வயிற்றைக் குமட்டும் அருவருப்போடு, எழுதுவதா இல்லையா என்று ஆயிரம் தடவைகள் யோசித்த பின்னர் எழுத விரும்பாமல் எழுதுகின்ற பதிவு இது. கோபத்தோடும், துயரத்தோடும், இன்னோரன்ன உணர்வுகளோடும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். முதல் தடவையாக எழுத விரும்பாமல் எழுதுகின்ற இந்தக் கட்டுரை யாருடைய எழுத்து முறைக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது.
சக போராளிகள் மீதும், அயலவன் மீதும், மனிதர்கள் மீதும் வெறுப்புக்கொண்ட விஷக் கிருமிகளை தவிர்க்கவியலாமல் எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அருவருப்பைத் தருகின்றது.
இவ்வாறான எழுத்துக்களும் செயல்களும் எமது சமூகத்தின் சாபக்கேடோ என துயர்கொள்ளும் ஆயிரம் சமூகப் பற்றுள்ள மனிதர்கள் நடுவே, அரசியலற்ற “விடுப்புக் கட்டுரையை” எழுதுவதற்கு என்னையும் நிர்பந்தித்தது எமது சமூகத்தின் சிந்தனை முறையே. அச்சிந்தனை முறையின் உச்சப்ட்சப் பிரதிநிதிகளான ரயாகரன் போன்றோரே!
அதனை மாற்ற ஏனையவர்களோடு இணைந்து எனது பங்களிப்பையும் வழங்க வேண்டும் ஆர்வம் அதிகரிக்கிறது. இவ்வாறான கட்டுரைகளின் முதலும் இறுதியுமாக இது அமையட்டும் என விரும்புகிறேன்.
ரயாகரன் என்ற தனிமனிதன் இதுவரை பல தடவைகள் என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை தனது எழுத்து மூலமாக நடத்தியிருக்கிறார். இன்று வரை இவற்றிற்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்று எண்ணியதில்லை.
இவர் போன்ற பலரும் இவ்வாறான தாக்குதல்களை வேவ்வேறு தளங்களில் தொடர்ச்சியாக நடத்திக் களைத்துப் போயினர். கருத்தை எதிர்கொள்ள முடியாத இவர்களின் நோக்கங்களில் ஒன்று இணையத் தளங்களில் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தி தனிமனித இயல்புகள் குறித்த விவாதங்களைத் தூண்டி தமது இருப்பை நிலை நாட்டிக் கொள்வதாகும். அல்லது ஒருவரின் கருத்தை எதிர்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் மீதான தனிப்பட்ட தாக்குதல்களை முன்வைத்து அவர்களைத் தனிமைப்படுத்துவதாகும். இவர்களைக் கருத்தில் எடுத்துக் கொள்வதால் இந்த ஆசாமிகளின் நோக்கங்களுக்கு நாங்களும் பலியாகிவிடுவோமோ என அச்சம் கொண்டிருகிறேன்.
முதலில் இவர்களின் இந்த நோக்கங்களுக்கு நான் பலியாக விரும்பியதில்லை. எனது அரசியல் கருத்துக்களை மட்டுமே எழுதி வந்திருக்கிறேன்.
இரண்டாவதாக ஆயிரம் தத்துவார்த்த அரசியல் பிரச்சனைகள் குறித்த கற்றல்களிலும் விவாதங்களிலும் எம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்குப் பதிலாக எனது நேரத்தை இந்கக் கிசுகிசுப்புக் காரர்களோடு வீணடிக்க விரும்பவில்லை.
மூன்றாவதாகவும் முக்கியமானதாகவும், இலங்கையில் மரணத்தில் வாழும் மக்கள் கூட்டமோ,உலகம் முழுவதும் வாழுகின்ற மக்கள் பற்றுள்ள மனிதர்களோ இவ்வகையான குழாயடிச் சண்டைகளை எமது இணையங்களில் தேடுவதில்லை, ஆக்கபூர்வமான கருத்துக்களையே எதிர்பார்க்கிறார்கள்.
