இஸ்லாமியப் பயங்கரவாதிகள் பாரிஸ் நகரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கானவர்களைக் கொன்று போட்ட சமபவம் அனைத்து உலக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே வேளை துருக்கியின் உல்லாசப் பயண நகரான அந்தாலியாவில் G-20 நாடுகளின் பத்தாவது உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் அங்கிருந்த அங்கத்துவ நாடுகள் இற்கு பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய உளவுத்துறையின் ஆதாரங்களை முன்வைத்த புட்டீன், 40 நாடுகள் ISIS இஸ்லாமியப் பயங்கரவாத அமைப்பிற்குப் பணம் வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த 40 நாடுகளில்G-20 இல் கலந்துகொள்ளும் நாடுகளும் உள்ள்டங்கும் என மேலும் தெரிவித்துள்ளார். தவிர ISIS அமைப்பு சடவிரோத பெற்றோலிய வியாபாரத்தில் ஈடுபடுவதையும் நிழல் பட ஆதரங்களுடன் விளக்கியுள்ளார்.
தவிர, பயங்கரவாதிகளை அழிப்பதற்காக தம்முடன் இணைந்து செயற்படுமாறு விடுத்த அழைப்பை அமெரிக்கா நிராகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்கில் சர்வாதிகாரி ஆசாத்தை ரஷ்யா ஆதரிக்கும் அதே வேளை அமெரிக்க அணி ஆசாத்திற்கு எதிராக பயங்கரவாதிகளை வளர்த்துவருகிறது.