இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கிலச் சஞ்சிகையான Frontline இலங்கை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அச் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றின் எதிரொலியாகவே சஞ்சிகை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை எனறு விமான நிலையப் பகுதிகளில் கருத்து நிலவுகின்றது.
நேற்று 13.02.15- காலை விமானமூலமாகக் கொண்டுசெல்லப்பட்ட சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
ஊடக சுதந்திரதை உறுதி செய்வோம் என உரத்துக் குரல்கொடுத்த மைத்திரி-ரனில் கூட்டணி தேர்தலுக்கு முன்னமே ஊடகங்களில் கைவைக்க ஆரம்பித்துள்ளது.
தமது ஒடுக்குமுறைக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களையே சிங்கள அதிகார வர்க்கம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்கிறது.
இலங்கையில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விடுதலைக்கான போராட்டம் மட்டுமே சிங்கள உழைக்கும் மக்களையும் கூட விடுதலை செய்யும்.