நான்காவதாக, இந்தக் கிசுகிசுப்புப் பேர்வளிகளுக்குப் பதில் சொல்லப் போனால் அவர்கள் உற்சாகமடைந்து விடுவார்கள். ஒரு விடையத்திற்கு நட்புரீதியான பதிலை முன்வைத்தால் இன்னொரு விடயத்திற்கு தாவி தொடர்ச்சியான தாக்குதல்களை முன்வைப்பார்கள். அசோக் இனியொருவில் ரயாகரனின் தாக்குதல்களுக்குப் பதிலாக எழுதிய கடிதத்திற்கு 35 தொடர்களை எழுதி, தேடல் ஆர்வமுள்ள இணைய வாசகர்களை வெறுப்புக்கு உள்ளாக்கிய ரயாகரன் இந்த இயல்புக்கு சிறந்த குறியீடு.
ஆக, இவர்களைப் புறக்கணித்தலே சிறந்த வழிமுறை என எண்ணியிருந்தேன். இந்நிலையில், நான் குகநாதன் என்பவரைக் கடத்திக் கப்பம் கேட்டதாக ரயாகரன் என்ற கிசுகிசுப்புக்காரன் தனது இணையத் தளத்தில் எழுதியிருந்தார்.
இவ்வாறான பல பொய்களை என்மீதும் ஏனையோர் மீதும் சுமத்திவந்த இந்தப் பேர்வழி இம்முறை மக்கள் கலை இலக்கியக் கழகத்தையும் தொடர்புபடுத்தியிருப்பது என்னைப் பதில் கூற நிர்பந்திருக்கிறது.
உண்மையில் நடந்தது என்ன?
சம்பவ தினத்தன்று காலை அருள் எழிலன் இனியொருவில் பதிவு செய்வதற்காக எனது மின்னஞ்சலுக்கு ஒரு கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அதன் இறுதிப் பகுதியை மாலை அனுப்புவதாக கூறியிருந்த போதிலும் அது எனக்கு வந்து சேரவில்லை. மாலை பிரித்தானிய நேரம் ஐந்து மணியளவில் அருள் எழிலனின் கைத்தொலைபேசிக்கு அழைத்து கட்டுரை குறித்துக் கேட்டபோது, அவர்க் தான் கொமிசனர் அலுவலகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அங்கே இலங்கைத் தமிழரான குகநாதனை தமது சட்ட முறைப்பாட்டின் பேரில் தமிழகப் பொலீசார் கைது செய்திருப்பதாகவும் அது தனது அண்ணனுக்குத் குகநாதன் தரவேண்டிய பணம்குறித்த முறைப்பாடு என்றும் தெரிவித்தார்.
குகநாதனுக்கும் அவரது அண்ணனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட போது, அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று தொலை பேசியை குகநாதனிடம் கொடுத்தார். குகநாதன் தான் பெருந்தொகையான பணம் கொடுக்கவேண்டியிருப்பதாகவும் ஆனால் அதனைக் கொடுப்பதற்கு தன்னிடம் போதிய வசதிகள் இல்லை என்றும் என்னை அவர்களை சமாதானப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
குகநாதனை இதற்கு முன்னர் எனக்குத் தெரியாது என்றும் அருள் எழிலனின் அண்ணனையும் எனக்குத் தெரியாது என்றும் இதனால் இதில் நான் தலையிட விரும்பவில்லை என்று கூறினேன்.
அதற்கு, என்னை அவருக்குத் தெரியும் என்றும் நான் சுபாஸ் என்பவரின் நண்பன் என்பது தனக்குத் தெரியும் என்றும் சுபாஸ் என்பவரை பணத்திற்குப் பொறுப்பாக நிற்கும்படி என்னைக் கோருமாறும் கேட்டுக்கொண்டார்.
சுபாஸ் என்பவருடன் எனக்கு நீண்ட நாட்களாகத் தொடர்பில்லை என்பது தவிர நான் இந்த விடயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்.
