இந்துத்துவா என்ற பயங்கரவாதத் தத்துவம் இன்று உலகின் ஒவ்வொரு மூலையையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அரச பயங்கரவாதமாக விருட்சமடைந்திருக்கும் இத் தத்துவம், இந்தியவையும் அதன் அண்டை நாடுகளையும் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளையும் அச்சுறுத்துகிறது. ஐரோப்பிய நாடுகளின் நிற வாத நாஸிக் கட்சிகள் இந்திய அரச பயங்கரவாதிகளுடனும் சங் பரிவார குழுக்களுடனும் நேரடியான தொடர்புகளை பேணுவதை ஐரோப்பாவில் பல அரசியல் கட்சிகள் அச்சத்துடன் உற்று நோக்கி வருகின்றன.
பாரிஸ் நகருக்கு அடுத்ததாக பிரான்ஸ் தேசத்தின் பொருளாதார நகரமாகக் கருதப்படுவது லியோன். அந்த நகரில் ஆறம் நூற்றாண்டில்ரிந்தே மக்ரேபிய குடிப் பெயர்ச்சிகள் காணப்பட்டன. இந்த நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கிறீஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதப் போரின் மையமாக லியோன் காணப்பட்டது. இன்று இலங்கைத் தமிழர்கள், அரேபியர்கள், மக்ரேபியன் நாட்டவர்கள் வாழும் பிரதேசமாக லியோன் காணப்படுகிறது. அங்கு பிறந்த பிரஞ்சு இந்துத்துவ மத வெறியர் தான் சாரதா தேவி.
இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிப் பகுதியில் ஜேர்மனிய நாஸிக் குழுக்களின் உளவாளியாக இந்தியாவில் வேலை பார்த்த சாவித்திரியின் இயற்பெயர் மக்ஸிமயானி ஜூலியா போர்தாஸ். ஆங்கில பெண்பணிக்கும் பிரஞ்சுப் பிரசையான கிரேக்கருக்கும் பிறந்த சாவித்திரி, 1940 ஆம் ஆண்டு இந்திய பிராமணர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதன் பின்னர் இந்துத்துவாவின் ஐரோப்பிய தூதுவராகச் செயற்பட்ட சாவித்திரி ஹிலர் கிருஷ்னரின் ஒரு அவதாரம் என்ற கருத்தைப் பரப்பினார். யூதர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான நாஸிக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்த சாவித்திரி, தலை மறைவு இயக்கம் ஒன்றையும் நடத்தினார்.
1982 ஆம் ஆண்டு மரணிப்பதற்கு முன்னர் 20 நாஸிக் கோட்பாட்டைப் பரப்பும் நூல்களை எழுதியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் என்ற இந்து பயங்கரவாத அமைப்பின் நிறுவனரான சவார்கருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய சாவித்திரி தனது நூல்களில் சவார்கர் தொடர்பாகக் குறிப்பிட்டுள்ளார். தவிர இந்திய பிராமணர்கள் வெள்ளையின ஆரியர்கள் என்றும் ஆளப்பிறந்தவர்கள் என்றும் தனது நூலான L’Etang aux lotus (The Lotus Pond)இல் குறிப்பிடுகிறார்.
சாவித்திரி தேவி தான் முதலில் ஐரோப்பிய அமெரிக்க நிறவாதிகளுக்கும் இந்திய இந்துத்துவா பயங்கரவாதிகளுக்குமான பாலமாக அமைந்தவர்.
அதன் இன்றைய தொடர்ச்சி தெற்காசியாவை மட்டுமன்றி முழு உலகத்தையும் அழிவை நோக்கி இட்டுச்செல்லும் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக அமையலாம் என பல்வேறு ஜனநாயக முற்போகாளர்கள் கருதுகின்றனர்.
“கிறீஸ்தவ மதம் யூதர்களிடமிருந்து தோன்றியது, இந்துத்துவா மட்டுமே ஆரியர்களிடமிருந்து தோன்றியதால் அது மட்டுமே உயர்குடி ஆரியர்களுக்கான மதம்” எனக் கோடிட்டுக் காட்டும் சாரதா தேவி, ஆரியர்களின் ஆதிக்கத்தை மறு பேச்சின்றி ஆரியர்கள் அல்லாதவர்கள் ஏற்றுக்கொள்வதை இந்தியாவில் மட்டுமே பார்க்கமுடியும் என்று பெருமிதம் கொள்கிறார்.
ஆரியர் அல்லாதவர்களை எதிர்ப்பின்றி ஆரியர்களுக்குச் சேவை செய்யும் சேவர்களாக இந்துத்துவாவினால் மட்டுமே மாற்ற முடியும் என்கிறார்
கலியுகத்தில் உதித்த கிருஷ்ண அவதாரமே ஹிட்லர் எனக் குறிப்பிடும் சாரதா தேவி, பல போராட்டங்களின் பின்னர் ஆரியர்கள் முடுமையான அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள் என்கிறார். சாவித்திரி தேவியின் மருமகன் சுமந்த பனர்ஜி, கூறும் போது சாவித்திரியின் தத்துவமே இன்றைய நரேந்திர மோடியின் ஆட்சி என்கிறார்.
