தமிழ் நாட்ட்ல் தேர்தல் வெளியேற்ற(Exit Polls) கருத்துக்கணிப்பின் அடிப்படியில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியக் கையகப்படுத்தும் என எதிர்வு கூறப்படுகின்றது. குடும்ப அமைப்பாக மாறிப்போன சீர்திருத்தவாதக் கட்சி ஜெயலலிதாவின் பாசிச பார்பனீய ஆட்சியைப் பிரதியிடும் நிலை தோன்றியுள்ளது. அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளுமே வாக்குப் பொறுக்கிக் கொள்வதற்காக தம்மாலான அனைத்துக் குறுக்கு வழிகளையும் கையாண்டனர். பெரும் தொகைப் பணம் பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரும்பாலான ஊடகங்கள், தமிழ்த் தேசியப் பிழைப்புவாதிகள் ஆகியன ஜெயலலிதாவின் பாசிச ஆட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டனர். குடும்ப சர்வாதிகாரத்திற்கும், பார்பனீய பாசிசத்திற்கும் இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டியில் குடும்ப சர்வாதிகாரம் வெற்றி பெற்றுள்ளது.
எது எவ்வாறாயினும் ஜெயலலிதாவைப் போன்று கருணாநிதி சாதீய ஒடுக்குமுறையாளர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியாது. கருணாநிதியில் வாக்கு வங்கி தாழ்த்தப்பட்ட மக்களை ஆதராமாகக் கொண்டது என்பது அதற்கு மற்றொரு காரணம்.
பார்பனீயத்தையும், ஊழல் அதிகாரத்தையும், ஒரு வகையான போலிஸ் பாசிசத்தையும் மக்களை ஒடுக்குவதற்குப் பயன்படுத்திய ஜெயலலிதா நீக்கம் செய்யப்படுவது சிறிய ஜனநாயக இடைவெளியைத் தோற்றுவிக்கும் என தமிழ் நாட்டிலிருக்கும் ஜனநாயக முற்போக்கு அணியினரின் கருத்து.
சீமான், நெடுமாறன் உட்பட்ட தமிழ்த் தேசிய வாதிகள் நேரடியாகவும் மறை முகமாகவும் தம்மை ஜெயலலிதாவின் பாசிசத்துடன் வழமை போல அடையாளப்படுத்திக்கொண்டார்கள்.
இந்த நிலையில் தேர்தல் வெளியேற்றக் கருத்துக்கணிப்புக்களின் அடிப்படையில் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகம் 30 அதிகப்படியான வாக்குகளைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.