தவிர, அரை லட்சம் மனிதர்களைக் கொலைசெய்த இலங்கை அரசிற்கு ஆதரவாக கொழும்பிலிருந்து தொலைக்காட்சி நடத்தும் குகநாதன் என்னிடம் உதவி கேட்பதற்கு எந்தத் தார்மீக நியாயமும் இல்லை எனவும் இந்தப் பிரச்சனையில் எந்தக் காரணம் கொண்டும் நான் தலையிட விரும்பவில்லை என்றும் கூறினேன்.
இந்த உரையாடலின் மறு நாள் காலை மூன்று மணியளவில் எனது கைத் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது குகநாதனின் மனைவியின் அழைப்பு! அவர், எனது தொலைபேசி இலக்கத்தை பிரான்சில் வசிக்கும் ஒருவர் கொடுத்ததாகக் கூறினார்.
அருட் செழியனின் தம்பி எனது நண்பர் என்று அறிந்ததாகவும் அவரூடாக பணத்தைக் கொடுப்பதற்கு தவணை கேட்கும்படியும் என்னை கேட்டார். இப்போது முழுப் பணத்தையும் தர அவர்கள் வற்புறுத்தினால் தனக்குத் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
நான் இதில் தலையிட விரும்பவில்லை என்றும் வேண்டுமானால் எனக்கு ஒரு ஆலோசனை தோன்றுகிறது என்றும் கூறினேன். அதாவது இந்தியாவில் சட்டப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதால் பிரான்சில் உள்ள சர்வதேசச் சட்டத்தரணி ஒருவரைத் தொடர்புகொண்டு அவரூடாகப் பணம் தருவதற்கு ஒரு கால எல்லையைப் பெற்றுக்கொள்ளலாமே என்று கூறினேன்.
அவருடன் இணைப்பைத் துண்டித்துக் கொண்டதும், அருள் எழிலனிடம் இது குறித்துக் கூறினேன். அதற்கு அவர் இது தனது அண்ணனின் பிரச்சனை என்றும் என்னை இதில் தலையிட வேண்டாம் என்றும் ஏமாற்றப்பட்ட பணம் தராவிட்டால் சமாதானம் என்பது கிடையாது என்றும் பணம் தரப்பட்டால் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டிருப்பது தனது அண்ணன் என்றும் என்னை இந்த விடயத்தில் இனிமேல் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இவ்வளட்வுதான் நடந்த சம்பவங்கள். இதனைத் வழமை போலத் திரிபுபடுத்தி கண், காது, மூக்கு எல்லாம் வைத்து, ம.க.இ.க போன்ற அரசியல் அமைப்புக்களையும் உள்ளே இழுத்து, ரயாகரன் எனக்கு எதிராக ஒரு சிறு கதையைத் தனது மொழியில் எழுதி இணையத்தில் உலாவவிட்டுள்ளார்.
இச்செய்தி கிடைத்ததுமே ரயாகரன் போன்ற நிலப்பிரபுத்துவ சிந்தனைச் சிற்பிகள் பலர் உற்சாகமாகிவிட்டார்கள். அவர்கள் நான் பிரித்தானியாவிலிருந்து தூண்டில் போட்டுக் குகநாதனைக் கடத்தியதாகவும் கப்பம் கேட்டதாகவும் அருவருப்பான புனைவுகளை எந்த குற்ற உணவுமின்றி கட்டவிழ்த்து விட்டுள்ளார்.
எனக்குத் தெரிந்தளவில் குகநாதன் உட்பட இலங்கை அரசிற்குச் சார்பான வியாபாரிகள் பலர் ஏற்கனவே எனக்கு எதிரான பிரச்சாரங்களை பல தளங்களில் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர்.
இலங்கை அரச ஆதரவாளர்களும் எந்தக் குறிப்பான அரசியலுமற்ற ரயாகரனும் ஒன்றுபடும் ஒரு புள்ளி எனது கருத்துக்களுக்கு எதிரான தனிநபர் தாக்குதல் என்பதாகும்.
இந்த சூழலில் குகநாதனின் மனைவியிடம் இரண்டு தடவைகள் உரையாடினேன் . அந்த உரையாடல்களை தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளேன். அப்பாவியான அந்தப் பெண்ணின் வாக்குமூலம் இங்கே பதிவிடப்படுகிறது.
