் சிங்களப் பேரினவாதிகளும் தமிழ் அரசியல் வாதிகளும் தமது சமூகம் சார்ந்த வாக்குத் திறனை அதிகப்படுத்திக்கொள்ள மக்களின் உணர்வுகளைப் ப்யன்படுத்திக் கொள்ள, கல் ஓயா கொலைகள் சில அறிக்கைகளோடு மறைந்து போயின.

இந்தியாவின் தென் மூலையில் அதன் இரத்தக் கண்ணிர் போன்று அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் முதல் இனப்படுகொலை கல் ஓயாப்படுகொலைகளே.

1958 இல் நாடு தழுவிய அளவில் தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் ஆரம்பித்தன. பண்டாரநாயக்க தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டுவந்ததன் பின்னதாக ஏற்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர எதிர்ப்பினால் கிழித்தெறியப்பட்டது. இது குறித்துப் பேசுவதற்காக தமிழரசுக் கட்சியின் மாநாடு ஒன்று வவுனியாவில் ஏற்பாடுசெய்யப்பட்டது. இந்த மாநாட்டில் சிங்கள எதிர்பு முழக்கங்கள் முன்வைக்கப்பட்ட அதே வேளை வன்முறையற்ற வழிகளில் போராட்டங்கள் நடத்துவதகத் தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டில் கலந்துகொள்ள மட்டக்களப்பிலிருந்து சென்ற இரண்டு தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் பொலநறுவைப் புகையிரத நிலையத்தில் கோரமாகக் கொலைசெய்யப்படுகின்றனர்.

பொலநறுவைக் கரும்புத் தோட்டத்தில் தொழில் செய்த ஏழைத் தமிழ்த் தொழிலாளர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்படுகின்றனர். 70 தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். மே மாதம் 25 ஆம் திகதி 70 தமிழர்களை கொன்று குவித்த படுகொலை நிகழ்வு தமிழ்ப்பேசும் மக்கள் வாழும் பகுதியெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. பாணந்துறையில் இரண்டு சிங்களப் பெண்கள் கொலை செய்யப்ப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த இந்துக் கோவில் அர்ச்சகர் உயிரோடு எரிக்கப்படுகிறார்.

நுவரெலிய நகராட்சித் தலைவர் தனிப்பட்ட காரணங்களுக்காகக் கொலைசெய்யப்படுகிறார். இவரது கொலையே வன்முறைகளுக்குக் காரணம் என நாட்டின் பிரதமர் வானொலியில் உரையாற்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான வன் முறைகளுக்குப் பிரதமர் அங்கீகாரம் வழங்கியது போல் இருந்தது.

300 வரையான தமிழ்ப் பேசும் மக்களைக் காவுகொண்ட வன் முறை நிகழ்வுகளின் எதிர்விளைவாக 12 ஆயிரம் தமிழர்கள் அகதிகளானார்கள்.

ஓகஸ்ட் மாதம் 1977 ஆம் ஆண்டு இலங்கைப் பொதுத் தேர்தலின் பின்னதாக உருவெடுத்த வன்முறைகள் இலங்கை முழுவதும் 400 வரையான தமிழர்களைக் கொன்று போட்டதுடன் 15 தமிழர்களை அகதிகளாக்கியது. 77 வன்முறை மலையகத் தமிழர்களையும் பெருமளவில் பாதித்தது. 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியும், அதன் பின்னதான உணர்வலைகளும் இலங்கையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பல்கலைக் கழகங்களுக்கான மொழிவாரித் தரப்படுத்தல்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் போன்றன தமிழ்த் தேசிய வாத அலையைத் தோற்றுவித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தாக்குத்தல்கள் அதன் மீதான வெறுப்புணர்வு என்பன பேரினவாதத்தை உக்கிரன்மடையச் செய்திருந்தது. பிரதம மந்திரி ஜே.ஆர்.ஜெயவர்தன தனது யாப்பியல் சர்வாதிகாரத்தை நிலை நாட்ட சிங்களப் பேரின வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டார். இவை அனைத்திற்கும் பலியான அப்பாவித் தமிழர்கள் இலங்கைத் தீவின் பிரசைகளாகக் கருதப்பட்டனர்.

1977 இல் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட பின்னர், நாட்டின் பிரதமர் ஜெயவர்தன பாராளுமன்றத்தில் பேசியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “நீங்கள் சண்டையிட முயற்சித்தால் அவர்களும் சண்டை போடுவார்கள். நீங்கள் சமாதனத்தை விரும்பினால் அவர்களும் விரும்புவார்கள். தமிழர்கள் சிறுபான்மை என்ற வகையில் அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படும்.” இலங்கையில் வாழுகின்ற ஒவ்வொரு தமிழ்ப் பேசும் குடிமகனுக்கும் தான் இலங்கையன் அல்ல என்ற உணர்வை முதலில் வெளிப்படையாக ஏற்படுத்திய உரை அதுவாகும்.

july23ம் திகதி ஜூலை மாதம் 1983 ஆம் ஆண்டு இதுவரை நடந்திராத நாடுதழுவிய வன்முறை தமிழ்ப் பேசும் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 3000 தமிழர்கள் வரை கோரமாகக் கொல்லப்பட்ட ஜூலைப் படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டதன் எதிர்வினையாக மேற்கொள்ளப்பட்டது என அரச தரப்புப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1977 இல் ஜெயவர்தன கூறிய போர் என்றால் போர் என்ற தமிழ்ப் பேசும் மக்களுக்கு எதிரான யுத்தப் பிரகடனம் 1983 இல் மறுபடி பிரயோகிக்கப்பட்டது.

அரச படைகள் இனப்படுகொலையைக் கட்டுப்படுத்த முனையவில்லை. சிங்களக் காடையர்கள் வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்படிருந்த தமிழ் அரசியல் கைதிகளைப் மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் கொன்று குவித்தனர். தலை நகரில் வாக்களர் விபரத்தைச் சேகரித்துக்கொண்ட இனவெறியர்கள் தமிழ்ப் பேசும் மக்களின் வீடுகளைச் சூறையாடினர். உயிரோடு தீவைத்துக் கொழுத்தப்பட்ட தமிழர்கள் பலர்.

நாடே மனித அவலத்துள் அமிழ்த்தப்பட்டது. தெருவோரத்தில் சாகடிக்கப்பட்ட அனாதைத் தமிழர்களின் பிணங்கள் அப்புறப்படுத்தப்பட நாட்கள் சென்றன. அரச இயந்திர வன்முறையை வெளிப்படையாக தனது நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட போதுதான் தமிழ்ப் பேசும் மக்கள் மரணத்துள் வாழ்வதாக உணரத் தொடங்கினார்கள்.

இனப்படுகொலை திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது நாள் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் 37 பேர் சிங்கள இன வெறியர்களால் கோரமாகக் கொலைசெய்யப்பட்டார்கள். தமிழ்ப் பேசும் மக்களின் உணர்வுகள் எரிந்துகொண்டிருக்க, இது நடந்து மூன்றாவது நாள் மறுபடியும் பதினைந்து தமிழ்க் கைதிகள் கொசுக்கள் போல அதே சிறைக்கூடத்தில் கொல்லப்பட்டார்கள். பேரினவாதம் என்ற கருத்தியல் நிகழ்த்திய படுகொலைகள் தான் இவைகள்.

மலையகத் தமிழர்கள் அரை மனிதர்களாகவே கருதப்படுகிறார்கள். இலங்கை அதிகாரம் தங்கியிருக்கும் பெருந்தோட்டத் தொழிற்துறையின் கூலி அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகிறார்கள். இலங்கையின் மத்திய பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறைகளில் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். பேரினவாதத்தின் ஒவ்வொரு அசைவும் அவர்களை மேலும் சூறையாடுகின்றது.

சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பிரித்தானியரால் உரமிட்டு வளர்க்கப்பட்டது. அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது.

இலங்கையில் பேரினவாதம் என்பதே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகிறது. தொலைதூரக் கிராமங்கள் வரை அக்கிராமங்களை கட்டுப்படுத்தும் பௌத்த விகாரைகள் வழியாக இக்கருத்தியல் நிறுவனமயப்பட்டுள்ளது. எந்த அரசியலும் எப்போதும் பயன்படுத்தக் கூடிய வகையிலான சோவனிசமாக, சமூகத்தின் எதிர்மறைச் சக்தியாக உருவெடுத்துள்ள சிங்கள பௌத்த மேலாதிக்கம், அதன் வழியான சோவனிசம் எப்போது அழிக்கப்படும் என்பது சிங்கள முற்போக்காளர்கள் எழுப்ப்பும் வினா.

சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் சரியான திசைவழி நோக்கி வளர்ந்து செல்லும் உச்ச நிலையில் சிங்களத் தேசிய இனம் தான் கட்டுண்ட சிங்கள பௌத்த மாயையிலிருந்து விடுதலை பெற வாய்ப்புகள் உண்டு. ஐம்பதாயிரம் அப்பாவிகளை கொன்றுகுவித்த ராஜபக்ச அரச அதிகாரம் மீண்டும் வெற்றிபெறத் துணைவந்தது கூட சிங்கள பௌத்த சிந்தனையில் ஊறியிருக்கும் சோவனிசம் தான்.

இனப்படுகொலையின் கோரத்திலிருந்து  மக்கள் இன்னும் விடுப்பட்டாகவில்லை. மனிதச் சீர்குலைவு நிலையிலிருந்து அவர்கள் மீண்டாகவில்லை. இப்போது தவறுகளை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். நண்பர்கள் எதிரிகள் எல்லாம் வெளிப்படையாகத் தம்மை இனம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் விரோதிகள், சமூகத்தின் எதிரிகள், காட்டிக்கொடுத்தவர்கள், லும்பன்கள் ஏன் தமது “துரோகிகள்” என்பவைகளை எல்லாம் மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். அழிவுகளிலிருந்து சுதாகரித்துக்கொண்டு பிழைப்பு வாதிகளின் தடைகளைத் தாண்டி மக்கள் மீண்டும் எழுச்சிகொள்வார்கள். தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.

Published on: Jul 11, 2012 | மீள் பதிவு

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
Tags: தேசியம்பேரினவாதம்மார்க்சியம்அரச பயங்கரவாதம்
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
NEWS 18-ஐ பற்றி உண்மையை உடைத்த ஹஸீப்

NEWS 18-ஐ பற்றி உண்மையை உடைத்த ஹஸீப்

Comments 71

  1. chandran.raja says:
    15 years ago

    ஐம்பது ஆயிரம் பேர்களை புலிகள் கொல்ல இரண்டு லட்சத்தி என்பதுனாயிரம் பேர்களையும் ராஜபக்சா அரசு உயிர்ருடன் மீட்டுக் கொண்டு வந்தது என்று எழுதுங்கள்
    திரு சபாநாவலன் அவர்களே!.
    பிரிந்து போய் ஒரு அரசை நிறுவுவதற்கு இன்னமும் தமிழ் சமூகம் முன்னேறவில்லை.
    பிரிய அனுமதி கொடுத்தால் தமிழ்சமூகம் லண்டனில் நியூயோக்கில் தான் முகாமிட்டுக்
    கொள்ளுவார்கள். சொல்லக் கூச்சமாகத்தான் இருக்கிறது இருந்தாலும் சொல்லுகிறேன்
    அதை “யாழ்பாணபுத்தி” என்றும் சொல்லலாம்.
    எமக்கு தெரிந்தவரை தமிழன் பத்துகப்பலில் ஆயுதமும் தேசியத்தலைவருக்கு ஆமை இறைச்சியும் தான் கொண்டுவந்தான். விதைநெல்லோ உரமோ கொண்டுவந்து கொடுக்கவில்லை. விதைத்த எல்லாம் கண்ணிவெடிதான்.
    மக்களுக்கு கொடுக்கக்கூடடாதாம்!. புடுங்க வேணுமாம். இல்லாவிட்டால்….வயிறாற
    சாப்பிட்டால் போராட்ட உணர்வு மங்கிவிடுமாம்.
    எப்படியிருக்கு தமிழ்தலைமைகளின் அரசியல் உணர்வு.
    முப்பதுவருடம் நொந்துபோன உழைப்பாளி தமிழ்சனங்களை இனியாவது ஒற்றுமையாக வாழவிடுங்கள்.
    இந்தியாவில் இருக்கிற காசிஆனந்தனுக்கும் ஐரோப்பாவில் இருக்கிற உங்களுக்கும்
    உசுப்பேத்தி விடுகிறது உல்லாசமாக இருக்கலாம்.ஈழத்தில் வாழும் மக்களுக்கு
    இனியும் உயிரைக் கொடுக்கத் தயாராக இல்லை.அவர்கள் வாழவேண்டும்.அரசியல் என்பது “சமையல் செய்கிற விபரக்குறிப்பு” புத்தகமில்லை.வாழ்ந்து பார்த்தே கற்றுக் கொள்ளவேணடும்.