நரேந்திர மோடியை அடியாளாக்கி ஆட்சியில் அமர்த்தும் திட்டத்தின் மூலவரான சவார்கர் 1939 ஆண்டில் சாவித்திரி தேவி எழுதிய நூல் ஒன்றிற்கு முன்னுரை எழுதினார். இன்றைய ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பயங்கரவாதக் கும்பல்களின் மூல வேர் ஜேர்மனிய நாஸிக்களது, இத்தாலிய சர்வாதிகாரி முசோலினியினதும் கோட்பாடுகளிலிருந்தே தோன்றியது. ஹிட்லரின் பின்னான நவ நாசிசத்தை இந்துத்துவா பயங்கரவாதத்தின் கோட்பாட்டு வடிவமாக்குவதில் சாவித்திரி தேவியன் பங்கு பிரதானமானது. குறிப்பாக இந்துத்துவா மட்டுமே பிராமண ஆரியர்களின் ஆதிக்கத்தை ஆரியர் அல்லாதவர்களின் எதிர்ப்பின்றி நிலை நிறுத்தும் எனக் கருதினார்.
தமிழ் நாட்டில் அர்ஜுன் சம்பத், எல்.முருகன் போன்ற தாழ்த்தப்பட்டவர்கள் தமக்கு எதிரான கோட்பாடிற்கு தாமே சேவைசெய்யும் அவமானகரமான நிலையை 1930 ஆம் ஆண்டுகளிலேயே சாவித்திரி தேவி கண்டறிந்து கூறியமை வியப்பிற்குரியதே. நன்றியுள்ள நாய்கள் போன்று தமது பார்பனீய எசமானர்களின் கால்களைச் சுற்றித்திரியும் இக் கும்பலை நிராகரிக்கின்ற உயரத்தில் தமிழக மக்கள் நிமிர்ந்து நிற்கின்றனர். சாவித்திரி தேவியின் ஆரிய – இந்துத்துவா கோட்பாட்டை தமிழ் நாட்டிற்குள் நுளையவிடாமல் தடுக்கும் மக்கள் மத்தியில் இந்த அடியாட்கள் காணாமல் போய்விடுவார்கள்.
ஆர்.எஸ்.எஸ் தோற்றம்பெற்ற காலத்திலேயே உலகின் பயங்ரவாத அமைப்புக்களின் தலைமைக் கோட்பாடாக அந்த அமைப்பின் கோட்பாடு தோற்றம் பெறும் என சாவித்திரி தேவி எதிர்வுகூறியது இன்று வெளிப்படையாகத் தெரிகிறது.
2011 ஆம் ஆண்டு நோர்வேயில் பொது வெளியில் 77 பேரை பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்த பயங்கரவாதி போர்விகின் திட்ட அறிக்கையில் இந்துத்துவாவே உலகில் முஸ்லிம்களை அழிப்பதற்கான தத்துவத்தை கொண்டிருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.
2013 ஆம் ஆண்டில் சாவித்திரியின் நவ நாஸிக் கோட்பாடு தமது கட்சியின் வழிகாட்டியென கிரேக்கத்தின் நிறவாதக் கட்சியான “தங்க விடியல்” தனது இணையதில் குறிப்பிட்டிருந்தது,
அமரிக்க நிறவெறி இசைக்குழுவான கறுப்பு உலோகம் நடத்தும் வானொலி நிகழ்ச்சியில் இந்துதுவாவின் கலியுக யுகத்தை முடிவுக்குக் கொண்டுவர அவதாரம் எடுத்தவரே ஹிட்லர் என்ற சாவித்திரியின் வாசகம் உண்மையானது என பிரச்சாரம் செய்யப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கொள்கைவகுப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் பனொன், நரேந்திர மோதின் பார்பனீயக் கொள்கைகளைப் பாராடுகிறார். நிறவாத சஞ்சிகையான Breitbart News Network இன் பிரதம ஆசிரியரான அவர் இந்துத்துவா கொள்கைகளால் தான் ஆட்கொள்ளப்பட்டதாகக் கூறுகிறார்.
இந்தியாவைப் போன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆட்சியதிகாரத்தைக் கையகப்படுத்தும் அளவிற்கு நாஸிக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. இந்தியாவின் பெரும்பான்மை மக்களைப் போன்று அவர்கள் பின் தங்கிய சிந்தனையைக் கொண்டிருக்கவில்லை.
நவ நாசிகளின் பின் தளமாக இந்தியா செயற்பட ஆரம்பித்துள்ளது என்பது இன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இசுலாமிய எதிர்ப்பு, பிராமணர்கள் – ஆரியர் அல்லாதவர்கள் மீதான எதிர்ப்பு, தொழிலாளர் – விவசாயிகள் மீதன ஒடுக்குமுறை என்ற பொதுத் தளத்தின் இணையும் இப் பயங்கரவாதக் கும்பல்களுக்கு இந்திய ஆர்.எஸ்.எஸ் அதிகாரம் நம்பிக்கை தரும் புதிய நட்சத்திரம்.
ஐரோப்பிய நாடுகளின் தீவிர வலதுசாரி நிறவாத பாராளுமன்ற உறுப்பினர்களில் 23 பேர் கொரோனா தொற்றுற்கு ஒரு மாதம் முன்பதாக இந்தியாவை நோக்கிப் படையெடுத்தனர். காஷ்மீரின் சிறப்புரிமை பறிக்கப்படு அங்குள்ள மக்கள் திறந்த வெளிச் சிறைக்குள் அனாதரவாக அடைக்கப்பட்டதைப் பார்த்து மகிழ்வதற்காகவே இக் கும்பல் இந்தியாவிற்குச் சென்றது. இந்த்திய அரசியல் வாதிகளுக்கும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் மறுக்கப்பட்ட இந்த உரிமை 23 ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. பிரான்சின் ஜோன் மரி லூபென் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட நியோ நாசி அமைப்பான தேசிய முன்னணி மோதியால் வரவேற்கப்பட்ட இக் குழுவில் அடக்கம்.
பிரித்தானிய உள்துறை செயலாளர் பிரிதி பட்டேலின் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு, ஜேர்மனிய நியோ நாஸிக் குழுவான ஏ.எப்.பி இன் இந்திய இந்துதுவா அமைப்புக்களுடனான தொடர்பு, இலங்கையில் அதிகரிக்கும் சங்கப்பரிவார் கும்பல்களின் ஆதிக்கம் என்ற இந்துத்துவ பயங்கரவாதம் இந்திய எல்லைகளைக் கடந்து உலகளாவிய அளவில் வியாபிக்கிறது. பயங்கரவாதிகளிடையேயான தொடர்புகள் மனித குலத்தை அச்சுறுத்துகிறது.
இவை அனைத்தையும் கடந்து, தமிழ் நாடு ஆர்.எஸ்.எஸ் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. தமிழ் நாடு மானில அரசையே சூழ் நிலைக் கைதியாக்கி ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடிமைப்படுத்திய போதும் மக்களின் வீரம் செறிந்த போராட்டம் இன்றைய உலகின் உண்மையான கதா நாயகர்களாக அவர்களை உயர்த்தியுள்ளது. நாளைய வரலாறு தமிழ் நாட்டு மக்களின் விரம் செறிந்த சமரசத்திற்கும் விட்டுக்கொடுப்பிற்கும் அப்பாலான போராட்டத்தை போற்றும். அவர்கள் உலக மக்களின் காவலர்கள் போன்று செயற்ப்படுகிறார்கள். நவீன மின்னிய சாதனங்களில் ஆரம்பித்து தேனீர் கடை கூட்டங்கள் வரை உலகின் ஒரு மூலையில் நடத்தப்படும் தமிழக மக்களின் போராட்டம் இன்னொரு மூலையில் போராடும் கருப்பினத்தவ்ரின் போராட்டத்தோடு தொடர்புடையது. உலக பயங்கரவாதிகளுக்கு இந்துத்துவா தத்துவார்த பலத்தைக் கொடுக்கிறது என்றால், நவீன தமிழ் நாட்டின் சிற்பி பெரியாரின் கோட்பாடு அதற்கெதிரான வீரம்செறிந்த ஜனநாயகப் போராட்டத்தின் பலம் என்பதில் சந்தேகங்கள் இருக்க முடியாது.
https://foreignpolicy.com/2020/01/21/india-kashmir-modi-eu-hindu-nationalists-rss-the-far-right-is-going-global/
https://www.huffpost.com/entry/steve-bannon-bhagavad-gita_b_589b9b55e4b04061313b7746?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAIMZr9nrpI4MbS-xiOlXqS79g-4nUg-_3NqVb-FrkCJ7zlo8EGY9r2hU52yu26oHLksxcrVWouDu3B71UkbwK4rS0XBlvJTqR3QPHmxysGNWoHW1hAVssrkTq-Z0U-2Go_hSDuov2F1EWko1B2pqV4yrffcqTCifWviMYTVx3YKb
https://www.bbc.co.uk/news/magazine-41757047
http://lust-for-life.org/Lust-For-Life/_Textual/NicholasGoodrickClarke_HitlersPriestessSavitriDeviTheHinduAryanMythAndNeoNazism_1998_278pp/NicholasGoodrickClarke_HitlersPriestessSavitriDeviTheHinduAryanMythAndNeoNazism_1998_278pp.pdf