இந்த வருட இறுதியில் அரசாங்கம், புலம்பெயர்ந்தோர் விழாவை நடத்தவுள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
நல்லிணக்க முனைப்பின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வாராந்த செய்தியாளர் சந்திப்பில் இன்று உரையாற்றிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த விழாவின் மூலம் புலம்பெயர்ந்தோரின் நல்லெண்ணத்தை இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார் புலம்பெயர்ந்த இலங்கையர்களில் புத்திஜீவிகள் மற்றும் நிபுணர்கள் நாட்டுக்கு வர விரும்புகின்றனர் அவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு துணையாக இருப்பர். இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம் புலம்பெயர்ந்தோர் அமைப்புக்களுடன் சந்திப்பு இடம்பெற்றது இதில், அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்றார் என்றும் கொலன்னே குறிப்பிட்டார்.
இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை புலம்பெயர்ந்தோருடன் இணைந்து நடைமுறைப்படுத்தி இறுதி சமாதானத்தை அடைய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கிறது என்றும் கொலன்னே குறிப்பிட்டுள்ளார்.
புலம் பெயர் அமைப்புக்களை தன்னார்வ உதவி நிறுவனங்களாக(NGO) உருமாற்றி இலங்கை அரசுடன் இணைத்துக்கொள்வதற்கான விழாவே இங்கு குறிப்பிடப்படுகிறது. இதற்கு மறுப்புத் தெரிவிப்பவர்கள் மீது போர்க்குற்றம் உட்பட பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்பதை எரிக் சுல்கையிம் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் நாடுகளிலுள்ள ஏனைய அமைப்புக்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என வெளிப்படையாகத் தெரிவிப்பார்களா என்பது சந்தேகமே.! தன்னார்வ நிறுவனங்களுக்கு மில்லியன்களை வழங்கும் அரச அமைப்புக்கள் புலம்பெயர் அமைப்புக்களை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. பொதுவாக மாவீரர் தினம் போன்ற நினைவு நிகழ்வுகளில் புலம்பெயர் அமைப்புக்கள் சம்பாதிக்கும் பணத்தை விட அதிகமாக வழங்கப்படுமானால், இலங்கை விழாவில் வைன் கோப்பையும் கையுமாகப் புலம்பெயர் அமைப்புக்களைக் எதிர்பார்க்கலாம்.
வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு – NRTSL
எம்மைப் பற்றி
வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு (NRTSL), ஸ்ரீலங்காவைத் தமது பிறப்பிடமாகவும், பூர்வீகமாகவும் கொண்டவர்களும், இப்பொழுது பிரித்தானியாவில் வதிப்பவர்களுமான, வௌ;வேறு அரசியல் சார்புகளையும், பல்வேறு தொழில்களையும் கொண்டவர்களால், 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்று இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தற்போது பிரித்தானியாவில் வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. எமது பார்வையில், அத்தனை பிரித்தானியத் தமிழர்களையும் ஒரே அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துதல் என்பது யாதார்த்தபூர்வமானதாக இருக்க முடியாது.
தாம் பிறந்த, தமது பூர்வீகமான, நாடான இலங்கையுடன், இன்னமும் இறுக்கமான பிணைப்பையும் தொடர்புகளையும் கொண்டிருக்கும் பிரித்தானியா வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்கள் பலர், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய ஒரு பல்லின தேசத்தைக் கட்டியெழுப்புதல், இனங்களுக்கிடையையான புரிந்துணர்வை ஏற்படுத்தி. நட்புறவுகளைப் பலப்படுத்துதல், நாட்டின் பொருளாதாரத்தையும் வளங்களையும் மேம்படுத்துதல் ஆகியன சம்பந்தமான செயற்பாடுகளிலும், பணிகளிலும், தாமும் ஈடுபட்டுப் பங்களிக்க வேண்டும் என்ற விருப்பினதும் அக்கறையினதும் வெளிப்பாடும், விளைவுமே. இந்த அமைப்பின் உருவாக்கத்திற்கான காரணியாகும்.
எமது நோக்கங்கள்
ஸ்ரீலங்கா வாழ் தமிழர்கள் அனைவரும், பொருளாதாரம், மதம், சமூகம், கலாச்சாரம் ஆகிய சகல துறைகளிலும் எதுவித இனப்பாகுபாடுகளுமற்ற சமனான வாய்ப்புக்களுக்கு உரித்துள்ளவர்களாக வாழவும், இலங்கையில் சமனான பிரஜைகளாக, கௌரவத்துடனும், பயமற்றதும், பாதுகாப்பானதுமான வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய உத்தரவாதங்களை உள்ளடக்கிய ஒரு அரசியல் அமைப்பினூடான தீர்வும், அதற்கான சட்டவாக்கங்களும், ஸ்ரீலங்காவின் அரசியல் யாப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையான வெளிநாடு வாழ் தமிழர்களின் ஆழ்ந்த வேட்கையும், அபிலாஷையும் ஆகும். நாம் அவற்றை ஏற்றுக்கொள்வதோடு, அவர்களுடைய இந்த உணர்வுகளில் பங்கும் கொள்கிறோம்.