    • thamilmaran says:
      15 years ago

      தனியாக கட்டுரை எழுதுங்கள்.நகைச்சுவை தங்கள் தமிழில் விளயாடுகிறது.ஏன் இன்னும் எழுதாது இருக்கிறீர்கள்.

    • sivamahan says:
      15 years ago

      can you first read the full story before answer me….
      our struggle was dead because of the visionless leadership. also people like you who do not want to get the rights, instead you all want to live under slave era.

      if you go and see in youtube, sinhalese have created videos on Black July. What they say there is, black july is staged by LTTE. this kind of videos went around the world during 2009, Jan- May. People around the world does not have a chance to know why we are fighting. Hence, we cannot create a opinion on the mainstream around the world.

      It is because people like you either work for money or do not understand the reality. We all know how hardship the people are facing. Within one month from the war is over in 2009 May, Rs. 10 million was deposited in the bank accounts related to the displaced in the barbed wired camps. Who gave them the money. India? China? or US? It is all from our relations and friends around the world.

      I still personally support individuals are in need. But I never agree to you to let our struggle down. If we keep quite now, you will here many black months in the recent future.

    • செவ்வியன் says:
      14 years ago

      வாங்கியகூலிக்கு மாரடிக்கிறீர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறீர் இதை வடக்கு கிழக்கில் வந்து சொல்லிப்பாரும் சாணியைக்கரைச்சு ஊத்தி செருப்பாலேயே அடிப்பாவினம்

      • Vijey says:
        13 years ago

        மூது}ர் அகதிகனளும் யாழ் அகதிகளும் மன்னார்’ அகதிகளும் – முஸ்லிம் அகதிகளும் – அம்பாறை மக்களும் அற்ற வட>கிழக்கில் சில வேளை கொழுத்துப் பெருத்த முதலைகள் செய்யலாம்.

    • பரதேசி says:
      14 years ago

      சந்திரன் நீங்கள் மகிந்தாவையும் அவரது கூட்டத்தையும் ஏமாற்றமுடியுமென்று நினைக்காதீர்கள். புலிகளை முற்றாக இன்னும் அழிக்கவில்லை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவரின் இலக்கை அடையும் வரையும் அவருக்கு உங்களைத் தேவை. அதன் பின்னர் அப்பாவித்தமிழரின் கதிதான் உங்களுக்கும். நீங்கள் இன்னும் அவருடன் இருப்பது, அவர் இன்னும் உங்களை வைத்திருப்பது அவரின் திட்டம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்பது தான். தமிழர்கள் அவருடன் இருந்திருந்திரா இருப்பின் அவரால் தமிழரை இவ்வளவு தூரம் அழித்திருக்க முடியாது. தமிழின விடுதலைக்காக தமது வாழ்வை அர்ப்பணிக்க முனைந்த டக்ளஷினதும் கருணாவினதினதும் மனதில் இன்று என்ன ஓடும் என்று நான் சிந்திப்பதுண்டு. ஏதாவது பிராயச்சித்தமிருந்தால் செய்யுங்கள். நீதியை மதிக்கும் ஒரு பகுதி சிங்கள மக்கள் செய்வார்கள் என்று நம்புவோம்.

    • PhilipP says:
      13 years ago

      இவுலு லொள்ளு போடுறதயே பொளைப்பாகா வச்சிருக்காரு.

    • PhilipP says:
      13 years ago

      அது சரி தாங்கள் எங்கு இருந்து கொண்டு தத்துவம் பெசுகிறீர்கள் ? நீர் எத்தனை புசல் விதைநெல்லும் உரமும் அனுப்பியிருக்கிறீர் ? நீர் பண்ணிய பண்ணிக்கொண்டுருக்கின்ற திருகுதாளங்கள் எங்களுக்கும் தெரியும் பாருங்கோ.

    • Vijey says:
      13 years ago

      உழைப்பாளி தமிழ்சனங்களை இனியாவது ஒற்றுமையாக வாழவிடுங்கள்.
      யாருடன் ?

    • thamilini says:
      9 years ago

      இப்பவும் அங்கே நல்லாய்த்தானே வாழுறாங்கள். பகலில் கூட பெண்கள் போகமுடியவில்லை போகிறார்களாம் கற்பழிப்புக்கு. உங்களுக்கு அம்மா, அக்கா, தங்கைகள் இல்லைப் போலை. சுமந்திரன், சம்பந்தன் சிங்களவரோடு இணக்கம் காணுவது தான் 1983 ல் இருந்து சொல்லிக் கொடுக்கிறார்கள் சிங்களவர்கள். உம்மைப் போல் ஆடகள் இருப்பதால் தான் தமிழர்கள் ஒருபடி ஏற 2 அடி குழி தோன்டுறது. இது தான் தமிழனின் கொடுரம் என்று வைத்துக் கொள்ளலாம். ஒருவன் தலையெடுத்தால் எங்கே தங்களை யாரும் புகழ மாட்டார்களா என்று வயிற்றெரிச்சல்.

  2. வெண்ணை says:
    15 years ago

    77க்கு முன் சிங்களவன் கொன்றது 1000க்கும் குறைவு…
    77 – 2010 மட்டும் பிரபாவும் சிங்களவனும் சேர்ந்து கொன்றது 100000++++..
    இந்த பிரபாவின் மொக்குபோராட்டம் தேவையா?
    இது தானா பொல்லு கொடுத்து அடிவாங்குவது?????

    • PhilipP says:
      13 years ago

      It is very easy to be wise after the event.

  3. Shiva says:
    15 years ago

    அம்பாறை – கல்லோயாவில் வன்முறை கடுமையாகவே இருந்தது என அறிவேன்.
    “ஜூன் மாதம் ஐந்தாம் திகதி 1956 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன.”
    இது பற்றிய விவரங்களை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கூற இயலுமா?

    1958 வன்முறைக்கு நேரடித் தூண்டுதலாக, சிறீ எதிர்ப்புப் போராட்டத்திற்கெதிரான தமிழுக்குத் தார் பூசும் இயக்கம் இருந்தது. கே.எம்.பி. ராஜரத்ன அதன் பின்னாலிருந்த முக்கிய அரசியல்வாதியாவார்.

    சம்பவங்கள் வரலாற்றுக் கிரமத்திற் கூடிய கவனத்துடன் கூறப்பட்டிருக்கலாம்.
    உதாரணமாக, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் 1947இலேயே தொடங்கிவிட்டது. அதைப் பற்றித் தமிழரிடையே பரவலான எதிர்ப்பு இருக்கவில்லை. அதைப் பற்றிய பேச்சு 1970களில் தமிழ்த் தேசியவாதம் முன்னுக்கு வந்த பின்பே குறிப்பிடத்தக்க அளவில் எழுந்தது. தரப் படுத்தல், புதிய அரசியல் யாப்பு, 1974 தமிழாரய்ச்சி மாநாட்டு அசம்பாவிதம் என்பன முக்கியமான பங்காற்றின.
    (1970களின் நடுப்பகுதியில் அதிக ஆரவாரமின்றி காந்தியம் என்ற அமைப்பு வன்னிப் பகுதியில் மலையகத் தமிழரைக் குடியேற்றநடவடிக்கை எடுத்தது. அது எவ்வளவு தூரத்துக்கு விடுதலை இயக்கங்களின்நிகழ்ச்சிநிரல்களில் பகுதியானது என்பதை என்னாற் கூற இயலாது. எனினும் தமிழ் மக்களின் மண் பற்றிய முதலாவது முக்கியமான உணர்வுபூர்வமான செயற்பாடு அதுவென்பேன்).

    “சிங்கள மக்கள் மத்தியில் புரையோடிப் போயிருக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கச் சிந்தனை, பிரித்தானியரால் உரமிட்டு வளர்க்கப்பட்டது. அனகாரிக தர்மபாலவைத் திட்டமிட்டு உருவாக்கியது பிரித்தானிய அரசு. பௌத்த மதத்தை அரசியல் தளத்தை நோக்கி நகர்த்திய பிரித்தானியப் பிரித்தாளும் தந்திரம், நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை பேரினவாதமாக வளர்த்துள்ளது.”
    அனகாரிக தர்மபாலவின் சிங்கள பவுத்தம் கிறிஸ்தவர்கட்கெதிராகவும் முஸ்லிம்கட்கெதிராகவுமே வளர்த்தெடுக்கப்பட்டது. எனவே பிரித்தானியரின் நோக்கம் என்னவாயிருந்தது என்ற கேள்வி எழுகிறது.
    (அதை விட, மாமூலாகச் சொல்லிவரப்படும் “வடக்கில் தமிழர்கட்குத் கல்வி வழங்கப் பட்டதும் பிரித்தாளும் தந்திரமே” என்ற கதையும் தகல்களின் அடிப்படையில் மீளக் கவனமாகப் பார்க்கப் பட வேண்டும்)

    • நாவலன் says:
      15 years ago

      இலங்கையில் டேவிட் ஹேவிதாரண என்ற அனகாரிக தர்மபாலவை ஊடாக உருவாக்கியவர் மடம் பிளவாட்ஸ்கியும் கேணல் ஒல் கொட்டும். அநகாரிக பிளவாற்ஸ்கியுடன் தமிழ் நாட்டில் தங்கியிருந்து Theosophical Society இல் செயற்பட்டு இலங்கை திரும்பிய பின்னர் ஒல்கொட்டுடன் இணைந்து பௌத்த பாடசாலைகளை நிறுவுகிறார். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒல்கோட்டும் பிளவாட்ஸ்கியும் கிறிஸ்தவர்களாகவே செத்துப் போகிறார்கள். பிளவாட்ஸ்கி இங்கிலாந்தில் தான் மரணிக்கிறார். இங்கிலாந்தில் அரசு வழங்கிய ஆடம்பர வீட்டில் தான் வாழ்கிறார். தவிர, மகாவம்சத்தின் முதல் தொகுப்பு பாளியிலிருந்து சிங்களத்திற்கு மொழி பெயர்க்கப்படுகிறது – ஆங்கிலத்திற்குக் கூட இல்லை-, இம் மொழிபெயர்பை இலங்கையின் இங்கிலாந்து கவர்னர் ஒக்ஸ்போர்டில் கல்விகற்ற இரண்டு பௌத்த பிக்குகளைக் கொண்டு மொழிபெயர்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார். “பௌத்த மறுமலர்ச்சி” யுடன் அனகாரிகவும் மகாவம்சமும் நெருங்கிய தொடர்புடையன.
      கல்லோயா வன்முறைகள் அதற்கு சில நாட்களின் முன்னரே கொழும்பில் பாராளு மனறத்தின் முன் தமிழரசுக் கட்சி நடத்திய – தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக – போராடங்களால் உருவாகிவிட்டது கல்லோயா வந்ததிகள் இதனை அதிகப்படுத்தியிருந்தன. பின்வரும் நூலில் வன் முறைகள் குறித்த பல தகவல்களி உள்ளன.
      Emergency ’58: The Story of the Ceylon Race Riots. Vittachi, Tarzie .( 1958)

    • Shiva says:
      15 years ago

      வரலாற்றில் பிரித்தானியப் பிரித்தாளல் தனக்கு மிரட்டலாக அமையக்கூடிய பெரும்பான்மை அல்லது வலிய சக்தியைப் பலவீனப்படுத்தும் நோக்கிலானதாகவும் ஒன்றுபடக் கூடியோரைப் பிரிக்கும் நோக்கிலுமானது.
      அது, பிளவாட்ஸ்கியையும் ஒல்கொட்டையும் கொண்டு அனகாரிக தர்மபாலவை உருவாக்கியதாயின், அதற்கான நோக்கமென்ன?
      யாரைப் பிரித்தாள?
      பவுத்தம் பற்றிப் பிரித்தானியரது பார்வை என்னவாயிருந்தது? (கண்டிய ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானியர் பவுத்தத்திற்கு உரிய மரியாதை செலுத்துமாறான சில விட்டுக்கொடுப்புக்களை ஏலவே செய்திருந்தனர்).
      பிளவாட்ஸ்கியும் ஒல்கொட்டும் பிரித்தானிய நலன்கட்காகச் செயற்பட்டனரா? ஏன்? அனகாரிக தனது குடும்பததின் வணிக நலன்களை முதன்மைப்படுத்திய ஒருவர்.

