சிலோன் டுடே என்ற இணைய இதழுக்கு முன்னை நாள் பாதுகாப்புச் செயலாளரும் வன்னி இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியுமான கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளார். முதல் தடவையாக இவ்வாறு தெரிவித்த கோத்தாபய தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற்றுக்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர், ஜே.வி.பி கட்சிக்கு தெற்கிலுள்ள கருத்தியல் செல்வாக்குள்ள பலர் ஆதரவு வழங்கப்போவதாகத் தெரிவித்த பின்னரே அமெரிக்க ஆதரவுடன் கோத்தாபய தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருப்பதாகக் கடந்த வாரம் இனியொரு… செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (அமெரிக்க ஆசியுடன் கோத்தாபய இலங்கையின் அடுத்த ஜனாதிபதி?)
இலங்கையில் ஏற்படக்கூடிய அமெரிக்கா விரும்பாத ஆட்சி மாற்றத்தைத் தடுக்கும் வலிமை கோத்தாபயவிடம் மட்டுமே காணப்படுவதால் அமெரிக்காவின் ஆசியுடன் அந்த நாட்டின் இராணுவதால் பயிற்றுவிக்கப்பட்ட கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகும் சாத்தியங்கள் காணப்படுகின்றன.
இலங்கையின் பவுத்த பாசிச அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கிய கோத்தாபய ராஜபக்ச அதன் பின்னணியிலும் செயற்பட்டார்.
மைத்திரி, ரனில் அதிகாரத்தைக் கையகப்படுத்திய
பின்னர் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த கோத்தாபய கடந்த பெப்ரவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த அணியின் வெற்றிக்குப் பின்னர் நாடு திரும்பியிருந்தார்.
கோத்தாபய நாடு திரும்பியதும் முஸ்லீம்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இனப்படுகொலை உட்பட பல்வேறு கொலைகளுடனும் ஊழல் குற்றங்களுடனும் நேரடித் தொடர்புடைய கோத்தாபய ராஜபக்ச மீது இலங்கை அரசோ அன்றி அவர் வாழும் நாடான அமெரிக்காவின் அரசோ இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
கோத்தாபய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மைத்ரியே ஆதரவளிக்கிறார். கோத்தாபய மகிந்தவின் சகோதரராக இருந்த போதிலும் பசில் மற்றும் மகிந்த அரசியல் ரீதியில் அவரை எதிர்க்கிறார்கள். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதியாக் கூடிய பெயத்த சிங்கள வாக்குகளை கோத்தாபயவால் மட்டுமே பெற முடியும் என மைத்ரி கருதுகிறார். எனவே அவரது ஊழல் மற்றும் குற்றங்களிலிருந்து கைதாகாமல் மைத்ரி காப்பாற்றி வருகிறார். நீதிமன்றங்களுக்கும் அழுத்தங்களைக் கொடுத்து வருகிறார்.
மைத்ரிக்கு இம்முறை நடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது 4 சதவீத வாக்குகளே கிடைத்தன. முன்னர் பொது ஜனாதிபதியாக மைத்ரி வருவதற்கு கிடைத்த வாக்குகள் சுதந்திரக் கட்சியின் வாக்குகள் அல்ல.
1952. D.A.Rajapakse. The family still means something in national politics in Sri Lanka. 1970. Gothapaya Rajapakse. Sri Lanka Army. 1987. New York, USA.
He got some breathing place from Batticaloa for the time being. That is all to it.