நேற்று கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிரான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. விசாரணைக்கு எதிராக கோத்தாபயவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தேசியக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஒழிப்பு ஆணையகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கைகளில் ஏந்தியிருந்த இலங்கைத் தேசியக் கொடியில் ஒரேஞ் மற்றும் பச்சை நிறங்கள் கொடியிலிருந்து நீக்கப்பட்டுப் புதிதாகத் தயாரிக்கப்பட்ட கொடியையே அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். இந்த இரண்டு நிறங்களும் தமிழ் மற்றும் இஸ்லாமியர்களைக் குறிப்பதாகும்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோரின் கைகளிலும், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கைகளிலும் தமிழர்களும் முஸ்லீம் தமிழர்களும் நீக்கப்பட்ட கொடியே காணப்பட்டன.
அயோக்கியர்கள் ஏந்தும் இறுதி ஆயுதம் தேசியவெறி என்பதைக் கோத்தா கும்பல் மீண்டும் நிறுவியுள்ளது.
கோத்தாபய ராஜபக்ச மற்றும் நோர்வே அரசு ஆகியவற்றின் ஆதரவில் தோற்றுவிக்கப்பட்ட பொதுபல சேனா என்ற பௌத்த சிங்கள நாசி அமைப்பு புலம்பெயர் புலிகள் பலம்பெற்று வருவதால் கோத்தாபயவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
சிங்கள பௌத்த பேரினவாதத்தைப் பாதுகாக்கும் வகையிலேயே இலங்கையின் அதிகாரவர்க்கம் தன்னைத் தகவமைத்துக்கொள்கிறது. அரசியல்வாதிகள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் அரசியல் கட்சிகள் வாக்குப் பொறுக்கவும் சிங்கள பௌத்தப் பேரினவாதம் பயன்படுத்தப்படுகின்றது.
பொது பல சேனா – நோர்வே,அமெரிக்கக் கூட்டுச் சதி – விலகும் மர்மம்