      அமெரிக்க மிஷனரிகள் கொழும்பில் அவர்களது செயற்பாடுகளைக் கொலனிய நிருவாகம் விரும்பாத நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் பாடசாலைகளைத் தொடங்கினர். இன்று அது பிரித்தானியப் பிரித்தாளும் சூழ்ச்சி எனப் பேரினவாதிகளால் கூறப்படுகிறது.

      எல்லாச் சாத்தியப்பாடுகளையும் நாம் கணிப்பில் எடுக்க வேண்டும். எனினும் முற்கூறிய பின்னணியில் எது யாரைப் பிரித்தாள என்று நம்மால் திட்டவட்டமாகக் கூற இயலுமா என்பதே என் ஐயம்.

      1956 வன்முறை பற்றிய என் வினா ஒரு தகவல் பற்றியது மட்டுமே: “பின் வந்த சில நாட்கள் தலைநகரிலிருந்த தமிழ்ப் பேசும் மக்களின் வியாபார நிறுவனங்கள் தாக்கியழிக்கப்பட்டன”.
      சிங்களம் மட்டுமே நிறைவேறிய நாளில் காலிமுகத் திடலில் நடந்தது மிக அருவருப்பானது. அடுத்த நாட்களில் கடைகள் தாக்கியழிக்கப்பட்டன என்று நினைவில்லை. நடந்திருக்க இடமில்லை என்றல்ல. நடந்ததற்கான பதிவு எங்குள்ளது என்பதே என் விசாரணை. Tarzie Vittachiயின் நூலில் அதற்கான குறிப்புக்கள் உள்ளனவா?

  4. chandran.raja says:
    15 years ago

    தமிழ்மாறன் இதுநகைச் சுவையல்ல.வயிற்றெரிச்சல்.அத்தோடு சேர்த்து குற்றவுணர்வுகளும் மனத்தில் புகுந்து பேய் ஆட்டம் போடுகிறது.இது எமது இறுதிக் காலவரை இருக்கும் போல இருக்கிறது.
    இளைஞர்களும் இளம்யுவதிகளும் எவ்வளவு கனவுகளை சுமந்து கொண்டு சிதறி மடிந்து
    போனார்கள் என்று எண்ணும் போது….!!??
    ஆகக் குறைந்தது எஞ்சிபோன அவர்கள் உறவுகளையாவது வாழவைக்க வேண்டாமா?
    அவர்கள் வயலையும் நிலத்தையும் அவர்கள் காட்டையும் அவர்களிடமே திருப்பிக் கொடுத்துங்கள்.புலம் பெயர்ந்த தமிழ்தொழில் நுட்பகலைஞர்கள் நிறையவே இருக்கிறார்கள். வெளிநாடுகளில் பில்லியன்கணக்காக விலைகொடுத்து வாங்கி வந்த இரும்புகள் நிறையவே இருக்கிறது.அதில் எப்படி மண்வெட்டி கோடாலி செய்வது என்பதை கற்றுக் கொடுங்கள்.அதுவே நாம் அந்த வன்னிவிவசாயிகளுக்கு செய்யும்
    பிராயச்சித்தம்.
    இதுவரை வந்த ஜனதிபதிகளில் மகிந்தராஜபக்சா தலைசிறந்த ஒரு தலைவர்ரென்ரே கருத்துகிறேன்.அவர்ருடன் யாரும் பேசிக்கதைக்கலாம்.அவரில் ஏதாவது குறையிருந்தால் அது முதாலிளித்துவ சமூகத்தில் உள்ள குறைபாடே ஒழிய அவருடையது அல்ல.தமிழ் மக்களுக்கு தேவையானது இலங்கையை தமது தாய்நாடாக
    மனபூர்வமாக ஏற்றுக் கொள்ளுவது தான் ஒரே வழி.அதுவே உண்மையானது மாகும்.
    மகிந்தாஅரசுடன் பகையையும் முரண்பாடுகளையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
    அது இறுதியில் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிவிடும்.திரும்பவும் தமிழ்மக்கள்
    நனைத்துச்சுமக்க வேண்டியநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
    புலத்தில்லிருந்து எழுதுபவர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும்.

    • செவ்வியன் says:
      14 years ago

      மகிந்தாவே நான் போர்குற்றம் இழைத்தேன் என ஒத்துக்கொண்டாலும் இந்தசால்ராக்கள் அடங்காது போல

  5. நாவலன் says:
    15 years ago

    சந்ரன் ராஜா,
    பல நாட்களாக உங்கள் சந்திரன் ராஜா என்ற பெயரில் புலம் பெயர் நாடுகளில் வெளியாகும் இணையங்களில் பின்னூட்டங்களாக வெளிவருகிறது. இனப்படுகொலை நிகழ்த்திவிட்டு திமிரோடு எதுவுமே நடக்காதது போல அமர்ந்திருக்கும் இலங்கை அரசாங்கத்தை எந்தச் சலனமும் இலாமல் பிரதிநிதித்துவப்படுத்தும் உங்கள் பின்னூட்டங்கள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை எழுதுகிறேன். இலங்கை அரசு படுகொலை செய்தது என்று யாராவது சொன்னால், ஏன் புலிகள் கொலை செய்யவில்லையா என்பீர்கள். பறிக்கப்படுகிற அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேசினால், மக்களுக்குச் சாப்பாடு வேண்டும் உரிமைகளை விட்டுவிடுங்கள் என்பீர்கள். தன்னார்வ நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை இலங்கை அரசு தடை செய்கிறது என்றால், இலங்கை அரசின் உரிமைகளை தன்னார்வ நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் பறிக்கின்றன என்பீர்கள். பின்னர் மக்களுக்காகப் பேசுகிறேன் என்பீர்கள். நீங்களும் உங்களைப் போன்றவர்களுக்கும் இவ்வாறு ஒரு வாய்ப்பாடு வைத்திருக்கிறீர்கள். அது இலங்கை அரசு சொல்லித்தரும் வாய்பாடு.

    இந்தப் பின்னூட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாப்படு வேண்டும் என்கிறீர்கள். இப்போது யாராவது சரவதேச அமைப்புக்களின் சாப்பாட்டைப்பற்றிப் பேசினால் இலங்கை அரசின் உரிமை பற்றிப் பேசுவீர்கள். அப்போது சாப்பாடு உங்களுக்கு முக்கியமில்லை. இலங்கை அரசு கொலை செய்கிறது என்று நான் சொன்னதும் புலிகளும் தான் கொலை செய்தார்கள் என்கிறீர்கள். உங்களுக்கு இலங்கை அரசின் நலன்கள் தான் முக்கியமே தவிர மக்கள் அல்ல. மக்கள் சாரி சாரியாகக் கொலைசெய்யபட்டுக் கொண்டிருந்த போது பயங்கரவாதம் அழிக்கப்படுகிறது என்றீர்கள். மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்றீர்கள். மக்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்று நிரூபணமான பின்னர், புலிகளும் தான் கொலை செய்தார்கள் என்றீர்கள். என்னைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்வீர்கள் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஆனால் நீங்கள் திட்டமிட்டு மக்களைக் குழப்பத்திற்கு உள்ளாக்கும் செயற்பாடு எதிர்கொள்ளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
    -நாவலன்

    • Shiva says:
      15 years ago

      இப்படிப் பிரச்சனைகளித் திசை திருப்பி இலங்கை அரசின் குற்றங்களைக் கழுவித்துடைக்கவென்றே பலர் உள்ளனர். நோக்கங்களை அறிய நம்மால் இயலாது. (2006 முதல் இலங்கை அரசின் உபயத்தில் பல இணையத்தளங்களே இயங்கி வருகின்றன).
      நாவலன் அஞ்சுமளவுக்கு வாசகர்கள் விவரமறியாதவர்களல்ல.
      ஒரு சில சொற்களிலேயே சிலரது உள்நோக்கம் புலனகிவிடுகிறது.

    • xxx says:
      15 years ago

      முதல் முறையாக தமிழ்மாறன் ஒரு இடுகையைநகைச்சுவை என்று சரியாக் மதிப்பிட்டிருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.
      பகடிகளை எழுதிய சந்ரன் ராஜாவுக்குத் தன் பகடிகளின் பெறுமதி தெரியவில்லை.
      நாவலன், கோமாளிகளுடன் கோபிக்கக் கூடாது.

    • chandran.raja says:
      15 years ago

      தோழமையுடன் சபாநாவலன் அவர்களுக்கு ! உலகமயமாகிற இந்த காலகட்டத்தில் ஐக்கிய
      நாடுகள் செஞ்சிலுவை சங்கங்கள் தன்னார்வ தொன்டு நிறுவனங்களின் புனிதங்களை பற்றி
      கதைப்பது அறியாமையே! இதில் அங்கத்தவர்களாக இருக்கும் எத்தனையோ நல்ல மனிதர்கள் கூட தாம் நினைத்த காரியத்தை ஆற்றமுடியாத கூட்டுக்கள் இருக்கிறார்கள்
      என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.
      இவர்கள் அனைவரும் சர்வதேச முதாலித்துவ ஒழுங்குமுறையில் சுரண்டலையும் நாட்டைகொள்ளை இடுவதற்கும் சுருக்கமாகச் சொன்னால் முதாலித்துவ அமைப்பு முறைக்கு எந்த பாதகமும் வராதபடி ஒழுங்கமைப் பட்டவர்கள். இதையே நீங்கள் கவனத்தில் எடுக்கவேண்டும். இது ஒரு புறம் இருக்க……
      தமிழ்மக்களுக்கும் புலிகளும் என்ன? உறவு. லணடனில் வதிவிடம் தேடிய அன்ரன் பால
      சிங்கம் என்ன?உறவை புலிகளோடு வைத்திருந்தார். புலிகளின் அடாவடிதனத்தை ஜனநாயக மறுப்பை இன்றையவரை நீங்கள் கேள்விக்குறியாக்காது சந்தனம் தடவி
      புனிதப்படுத்து ஏன்?.
      புலிகளைப்பற்றி கதைத்தால் புலிகளைதவிர்ந்த மற்றஇயக்கங்களைப்பற்றி கதைக்கிறீர்கள். புலிகளோடு சண்டை பிடிக்க தகுதியில்லையா? என சான்றிதழ் கேட்கிறீருர்கள்.உண்மை தான். மற்றஇயக்கங்கள் நிறைவே தவறுவிட்டிருக்கிறார்கள்.
      ஆனால் அவர்கள் தனியொருமனிதனுக்கு அடிமை சீட்டு எழுதிக் கொடுக்கவில்லை.
      தமிழனை தமிழன் தெருவில் அதாவது அவனது சொந்த வீதியில் அறைகுறை உயிரில்
      எரிக்கும் களப்பயிற்சியை புலிகளைத்தவிர எந்தஇயக்கமும் வழங்கவில்லை.
      சபாநாவலன் அவர்களே!மற்றைய இனத்திற்கு-.சமூகபழக்க வழங்களுக்கு மரியாதை
      கொடுக்காதவன்.தனது சொந்தஇனத்தையே பாதுகாக்க வழியில்லாதவன் ஆகவே கருதப்படுவான்.
      86-ல் தொடங்கிய இயக்க அழிப்பு- 90 -ல் உடுபுடவை-500 பணத்துடன் வெளியேற்றபட்ட
      மூஸ்லீம்சமூகம். அனுராதபுர யாத்திரிகளின் கொலைகள். காத்தான்குடி பள்ளிவாசல்
      கொலைகள் இதையெல்லாம் தமிழ்சமூகத்தின் பெயரில் அங்கீகரீப்பதாக இருந்தால்
      இந்த தமிழ்சமூகம் கருவொழிய அழிந்துபோவதற்கும் நான் தயங்கமாட்டேன் நாவலன்.
      உங்கள் அங்கீகாரம்…?
      புலிகள் செய்தது அரசியல் அல்ல. முப்பது வருடங்கள் செய்தது அத்தனையும் காடைத்தனமே!இதை வளர்த்து விட்டவர்கள் யாழ்பாணத்து அப்புக்காத்து பிரக்கிராசிமார்
      கள். பிரபாகரன் ஒன்பது வயதில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சைக்கில்களவில் நீதி
      மன்றத்தில் நிறுத்தப்பட்டதாகவும் ஒரு கதையிருக்கிறது.
      இதன் பிரதிபலனையே புனர்வாழுவுக்கழக “ரெஜி”யாகவும் கொழும்பில் தொடர்மாடிக் கட்டிடங்களாகவும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.மிகுதியை நீங்கள் தொடருங்கள்
      நாவலன்.