Fake Encounter ரயாகரன்
நான் புலம் பெயர் நாட்டில் கட்சியோ இயக்கமோ நடத்தவில்லை. எனக்குத் தெரிந்த அல்லது நான் சரியானவை என்று நம்பும் கருத்துக்களை எழுதிவருகிறேன்.
இந்தக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத ரயாகரன் போன்றவர்கள் நடத்தும் என்கவுன்டர் தாக்குதல்கள் இனிமேல் நிறுத்த்ப்பட வேண்டும்.
இந்தியா போன்ற நாடுகளில் காவற்துறை தன்னைப் புனிதமானவர்களாக பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டு, தமக்கு எதிரானவர்களைக் கொலைசெய்யும் வழிமுறைதான் இந்த என்கவுன்டர். இதே வழிமுறையைப் பயன்படுத்தும் ரயாகரன் போன்றோர் எமது சமூகத்தின் புரையோடிப் போன புண்கள். ஆரம்பத்தில் இலங்கை அரச சார்பான தமிழ் இணையத் தளங்கள் என்மீது கிசுகிசு என்கவுன்டர் தாக்குதல்களை நடத்திவந்தன. அவற்றிற்கு நான் எதிர்வினையாற்றாமையால் நிறுத்தப்பட்டுவிட்டன.
ரயாகரன் என்னை குகநாதன் போன்ற இலங்கை அரச ஊதுகுழல்களை விடக் கேவலமாகச் சித்தரித்து எனது அரசியலை சாகடிக்க எண்ணுகின்றனர். ரயாகரனின் இந்தப் பொய்களின் பின்னால் பதுங்கியிருக்கும் பய உணர்வையும், தீய நோக்கங்களையும் குறித்துப் பேச இது சந்தர்ப்பமல்ல.
நான் புலம்பெயர் நாடுகளில் இருந்து எழுதுவதைத் தவிர எதையும் பெரிதாகச் சாதித்ததில்லை. ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் பாசிச சூழலில் வாழுகின்ற அரசியல் நண்பர்கள் கூட இதே என்கவுண்டர்களுக்குப் பலியாகின்ற அபாயகரமான சூழல் காணப்படுகின்றது.
உதாரணமாக கனடாவில் வாழ்கின்ற நண்பர் ஒருவர் பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சிபெற்றதாக இராணுவ உடையுடனான அவரது புகைப்படம் ரயாகரனது இணையத்தில் வெளியிடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆக,
அவதூறுகளையும் காட்டிக்கொடுப்புக்களையும் எவ்வாறு எதிர்கொள்வது என்பது ஆராய்வது கட்டுரையின் இன்னொரு நோக்கம்.
எவ்வறு சைபர் அவதூறுகளையும் காட்டிக்கொடுப்புக்களையும் எதிர்கொள்வது?
1. இவற்றைப் புறக்கணிப்பது. ஒரு குறித்த எல்லை வரை இவற்றைப் புறக்கணிக்கலாம். ஆனால் அது எல்லை தாண்டும் போது அதற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குகநாதனிடம் அவர் இலங்கை அரசின் ஊதுகுழல் என்பதால் இச் சம்பவத்தில் தலையிட விரும்பவில்லை என்பதைக் கூறியிருந்தேன். இப்போது பொதுத் தளத்தில் அவரிடம் நானே கப்பம் கோரியதாக என்கவுண்டர் பதிவு எழுதப்பட்டுள்ளது. இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் இதே என்கவுன்டரைப் பாவித்து (தேவை ஏற்பட்டால் ரயகரன் குகநாத ஆகியோரின் வாக்குமூலங்களோடு) இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம். ஆக, அவதூறு என்பது காட்டிக்கொடுப்பு என்ற தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது எல்லை தாண்டிய விவகாரம்.
