பிரஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதலாவது சுற்றில் சோசலிசக் கட்சி நிக்கோலா சார்கோசியின் குடியரசுக் கட்சிக்கு எதிராக 28.63 பெரும்பான்மையைப் பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டிலும் ஐரோப்பாவிலும் வெளி நாட்டவர்களுகு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்டுவந்த சார்கோசி தீவிர வலதுசாரி நிறவெறிக் கொள்கைகளைக் கொண்டிருந்தவர் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்.
சார்க்கோசியின் தாய் தந்தையர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு 27.08 வீதமான வாக்குகள் கிடைத்துள்ளன. அனைத்திலும் மேலாக நிறவெறி பாசிசக் கட்சியான தேசிய முன்னணிக்கு 18 வீத வாக்குகள் கிடைத்துள்ளன.
ஐரோப்பாவில் பொருளாதார நெருக்கடி ஏழைகளின் வாழ்வாதரத்தைப் கேள்விக்கு உள்ளாக்கும் நிலையில், அங்கு உறுதியான அரசியல் தலைமை இல்லாத நிலையில் நிறவெறிப் பாசிசக் கட்சி என்றுமில்லாதவாறு முழு நாட்டையும் அச்சுறுத்துகிறது.
Viva la Quebec, LIbre – General Charles de Gaulle. Liberte, Fraternite and egalite.