      • நாவலன் says:
        15 years ago

        தன்னார்வ நிறுவனங்களின் பொறிமுறையும் அது எவ்வாறு உலகைச் சேதமாக்கிறது என்பது குறித்தும் நான் எழுதியதை நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லைப் போலும்.(
        https://inioru.com/?p=7893: பின் – புலி அரசியல் – NGO களின் பொற்காலம் ) . தன்னார்வ நிறுவனங்களையே அனுமதிக்காத கொலைகார அரசு எப்படி தமிழ் மக்களை அரசியல் பேசாமல் உதவி மட்டும் செய்யுங்கள் என்று கோருகிறது என்று நான் கூற அதைப்பற்றிப் பேசாமல் வேறு எதையோ எழுதி விடயத்தைத் திசை திருப்ப முனைகிறீர்கள்.
        இப்படியெல்லாம் நீங்கள் எழுதுவதனூடாகவே நீங்கள் யாருக்கோ சேவைசெய்வதாகக் காட்டிக்கொள்கிறீர்கள். தவிர, நான் புலிகளை நியாயப்படுத்தி எப்போதும் எழுதியதில்லை. இங்கு ஏன் புலிகளைப் பற்றிப் பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. இப்போது இலங்கை மக்களுக்குப் புலிகள் அல்லப் பிரச்சனை. நீங்கள் விசுவாசிக்கும் ராஜபக்ச குடும்பமும் அது உமிழும் பேரினவாதக் கொலைவெறியும் தான். மனித அபிமானமுள்ள எந்த மனிதனும், வெளிப்படையான இந்தக் கொலைவெறியை ஆதரிக்க மாட்டான்.

        • chandran.raja says:
          15 years ago

          என்ன?சபாநாவலன் எல்லா வாசகர்களும் “கல்லுளி மொக்கர்”ராக இருந்திடுவார்கள் என
          நினைக்கிறீர்களா?அல்லது எழுத்துக்கும் செயலுக்கும் வெவ்வேறான தூரம் கொண்டவை
          என கருதுகிறீர்களா?
          நீங்கள் எழுதியதை திரும்பிப் பாருங்கள்.”தன்னார்வ நிறுவனங்களின் பொறிமுறையும் அதுஎவ்வாறு உலகைச் சேதமாக்கிறது என்பது குறித்து நான் எழுதியதை நீங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை போலும்…..பின் தொடர்ந்து சொல்லுகிறீர்கள் . “தன்னார்வ நிறுவனங்களையே அனுமதிகாத கொலைகார அரசு” என்று தொடர்கிறீர்கள்.
          தன்னார்வ நிறுவனைங்களை அனுமதிக்காத ஒரு அரசு எப்படி? கொலைகார அரசாக இருக்கமுடியும்? நாவலன்.
          மகிந்தாஅரசு கொலைகார அரசு என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து விட்டீர்கள். மற்றவர்களை பார்த்து திசைமாறிப் போவதாகவும் சொல்லுகிறீர்கள். புலிக்கு ஆதரவு
          கொடுக்கவில்லை என்றும் சொல்லுகிறீர்கள்.
          இப்ப ஒருகேள்வி புலிகளை அழிக்காமல் இயற்கை மரணத்தில் அழிபட்டிக்கவேண்டுமென்று கருதுகிறீர்களா?அல்லது புலிகளை தமிழ்மக்கள் தான்
          அழித்திருக்கவேண்டுமென நினைக்கிறீர்களா?மகிந்தா அரசு புலிகளை அழித்தவிதம்
          தவறானது ஆனபடியால்தான் கொலைகார அரசாக உங்களுக்கு மாறியதா?
          நீங்கள் அரசியல் பேசவேண்டுமென்பதற்காக..கொலைகார அரசாக வரிந்து கொண்டீர்களா?இல்லை இதையும் விட்டால்..மேற்குலகமும் நாடுகடந்த தமிழ் ஈழஅரசும் மகிந்தாஅரசு கொலைகாரஅரசு என்று சொல்லுகிறார்கள் ஆனபடியால் தான்
          நானும் சொல்லுகிறேன் என்கிறீர்களா? அதை நீங்கள் வாசகர்களுக்கு தெளிவு படுத்த
          வேண்டும் திரு நாவலன்.

          • venkattan says:
            15 years ago

            தயவு செய்து நகைச்சுவைபகுதியில் தனியாக பதிவிடவும். இது அரசியல் பகுதி.

          • chandran.raja says:
            15 years ago

            வெங்கட்டு நீங்கள் தான் மாறி நகைச்சுவை பகுதிக்கு வந்துவிட்டீர்கள்.இடத்தை மாற்றி
            அரசியல் பகுதிக்கு போகவும்.

          • saravanan says:
            15 years ago

            …….சிங்களம் கொலைகார அரசில்லை என்று சொல்கிறீரே…….உமக்கு நன்றாக நகைச்சுவை உணர்வுள்ளது.ஒரு புத்தகமாக வெளியிடும்

    • Chithra Cheran says:
      15 years ago

      ஆஹா!  இது ஆயிரத்தில் ஒரு வார்த்தை. உதாரணமாக, உனது பெயர் சந்திரன் தானே என்று கேட்டால் –  இல்லையில்லை சந்த் ரன் என்பார் – சந்த் ரன்னா என்று கேட்டால் –  இல்லையில்லை சுந்த் ரன் என்பார்.
      இந்த பச்சோந்திகளை விட்டுத்தள்ளுங்கள்.

  6. saravanan says:
    15 years ago

    அடிப்படை பிரச்ஷனயை விட்டு விட்டு எதொஎல்லாம் கதைக்கிரார் இந்த சந்திரன் ராஜா…இவருக்கு மக்கல் மேது உல்ல அக்கரயை விட சிஙலம் காப்பர்ர பட வென்டும் என்பதெ முக்கிய கொல்கயாக இருக்கிரது இவர் கருட்து தெரிகிரதது

    • chandran.raja says:
      15 years ago

      இந்த சரவணன் என்பரே சந்திரன்.ராஜா சிங்களவனுக்கு பிறந்தவர் என இத்தளத்தில் பதிவு
      செய்தவர். இது ஒருபுறம் இருக்க. அடிப்படை பிரச்சனை என்னவென்று ஒரு பத்து வரியில்
      சொல்வதற்கு உங்களுக்கு தகைமை இருக்கிறதா? சரவணன்?.

      • saravanan says:
        15 years ago

        அடிப்படை பிரச்சனை “தமிழரின் உரிமை” இதற்கு பத்து பதினைந்து வரிகள் தேவையில்லை. இதை நீர் நேசிக்கிற சிங்கள அரசிடமிருந்து உம்மால் தமிழருக்கு பெற்று கொடுக்க முடியுமா? முடிந்ததா?

    • Soorya says:
      15 years ago

      சிங்களவனுக்குப் பிறந்தது அல்லது தமிழ்னுக்குப் பிறந்தது என்பதல்ல விடயம், சிங்களவர் பலரே எது சரி எது பிழை என்று தெரிந்து எழுதும்போது ராசா நீங்கள் என்னவோ ரஜபக்செ சொல்வதுபோல் ஒரு துளி இரத்தம் சிந்தாத போர் நடந்து முடிந்த மாதிரி எழுதுகிறீர்கள். ரஜபக்செ ஒரு இனவெறி பிடித்த சிங்களவன், இவரைத் திருத்தவே முடியாது என்று பலர் ஏற்கன்வே சொல்லிவிட்டார்கள். இவர் தமிழ்ருக்கு எந்தவிதமான நியாயமான தீர்வை முன்வைக்கப் போவதில்லை. இன்று ஒரு கதை நாளை வேறு ஒரு கதை என்று காலத்தைப் போக்கிடலாம் என்று அரசியல் நடத்தும் சிங்களவரின் ரராஜா.

  7. a voter says:
    15 years ago

    சபா நாவலன் அவர்களே!
    இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை வர்க்க அடிப்படையில் எவ்வாறு விளக்குவீர்கள்?
    இவைகள் வெறுமனே இனவாத அரசின் நடவடிக்கைகள் மட்டுமா? தூய சிங்கள பெளத்த அரசொன்றை தூய சிங்கள பெளத்த நாடொன்றில் உருவாக்குவது தானா அவர்களது இலட்சியம்?
    மாறாக பலம் பெற்று வந்த இடதுசாரி அமைப்புகளை நிர்மூலமாக்கவே இனவாதம் இருபுறத்திலும் வளர்த்து விடப்பட்டது என்றும் ஒரு கருத்து உள்ளது. (பிரித்தாளும் தந்திரம் பாகம் 2?) இதன் விளைவாகவும் நோக்கமாகவும் இடம்பெற்றவையே வன்செயல்கள்.
    மேலும் உங்களது கட்டுரையில் “சிங்களக் குண்டர்கள்” எள்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெறுமனே குண்டர்கள் என்பதுடன் நிறுத்திவிடலாமே. புலிகள் செய்ததையெல்லாம் தமிழர்கள் மீதா சுமத்திவிடப்போகிறீர்கள்?
    எனது குடும்பத்தினர்> உறவினர்கள் 1958> 1977> 1983 நாட்களில் கொழும்பில் இருந்தார்கள். அவர்களிற்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது சிங்களவர்கள் தான்.
    உங்களது கட்டுihயில் “தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தனது பிரிந்துபோகும் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவது தவிர்க்க முடியாது என்பதை இன்று ஜூலைப் படுகொலை நாளில் மக்கள் விரோதிகளின் முகத்தில் அறைந்து உரக்கச் சொல்வோம்.” என்று முடித்திருக்கிறீர்கள். இத்தனை இனப்படுகொலைகள் காரணமாக சிங்கள மக்களோடு வாழமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா? முற்றிலும் தவறான முடிவு. செய்யவேண்டியது சிங்கள மக்களோடு இணைந்து அரசிற்கு எதிராகப் போராடுவது தான்.
    வார்த்தைகள் அடிப்படையில் எந்தவொரு தேசியஇனத்திற்கும் பிரிந்து செல்லும் உரிமை உண்டு. ஆனால் இலங்கையில் அதைப் பயன்படுத்த அவசியம் இன்னமும் வரவில்லை.