2. இணையங்களில் கட்டுரைகளூடாக எதிர்வினையாற்றல். குறிப்பான சந்தர்ப்பங்களில் இது தேவையான ஒன்றாயினும் இது இறுதியான தீர்வாக அமைய முடியாது. இந்தச் சந்தர்ப்பத்தில் ரயாகரன் தமிழக அரசியற் கட்சி ஒன்றையும் இதனுடன் தொடர்புபடுத்தியிருப்பதால எனது கட்டுரை அவசியமானதாகக் கருதினேன்.
3. மக்களைத் திரட்டி இவர்களுக்கு எதிரான போராட்டங்களை நடத்துவது.
புலம்பெயர் நாடுகளில் சாத்தியமற்ற ஒன்றாகவே இது கருதப்பட முடியும்.
4. சட்டரீதியான அணுகு முறை.
ஐரோப்பிய முதலாளித்துவச் சட்டங்களில் இதற்கான வழிமுறைகள் எல்லைக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன. புளொக் முறை உருவான காலத்தில் ஐரோப்பாவில் நடந்த இவ்வைகையான சம்பவங்கள் சட்ட வரம்பிற்கு உட்பட்டு கையாளப்ப்பட்டிருக்கின்றன.
நான் பெற்றுக்கொண்ட சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஆக. எனது தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமன்றி, பொதுவான நோக்கத்தில் ரயாகரன், அவரது இணையத்தள உரிமையாளர் போன்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளே ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என நம்புகிறேன், இது குறித்து இனியொரு வாசகர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறான கட்டுரை ஒன்றை எழுதுதியதற்காக வாசகர்களிடமும், தோழர்களிடமும், எழுத்தாளர்களிடமும் மன்னிப்புக் கோரும் அதேவேளை அவர்களும் எனது இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.
குகநாதனின் மனைவியுடன் எனது முதலாவது உரையாடல் இங்கு பதியப்ப்படுகிறது. இவ்வாறு உரையாடல்களைப் பொதுத் தளத்தில் பதிவிடுதல் என்பது நாகரீகமானதாகக் கருதவில்லை என்றாலும் அருவருக்கத்தக்க அநாகரீகத்தைக் கையாள முதலாவதும் இறுதியுமாக ஒரு பதிவு வெளியிடப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனது நீண்ட இரண்டாவது உரையாடல் தேவையேற்பட்டால் மட்டும் வெளியிடப்படும். முதலாவது உரையாடல் பதியப்பட்ட திகதி 17.09.2010 பிரித்தானிய நேரம் இரவு 11 மணி.
மனநோயாளி ரயாகரனுக்கு இவளவு நீளமான பதிலா?அந்த ஆள் ஒரு கட்டுரை எழுதி அதற்கு சில பின்னூட்டங்களையும் போட்டுக் கொள்வார்.ஆனாலும் என்ன செய்ய சில விரும்பாத கிருமிகள் தொற்றும் போது மருத்துவம் செய்ய வேண்டியது அவசியம் இல்லையா? அப்படியான மருந்துதான் இப்போது நாவலன் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன.ராயகரனின் கட்டுரை குழப்பத்தை ஏற்படுத்துகிறது.குகனாதனும் அருள் எழிலனின் அண்ணனும் இது பற்றி விளக்கம் தர வேண்டும்.அவர்கள் இருவரும் மவுனம் சாதிப்பது ஏன்..?
//ராயகரனின் கட்டுரை குழப்பத்தை ஏற்படுத்துகிறது//
அப்புவின் நோக்கமே அதுதானே?
மோசடிக் காரன் குகன்னாதன் உடன் இணைந்து அவர் இதைத்தானே பண்றார்.
வா.ப இல் ஊசி ஏற்றுவது என்பது இது தானோ?
ரயாகரனின் பல நடவடிக்கைகள் புலிகளின் தனி நபர் கொலை தேவை என்பதை நியாபடுத்துவதாக அமைகிறது.. இவ்வளவு பேரை படுகொலை செய்த புலிகள் ரயாகரனை விடுதலை செய்தது எதிர்காலத்தில் இப்படி சமூக சிந்தனையாளர்களை ஓரங்கட்டுவார் எனற தீர்க்கதரிசனமோ என்னவோ?
well done , you are right ….
