இன்று இந்தியாவின் அவமானச் சின்னமாக டெல்லி காட்சியளிக்கிறது. உலகின் அவமானச் சின்னமாக இந்தியா காட்சி தருகிறது. இந்திய இந்துத்துவ அதிகாரவர்க்கத்திற்கு ஏதோ ஒரு காரணத்திற்காக முட்டுக்கொடுக்கும் மனிதர்களும் இந்த அவமானத்தின் தூதுவர்களாகச் செயற்படுகின்றனர். டெல்லியில் தமது நாளாந்த வாழ்க்கைக்காக மட்டுமல்ல 800 மில்லியன் உலக மக்களின் ஒவ்வொருவரதும் வாழ்விற்காகவும் விவசாயிகள் டெல்லியில் அமைதியாகப் போராட ஆரம்பித்து இப்போது எழுபது நாட்களாகும் நிலையில், இந்திய அரசு டெல்லியில் தனது சொந்த மக்கள் மீது யுத்தத்தைப் பிரகடனப்படுத்தியுள்ளது. விவசாயிகள் போராடும் பகுதிகளில் நீர் வினியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாராம் இல்லை. அலை பேசி, இன்டர் நெட் போன்ற அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. முள் வேலி, தெருக்கள் பதிக்கப்பட்டுள்ள முள், 14 அடுக்கு பாதுகாப்பு வலையம் என்று விவசாயிகளையும் விவசாயத்தையும் பெரு முதலாளிகளின் சொத்தாக மாற்றுவதற்காக இந்திய அரசு அப்பாவிகள் மீது போர் தொடுத்துள்ளது.
இந்திய மத அடிப்படை வாத மத்திய அரசு, கூலிக்கு வேலை செய்யும் குண்டர் படைகளை விவசாயிகள் மத்தியில் விதைத்து ஊடுருவல் வேலைகளைச் செய்து வன் முறையைத் தூண்டிவிடுகிறது. இந்திய சமூகவிரோத அரசின் இந்த யுத்த நடவடிக்கை உலகில் வாழும் ஒவ்வொரு மனிதன் மீதும் நடத்தப்படும் தாக்குதல். மனித குலம் இந்தியாவை இன்று உலகின் அவமாமாக் கருதும் சூழலை உருவாக்கிய இந்துத்துவா ஆதிக்கம் அழியும் நாள் தொலைவில் இல்லை என்ற உறுதியுடன் இந்திய விவசயிகளின் போராட்டம் தொடர்கிறது.
3 லட்சம் விவசாயிகள் டெல்லியில் நடத்தும் மனித குலத்திற்கான இந்தப் போராட்டமே இத்துவரை உலகில் நடைபெற்ற நீண்ட அதிக மக்கள் கலந்துகொண்ட போராட்டமாகக் கருதப்படுகின்றது.
ஒன்பது கிரமி விருதுகள் உட்பட இசைக்கான பல்வேறு விருதுகளை மட்டுமல்ல மனித உரிமைச் செயற்பாட்டுக்கான பல பாராட்டுக்களையும் பெற்றவர் ரியான என்ற பாடகி. வெறுமனே பாடகி என்ற தனது எல்லைகளை கடந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாகத் தனது கருத்துக்களைப் பதிவிடும் ரியானா,இந்திய விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக உலகம் மௌனம் சாதிப்பது ஏன் என்ற ஒற்றை வரியை தனது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட , சுவீடனின் சுற்றுச் சூழல் ஆர்வலரான கிரீட்ட தான்பேர்க் விவசாயிகளுக்கு தான் ஆதரவளிப்பதாக கருத்துத் தெரிவிக்க, உலகின் பல்வேறு பிரபலங்கள் விவசாயிகளின் போராட்டத்தைத் திரும்பிப்பார்க்க ஆரம்பித்தனர்.
கிரீட்டா தான்பேர்க்கிற்கு எதிராக காவி உடையணிந்த அரச ஆதரவாளர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி அந்தச் சிறுமியின் கொடும்பாவியை எரித்து இந்திய அவமானத்தை ஆழப்படுத்தினர். நரேந்திர மோடியின் காட்டுமிராண்டி அரசு விவசாயிகள் மீது நடத்தும் யுத்தத்தை உலக மக்கள் திரும்பிப்ப் பார்க்க ஆரம்பித்ததும், ரியானாவிற்கு எதிராக வெளிவிவகார அமைச்சு அறிக்கை விடுத்து தனது கோமாளித்தனத்தை உலக மக்களுக்கு வெளிப்படுத்திற்று.
இந்திய அரசை இயக்கும் மத வெறி பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இன் சமூகவலைத் தள குழுக்கள் ரியானாவை ஆபாசப்பட நடிகை என பொய்யான பிராச்சாரத்தை முடுக்கிவிட இந்திய நடிகைகளும் அதனை தமது ரிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இந்தியாவின் அழுகிய முகத்தை உலகிக்குக் வெளிக்காட்டினர். சச்சின் டென்டூல்கர், சேஷாத்திரி உட்பட்ட கிரிக்கட் பிரபலங்கள் ஒரே நேரத்தில் ஒரு வகையான ரிவிட்டுக்களைப் பதிவிட்டனர். தமிழ் நாட்டையும் கேரளாவையும் தவிர ஏனைய மானிலங்களிலிருந்து பெரும்பாலான பிரபலங்கள் ஒரே மாதிரியான பதிவுகளை வெளியிட்டனர்.
மனித குலத்தின் மீதான இந்திய அரசின் இத் தாக்குதலுக்கு எதிராக தமிழ் நாட்டில் அரசியலுக்கு வரப்போவதாக தமது திரைப்பட வெளியீட்ட்டு நிகழ்வுகளில் கூறும் எந்தப் தமிழ்ப் பிரபலங்களுக்கும் ரியானாவின் மக்கள் பற்று இல்லை. அடுத்த திரைப்பட வெளியீட்டில் பேசினால் தான் உண்டு. தமிழனா தெலுங்கனா என ஒவ்வொரு மனிதனையும் டீ.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தும் சீமான் கும்பலும் அதனோடு ஒட்டியிருக்கும் புலம்பெயர் குழுக்களும் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகக் கருதுவதே கிடையாது. எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி அரசு இலங்கை அரசுடன் முரண்பட்டு தமிழர்களை ஆதரிக்கும் என உலகின் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொரோனா கொடுமைகளுக்கு மத்தியில் விவாதம் நடத்தும் தமிழர்களின் நாற்பதுவருட கால போராட்ட வரலாற்றை எப்படி உரைப்பது?