    • நாவலன் says:
      15 years ago

      அன்புடன் வோட்டர்,
      சம்பவங்களை வர்க்க அடிபடையில் எப்படி பகுப்பாய்வு செய்யலாம் என்று கேட்கிறீர்கள். வரிக்கு வரி பாட்டாளி வர்க்கம், பூர்சுவா, குட்டி பூர்சுவா, (இத்தோடு வேண்டுமானால் நிலப்பிரபுத்துவச் மனோபாவத்திலிருந்து எழும் சில அருவருப்பான வார்த்தைகள்) போன்றவற்றைச் சேர்த்துக்கொண்டு எழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை. தவிர, இலங்கை தேசிய இனப்பிரச்சனை குறித்துப் பேசினால் அது குறித்த பொருள்முதல்வாதப் பார்வை குறித்து ஆராயலாம். இவ்வகையில் சில கட்டுரைகள் உள்ளன. இலங்கையில் சந்தைப் பொருளாதாரம் என்பது ஏனைய மூன்றாம் உலக நாடுகளை விட சற்று அதிக வேகத்திலேயே உருவானது. பெருந்தோட்டத் தொழிற்துறை ஊடான மூலதன உருவாக்கம் என்பது அதன் வேகத்தை அதிகப்படுத்தும் காரணியாக அமைந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒன்று உருவானது. சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கராவை இனத்தின் ஆதிக்கம் செலுத்திய இந்தத் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியை எதிர்கொள்ள வேண்டிய தேவை பிரித்தானிய குடியேற்ற வாதிகளுக்கு ஏற்படுகிறது.
      ஏனைய பல நாடுகளில் உருவானது போலவே தேசிய மூலதன உருவாக்கத்திற்கு எதிரான பெரு நிலப்பிரப்புக்கள் பிரித்தானியரோடு உடன் பாட்டிற்கு வருகின்றனர். குறிப்பாக டி.எஸ்.சேனாநாயக்க, பொன்னம்பலம் ராமநாதன் போன்ற பலரை இங்கு நினைவில் கொள்ளலாம். இவர்கள் தரகுகள் போல செயற்பட ஆரம்பிக்க ஏகாதிபத்தியச் சூழல் உருவாக்கிய இன்னொரு வர்க்கமான தரகு முதலாளித்துவம் உருவாகிறது. இது இதே காலப்பகுதியில் உருவான முகாமைத்துவப் “புரட்சியின்” விளைவும் கூட. இப்போது தரகு முதலாளித்துவம் நிலை பெறுதலும் தேசிய முதலாளித்தும் பலவீனமடைதலும் ஏகாதிபத்தியத்தின் தேவையாக அமைகிறது. இதே வேளை இலங்கையில் இடதுசாரியத்தின் வளர்ச்சி பல்வேறு தளங்களில் உருவாகிறது.
      இவற்றிற்கு எல்லாம் இலகுவான வழிமுறையாக முன்வைக்கப்பட்டது தேசிய இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தலாகும்.
      இவ்வாறு முரண்பாடு கூர்மையடைய பெருந்தேசிய வாதிகளும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கு மத்தியில் இருந்த தரகு முதலாளிகளும் பயனடைகின்றனர். தேரவாத பௌத்தம் இலங்கையின் நிலப்பிரபுத்துவத் சமூக அமைப்பில் புதிய தன்மை ஒன்றைப் புகுத்தியிருந்தது. ஹொப்ஸ்வாம் போன்றவர்கள் மார்க்சியப் பகுப்பாய்வைத் தவறென நிறுவக் கூட தேரவாத பௌத்ததை நிலப்பிரபுத்துவத் தேசிய வாதம் என்ற தவறான கருத்தியலை முன்வைப்பதைக் காணலாம்.
      #இங்கு “பிரின்ட் கப்பிடலிசம்” உருவாக்கிய தொடர்புகளை ஒத்த கம் சபாக்களூடான தொடர்பு காணப்பட்டது. தவிர, வேறு புறக்காரணிகளும் உள்ளன. இதனால் பேரின வாதத்தை நிறுவன மயப்படுத்த இன்றைப் போல அன்றைக்கும் இலகுவான சூழலே காணப்பட்டது. இதனால் தான் தேசிய மூலதனத்தைக் கூறுபோடவும் இடதுசாரிகளிடையேயான பிளவை ஏற்படுத்தவும் தேசிய இனமுரண்பாட்டைத் தூண்டினர். தவிர, நிறுவன மயப்பட்ட சிங்கள பௌத்த மேலாத்திக்க வாதம் என்பது சிங்கள சமூகத்தின் மேல்கட்டுமானத்தின் பிரதான பகுதியாகக் காணப்படுகிறது.
      ஒடுக்கப்படும் தேசிய இனம் வாழுகின்ற நாட்டில் அந்த ஒடுக்குமுறைக்கு எதிராகப் பிரிந்து போவதற்கான உரிமையைக் கோரிப் போராட்டம் நடத்துதல் என்பது தேவையான ஒன்றே. அவ்வாறு பிரிந்து செல்வதற்கான போராட்டம் உச்ச நிலையை அடையும் போதோ அல்லது பிரிவினை சாத்தியப்படும் போதோ மட்டும் தான் சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்குமுறையைப் உணர்வார்கள்.
      பின்னூட்டத்தில் இதற்கு மேல் விரிவாக எழுத முடியும் என நம்பவில்லை.

      • a voter says:
        15 years ago

        உங்களது பதிலில் கடைசிப்பகுதியை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்று சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்குமுறையை உணராதவாறு தடுப்பதற்கே தமிழ் மக்களின் போராட்டம் பயன்பட்டிருக்கிறது. மேலும் சிங்கள மக்கள் தமிழ் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்காதவிடத்து பிரிவினை சாத்தியப்படுமா என்பதையும் கணக்கில் எடுக்கவேண்டும்.

        குறிப்பு: உங்களது பின்னூட்டத்தையும் கட்டுரையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கட்டுரையில் மார்க்சீய அணுகுமுறை இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து. இதுவே எனது முதலாவது கேளவிக்கான காரணம்.

        • thamilmaran says:
          15 years ago

          சிங்கள மக்கள் தெரிவுகளீல் இருந்தே அவர்களது சிந்தனைய தெரிந்து கொள்ள முடியும்.தமிழர்களூக்கு எதிரான காரணீகளீல் ஒன்றாகவே இருந்து வருகிறார்கள்.

          • a voter says:
            15 years ago

            ஆக சிங்கள மக்கள் தமிழ் மக்களிற்கு எதிரானவர்கள் என்கிறீர்கள். அப்படியானால் காடையர்களிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றியவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  8. thevan says:
    15 years ago

    இங்கு நாவலன் பிரிந்துபோகும் உரிமைக்காக போராடவேண்டும் என்பது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை குறிக்கிறாரா அல்லது தமிழீழம் என்னும் பிரிவினைப் போராட்டத்தை குறிக்கிறாரா என்று புரியவில்லை.இன ஒடுக்கு முறை உள்ள ஒரு நாட்டில் சிறுபான்மை இனம் எப்போதும் தனிநாட்டுக்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என நாவலன் கருதுவாரானால் அது சரியான மார்க்சிய அணுகுமுறையாக இருக்காது என்றே கருதுகிறேன்.

    • நாவலன் says:
      15 years ago

      தேவன் , சுயநிர்ணய உரிமை என்றாலே பிரிந்து செல்லும் உரிமை தானே! நீங்கள் சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசினால் அது பிரிந்து செல்லும் உரிமையைப் பற்றிப் பேசுவதாகும். லெனின் , ஸ்டாலின் போன்றவர்கள் இது குறித்து நிறையவே எழுதியுள்ளார்கள்.

  9. thamilmaran says:
    15 years ago

    காடையர்களீடமிருந்து அப்பாவிகள காப்பாற்றூவது என்பது மனித இயல்பு அது அது எங்கும் இருக்கக் கூடியது வோட்டர்,ஆனால் ஒரு ம்க்கள் கூட்டமாய் சிங்களவர் தமிழர் விடயத்தில் உணர்ச்சி மரித்துப் போன கூட்டமாகவே உள்ளனர்.இது இல்ங்கைத் தமிழ்ருக்கு எதிராகவே இலங்கையில் காணப்படுகிறது.

    • Garammasala says:
      15 years ago

      ஒரு மக்கள் கூட்டமாய்த் தமிழர் முஸ்லிம்கள் பற்றி எப்படி இருந்தனர்?
      ஒரு மக்கள் கூட்டமாய் உ யர் சாதியினர் தாழ்த்தப்பட்டோர் பற்றி எப்படி இருந்தனர்?
      ஒரு மக்கள் கூட்டமாய்த் தமிழர் அப்பாவிச் சிங்களவர் பற்றி எப்படி இருந்தனர்?
      எந்த ஒரு நீசத்தனமான முஸ்லிம், சிங்களப் படுகொலையைத் தமிழ்த் தேசியவாதிகள் கண்டித்துள்ளனர்?
      எல்லாத் தேசியவாதமும் மனிதரை உணர்ச்சி மரித்துப் போன கூட்டமாக மாற்றக் கூடியது தான். அதிலிருந்து தப்ப வேண்டில் மனித சமத்துவ நோக்குள்ள ஒரு பார்வை வேன்டும்.

      • Thamilmaran says:
        15 years ago

        மந்தைக் கூட்டமாய் இருப்போர் மக்கள் கூட்டமாய் மாற காலம் எடுக்கும் ஆனால் அந்த மாற்றம் வருமா? புத்த கோயில்கள் கட்டி தனது ஆக்கிரமிப்பு போக்கை காட்டி வ்ரும் அரசு அதற்கு அனுமதிக்குமா?

        • a voter says:
          15 years ago

          இந்த அரசை எதிர்க்க வழி சிங்கள மக்களையும் இணைக்கவல்ல முற்போக்கு அமைப்பைக் கட்டியமைப்பதே.

    • a voter says:
      15 years ago

      தமிழர் உரிமை விடயத்தில் சிங்கள மக்களிடமிருந்து சாதகமான சமிக்யை இல்லை என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஏன்? இருந்த கொஞ்ச நஞ்ச சூழலையும் கெடுத்ததில் எமக்கும் பங்குண்டு. சிறி எதிர்ப்பு தமிழர் தரப்பால் நடாத்தப்பட்ட தவறுகளில் ஒன்று. புலிகள் காலத்துத் தவறுகளில் சிங்கள மக்கள் மீதான தாக்குதல்களைக் குறிப்பிடலாம்.
      எமது நடவடிக்கைகள் மூலம் சிங்கள இனவாதத்தை வளர்த்துவிட்டு முழுமையாக சிங்களவர்கள் மீது பழி போடுவதில் பயனில்லை.

  10. thevan says:
    15 years ago

    நாவலன் நான் உங்களிடம் கேட்டது என்னவெனில் பிரிந்து போகும் உரிமைக்காக போராடுகிறீர்களா அல்லது பிரிந்து போவதற்காக போராடுகிறீர்களா என்பதே.அதாவது லெனின் உதாரணத்தில் கூறினால் விவாகரத்து உரிமைக்காக போராடுவது என்பது வேறு.விவாகரத்துக்காக போராடுவது என்பது வேறு. இலங்கையில் தமிழ்மக்கள் தேசிய இனம் என்றளவில் அதற்குரிய சுயநிர்ணய உரிமைக்காக போராடுவது என்பது வேறு. தமிழீழம் என்னும் பிரிவினைக்காக போராடுவது என்பது வேறு. எனவே இதில் நீங்கள் எந்த போராட்டத்தை குறிக்கிறீர்கள் என்பதே என் வினாவாகும்.

