சுன்னாகம் நஞ்சு நீர் தொடர்பான காலவரையற்ற உண்ண்ணாவிரதப் போராட்டம் நல்லூர் ஆலய முன்னிலையில் தொடர்கிறது. ஒரு பெண்ணும் ஆறு ஆண்களுமாக ஏழு பேர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். சுன்னாகம் பிரதேச மக்களும் மாணவரகளும் உணவு மறுப்புப் போராட்டத்தில் பல்வேறு இடைவெளிகளில் கலந்துகொள்கின்றனர்.
உண்ணாவிரதத்தின் இடை நடுவில் நுளைந்த வட மகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். எதிர்வரும் 12ம் திகதி வரைக்கும் கால அவகாசம் தருமாறும் அதற்கிடையில் பதில் தருவதாகவும் கோரினார். அதனை நிராகரித்த போராடும் மக்களும் மாணவர்களும் முதலில் பதில் தாருங்கள் எனக் கோரினர்.
போராட்டக்காரர்களின் கோரிக்கை ஏதோ சிக்கல் நிறைந்த அரசியல் பிரச்சனைகள் எல்லாம் கிடையாது. வலிகாமம் பிரதேசத்தில் நீரை அருந்தலாமா இல்லையா என்பது மட்டுமே.
தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் வாக்குப் பொறுக்கிகளுக்கு இதற்கான குறைந்த பட்சப் பதிலை வழங்குவதற்குக் கூட கால அவகசம் தேவைப்படுகிறது. மறு அறிவித்தல் வரும் வரைக்கும், அல்லது ஆய்வுகள் முழுமைப்படும் வரைக்கும் நீரை அருந்த வேண்டாம் கூறுவதற்குக் கூட வக்கில்லை. இவர்கள் தம்மை மக்களின் பிரதிநிதிகள் என்று கூறுவதற்குப் பதிலாக அதிகாரவர்க்கத்தின் அடியாட்கள் என்று கூச்சமில்லாமல் கூறிக்கொள்ளலாம்.
முடிவு வரும் வரை நீரை அருந்தக் கூடாது என்று கூறுவதற்குக் கூட துணிவற்ற விக்னேஸ்வரன் கும்பலின் நோக்கம் என்ன? நீரை அருந்தி தாம் வாக்குப் பொறுக்கும் மக்கள் கூட்டம் மரணித்துப் போனாலும் துயரடையப் போவதில்லை என்பதே இதன் மறுபக்கம். தமிழினம், தேசியம், தாயகம் போன்ற கோட்பாடுகள் எல்லாம் புலம்பெயர் நாடுகளில் மட்டும் பிழைப்பிற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, ஈழத்திலும் இதே நிலைதான் என்பதை விக்னேஸ்வரன் குழுமம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
விக்னேஸ்வரன் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றியதால் புலம் பெயர் நாடுகளில் புல்லரித்துப்போனவர்கள் அது வெறும் தீர்மானம் மட்டுமே, நடவடிக்கை அல்ல என்று உணரவில்லை.
குழந்தை கூட பதில்தரவல்ல கேள்வியொன்றிற்கு அரசியல் அனாதைக் குழந்தையான விக்னேஸ்வரன் ‘வரும் ஆனால் வராது’ என்ற தொனியில் பூவும் பொட்டுமாக பதில் சொல்லியிருக்கிறார். வன்னியில் நடந்தது இனப்படுகொலை என்பது வெளிப்படை. அது இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு வலிகாமத்தில் இனச்சுத்திகரிப்பிற்குத் துணை செல்வது அருவருப்பானது.
ஒரு வருடங்களுக்கு மேலாக சுன்னாகம் நீரை நச்சாக்கும் நிறுவனம் தொடர்பாக இனியொருவில் தகவல்கள் வெளியிடப்பட்டும் மூச்சுக்கூட விடாத புலம்பெயர் தேசியப் பிழைப்புவாதிகள் மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தைக் குழப்பாமலும், குழப்பி மின்பிடிக்காமல் இருக்கவும் நம்பிக்கை கொள்வோமாக.
சுன்னாகத்தில் அதி பார டீசல் கழிவுகளை வெளியேற்றி அழிப்பு நடத்திய கிரிமினல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நிர்ஜ் தேவா பிரித்தானிய ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த உறுப்பினர்.