இந்த மேன்மையான இலக்கை எய்துவதற்கு, நேர்மையுடனும், வினைத்திறனுடனும் செயலாற்றும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகிய சகல தரப்பினருடம் தொடர்புகளைப் பேணி, அவர்கள் இவை சம்பந்தமாக மேற்கொள்ளும் பணிகளில் ஒத்துழைப்புகளை நல்குவதோடு, நாமும் அவற்றில் ஈடுபடுவோம்.
வௌ;வேறு சமூகங்களுக்கிடையில் வெறுப்பையும் வன்முறைகளையும் தூண்டி, அவர்களைப் பிளவுபடுத்தவும், அவர்களுக்கிடையே வேற்றுமைகளையும், முரண்பாடுகளையும் வளர்க்கும் பிரச்சாரங்கள் மற்றும் செயற்பாடுகளினால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்க முயற்சிப்பவர்கள், தீர்மானமாகவும், காத்திரமாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டும் என எண்ணுகிறோம். அப்படியானோரைத் தகுந்த முறைகளில் தடுப்பதற்கும், தண்டிப்பதற்கும், சட்டபூர்வமாகவும் அமைப்புகள் ரீதியாகவும் வேண்டிய மாற்றங்களையும், அதற்காக பாதுகாப்பு, நீதி சம்பந்தமாக ஆக்கபூர்வமான பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்காகச் செயற்படுவோர்களுடன் நாமும் இணைந்து செயற்படுவோம்.
இவ்வமைப்பு பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்குகிறது என்ற வகையில், பிரித்தானிய மக்களுக்கும், பிரித்தானியா வாழ் ஸ்ரீலங்காத் தமிழர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வையும், நட்புறவையும் பலப்படுத்துவதோடு, ஸ்ரீலங்கா அரசிற்கும், பிரித்தானிய அரசிற்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை வளர்ப்பதற்குமான கடப்பாட்டையும் கொண்டுள்ளது.
வேண்டாம் தீவிரவாதச் செயற்பாடுகள்
வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு, பிரச்சாரங்கள், செயற்பாடுகள் மூலமாகவோ, அல்லது வேறு எந்த வகையிலுமோ, மீண்டும் ஸ்ரீலங்காவில் தீவிரவாதத்தையும், வன்முறையையும் வளர்க்கவோ, தூண்டவோ தூபம் போடுபவர்கள், ஒரு அரசியல் தீர்வை எய்துவதற்குத் தடைகளை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரின் முயற்சிகளை நாம் ஒறுத்து, அவற்றிற்கு எதிராகச் செயற்படுவோம்.
ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ்மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடியவர்கள், அம்மக்களால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், அம்மக்களால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் சமூகத்தின் தலைவர்களும்தான் என்பதே எமது நம்பிக்கையாகும். வெளிநாடுகளில் வதியும் நாங்கள் அவர்களுக்கு ஆலோசனைகள், உதவிகள் என்பவற்றை நல்கி அவர்களுக்குத் துணையாகவே செயற்பட முடியும், செயற்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
தேனி.கொம்
புலிகளின் போராட்டத்தையும் தமிழர்களின் அழிவையும்
ஆதரித்தவர்கழும் அவர்கள் சார்ந்த தமிழ் அமைப்புகழும் புலிகளின் அழிவின் பின்னர் எதற்காக அரசுடன் கை கொடுக்க முன் வருகின்றனர்.
இவர்களிற்கென்று தனியான கொள்கைகள் லட்சியங்கள் இருக்கின்றனவா? அதுமட்டுமல்ல புலிகளிற்கு அச்சமின்றி
தமது லட்சியங்களிற்காக துணிவுடன் வாழ்ந்தவர்களிற்கும்
அவர்கள் சார்ந்த அமைப்புகளிற்கும் நிகரானவர்களா இந்த
பிரித்தானியா தமிழர் பேரவையும், உலகத் தமிழர் பேரவையும்?
இவர்கள் மற்ற அமைப்புகளையும்சம்பந்தப்பட்டவர்களையும்
துரோகியாக்கியவர்கள். தாங்கள் செய்தது தவறு என ஒரு சிறு அறிக்கை விட்டுள்ளார்களா?
சிங்கள அரசிற்கும் சிங்கள அதிகாரிகளிற்கும் அடி பணியும் பிரித்தானியா தமிழர் பேரவையும், உலகத் தமிழர் பேரவையும் புலிகளிற்கோ அல்லது இலங்கைத்
தமிழர்களிற்கோ உரியதானதல்ல. சந்தர்ப்பவாத
லண்டன் வாழ் சில தமிழர்களின் பஞ்சாயமேயாகும்.
இலங்கை அரசினை விட தமிழர்களிற்கு ஆபத்தானவர்கள் தமிழர் பேரவையும், உலகத் தமிழர் பேரவையும்தான்.
பிரபாகரன் தலமையிலான புலிகளும் ஒருகாலத்தில் பிரேமதாசாவுடன் தேன்நிலவு கொண்டாடினார்கள். பிரேமதாசாவின் வேண்டுகோளுக்கமைய அமிர்தலிங்கத்தையும் கொலை செய்தார்கள். அவர்கள் வழி வந்த உலக, பிரித்தானிய தமிழர் பேரவை சிங்கள அரசுகளுடன் தேன்நிலவு கொண்டாடுவது அதிசயமல்ல.