    • Shiva says:
      15 years ago

      நீங்கள் சொல்வது போல பிரிந்து செல்வதற்கான உரிமை என்பது மணமுறிவு உரிமை போன்றது.
      அந்த உரிமை பிரிவுக்கான தூண்டுதலல்ல.
      மாறாக அது தேசங்களும் தேசிய இனங்களும் ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் ஒடுக்காமல் ஒரு அரசின் கீழ்ச் செயற்படுவதற்கான ஊக்குவிப்பாகும். லெனின் தன் நோக்கம் அதுவே என்பதில் ஐயத்துக்கு இடம் வைக்கவில்லை.

      எனினும் இன விடுதலைப் போரட்டங்களின் போக்கில் பிரிவினைக் கோரிக்கை எழுகிறது. அதை எவ்வாறு கையாள்வது என்பதே மர்க்சியர்கள் முன்னுள்ள கேள்வி.
      பிரிவினை விரும்பத் தகாதது என்பதில் ஏகப் பெரும்பான்மையான மார்க்சியர்கள் உடன்படுவர். அவர்களது நேர்மையின் அளவுகோல் பிரிந்து செல்வதற்கான உரிமையை ஏற்கிறார்களா என்பது தான்.
      இவ்விடத்துப் பிலிப்பினிய மார்க்சிய லெனினியர்களின் நிலைப்பாடு பற்றி மரியா சிசோனின் கட்டுரைகள் பயனுள்ளவை.

      தமிழ்த் தேசியத்தின் பலவீனமே அது தனது தேசியத்தை முஸ்லிமகள் மீதும் மலயக மக்கள் மீதும் ஒரு காலத்தில் திணித்தது என்பதுடன் பின்னர் அவற்றைத் தனக்குச் சமமான தேசியங்களக ஏற்க மறுத்தது. எனவே தமிழ்த் தேசியர்கள் அதனால் பல்வேறு உள் முரண்பாடுகட்கு முகங்கொடுப்பதில் தவறியுள்ளனர்.

    • karuthu says:
      15 years ago

      நாவலன் தெளிவாகவே விடையளித்துள்ளார். இந்தியா ருடே விமர்சனங்கள் போல் உள்ளது உங்களது கேள்விகள். லெனினையும் ஸராலினையும் இந்தியா ருடேயில் தேடினால் எங்களுக்கு தலைவலிதான்.

    • karuthu says:
      15 years ago

      முதலில் பிரிநது போகும் உரிமைக்காக போராடுவோம் பின்னர் பிரிவதற்காக போராடுவோம்.

  11. vinothan says:
    15 years ago

    உத்தமனாக்கவேன்டாம், புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தார்கள், கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள் என்று வாய்புலம்பல் கூட்டமே ஏன்செய்தார்கள் ?? காடையர் கூட்டம் எங்கள் ம்ண்மீது யுத்தம் நடத்தியபடியால்தான், அல்லது இந்த நிகழ்வே நடந்திருக்கமாட்டாது.

    • ஊர்மிளா பிரபா says:
      15 years ago

      வாவ் நல்ல விளக்கம் ..கடயர்களை அடக்க ஊரான் வீட்டு பிள்ளைக்கள் தேவை படுகிறது….படிச்சவன் ..வசதியானவன் எல்லாம் “விட்டாபோதும்    ” என்று தலை தெறிக்க முழு குடும்பத்துடன் வெளிநாடு ஓட ..வசதி இலாத ..வக்கிலாத மக்களை ..ஊர் ஊராக இழுத்து திரிந்து…தற்கொலைதாரிகள் அக்கி பலி கொடுத்து (கொஞ்ச நெஞ்சமா ஆயர கணக்கில்..)..தான் மட்டும் வேலை கோடி பிடிச்ச …வருகுது நல்லா வாய்க்கு…

    • Chithra Cheran says:
      15 years ago

      வினோதன் அண்ணா! இதுகளெல்லாம் போக்கிலிகள் கூட்டம்!  நாம இளையோர் அமைப்புக்கு தலைவர் பற்றி நன்கு தெரியும்தானே! நாம போராட்டத்தை முன்னெடுப்போம் அண்னா!

  12. நாவலன் says:
    15 years ago

    தேவன்,

    சுயநிர்ணய உரிமை என்பதே பிரிந்துபோகும் உரிமைதான்.சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என்பது பிரிந்து போகும் உரிமைக்கான போராட்டமே. நான் பிரிந்து போக மாட்டேன் எனக் கூறுவது உங்களுடைய உரிமை. ஆனால் ஒடுக்கப்படும் எந்த இனமும் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுப்பது தவறானதல்ல. அது தேவையானதே என்று லெனின் கூறுவதை நானும் ஆமோதிக்கிறேன். ஆனால் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கான நிகழ்வுப் போக்கில் ஒடுக்கும் தேசிய இனத்தின் சமூகப் பொதுப் புத்தியாக உருவமைக்கப்பட்டிருக்கும் பேரினவாதம் வலுவிழந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படும்,. இலங்கை போன்ற நிறுவனமயப்பட்ட பேரினவாதம் ஆளுமை செய்கின்ற ஒரு நாட்டில் இது கூடச் சாத்தியமா என்பது கேள்விக்குரியதே. 1905 இல் சுவீடனிலிருந்து நோர்வே பிரிந்த வேளையில் அதனை லெனினும் அவர்சார்ந்தவர்களும் கூறியவற்றைப் படிப்பது பயனுள்ளது.
    தவிர், ஸ்தாபனம் குறித்த பிரச்சனை விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. கட்சி அடிப்படை முரண்பாட்டைக் கையாள்வதாகவும்,தேசிய விடுதலை “இயக்கம்” என்ற தற்காலிக அமைப்பு பிரதான முரண்பாட்டைக் கையாள்வதாகவும் வெகுஜன இயக்கங்கள் மக்கள் மத்தியிலான முரண்பாடுகளின் நேரடியான அமைப்புக்களாகவும் அமையும். கட்சிக்கும் தேசிய உணர்வு என்ற முதலாளித்துவ சிந்தனை முறையைப் பிரதினிதித்துவம் செய்யும் இயக்கத்திற்கும் தொடர்ச்சியான போராட்டம் நிகழும். இந்தப் போராட்டத்திற்கான ஐக்கிய முன்னணியில் கட்சி பலமடையும் போது மட்டுமே தேசிய விடுதலைகூடச் சாத்தியமாகும் என்பது எனது கருத்து.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      நோர்வே தமது சுயநிர்ணய உரிமையை 1814 இலேயே டென்மார்க் ராச்சியத்திலிருந்து பெற்றுக்கொண்டபோதும் சுவீடனுடன் யூனியன் உடன்படிக்கையுடன் இருந்து விட்டு கிட்டதட்ட 90 வ்ருடங்களின் பின் அதாவது 1905 இல் தான் பிரிந்து சென்றார்கள்.
      தேவன் உங்களிடம் அறிய விரும்புவது புதிய திசைகள் அமைப்பு சமஸ்டி ஆட்சியையா? அல்லது தனிநாட்டு கோரிக்கையையா முன்வைக்கிறது என்பதைதான் எனநினைக்கிறேன்.

  13. xxx says:
    15 years ago

    நோர்வே சுவீடனிலிருந்து பிரிந்ததை லெனின் வரவேற்றதிலிருந்து நமக்கான பாடங்களைப் பெறுவதானல் உவமை நமக்கு எவ்வளவு உடன்பாடானது என்பதையும் ஆராய வேண்டும். பல முக்கிய வரலாற்று வேறுபடுகளை நாம் தவற விடுகிறோம். நோர்வே-சுவீடனுடன் இணைக்கப் பட்ட நாடு என்பதும் அது தனக்கான ஆட்சியை எப்போதுமே கொண்டிருந்தது என்பது முதலாகப் பலவற்றையெளம் கணிப்பிலெடுக்க வேண்டும்.

    ளெனின் சுயநிர்ணயக் கோட்பாடு பற்றி வைத்திருந்த நிலைப்பாடென்ன? அதன் நோக்கமென்ன? அது பிற மர்க்சியர்களினதினின்று வேருப்பட்டிருப்பின் எவ்வாறு? அது ஏன் நியாயமானதாகிறது?
    இவையே முதற்கண் நம் கவனத்துகுரிய விடயங்கள்.

    தமிழீழம் என்பதே முஸ்லிம் தேசிய மாறுப்பு நிலைப்பாட்டின் அடிப்படையிலானது. அது இலங்கை தமிழ், சிங்களத் தேசங்களைக் கொண்டது என்ற வரலாற்றுப் புனைவில் தனது வேர்களைக் கொண்டுல்லாது. இதற்கு விடை தேடிய பின்னரே தமிழ்த் தேசியத்தையும் பிரிவினைக் கொள்கையையும் நிதானனமக விவாதிக்க இயலும்.

  14. thevan says:
    15 years ago

    நாவலன் நான் உங்களிடம் கேட்பது என்னவெனில் நீங்கள் பிரிந்துபோகும் தமிழீழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கிறீர்களா அல்லது தமிழ் சிங்கள ஜக்கியத்தின் மூலம் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்கிறீர்களா என்பதே.எனவே தயவு செய்து உங்கள் நிலைப்பாட்டை தெளிவாக முன்வைக்கவும்.

  15. நாவலன் says:
    15 years ago

    எனது கட்டுரையில் இது குறித்துத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாம் பிரிந்து செல்வதற்காகப் போராட வேண்டும். இந்தப் போராட்டத்திற்கு எமது வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் உண்டு என்பது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட. இந்தப் போராட்டம் தேசிய விடுதலை இயக்கங்களால் முன்னெடுக்கப்ப்பட வேண்டும். தவிர, இந்தத் தேசிய விடுதலை இயக்கங்கள் இலங்கை தழுவிய கம்யூனிச இயக்கத்தால் தலைமை தாங்கப்பட வேண்டும். இந்தப் போராட்டம் வளர்ச்சி பெறும் நிலையில் பேரினவாதம் தணிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் பிரிவினை கோரிப் போராட்டம் நடத்துவதென்பது முன்னிபந்தனை என்றே நான் கருதுகிறேன். இங்கே சிங்கள மக்கள் மத்தியில் மூலதன உருவாக்கத்திற்கு முற்பட்ட பகுதிகளிலிருந்தே உருவான சமூக அமைப்பு முறை நிறுவன மயப்ப்படுத்தப்பட்டுள்ள சிங்கள பௌத்த சிந்தனையைக் கொண்ட பேரினவாதத்தை உருவாக்கியுள்ளது. பிரிவினைக்கான போராட்டத்தின் வெற்றி ஊடாகவே இந்த நிறுவனத்தைச் சிதைக்க முடியும்.அது மட்டும் தான் இணைவை ஏற்படுத்த முடியும்.
    தவிர,
    புதிய ஜனநாயகப் புரட்சி என்பது சீனாவில் கையாளப்பட்ட அதே அர்த்ததில் உலகமயமாதலின் இறுதிக்கட்டத்தை அண்மிக்கும் நாம் கையாள முடியாது என்பதே எனது கருத்து. இந்தியாவில் மக்களியக்கங்களில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பேசிப்பாருங்கள்.பெரு நிலப்பிரபுத்துவ அமைப்பு உடைந்து வருவதாகச் சொல்கிறார்கள். நிலங்கள் பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வியாபாரத்திற்காக விற்பனை செய்யபடுகின்றன. நிலப்பிரபுக்கள் இந்த நிறுவனங்களின் பங்காளர்களாக மாறிவருகின்றனர். இன்னும் நிறைய இந்த விடயத்தை விவாதிக்கலாம் ஆனால் இது இன்னொரு வகையான பிரச்சனை.

    • a voter says:
      15 years ago

      “இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாம் பிரிந்து செல்வதற்காகப் போராட வேண்டும். ”
      தவறான கருத்து. இலங்கையில் மட்டுமல்ல உலகமெங்கிலும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவே போராட வேண்டும்.  பிரிந்து போவதா இல்லையா என்பதை “ஒடுக்கும்” இனம் தீர்மானிக்கட்டும்.