எம்.ரி.டி வோக்கஸ் என்ற இந்த நிறுவனத்திலிருந்து தனக்கு மாதாந்த வருமானம் கிடைப்பதாக ஐரோப்பியப் பாராளுமன்றத்தில் அவர் வழங்கியுள்ள வருமானம் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார். தற்செயலாகப் புலம்பெயர் அமைப்புக்கள் போராட்டம் நடத்த விரும்பினால், சுன்னாகத்தில் பிரபாகரன் ஒளிந்திருந்து போராட்டத்தைத் வழி நடத்துகிறார் என்று லண்டன் வீதிகளில் கொடிகளோடு வலம் வந்து போராடும் மக்களைக் காட்டிக்கொடுக்காமல் நிர்ஜ் தேவாவைத் தண்டிக்கக் கோரி போராட்டம் நடத்தலாம். இது வெறும் ஆலோசனை மட்டுமே. அதற்காக துரோகிப் பட்டம் கட்டி மரணதண்டனை விதிக்க தமது மஞ்சள் தேசிய ஊடகங்களை அணுகாமாட்டார்கள் என நம்புவோம்.
இன்று உலக மக்கள் திருபிப் பார்க்கும் வகையில் நல்லூரில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துணிந்து நடத்துபவர்கள் வரலாற்றின் முக்கிய புள்ளியில் இதனைச் செய்திருக்கிறார்கள். தேசிய முகமூடி அணிந்துள்ள அயோக்கியர்களின் மாயையை அறுத்தெறிந்து மக்கள் சக்தி என்றால் என்ன என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.
அச்சத்தின் மத்தியில் தமிழர்களை வாழ வைத்தலையே தமது நோக்கமாகக் கொண்ட பேரினவாத அரச பாசிசத்திற்கு தமது உறுதியை வெளிப்படுத்தியுள்ளார்கள். வடக்குக் கிழக்கில் மட்டுமல்ல இலங்கை முழுவதிலும் போராடும் மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்கள். உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கி சக்திகளை நோக்கி இப் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டு வெற்றி நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.
திட்டமிட்டு மாசுபடுத்தப்பட்ட நிலக்கீழ் நீர் சுத்திகரிக்கப்பட வேண்டும்.
எமது தேசத்தின் மண் யாருக்காகவும் எப்போதும் கயேந்தியதில்லை. நீரும் நிலமும் காதல் செய்து பசுமை வயல்கள் செழித்த செம்மண் நிலம். புலம்பெயர் நாடுகளின் கொங்ரீட் பொந்துகளைச் சொர்க்கமாக எண்ணும் பலருக்கு சுன்னாகத்தின் செம்மணின் வலிமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
விக்னேஸ்வரன் பதில் தரும் வரைக்கும் போராட்டம் தொடரும் என அறிவித்திருக்கிறார்கள். உண்ணாவிரதத்திற்கு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் அவலத்தில் அலைந்து திரிந்த வேளைகளில் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, அறிக்கைக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பாட்டாளி மக்கள் கட்சியின் ஈழ வடிவமான அனந்தி சசீதரன் போன்ற யாரும் தமது பகுதிகளுக்கு வந்து தமது பிரச்சனைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளக்கூட முனையவில்லை என புலம்பெயர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய ஒருவர் தெரிவித்தார். சுன்னாகம் பகுதியிலிருந்து கருத்துத் தெரிவித்த அவர் தமது சொந்த மண்ணிலேயே அகதி முகாம்களில் வாழ்வது போன்று வாழ்வதாகக் குறிப்பிட்டார்.
போராட்டத் திடலிலிருந்து பேசிய கிரிஷாந் என்பவர் தேசியத்தைப் பயன்படுத்தி மக்களின் போராட்டத்தை அரசியல் வாதிகள் அழிக்க முனைகிறார்கள் என்றார். சிங்கள் முஸ்லீம் மாணவர்கள் கூடப் போராட்டத்தில் கலந்துகொள்வதாகக் குறிப்பிட்டார்.
விக்னேஸ்வரன் இனக்கொலையாளி மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது சிங்கள்-தமிழ் நல்லிணக்கம் ஏற்படுத்துகிறேன் என்று தனது நடவடிக்கைக்குப் பொழிப்புச் சொன்னார். போராடும் மாணவர்கள் விக்னேஸ்வரனுக்கு இன்று வகுப்பெடுத்திருக்கிறார்கள். நல்லிணக்கம் அதிகார வர்க்கத்கின் ஒருங்கிணைவில் கிடைக்கப் போவதில்லை. அவரக்ளுகு எதிராகப் போராடும் மக்கள் மத்தியிலிருந்தே தோன்றும் என்ற நடைமுறையை விக்னேஸ்வரனுக்குக் கற்பித்திருக்கிறார்கள். சிறிதளவாயினும், சிங்கள மாணவர்களும் குடி நீர் கேட்டுப் போராடும் மாணவர்களோடு இணைந்துளார்கள்.
