மகிந்த ராஜபக்ச போருக்கான அரசியல் தலைமையையும் அதே வேளை அதற்கான போர்க்களத் தலைமையை சரத் போன்சேகாவும் வழங்கினர் என இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார். இனக்கொலையை இராணுவரீதியில் தலைமைதாங்கிய சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஷல் என்ற இலங்கையில் அதி உயர் விருதை மைத்திரிபால வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
கொத்துக்கொத்தாக நிராயுத பாணிகளான மக்களைக் கொன்றதை வீரம் என்று விருது வழங்கும் இலங்கை அரசு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுத் தரப்போவதாகக் கூறுகிறது.
அமெரிக்கக் குடியுரிமை பெற்ற சரத் பொன்சேகா என்ற கொடூரமான இராணுவத் தளபதியின் படுகொலைகளும் போர்க்குற்றங்களும் நேரடியானவை. இலங்கையின் அதியுயர் சமூகவிரோதியை, சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டிய கொலையாளியை இலங்கை அரசு கௌரவித்துள்ளது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாகனத்தின் இலக்கமானது இதுவரை இலங்கை வீதிகளில் பயணித்த வாகனங்களில் காணப்படாத அடையாளத்துடன் கூடிய இலக்கமாக அது அமைந்துள்ளது.
வாகனத்தின் முன் பகுதியில் 5 நட்சத்திரங்களும் பின் பகுதியில் 5 நட்சத்திரங்களும் காணப்படுகின்றன.
பீல்ட் மார்ஷல் ஒருவரின் வாகனம் செல்கிறது என்பதை ஏனையோர் அறிந்து கொள்ளும் வகையில் விசேட அடையாளமாக இந்த நட்சத்திரங்கள் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.
தவிர, ஒரு தேசிய இனத்தின் சுய நிர்ணைய உரிமைக்கான நியாத்தை அடியோடு அழித்து இனப்படுகொலையைத் தலைமை தாங்கிய மகிந்த ராஜபக்ச என்ற கொலையாளியை மக்கள் மத்தியில் மீண்டும் கதாநாயகனாக்கியுள்ளது.
புதிய மொந்தையில் பழைய கள்