      “இங்கே சிங்கள மக்கள் மத்தியில் மூலதன உருவாக்கத்திற்கு முற்பட்ட பகுதிகளிலிருந்தே உருவான சமூக அமைப்பு முறை நிறுவன மயப்ப்படுத்தப்பட்டுள்ள சிங்கள பௌத்த சிந்தனையைக் கொண்ட பேரினவாதத்தை உருவாக்கியுள்ளது. பிரிவினைக்கான போராட்டத்தின் வெற்றி ஊடாகவே இந்த நிறுவனத்தைச் சிதைக்க முடியும்.”
      இன்னுமொரு தவறான கருத்து. நிறுவனப்படுத்தப்பட்ட இந்து மதவாதத்திற்குத் தீர்வாக பாக்கிஸ்தான் பிரிவினை அமையவில்லை. தாறாக அதனை மேலும் பலப்படுத்தவே உதவியுள்ளது. இலங்கையிலும் அதுவே நடந்துள்ளது.

  16. thevan says:
    15 years ago

    /ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் தாம் பிரிந்து செல்வதற்காகப் போராட வேண்டும்/ அதாவது வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் தமிழீழத்திற்காக போராட வேண்டும். மலையக மக்கள் மலையக ஈழத்திற்காக போராட வேண்டும்.முஸ்லிம் மக்கள் முஸ்லிம் ஈழத்திற்காக பொராடவேண்டும் என்று சொல்கிறீர்களா? தயவு செய்து இதைக் கொஞ்சம் விபரமாக விளக்குங்கள். /
    இந்தப் போராட்டத்திற்கு எமது வரலாற்றில் முற்போக்குப் பாத்திரம் உண்டு என்பது மட்டுமல்ல தவிர்க்க முடியாததும் கூட
    / புரட்சிக்கு துணைசெய்யுமாயின் அதனை முற்போக்கான பாத்திரமாக கூறமுடியும்.இங்கு நீங்கள் முன்வைக்கும் பிரிவினைப் பொராட்டம் எப்படி முற்போக்கு பாத்திரம் வகிக்கிறது என்பதை விளக்கமுடியுமா? /இந்தத் தேசிய விடுதலை இயக்கங்கள் இலங்கை தழுவிய கம்யூனிச இயக்கத்தால் தலைமை தாங்கப்பட வேண்டும்/
    ஏன் தேசிய விடுதலை இயக்கத்திற்கு கம்யுனிஸ்டுகள் நேரிடையாக தலைமை தாங்க முடியாது என்பதையும் பிரிவினையை முன்வைக்கிற தேசிய விடுதலை இயக்கங்களுக்கு நாடு தழுவிய கம்யுனிச இயக்கம் எப்படி தலைமை தாங்கமுடியும் என்பதையும் தயவு செய்து விளக்குங்கள்.
    பிரிவினைக்கான போராட்டம் பேரினவாதத்திற்கு துணை செய்யும் என்பதே கடந்தகால அனுபவமாக இருக்கையில் நீங்கள் பிரிவினைவாதப் போராட்டம் பேரினவாத்தை தோற்கடிக்கும் என எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

    • THAMILMARAN says:
      15 years ago

      தமிழ் ஈழம் என்பதே முஸ்லீம்கள அச்சுறூத்துவது என்பதும் முஸ்லிம்கள பலவந்தமாய் போராட்டத்தை ஆதரிக்க இயக்கங்கள் சொன்னதும் எம்மை முஸ்லீம்களீடம் இருந்து பிரித்தது அவர்கள் விலகிச் சென்றார்கள் பின்னர் கலவரங்கள் நிகழ்ந்தபோது புலிகள் தவறான முடிவுகள் எடுத்து அப்பாவி முஸ்லீம்கள கொன்றார்கள் இது அவர்கள் புதிய குழுக்களாய் செயற்பட வேண்டிய தேவைய ஏற்படுத்திற்றூ.இன்னும் தமிழரது இரத்திற்கு ரத்தம் போக்கும் நமது மக்கள் வாழ்க்கையை நாசமாக்கிற்றூ.இனி கம்யூனிசம் நமக்கு சாதகமற்றது.

  17. நாவலன் says:
    15 years ago

    தேவன்.
    1. இலங்கையிலுள்ள ஒடுக்க்கப்படும் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தமது பிரிந்து போகும் – சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதே எனது கருத்து. இவ்வாறான தனித்துவமான போராட்டம் மட்டும்தான் இவர்களிடையேயான ஒருங்கிணைவைக் கூட ஏற்படுத்தும். நாகாலாந்தின் நிலைமை இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறது.
    பின்னூட்டத்தில் முழுமையான விவாதத்தை நடத்த முடியுமா என்பது சந்தேகத்திற்குரியதே. ஆனால் முதலாளித்துவக் காலகட்டத்திற்கான தேசிய இனங்களின் பண்பிலிருந்து நமது காலகட்டம் வேறுபடுகின்ற நிலைமைகளையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய இனங்கள் அல்லது “தேசிய சிறுபான்மை” இனங்கள் இலங்கையில் ஒடுக்கப்படுகின்றன என்பதை விட அழிக்கப்படுகின்றன என்பதே இங்கு அதிகமாகப் பொருந்தும்.
    ஆக, உற்பத்தி சக்திகளின் வளர்சி அல்லது மாற்றத்திற்கும் அது உருவாக்கும் தெசிய இன உருவாக்கத்திற்கும் இடையேயான இயங்கியல் தொடர்பென்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. சமூகத்தின் மேற்பகுதியின் ஆளுமை வழமையிலும் அதிகாமாகவே காணப்படுகிறது. இது தான் குறுந்தேசிய வாதத்தையும் அதன் விரிவாக்கமாகப் பாசிசத்தையும் உருவாக்குகிறது. ஆக, தேசிய சிறுபான்மை இனங்கள் கூடத் தேசிய இனங்களாக வளர்வதில் கூட முற்போக்குத் தன்மையைக் காண முடியும். ஒவ்வொரு தேசிய இனமும் அல்லது தேசிய சிறுபான்மை இனமும் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்காகப் போராடும் நிலையில் மட்டும் தான் ஐக்கியம் கூட உருவாகும்.
    2. ஆக எவ்வாறு இது முற்போக்குப் பாத்திரம் வகிக்கும் என்ற உங்கள் கேள்வியின் ஒரு பகுதி விடையும் இங்கு உளளடக்கப்படுள்ளது.
    2. ஏன் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முடியாது?
    கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் தலைமை தாங்க முடியும் என்பதே எனது கருத்து. இதற்கான பொருள் முதல்வாத விளக்கம் என்பதும் பல தடவை பேசப்பட்டதே.
    இலங்கையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் இல்லை. மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளே இந்த இடத்தை நிரப்பிக்கொண்டுள்ளன. மத்தியதர வர்க்கம் இந்தத் தலைமைய வழங்க முடியாத ஊசலாடும் வர்க்கம். ஆக, தொழிலாள மற்றும் அதன் நேச அணிதான் போராட்டத்தைத் தலைமை தாங்க முடியும்.அவ்வாறன்றி ஏற்கனவே நடந்து முடிந்ததைப் போல முற்போக்கான ஒரு போராட்டம் தரகு முதலாளிகளின் பிடியில் பாசிசமாக மாறிச் சீரழிந்து விடும்.

    3 கம்யூனிஸ்ட் கட்சி எப்படிப் பிரிவினைக்கான போராட்டத்தைத் தலைமைதாங்கலாம் என்று கேட்கிறீர்கள். அதனைக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்குவாதனூடாகவே போராடத்தைப் புரட்சிகரமானதாக மாற்ற முடியும் என போல்கன் பிரச்சனையில் போல்சுவிக் கட்சி முன்வைத்த தீர்மானம் சரியானது என்றே கருதுகிறேன்.
    தொழிற்சங்கம் என்பதைப் பாருங்கள் அது வேறுபட்ட அமைப்பு அதனை கட்சி தனது கொள்கையை அடிப்படையாக முன்வைத்துத் தலைமை தாங்குகிறது. ஏன் கட்சியே தொழிற்சங்கமாக இருக்கக் கூடாது என்பதற்கு என்ன பதிலோ அதே தான் தேசிய விடுதலை இயக்கம் கட்சியாக இருக்கக் கூடாது என்பதுமாகும். தொழிற்சங்கம் என்பதை விட தேசிய விடுதலை இயக்கம் மிகக் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிற்சங்கம் புரட்சியின் பின்னரும் சுயாதீனமாக வாழும். தேசிய விடுதலை இயக்கம் ஒரு குறித்த காலகட்டப் பிரச்சனைக்கான இயக்கம் மட்டுமே. அதன் பின்னர் அது கலைந்துவிடும்.
    இது தூய, ஸ்தாபன அமைப்புக் குறித்த பிரச்சனை. இன்னும் விரிவாக விவாதிக்கப்படலாம்.
    தேவன், நாங்கள் 25 ஆண்டுகளின் முன்னைய நினைவுகளோடு வாழ்கிறோம். இன்னும் அவை குறித்தே நம்மில் பலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். புதிய உலக ஒழுங்கின் பின்னான சூழல், உற்பத்தி உறவில் ஏற்பட்ட மாற்றம், ஆசியப் பொருளாதார உருவாக்கம் என்பன போன்ற ஆயிரம் பிரச்சனைகள் எம் முன்னால் உள்ளன. இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்பட்டே புதிய போராட்டத்திற்கான செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும்.
    குறுந் தேசிய வாதமும் அதன் பாசிச வடிவமும் இன முரண்பாட்டைத் ஆழப்படுத்தியது என்னவோ உண்மைதான். ஆனால் போராட்டம் சரியான திசைவழியில் முன்னெடுக்கப்படும் போது சிங்கள மக்கள் தம் மீதான ஒடுக்கு முறையை உனர்ந்துகொள்வார்கள். நிறுவன மயப்பட்ட பேரினவாதம் உடைந்து போகும்.
    தவிர, புதிய போராட்ட வழிமுறைகள், மக்களை அணிதிரட்டும் புதிய உக்திகள் குறித்தெல்லாம் இனிவரும் காலத்தில் புரட்சிகரச் சக்திகள் சிந்திப்பார்கள். “பிரசண்டா பாத்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் முன்வைத்த உக்தியெல்லாம் பேசப்பட வேண்டும்.

    • a voter says:
      15 years ago

      தோழமையுடன் நாவலனுக்கு
      “இலங்கையில் தேசிய முதலாளித்துவ வர்க்கம் இல்லை. மத்தியதர வர்க்கத்தின் மேலணிகளே இந்த இடத்தை நிரப்பிக்கொண்டுள்ளன. ”
      இதனை நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறிர்கள்? தமிழீழ விடுதலைப் போராட்டததை (வடக்கு கிழக்குப் பகுதிகளை) மட்டும் மையமாக வைத்து இதனைக் கூறுகிறீர்களா?
      சிங்கள மக்களிடையே தமிழ் மக்களின் போராட்டம் பற்றி புரிந்துணர்வு ஏற்பட்டு பேரினவாதம் சாகடிக்கப் படுமானால் பிரிவினை ஏன் தேவைப்படுகிறது?

  18. thamilmaran says:
    15 years ago

    பின்னூட்டங்களீல் அமைகிற விவாதங்கள் ஆரோக்கியமாக ரசிக்க முடிகிறது.ஒரு கிளயில் இருந்து இன்னொரு கிளயாக பரவும் இந்த விவாதங்கள் ஒரு நாவலைப் போலிருக்கிறது.இதுவே ஒரு புத்தகமானால் தமிழில் நல்ல வாசிப்புக்கு இடம் தரும்.

