இன்றைய உலகின் அவமானச் சின்னங்களில் ஒன்றான நரேந்திர மோடியின் உரைக்காக இன்று லண்டன் வெம்பிளி அரங்கு நிரம்பியிருந்தது. பிரித்தானிய அதிகாரவர்க்கமும் அதன் இந்திய முகங்களும் மோடியை வரவேற்க நடத்திய களியாட்ட விழாவில் பல்வேறு இந்திய அரசியல் வாதிகள் கலந்துகொண்டனர், விழாவைக் கண்டுகளிக்க அறுபதாயிரம் மக்கள் குழுமியிருந்தனர்.
நரபலி மோடி வெம்பிளியில் ஒரு மணி நேரம் வரை உரையாற்றினார். இந்தியாவின் மக்களையும், வளங்களையும், மண்ணையும் அன்னிய வியாபாரிகளின் சுரண்டலுக்கு தாரைவார்த்துக்கொடுக்க மோடி நிபந்தனையின்றி இணங்கியதற்காக வழங்கப்பட்ட வர்வேற்பு திருவிழாக் காட்சி போன்று அமைந்திருந்தது.
இந்து பாசிச முலாம் பூசப்பட்ட மோடியின் பாசிச அரசின் பின் கதவு வழியாக இந்தியாவைக் கொள்ளையடித்து மக்களை ஒட்டாண்டிகளாக்க பல்தேசிய வியாபார நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனையற்ற அனுமதியின் பிரதிபலனாக வெம்பிளி களியாட்ட விழாக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
ராஜபக்சவின் கோல்ட் ஸ்பொன்சர் லைக்கா மொபைல் நிறுவனம், பாசிச மோடியின் களியாட்ட விழாவின் கோல்ச் ஸ்பொன்சர் கூட.
புலம்பெயர் தமிழர்களின் போலித் தேசியவாதிகளும், அடிப்படைவாதிகளும் மோடி ஆட்சிக்குவந்தால் ராஜபக்சவைத் தண்டிப்பார் என மக்களை ஏமாற்றினர், இன்று புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் கொழுத்து வீங்கிய லைக்கா நிறுவனம் இந்தியாவின் ராஜபக்சவின் நட்பு வட்டத்தின் முன்வரிசையில் இடம்பிடித்துக்கொண்டது.
இந்த நிறுவனங்களில் பண வெறியின் பின்னால் அப்பாவி மக்களின் இரத்தம் உறைந்துகிடக்கிறது.
இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளை மீண்டும் பல்தேசிய வியாபாரக் கொள்ளையர்களின் காலனி நாடாக மாற்றியமைப்பதற்கு நரேந்திர மோடி போன்ற பாசிஸ்டுக்கள் நம்பிக்கைக்குரிய அடிமைகள்.
வெம்பிளி கூட்டத்தில் பேசிய பிரித்தானியப் பிரதமர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் கலந்துகொள்வதாகக் கூறினார்.
டேவிட் கமரனும் மோடியும் முதலாளித்துவ வரலாறு வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் ஒரு புள்ளியில் இணைந்துள்ளது வியப்பிற்குரியதல்ல. மக்களின் எதிரிகளான இந்த இரண்டு முகங்களும் நடத்திய கொள்ளையையும் அவர்களின் கொலை வெறியையும் மக்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர். வரலாறு பாசிஸ்ட் மோடியை மனிதகுல விரோதியாக அறிவிக்கும் காலம் நீண்ட தொலைவில் இல்லை என்பதே இக் கூட்டிணைவுகள் கூறுகின்றன.