ஐரோப்பிய ஒன்றியத்தின் வரலாற்றில் முதல் தடவையாக கிரேக்க மக்கள் பல் தேசியப் பணக்கொள்ளைக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். கிரேக்கத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்த நாட்டைச் சூறையாடிய வங்கிகளும் பல்தேசிய நிறுவனங்களும் கிரேக்க அரசை கடனாளி அரசாக மாற்றியிருந்தன. பல் தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வரிக் குறைப்பு செய்த அதே வேளை மக்களிடமிருந்து அதிக வரி அறவிடப்பட்டது.
சமூக உதவித் தொகை மற்றும் ஓய்வூதியம் போன்றன குறைக்கப்பட்டன. ஐரோப்பிய மத்திய வங்கியும், உலக நாணய நிதியமும் வழங்கிய கடன் தொகையில் பெரும் பகுதியை வங்கிகளும், பல்தேசிய வியாபார நிறுவனங்களும் சூறையாடிக்கொள்ள உழைக்கும் மக்கள் வறிய நிலைகுத் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் சிஸ்ரா என்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டமைப்பு கடந்க ஆண்டு ஆட்சியை கையகப்படுத்தியது.
தொடர்ச்சியாகச் சூறையாடப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான முழக்கங்களோடு முன்வந்த சிஸ்ரா மட்டுமே ஒரே தெரிவாகக் காண்ப்பட்டது.
சிஸ்ரா ஆட்சியமைத்ததும், ஐரோப்பிய ஒன்றியம் மேலும் கடன் வழங்க முன்வந்தது. மறுபடி உழைக்கும் மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்து பல்தேசிய நிறுவனங்களை வியாபாரத்திற்கு அனுமதிக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைக்குமாறு கிரேக்க அரசைக் கோரியது. மூன்று யூரோக்களாகவிருந்த கிரக்க உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நீக்கக் கோரியது. ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரித்து ஓய்வூதியத்தைக் குறைக்கக் கோரியது.
இதனை தனது நாட்டின் மீதான மிரட்டல் என்று கூறிய கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் மக்களிடமே முடிவை விட்டுவிடுவதாகக் கூறி நேறு 5ம் திகதி ஜூன் மாதம் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றிற்கு அழைப்பு விடுத்தார்.
அழைப்பு விடுத்த முதல் நாளே பல்தேசியக் கோப்ரட் ஊடகங்களிலிருந்து ஐரோப்பிய அரசுகள் வரை அனைத்து ஏகாதிபத்தியக் கூறுகளும் பொது வாக்கெடுப்பில் சிப்ராசிற்கும் சிஸ்ராவிற்கும் எதிராக வாக்களித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு பிரச்சாரம் மேற்கொண்டன.
அவ்வாறு ஏற்றுக்கொள்ளாவிட்டால், கிரேக்கம் வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டு அழிவது உறுதியென்று மக்களை மிரட்டின. கிரேக்கத்தில் வெளியாகும் பெரும்பாலான ஊடகங்களும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு வழங்குமாறு மக்களைக் கோரின. தீவிர இடதுசாரி அரசு கிரேக்கத்தில் பொருளாதார அவலத்தை ஏற்படுத்த முனைவதாக 24 மணி நேரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
எல்லாவற்றிற்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக நாணய நிதியத்திற்கு ஆதரவான கிரேக்க மக்களே அதிகம் என்றும், ஆக எதிர்த்தரப்பு வாக்களிப்புத் தோல்வியடையும் என்றும் போலியான கருத்துக்கணிப்புக்களை வெளியிட்டு மக்களை குழப்பத்திற்கு உள்ளாகின.
தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த ஐந்தம் திகதி மாலை வரை ஊடகங்கள் அனைத்தும் இதனையே திரும்பத்திரும்ப பிரச்சாரம் மேற்கொண்டன. பரபப்புச் செய்திகளால் மக்களின் சிந்தனையில் வலிந்து மாற்றாத்தை ஏற்படுத்தாத இடதுசாரி ஊடகங்கள் மட்டும் உண்மையை வெளிப்படுத்தின.
இவர்கள் அனைவரதும் முகத்தில் அறைந்து பதில் சொன்ன கிரேக்க மக்கள் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி, உலக நாணய நிதியம் ஆகியவை முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். 62 வீதமான கிரேக்க மக்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என வாக்களித்தனர்.