  19. chandran.raja says:
    15 years ago

    “தேசியஇனங்களின் சுயநிர்னய உரிமை” பிரிந்து போகுதல் என்ற பதம் போல்சேவிக்குகளால் இதன் தந்திரேபாயம் உருவாக்கப்பட்டது.இதன் நோக்கம் இனங்களுக்கிடையான மூடசிந்தனை-மதம் இனப்பெருமை பழக்கவழக்கம் போன்ற பிற்போக்கான சிந்தனையுடன் கட்டிப்பொட்டிருக்கிற முதலாளித்துவ உறவுகளை-மாயை
    வெளிக் கொண்டுவருவதற்கே!.
    இனத்திற்கான ஆளும் அதிகாரம் கிடைத்ததும் அந்த இனம்..அந்த இனத்தில்லுள்ள பெரும்
    பகுதியாக இருக்கிற பாட்டாளிவர்க்கம் ஒருசிலகாலங்களுக்குள் தனது மாயைத்திரையை
    கிழித்தெறிந்து “தன்நாட்டுக்குள்ளேயே தன்எதிரி இருக்கிறான்” என்ற சூத்திரத்தை உடனடியாக புரிந்துகொண்டு முதாலாளித்துவத்திற்காண போராட்டத்தை தொடங்கிவிடும்.
    இதுவே தேசியஇனங்களுக்கான சுயநிர்ணய உரிமை பிரிந்து போகுதலுக்கான அங்கீகாரம்.
    இதை தவறான புரிதலுடனும் முதாலிளித்துவத்தை வாழவைப்பதுடனும் மாபெரும்
    ஒக்டோபர் புரட்சியை சிறுமைப் படுத்துவதையுமே இன்று கண்எதிரே கண்டுவருகிறோம்.
    இதை தவறாக புரிந்துகொண்ட “மாயக்கோல் மந்திரவாதிகள்” ளின் பிடியில் இருந்து
    இலங்கை பாட்டாளிவர்க்கம் வெளிவருவதும். அது உலகதொழிலாளவர்கத்துடன் பிணைப்பை ஏற்படுத்தி இந்தமுதாலித்துவத்துடன் சவால் விட்டு தமது உரிமைகளை
    வெற்றி கொள்வதும் தவிர்க்க முடியாததே!.

  20. thevan says:
    15 years ago

    நாவலன்!

    உங்களுடன் விவாதம் செய்வது என் நோக்கம் அல்ல. மாறாக இலங்கைப் புரட்சி தொடர்பாக நீங்கள் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை தெளிவாக அறிந்து கொள்ளும் பொருட்டே உரையாடுகிறேன். அந்தளவில் இந்த உரையாடல் நான் மட்டுமல்ல மற்றவர்களும் உங்களை இனங்கான உதவும் என்பதே என் நம்பிக்கை.

    (1)பிரிந்து போகும் உரிமைக்காக போராடுவதும் பிரிந்து போவதற்காகப் போராடுவதும் ஒன்றென நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் இவையிரண்டும் ஒன்றல்ல. வித்தியாசமானவை என்று நான் உதாரணங்கள் மூலம் விளக்கினேன். ஆனால் நீங்களோ இவையிரண்டும் ஒன்றென தொடர்ந்து கூறுகிறீர்களேயொழிய அது எப்படி ஒன்றென என்பதை விளக்க தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன்.

    (2)ஒரு ஒடுக்குமுறை உள்ள நாட்டில் ஒடுக்கப்படும் தேசிய இனம் எப்போதும் பிரிந்து போவதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும் எனக் கூறுகிறீர்கள். ஆனால் பிரிந்துபோவதோ அல்லது ஜக்கியப்பட்டு போராடுவதோ என்பது எது முற்போக்கானதோ? அல்லது எது புரட்சியை முன்னெடுக்க உதவுகிறதோ? என்ற அடிப்படையிலேயே அணுகப்படவேண்டும் என்பது மார்க்சிய அணுகுமுறையாகும். எனவே இதன் அடிப்படையில் இலங்கையில் தமிழீழ பிரிவினை என்பது பிற்போக்கானதாகவும் அது புரட்சிக்கு எதிரானதாகவும் இருப்பதால் மாக்சியவாதிகள் அதனை எதிர்க்கின்றனர். மாறாக தமிழீழ பிரிவினை முற்போக்கானதாகவும் அது இலங்கைப் புரட்சியை முன்னெடுக்க உதவிகரமாக அமையும் என நீங்கள் கருதுவீர்களாயின் அது எப்படி முற்போக்கானது? அது எப்படி புரட்சியை முன்னெடுக்க உதவிகரமாக அமையும் என்பதை விளக்குமாறு தங்களிடம் கேட்டிருந்தேன். ஆனால் நீங்கள் இது குறித்து இதுவரை தக்க பதில் தராதது எனக்கு ஏமாற்றமாகவே இருக்கின்றது.

    (3)ஒரு இன ஒடுக்குமுறை உள்ள நாட்டில் ஒடுக்கப்படும் தேசியஇனம் பிரிந்து போவதற்காப் போராட வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படியாயின் உங்கள் வாதப்படி பார்த்தால் இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழீழத்திற்காகவும் மலையக மக்கள் ஒரு மலையக ஈழத்திற்காகவும் முஸ்லிம் மக்கள் ஒரு முஸ்லிம் ஈழத்திற்காகவும் போராட வேண்டுமா என நான் கேட்டதற்கு நீங்கள் இதுவரை பதில் தரவில்லை. மேலும் இப்படி ஒவ்வொரு இனமும் பிரிவினைக்காகப் போராடுவது எப்படி முற்போக்கானதாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?அத்துடன் இது எப்படி இலங்கைப் புரட்சியை முன்னெடுக்க உதவிகரமாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

    • செவ்வியன் says:
      14 years ago

      சந்திரன் ஒரு சால்ரா அவருக்கு எந்த கருத்தியல் தளமும் இல்லை.மகிந்தா சிறந்த தலைவன் என்று உளறுகிறது.வெவ்வேறு பெயர்களில் மகிந்தாவிற்கு ஒத்து ஓதுகிறார்.

  21. பரதேசி says:
    14 years ago

    சரியான வழியில் போராடுவதென்பது சரியானதுதான். ஆனால் அதற்குள் இலங்கைத்தீவு முழுமையாக விழுங்கப்பட்டு தமிழினம் வாழ்ந்ததென்பது சரித்திரமாகி விடும். முதலில் இனத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஏதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். ஒரு பிள்ளை உயிருக்காகப் போராடும் போது வைத்தியர் அதன் உயிரைக்காப்பாற்றத்தான் முன்னுரிமை கொடுப்பார். அது ஆரோக்கியமாக வளருமா என்பது அடுத்த தேவை. உருண்டு செல்லும் காலச்சக்கரத்தில் அன்பு ஆளும ஒரு நாள் இந்த உலகுக்கு வரலாம். அன்று இந்த விவாதங்களுக்கு தேவை இருக்காது.

  22. செவ்வியன் says:
    14 years ago

    இறைமையுள்ள தமிழீழ தனியரசிற்கான பொதுசன வாக்கெடுப்பை ஐநாவால் நடாத்துவதற்கு அமெரிக்காவை கோருவதற்கான செய்தியை அறிந்தோம்.இதற்கு தமிழர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருவதற்கான சூழல் உருவாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

  23. Chandran says:
    14 years ago

    ராஜபக்சவை விட்டால் தமிழர்கலுக்கு வேறு வழி கிடயாது.

    • THAMIL MARAN says:
      14 years ago

      இத்தனை நாளாய் இதைத்தானே சொல்கிறீர்கள் ஷந்திரன் ஆனால் அவர் எந்த வழியையும் காட்டியதாய் தெரியவில்லையே?

  24. yazhavan says:
    13 years ago

    நாங்கள் ஒன்றை நன்றாக புரியவேண்டும். ஜீலை கலவரத்தின்போது தமிழ்மக்கள் பலர் சிங்களவர்களாலேயே காப்பாற்றப்பட்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட மனிதாபிமான அம்மக்களை அந்தக் காடையர்கள் கொன்றும் இருக்கிறார்கள் என்பது எங்களில் எத்தனை பேருக்குத்தெரியும்?. அப்படிப்பட்ட மனிதாபிமானிகளை நாங்கள் மரியாதை செய்திருக்கின்றோமா? என்றால் இல்லை. காலப்போக்கில் அவர்களையும் சிங்கள வெறியர்கள் என்ற வட்டத்திற்குள் தள்ளிவிட்டோம். அப்பவே நாங்களும் தமிழ் காடையர்கள் தான் என்று நிரூபித்துவிட்டோம். போராட்டம் என்பது நசுக்கப்பட்டவர்களுக்காக போராடுவது. இங்கு மொழி மதம் இனம் சாதி என்ற வேறுபாடு இருக்கக்கூடாது. நசுக்கப்பட்டவர்களையே நசுக்கிப் போராடுவது என்பதை எப்படி அழைப்பது?. இலங்கை எனும் அழகியதீவில் தமிழர்கள் மட்டும்தானா நசுக்கப்ட்டார்கள்?. காடையர்களால் எல்லா மக்களும் தான் நசுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். காடையர்கள் எல்லோரும் சிங்களவர்கள் மட்டுமாகத்தான் இருந்தார்களா?. அந்தக்காடையர்களுக்கு துணைபோன தமிழர்கள் எத்தனைபேர்?. ஆனால் நாங்கள் சிய்களவர்களுக்கு எதிராகவல்லோ போராடுகின்றோம். ஏன் இந்த ஏற்றதாழ்வு இந்தப்போராட்டத்தில்?. புலிகள் தமிழர்களுக்கு எதிரானவர்களை விட தமக்கு எதிரானவர்களைத்தான் போட்டுத்தள்ளியது. இலங்கையின் ஒவ்வொரு ஜனாதிபதியும் தன்னுடைய பிள்ளையையா அடக்குமுறைக்கு ஏவிவிட்டார்கள்?. இன்னொரு தாய் பெற்ற பிள்ளையையே எவிவிட்டார்கள். அந்தத்தாயுடன் நாம் நல்லஉறவைப்பேணியிருந்தால் அந்தத்தாய் விட்டிருப்பாளா “நீ போய் தமிழர்களைக் கொல் என்று”. இதைவிட்டு வெள்ளைக்காரனை நம்புகின்றோம். நூற்றாண்டுகளாக எம்மை அடிமையாக வைத்திருந்தவர்கள் அவர்கள். கிறிஸ்தவ சமயத்தை வலுக்கட்டாயமாக திணித்தவர்கள். (ஒரு மதத்ததை திணிப்பது என்பது ஒரு பெண்ணை கற்பழிப்பது போன்றது) இன்றும் கூட அதற்காக மன்னிப்புக் கேட்க நினைத்தும் பார்க்காதவர்களிடம் போய் நாங்கள் நீதி கேட்கின்றோம். போராட்டத்தை ஆரம்பிப்தற்கான புள்ளியை தேடுவதைவிடுத்து பிரச்சனையை தீர்ப்பதற்கான ஆரம்பப்புள்ளியை தேட முயல்வது மிகவும் முதன்மையானது என நினைக்கத்தோன்றுகின்றது.

  25. அரிச்சந்திரன் says:
    13 years ago

    நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைய உலகில் இணைகின்றேன். இப்போதும் அதே மேடை, அதே தாளக்கட்டு, அதே கூத்தாடிகள். உங்களால் முடிந்த முடிவு ஒன்றே ஒன்றுதான் ஐயனீர், உங்கள் கனத்த மண்டை ஓடுகள் நரைகாணினும் உங்கள் பெருத்த முண்டக் கூடுகள்  கூன்காணினும் அப்போதும் உங்கள் பொக்கைவாய் வழிகள் இவ் ஓலங்களையே நுரை தள்ளும். அன்புடையீர், பொறுத்திரும் அதிசயம் காண்பீர்.

    • roopan says:
      13 years ago

      என்ன இது சாய்பாபாவின் புது அவதாரமோ ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...