2008 ஆம் ஆண்டில் வெளித்தெரிந்த பொருளாதார நெருக்கடி என்று அழைக்கப்பட்ட முதலாளித்துவ நெருக்கடி இன்று கிரேக்கத்தில் மையம் கொண்டு உலகப் பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கிரேக்க அரசு ஐரோப்பிய ஒன்றியம் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வரி விதிப்பதற்குப் பதிலாக வறிய மக்களிடமிருந்து பணம் வசூலித்து கிரேக்கத்தின் கடனைத் திருப்புச் செலுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியன் இணைந்த கூட்டான ரொரைக்கா முன்வைத்த நிபந்தனைகளை கிரேக்க அரசு மறுத்து மக்களிடம் தீர்பு வழங்குமாறு கோரியது.
எதிர்வரும் ஐந்தம் திகதி கிரேக்கத்தில் பொதுசன வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதன் போது மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று முடிவெடுப்பர்.
எதிர்வரும் ஏழாம் திகதிவரை வங்கிகளை மூடுமாறு அந்த நாட்டின் அரசாங்கம் அறிவித்துள்ளது. மூலதனக் கட்டுப்பாடு என்று கூறப்படும் இந்த நடவடிக்கை வங்கிகளிலிருந்து பெருமளவு பணம் வெளியேறுவதைத் தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதனிடையே ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் அவசர நிதிக் காலத்தை நிடிக்க வேண்டும் என்றும், கடனைத் திருப்பிச் செலுத்த இரண்டுவருட காலத் திட்டம் ஒன்று வேண்டும் என கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் விடுத்த வேண்டுகோளை ஐரோப்பிய ஒன்றியம் நிராகரித்தது.
அதே வேளை நேற்று செவ்வாயன்று நள்ளிரவு உலக நாணய நிதியத்திற்குச் செலுதவேண்டிய கடனை கிரேக்க அரசு திருப்பிச் செலுத்தும் கால எல்லை முடிவடந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடொன்று ஐ.எம்.எப் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தவறவிட்ட முதல் நாடாக கிரேக்கம் தன்னை அறிவித்துக்கொண்டுள்ளது.
ஐ.எம்.எப் இற்கு கடனைத் திருப்பிச் செலுத்த கிரேக்க அரசு மேலும் கால அவகாசத்தைக் கோரியுள்ளது.
கிரேக்கம் சர்வசன வாக்கெடுப்பை முன்மொழிந்த மறு நாளே உலகம் முழுவதும் பங்கு சந்தை வியாபாரம் சரிவடைய ஆரம்பித்தது.
London’s FTSE 100 – 1.97%, Germany’s Dax – 3.5%. USs’ Dow Jones 1.95% என்ற அளவுகளில் சரிவடைந்தன.
கடனைத் திருப்பிச் செலுத்த மறுத்து கால அவகாசத்தை நீடிக்குமாறு கிரேக்க அரசு விடுத்த கோரிக்கையை ஐஎம்.எப் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது.
கிரேக்க அரசு தன்னை இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு என அறிவித்துக்கொண்டாலும், உற்பத்தி தனிநபர்களது பிடியிலேயே உள்ளது. அது மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்களுக்கான தேர்தல் முறையும் மக்கள் ஜனநாயகமும் கிரேக்கத்தில் இல்லை.
எது எவ்வாறாயினும் கிரேக்க மக்கள் மீது திணிக்கப்பட்ட நிபந்தனைகளை கிரேக்க அரசு நிராகரித்து பொதுசன வாக்கெடுப்பைக் கோரியமையும், ஐ.எம்.எப் என்ற கந்துவட்டி நிறுவனத்திற்குக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுத்தமையும் ஐரோப்பிய வரலற்றில் திருப்புமுனை. கிரேக்கத்தில் இடதுசாரிகள் என அழைத்துக்கொள்ளும் அரசு ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தேசியவாதக் கொள்ளைகையை வரித்துக்கொண்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிக்கன நடவடிக்கை என்ற தலையங்கத்கில் மக்கள் மீது சுமத்தப்படும் வரிச் சுமைக்கு எதிராகவும், சமூக உதவித் தொகைக் குறைப்பிற்கு எதிராகவும் போராட்டங்களும் எழுச்சிகளும் தோன்றியுள்ளன. இவர்களின் குரலாக கிரேக்க அரசு கருதப்படும். அது ஏகாதிபத்தியங்களின் சுரண்டலைத் தணிக்கும் ஆற்றல் படைத்தது.
பாசிசப் பண்புகொண்ட ‘ஐரோப்பிய ஜனநாயகம்’ பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி மக்களை மிரட்டி ஜனநாயகத்தை அழித்து வருகின்றன. கிரேக்கத்தின் இந்த நடவடிக்கை முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.
The posturing by the Greek PM is for local consumption only, behind the scenes the culprit is on his knees to the EU !