சுன்னாகம் நீரையும் நிலத்தையும் அழிப்பதன் பின்புலத்தில் செயற்பட்ட பல்தேசிய வர்த்தக் நிறுவனமான எம்.ரி.டி வோக்கஸ் முதல் தடைவையாக இது தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மலேசியாவைத் தலைமையகமாக கொண்ட எம்.ரி.டி கப்பிடல் என்ற நிறுவனத்தின் இலங்கைக் கிளையாகச் செயற்பட்ட எம்.ரி.டி வோக்கஸ் உடன் பல்வேறு அரசியல் வாதிகளும், சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களும் தொடர்பிலுள்ளனர். இந்த நிறுவனத்திற்கு எதிராகவும் இதன் இயக்குனர்களுக்கு எதிராகவும் நடைபெற்ற போராட்டங்களின் விளைவாக நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தம்மை குற்றங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள முயலும் எம்.ரி.டி வோக்கஸ், யாழ்ப்பாணத்தில் யுத்தம் உச்சமடைந்திருந்த காலத்தில் மக்களுக்குச் சேவையாற்றும் நோக்கத்துடனேயே அங்கு சென்று மின்சாரம் வழங்கும் சேவையில் ஈடுபட்டதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான லால் பெரேரா விடுத்துள்ள அறிக்கையில் நீர் மாசடைந்தமைக்கும் தமது நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தார்மீகப் பொறுப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில் நாம் கடந்த காலத்திலும் குறைந்த அளவு பாதிப்பை அல்லது தீங்கையேனும் இழைத்திருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் இலங்கையில் அதிக இலாபத்தில் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கைப் பங்கு சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான எம்.ரி.டி வோக்கஸ் சேவை நோக்கத்துடன் இயங்கும் ‘புரட்சிகர இயக்கமில்லை’. இலாப வெறியோடு இயங்கி மக்களின் வாழ்வாதாரங்களை அழித்த கிரிமினல்களின் கூட்டு. அவர்களுக்கு எவ்விதத் தர்மீகப் பொறுப்பும் கிடையாது.
அவர்கள் தமது பங்குதாரர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கே அஞ்சுகின்றனர் என அறிக்கையின் மற்றொரு பகுதி மறைமுகமாகக் குறிப்பிடுகிறது.
“எமது பங்குதார்களுக்குப் பதில் அளிக்கக் கடப்பாடு உடையதும் பொறுப்புக்கூறக்கூடியதுமான எமது நிறுவனத்தின் செயற்பாடுகளால் யாழ் பொது மக்கள் பாதிப்படைய இடமளிக்கமாட்டோம்”. என அறிக்கையில் பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான நிர்ஜ் தேவா என்பவருக்கு எதிராக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ‘பறை-விடுதலைக்கான குரல்’ என்ற அமைப்பு அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவரது இணையத்தளம் மூடப்பட்டது. இன்று பங்குதாரர்களைப் பாதுகாக்கும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமது குற்றங்களிலிருந்து தப்பித்துக்கொள்ள எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம், நீர் மாசடைதல் பிரச்சனை 1987 ஆம் ஆண்டிலிருந்தே காணப்படுவதாக யாழ் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் என்பவரை ஆதாரம் காட்டி செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
இதே வேளை நிர்ஜ் தேவாவிற்கு எதிராக அவரது தொகுதியில் பிரச்சார நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள பறை-விடுதலைக்கான குரல் அமைப்புத் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பைச் சார்ந்த குமார் தெரிவிதார்.
நீதித் துறையின் விசாரணை வரைக்கும் பொறுமை காக்குமாறு தெரிவித்துள்ள இந்த நிறுவனம் நீர் நச்சாவது தொடர்பாக யாழ்ப்பாணத்தில் வழக்குத் தொடர்ந்தவர்களைப் பயங்கரவாதிகள் எனப் போலிக் குற்றம் சுமத்தி வழக்கைத் திசைதிருப்ப முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ லங்கா விமானப் படை பொறுப்பாளனாக ஒரு இனப்படுகொலைக்காரன் லால் பெரேரா எனும் பெயரில் செயற்பட்டவன். இந்த லால் பெரேரா வேறொருத்தன். முழுப் பெயர் ஓ.டி.என் லால் பெரேரா. இவனது பொறியியற் துறை அனுபவமும் இராணுவம் அல்லது விமானப்படை சம்பந்தப்பட்டது எனும் சந்தேகம் நிலவுகிறது.
வரலாறு அறியாதவர் எனக் கூறி பார எண்ணெய் (HFO) -ஐ எரிபொருளாக பொறுப்பின்றி மட்டுமல்ல வேண்டுமென்றே உதாசினமாக பயன் படுத்தியதற்கு பொறுப்புக் கூற வேண்டியவன் இவன். மலேசிய எம்.டி.டீ கப்பிடல் நிறுவனம் எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனமாக கொழும்பில் கால் பதித்து முதலில் 15MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் திட்டதையே சுன்னாகத்துக்கு முன்னெடுத்தது. அத்திட்டம் 30MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் திட்டமாக 2010 அளவில் உருவெடுத்தது. கடைசியில் 25MW வலுவுக்குக் குறைந்த மின்சக்தி நிலையங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆர்ரய்ச்சிகளில் இருந்து பெரிதும் விடுபடலாம் என்ற காரணமாக் இருக்க வேண்டும் 24 MW பார எண்ணெய் (HFO) பாவிக்கும் மின்னிலையமாக உருவெடுத்தது. 2011, 2012 அளவிலேயே நிராஜ் தேவா, ரவி விஜேரட்ன ஆகிய அரசியல் செல்வாக்குக் கொண்ட தனவந்தர்கள் அதுவும் ஏற்கனவே கழிவுப் பொருட்களில் இருந்து எரி சக்தி தயாரிக்கும் வியாபாரிகள் (நிராஜ் தேவா கப்பல்களுக்கு இலங்கையை மையப்படுத்தி பார எண்ணெய் விநியோகிப்பதில் பெரும் லாபமீட்டி வந்தவன்; இப்பொழுதும் அதில் கை தேர்ந்த வியாபாரி. ஐரோப்பிய ஒன்றியம் இறுக்கமான தடைகள் பலவற்றை பார எண்ணெய் (HFO) வகைகளில் அமுல்படுத்தி வருவதும் ஸ்ரீ லங்கா ஆகலும் கெட்ட பார எண்ணெய் (HFO) எரிபொருள் வகைகளை அப்புறப்படுத்தும் ஒரு கழிவு கிடங்காகவும் மாறியுள்ளது) எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தில் இயக்குனன்களாக பங்கேற்றார்கள்.
