இலங்கையில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பின்னணியில் செயற்பட நடத்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னர், இலங்கை அரசிற்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை அமெரிக்கா முன்வைத்துள்ளது. கடந்த சில வருடங்களாகத் திட்டமிட்டு இலங்கை அரசியல்வாதிகளுக்கு நேரடியாக அமெரிக்க அரசினால் பயிற்சியளிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னரே திட்டமிட்டபடி அமெரிக்க அரசு இலங்கையில் தனது முகவர்களுடன் இணைந்து தீர்மானம் ஒன்றை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைத்துள்ளது.
இத் தீர்மானத்தை இலங்கை அரசும் அமெரிக்க அரசும் இணைந்தே முன்மொழிந்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கத் தலையீட்டினால் இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒபாமா ஆட்சிக்குவந்ததும் தனது வெளியுறவுக் கொள்கையை வெளியிட்டார். மத்திய கிழக்கு நாடுகளுக்குள்ளேயே அமெரிக்கா அதிகமாகக் காலத்தைச் செலவு செய்கிறது என்றும் ஆசிய நாடுகளின் பக்கம் தனது கவனத்தைச் செலுத்தவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆசியா பிவோட் என்று குறிப்பிடப்படும் இக் கொள்கையின் தெற்காசியப் பிரதிநிதியாக இலங்கை மாறும் என்ற கருத்தை இனியொரு பலதடவைகள் எச்சரித்திருந்தது.
இன்று அமெரிக்கா தனது தீர்மானத்திற்குப் பின்னர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரச திணைக்களத்தின் இணையத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை அமெரிக்க அரச துறைச் செயலாளர் ஜோன் கெரியினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசு தேவைப்பட்டால் உலக நீதிபதிகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற வகையில் கூறப்பட்டுள்ள தீர்மானத்தை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
தீர்மானத்தைப் பற்றிக் கூறும் ஜோன் கெரி, இலங்கை மக்கள் இரண்டு தடவைகள் வாக்களித்து சமாதானத்திற்கான பாதையில் இலங்கையை கொண்டு செல்ல அனுமதித்துள்ளனர் என்கிறார்.
இதுவரை இலங்கை அரசை எந்தவொரு வெளிநாட்டு இராஜதந்திரியும் இந்த அளவிற்குப் பாராட்டியதில்லை.
இந்த வருட ஆரம்பத்தில் வாக்குறுதி வழங்கியதற்கு இணங்க அமெரிக்க அரசு இலங்கை அரசுடன் இணைந்து இச் சவாலான ஆனால் முக்கியமான அடியை முன்னெடுப்பதற்கு பணியாற்றும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆறு வருடங்களாக புலம்பெயர் அரசியல் போர்க்குற்றத்தை மையமாக வைத்தே சுழற்சியடைந்தது. அமெரிக்காவின் பிரச்சாரப் பீரங்கிகளாக புலம்பெயர் அமைப்புக்கள் செயற்பட்டன, இன்று புலத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்களின் தேசியத் தலைவிதி இலங்கை அரசின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜோன் கெரியின் அறிக்கையின் முழுமை:
MEEK SURRENDER OF USA AS THE ISLAND NATION’S TACTICS OF SETTING CHINA AGAINST US AND INDIA WAS THE MOTTO OF WAR CRIMINALS.
What started in Vaddukoddai in 1977 ended in Mullivaikal in 2009. That started in Mullivaikal in 2009 ended in Geneva in 2015. That started in Geneva in 2015 will end in ??? Good work Diaspora.