மகிந்த பாசிஸ்டுக்கள் வெலிவேரியாவில் சுத்தமான குடி நீருக்காகப் போராடிய போது அவர்களை துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்தார்கள். ஜனநாயகம் பிடித்துத் தருவதாக சடுகுடு விளையாடும் மைத்திரி அரசு துப்பாக்கி தூக்கினால் முகமூடி களன்றுவிடும். இது மக்கள் தம்மை இறுக்கமாகக் அணி திரட்டிக்கொள்வதற்குரிய சந்தர்ப்பம். அவர்களின் உறுதியான போராட்டம் இதயசுத்தியும் மக்கள் பற்றும் கொண்ட ஒவ்வொரு மனிதனாலும் ஆதரிக்கப்படும்.
விதை குழுமம் ,பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஓன்றியம் ,மாணவர்கள் இணைந்து நடத்தும் இப் போராட்டம் வரலாற்றின் திரும்பல் புள்ளி.
சுன்னாகம் பேரழிவு:ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குத் தடைவிதித்த கூட்டமைப்பின் மாகாண அரசு
சுன்னாகம் அழிவைத் தலைமை தாங்கியது நானே :சம்பிக்க ஒப்புதல் வாக்குமூலம்
கல்லோயாவிலிருந்து வெலிவேரிய ஈறாக சுன்னாகம் வரை
சுன்னாகத்திலிருந்து குடாநாட்டை அழித்தவர் சிறீலங்கன் ஏயர் லைன்ஸ் இன் இயக்குனரானார்
சுன்னாகத்தில் வாழ்ந்தவர்களின் நரம்பு மண்டலம் பாதிப்படையலாம்: சம்பிக்கவும் தேவாவும் பொறுப்பு
யாழ்ப்பாண மக்களின் உயிர்குடிக்கும் பல்தேசிய நிறுவனம் அச்சத்தில் அறிக்கை
யாழ் குடாநாட்டின் நீரையும் நிலத்தையும் அழிப்பதற்கு கூட்டமைப்பும் துணை போகிறது
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
சுன்னாகத்தில் அழிப்பு தொடர்கிறது:துணைக்குழுக்களும் NGO உம் தலையீடு
இனவழிப்பிற்கு எதிராக முழங்கிய பறை
சுன்னாகம் நீரை நஞ்சாக்கிய கிரிமினல் நிறுவனத்தின் மோசடி அம்பலம்
இந்த பிரச்சனை குறித்து விசமத்தனமான அவதூ று கதைகளை தமிழ்வின் போன்ற புலம் பெயர் இணையங்கள் பரப்ப தொடங்கியுள்ளன. தமக்கு பிடிக்காத எந்த விடயத்தையும் பேரினவாதிகளோடு முடிச்சு போட்டு சேறடிப்பது புலன்பெயர்ந்த இந்த இணைய தளங்களின் மனநோயாகும். மிகவும் நுணுக்கமாக சேறடிக்கும் இவர்கள் போராட்டக்காரருடன் பேச போனவர்களின் வயது அனுபவம் மரியாதை குறித்து கூச்சலிடுகிறார்கள். அமிர்தலிங்கம் கூட வயதானவர்தான் அனுபவஸ்தர்தான் .அவர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப் பட்ட போது இந்த வேட்டை மிருகங்கள் எங்கு போனார்கள். யோகேஸ்வரன் ஏன் அவரது மனைவி போன்றோர் வயது அனுபவம் மரியாதை என்பவற்றிற்கு தகுதி அற்றவர்களா? விக்கினேஸ்வரனுக்கு யாரும் துப்பாக்கி நீட்டவில்லை. தமது நியாயமான கோபத்தையே வெளிப்படுத்தினார்கள். தரைப்படை விமானப்படை கடற்படை என்று புலுடா விட்டுக்கொண்டிருந்த பிரபாகரனை நம்பி படிப்பினை பெற்றவர்கள் இனி இந்தஅரசியல் வாதிகளை எப்படி நம்புவார்கள்?
யாழில் கிணற்று நீரைப் பருகலாமா? கூடாதா? என்ற பாமரனின் கேள்விக்கு தீர்ப்பு சொல்ல முடியாமல் பூசி மெழுகிய முன்னைநாள் நீதிபதிக்கு இந்த மூடனின் ஆழ்ந்த அனுதாபங்கள்.