பார எண்ணெய் (HFO) பாவனையோடு ஆரம்பிக்கப்பட்ட 2011-இன் இறுதி மாதங்களிலேயே சுன்னாக மின்சாரசபை வளாகத்தை அண்டிய பகுதிகளில் தற்போதைய விபரீதம் முதன் முறையாக உருவானது.
ஓ. டீ. என். லால் பெரேரா 2007 இலிருந்து நேரடி ராணுவ அடக்கு முறை ஆட்சியின் கீழ் முடங்கியிருந்த யாழ் குடாநாட்டில் சுன்னாக மின்னிலை செயற்பாடுகளில் முகாமைத்துவ வேலைப்பாடுகளில் செயற்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் பல உண்டு.
இவையனைத்திலும் ‘ஜெஹான் ப்ரசஸன்ன அமரதுங்க’ எனும் இன்னொரு தனவந்தன் முதலில் நொதர்ன் பவர் கொம்பனி-இல் பங்குகளை கொடுக்கல் வாங்கல்கள் செய்த வரலாறும் கவனிக்கப் படவேண்டியது.
2010 ஒக்டோபர் அளவில் எம்.டி.டீ வோக்கர்ஸ் 100% நோதர்ன் பவர் கொம்பனி-ஐ கையகப்படுத்தி ‘மகிந்த சிந்தனை’ ‘வடக்கின் வசந்தம்’ என்ற இனவழிப்பு திட்டத்தினுள் இயங்க ஆரம்பித்த போது இயக்குனன்கள் பின்வருமாறு:
Directors of NPC as at 25 October 2010 :-
Dato’ Azmil Khalili Bin Khalid (மலேசிய பிரஜை)
Jehan Prasanna Amaratunga (ஸ்ரீ லங்கா பிரஜை)
Lee Leong Yow (மலேசிய பிரஜை)
Keith George Cowling (பிரித்தானிய மற்றும் மலேசிய பிரஜை)
Tee Kim Siew (மலேசிய பிரஜை)
Omathage Don Nilanjan Lal Perera (ஸ்ரீ லங்கா பிரஜை) .. இராணுவ/விமானப் படை பொறியியலாளன்? … தற்போது எ.டி.டீ வோக்கர்ஸ் பீ.எல்.சீ எனும் கட்டுமானத்துறை சார்ந்த கொழும்பில் இயங்கும் உப நிறுவனத்தில் நிராஜ் தேவா போன்றோர் இயங்கும் தாய் நிறுவனமான் எம்.டி.டீ வோக்கர்ஸ் நிறுவனத்தால் பதவியுயர்த்தப்பட்டுள்ளான்.
அதனோடு அலம்பியது தான் இப்போதைய விடயத்தை மேலும் திசை திருப்பும் யுக்தி.
சுன்னாக மின்சாரசபை வளாகம் ஸ்ரீ லங்கா விமானப்படையால் 1990 ஆகஸ்ட் மாதத்தில் (சுன்னாகச் சந்தையும் தாகப்பட்டு கலைக்கப்பட்ட காலமளவில்)விமாம குண்டு வீச்சுத்தாக்கத்துக்கு இலக்கானதும் அதனால் எங்கும் வெடிப்புக்கள் கவனிக்கப்படாத நிலக்க்கீழ் குதங்குகள் இருந்தனவா என்பன பற்றி கதைப்பது நீர் மாவசடைவைச் சரி செய்ய வரலாற்று ரீதியான உதவியாகலாம். இதற்கு இந்த ஓ.என்.டி லால் பெரேரா உதவலாம். இல்லையென்றால் வாயைப்பொத்திக் கொண்டு இருக்கவேண்டும்.
[மெலுள்ளவை அனைத்தும் ஆதாரங்களுடன் வாசித்தறியப்பட்டவை. இந்த ஆதாரங்களுக்கு தேவையிருப்பின் இனியொரு இணைய தளத்தினூடாக தொடர்பு கொள்ளவும் ]
ஆராய்ச்சிகளுக்கு உதவக் கூடிய மேலதிக வாசிப்புக்கள்:-
ஓ.என்.டி லால் பெரேரா ஆடிய அண்மைய கூத்து
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdhu3.html
http://www.ft.lk/2015/02/12/wrong-steps-could-may-aggravate-jaffna-water-contamination-issue-northern-power/
பார எண்ணெய் (HFO) மற்றும் தொடர்புடைய பல விடயங்கள் அடங்கிய ஒரு அண்மைய ஆய்வுச் செய்தி:-
http://www.foilvedanta.org/articles/cairn-lanka-and-the-corporate-takeover-of-the-tamil-seas/
எந்த நிலை நீடித்தால் யாழ்ப்பாணம் மட்டும் இல்லை பன்னாட்டு நிறுவனங்களை ஆதரிக்கும் இந்தியாவுக்கும் எதே நிலைமை தான்