அதிர்ச்சியில் உறைந்துபோன ஏகாதிபத்திய அரசுகள், வாக்களிப்பு தவறானது என்ற பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவில்லை எனின், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கிரேகம் வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அதனை அரசாங்கம் மக்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறியதால் வாக்களிப்பு நியாயமற்றது என முதலாளித்துவ கோப்ரட் ஊடகங்கள் பிரச்சாரத்தை கட்டவிழ்துவிட்டுள்ளன
2001 – 2007 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரேக்கத்தில் பணப்புழக்கம் அதிகரித்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை அதிகரித்தன. பல்தேசிய அங்காடிகள், உணவகங்கள், குடிபானங்கள், மருந்து நிறுவனங்கள், உல்லாசப்பயண நிறுவனங்கள் போன்றன கிரேக்கத்தை வளப்படுத்துவதாகக் கூறி தமது சூறையாடலை ஆரம்பித்திருந்தன. இந்த நிறுவனங்களுக்கான வரிவீதம் ஏனைய ஐரொப்பிய நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவாகக் காணப்பட்டதால் கொப்ரட்களின் சொர்க்கபுரியாகக் கிரேக்கம் திகழந்தது.
இவற்றின் சூறையாடலை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியம் பணப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய வியாபார நிறுவனங்களிடம் வரி அறவிடுமாறு கூறவில்லை. மாறாக அரசிற்கு கடன் வழங்கிற்று. கடன் தொகைக்கான வட்டியைத் திருப்பிச் செலுத்த மக்களைச் சூறையாடுமாறு கிரேக்க அரசை ஐரோப்பிய ஒன்றியம் கோரியது.
2008 ஆம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியில் கிரேக்கமும் சிக்கியது. நிதிவளம் ஒரு சில தனி நபர்களிடமும், நிறுவனங்களிடமும் குவிந்துவிட மக்களின் கொள்வனவுத் திறன் குறைவடைந்தது. இதனால் சிறிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பல்தேசிய நிறுவனங்கள் அசுர பலத்தைப் பெற்றுக்கொண்டன. அரசுகளை அவர்களே தீர்மானித்தார்கள்.
2010 ஆம் ஆண்டில் £169 பில்லியன் தொகையை கிரேக்க அரசிற்கு வழங்கிய ஐரோப்பிய ஒன்றியமும், உலக நாணய நிதியமும் கிரேக்க அரசைச் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அழைப்புவிடுத்தன. மீண்டும் உழைக்கும் மக்களின் ஊதியத்தைக் குறைக்குமாறும், வேலையற்றோருக்கான உதவித்தொகையிலிருந்து ஓய்வூதியம் வரைக்குமான அனைத்து உதவித்தொகைகளையும் அரைவாசியாகக் குறைக்குமாறு கிரேக்க அரசைக் கோரின. அதற்கு இணங்கிய கிரேக்க அரசு மக்களை வறுமையின் பிடிக்குள் தள்ளின. பல்தேசிய வர்த்தக நிறுவனங்களும் வங்கிகளும் பணக்காரர்களும் தமது சலுககைகளைப் பெற்றுக்கொண்டு கிரேக்க அரசை ஆதரித்தனர்.
2014 ஆம் ஆண்டு சிஸ்ரா வெற்றிபெற்றதும் பல்தேசிய நிறுவனங்கள் முன்னிலும் அதிகமாகத் தமது பணத்தைக் கிரேக்க வங்கிகளிலிர்ந்து பெற்றுக்கொண்டு வெளியேறின. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலக நாணய நிதியம் ஆகியன முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுத்த சிஸ்ரா அரசு வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக கிரேக்கதிற்கு அதிக நிதியை வழங்கிய ஜேர்மனி அரசு இனிமேல் நிதி வழங்குவது சாத்தியமற்ற நிலை தோன்றியுள்ளது என்கிறது. உலக நாணய நிதியம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் இடதுசாரி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் சிஸ்ரா அரசிடம் வேறு திட்டங்கள் இதுவரை இல்லை. ஆனால் உற்பத்தியைத் தனியாரின் பிடியிலிருந்து விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க கிரேக்க மக்கள் வாக்களித்துள்ளார்கள். கிரேக்கத்தில் சோசலிசப் புரட்சிக்கான வாக்களிப்பாகவே நேற்றய தேர்தல் கருதப்பட வேண்டும்.
வாக்குப்பொறுக்கி அரசியல் என தேர்தலினை வசை பாடிவந்த இனியொருவின் ஆக்கமே தேர்தலினை புகழ்ந்திருப்பது காலத்தின் கோலம். இங்கு வாக்காளர்களினை விழிப்படையச்செய்வதே சரி. மாறாக சரியான நடைமுறைச்சாத்தியமான மாற்று இல்லாமல் தேர்தலினை நிராகரிப்பது சர்வாதிகாரத்திற்கே இடமளிக்கும்.