“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அகில இலங்கை தமிழ் காங்கிரசிற்கு ஆதரவாகச் செயற்படும் தமிழ் சிவில் சமூக அமையம் இலங்கையிலுள்ள சிவில் அமைப்புக்களில் ஒன்றாகும். தனது இணையத்தில் குறிப்பிவது போன்று தமிழ் சிவில் சமூக அமையத்திற்கு நோர் எட் நிதி வழங்கிவருகிறதா என்பதற்கான ஆதாரங்கள் இல்லை இது குறித்த அந்த அமைப்பே தெளிவுபடுத்த வேண்டும்”
என்று இனியொருவில்.. வெளியான செய்தி ஆய்வுக் கட்டுரை தமிழ் சிவில் சமூக அமையம் ஏகாதிபத்திய நிதியில் இயங்குவதான தோற்றப்பாட்டைத் தருவதாக பல தரப்புகளிடமிருந்தும் முன்வைக்கப்பட்டது. சிவில் சமூகங்கள் தொடர்பாக 2008 ஆம் ஆண்டிலிருந்து இனியொருவில் பல தத்துவார்த்தக் கட்டுரைகள் வெளியாகின அதன் தொடர்ச்சியாகவே இந்தச் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாகச் தமிழ்ச் சிவில் சமூக அமையத்துடன் தொடர்புகொண்ட போது தாம் வெளிச் சக்திகள் எவரிடமும் நிதி பெற்றுகொள்வதில்லை என ஆதாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
தவிர, சில தனி நபர்கள் பெரும் சிக்கல்க்ளுக்கு மத்தியில் தமது சொந்தப் பணத்தை பயன்படுத்தியே தமிழ் சிவில் சமூக அமையத்தை நடத்திவருவதாகத் தெரியவருகிறது.
இனியொரு…வில் வெளியான இச் செய்தி தமிழ்ச் சிவில் சமூக அமையத்தின் மீதான அவதூறாகக் கருதப்பட வாய்ப்புக்கள் உண்டு
இது தொடர்பாக தமிழ்ச் சிவில் சமூக அமைத்திடமும் அது சார்ந்த ஏனைய ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களிடமும் மன்னிப்புக் கோருகிறோம்.
மூலக் கட்டுரை: