தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பாக இயங்கிவந்த உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும் நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம், யாழ்ப்பாண ஆளுனர் மேஜர்.ஜெனரல் சந்திரசிறீயின் ஆலோசகராகப் பதவியேற்றுள்ளார். குமரன் பத்மநாதன், கருணா போன்ற முன்னை நாள் புலிகளின் பிரதானிகளில் ஒருவராக இவர் கருதப்படுகின்றார். இன்றைய நாடுகடந்த தமிழீழ உறுப்பினர்களோடு நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த
எதிர்வீரசிங்கம் முன்னை நாள் வன்னி இராணுவத் தளபதியான ஆளுனரின் ஆலோசகர்.
எதிர்வீரசிங்கம் மட்டுமன்றி இலங்கை அரசோடு வர்க்க சமரச் அம் செய்துகொண்டவர்கள் பலர். பல்வேறு இயங்களாலும், பின்னதாகப் புலிகளாலும் தலைமைதாங்கப்பட்ட ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அரசியல் ஆரம்பத்திலிருந்தே விதேசிய விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கு எதிரான விதேசிய சக்திகளின் அரசியல் குறித்து அறிந்திராத அப்பவிகள் ஆயிரக்கணக்கில் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இவர்களின் அளப்பரிய தியாகங்களை இழப்புக்களையும் பயன்படுத்திக்கொண்ட தேசிய வியாபாரிகள் இன்று ஒருவர் பின் ஒருவராக இலங்கை இனப்படுகொலை அரசோடு இணைந்து கொள்கின்றனர்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மாற்றத்திற்கான அரசியலை மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் முன்னணிப்படை முன்வைக்கும் போது இவர்கள் வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்படுவார்கள்.
புலிகளின் ஆதிக்கத்தின் விளைவால் உருவான தமிழ்த் தரகுகள் .1.புலிகளது புதிய தமிழ்த் தரகு ,2.புலிகளால் பழிவாங்கப்பட்ட பாரம்பரிய தமிழ்த் தரகு
புதிய சிந்தனை. தேவையான பார்வை .
.
.
அந்த பார்வையினூடு இன்னும் சில என் கண்ணில் பட்டவை .
.
3.புலிகளால் வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது(தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம்)
புலிகளது புதிய (புலன்பெயர்ந்திருந்த) தமிழ்த் தரகு , புலி எதிர் புதிய(புலன்பெயர்ந்திருந்த) தமிழ்த் தரகு, மற்றும் புலி எதிர் அத்துடன் /அல்லது தமிழ் தேசியம் சார் புதிய(புலன்பெயர்ந்திருந்த) தமிழ்த் தரகு, புலி எதிர் அத்துடன் /அல்லது தேசியம் எதிர் புதிய (புலன்பெயர்ந்திருந்த)தமிழ்த் தரகு ,போன்றவையும் உள்ளனவா? என்பதையும் தெளிவு படுத்துக
எது எங்கு எப்படி நடந்தாலும் புலிகளின் படம்காட்டுவதையே தாங்கள் தாரகமந்திரமாக கொண்டுள்ளதை ஆரோக்கியமாகக் கருதமுடியாது.
எது எங்கு எப்படி நடந்தாலும், புலிகளை தவிர்த்து எந்த அமைப்பின் படம்காட்டுவது ஆரோக்கியமாகக் கருதமுடியும்?.
.
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் புலம் பெயர் அமைப்பாக இயங்கிவந்த உலகத் தமிழர் பேரவை என்பது தவறான தகவலா? அல்லது .
.
உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும் நிறுவன உறுப்பினருமான கலாநிதி எதிர்வீரசிங்கம் என்பது தவறான தகவலா? புரியலை Mahendra.
பயங்கரவாதிகளாக புலிகளைத் தடைசெய்து ‘புலிகள் என்றால் தமிழன்‘. ‘தமிழன் என்றால் புலிகள்‘. என்ற நிலையையும் உருவாக்கி அதனை இன்று முழு உலகமும் உள்வாங்க செய்யப்பட்டுள்ளது!. இந்தநிலமை ஜீரணித்துவிடாது பாதுகாக்கப்படும் வரைதான் இந்திய, சிறீலங்காவின் இன அழிப்பின் கொடூர முகங்களும் பாதுகாக்கப்படும். அதற்காகவே தமிழன் தலை எங்கு சிறிது நிமிர முற்பட்டாலும் அடித்து அமுக்கிவிடுகிறார்கள். தமிழனை அவர்களின் ஈனத்தனமான பரப்புரைகளால் நம்பவைக்கும் திறனிலும் வெற்றிகண்டு வருகின்றனர். இன்று உளவாளிகள் நிறைந்த தமிழினத்தில் இதனைவிடவும் கேவலமான செயற்பாடுகள் வெளிவருமென எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தமிழனே தமிழனைப் பயங்கரவாதியாகக் காட்டி எதிரிக்குப் பொல்லுக்கொடுக்க முயலும் செயலானது, ஒளியைத் தேடிச்செல்ல முற்படும் விட்டில் பூச்சிகளுக்கு ஒப்பானது.
ஆகவே ,
எது எங்கு எப்படி நடந்தாலும், புலிகளை தவிர்த்து மற்றைய அமைப்புகளின் படங்களை மட்டும் காட்டுவது தான் ஆரோக்கியமாகக் கருதமுடியும் என்கிறீர்களா ?..
.அல்லது .
.
கலாநிதி எதிர்வீரசிங்கம் உலகத் தமிழர் பேரவையின் முதலாவது தலைவரும் நிறுவன உறுப்பினருமில்லை என்பது தான் சரியான தகவலா? .
“புலிகளது புதிய (புலன்பெயர்ந்திருந்த) தமிழ்த் தரகு” என்று ஒன்றுமே இல்லை என்கிறீர்களா ?
புரியலை Mahendra.
யார் இந்த எதிர்வீரசிங்கம் ?
2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் தனது புதல்வர் அர்ஜுனுடன் வன்னிக்கு சென்ற இவர், தமிழீழ அரசியல்துறையுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டதோடு, தனது மகனை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்.
சிங்களப் பெண் ஒருவரை மணம்முடித்த இவரது மகன் அர்ஜுன் ஓரிரு மாதங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகராக உயர்ந்ததோடு, கொழும்பில் இயங்கிய தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் திட்ட இணைப்பாளராகவும், முகாமையாளராகவும் பதவி வகித்தார். சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகர் ஹரீம் பீரிசுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த இவர், 2005ஆம் ஆண்டு (சுணாமிக்கு பின்னர்) முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் கொழும்பு சென்ற பொழுது அவரை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக (அப்போது) விளங்கிய, ரெஜி சந்தித்து, நிகழ்வில் கலந்து கொண்டார். ரெஜியுடன் அருச்சுணா எதிர்வீரசிங்கமும் பில் கிளிங்டனைச் சந்தித்துள்ளார்கள்.
நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் போன்று காண்பித்து வன்னியில் உயர்மட்டத் தொடர்புகளைப் பேணிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் மற்றும் இவரது மகன் அருச்சுணா எதிர்வீரசிங்கம், நீண்ட காலமாக சிங்கள அரசின் கைக்கூலியாக இயங்கியதையே இவரது செய்கை உணர்த்தி நிற்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இத்தனை உளவாளிகளை வைத்துக்கொண்டா நாம் தமிழீழ போராட்டத்தை நடத்தியிருக்கிறோம் ?