இரயாகரன் புனிதமானவர்!ஆசீர்வதிக்கப்பட்டவர்!அதனால் அவரின் எழுத்துக்களில் “தமிழ்” மக்களின் மீதான பாசம் பெருக்கெடுத்தோடும்!இப்படியான”ஒருவரை”க் குறை சொல்லவும்,சேறடிக்கவும் உங்களுக்கு எப்படி மனது வருகிறது?”சேறு”என்றாலே அது அவரின் தனிப்பட்ட”சொத்து”இல்லையா?
தமிழன் என்று ஒரு இனம் உண்டு அவர்க்கென்று ஒரு குணமுண்டு.
ரயா என்ற கோமாளிக்கு இதற்கு மேல் முக்கியத்துவம் கொடுத்தால் அதுவும் ஒரு வகையில் அவர் போன்றவர்களுக்குக் கிடைக்கும் வெற்றி தான்.
நாவலன் குகநாதனின் மனைவியின் உரையாடல் பதிவு எங்கே.? சீக்கிரமாய் போடுங்க…கேட்க ஆவலாய் உள்ளோம்!
நீங்கள் வழக்குப் போட்டதும் நான் வங்கிக் கொள்ளைப் பண விபரத்தை முன்வைக்கிறேன். எனக்குப் பல விடயங்களைத் தெரியும்.
ரயாகரன் ஒரு விஷயத்தை எழுதும் முன்னால் அது தொடர்பாக எழும் எல்லா சந்தேகங்களையும் திருப்தியளிக்கும் விதமாய் தீர்ந்த பின்னர்தான் எழுதவேண்டும். குகநாதனைப் பற்றி ரயாவுக்கு ஏதாவது தெரியுமா? தெரிந்தும் அதை மிகக் கவனமாக தன் கட்டுரையில் தவிர்த்திருக்கிறார் ரயா. அப்படியென்றால் டான் தொலைக்காட்சியை இலங்கை அரசு ஆதரவுத் தொலைக்காட்சியாக நடத்திக் கொண்டிருக்கும் குகநாதனுக்கும் ரயாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? இக்கேள்வி இங்கே மிக முக்கியமானது.
அருள்செழியனிடமுள்ள 8 மணித்தியாங் கொண்ட வீடியோ காட்சி எல்லா குழப்பங்களையும் தீர்க்கும் என நம்புகின்றேன். அதனை பெற்று வெளியிடலாமே?
ஆக்கபூர்வமற்ற ஆதாரமற்ற கட்டுரையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பது நல்லது. பலரை மன உளைச்சலுக்கு உடபடுத்தும் இவரகள் தமது சமூக கடமையை மறந்துவிடுகின்றார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இருக்க வேண்டிய முதலாவது தார்மீக கடமையை மறப்பவரகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது மற்றைய எழுத்தாளர்களுக்கும் படிப்பினையாக இருக்கும்.
அந்த மீனின் பேர் “பி ரயாகரன்யா” (a.k.a. Piranha) தானே!
பாசிசத்தை எதிர்பவர்கள் இந்திய பொலீஸ் கூடாரத்துக்குள் ‘சாவசமாய்’ பேசமுடியுமா?…
நாவலனின் கட்டுரையை வாசித்தேன்…
இதற்கு முதல் அவர் இதுபற்றி எழுதப்போவதாக எழுதிய முன்னோட்டத்தையும் வாசித்தேன்…
”நாவலன்
Posted on 09/05/2010 at 4:49 am
நட்புடன் அனைவருக்கும்,
ரயாகரன் உட்பட பலர் தமது சுய நோக்கங்களுக்காக முன்வைக்கும் அவதூறுகளுக்குப் பதில் கூற வேண்டும் என்று இதுவரை எண்ணியதில்லை. அவற்றால் எனக்கு எந்த மன உளைச்சலும் இதுவரை ஏற்பட்டதில்லை. அவதூறுக் காரர்களின் பிரதானநோக்கம் மற்றவர்களின் கவனத்தைத் தம்மை நோக்கித் திசைதிருப்புவதே. அதற்கு நான் பலியாக விரும்பியதில்லை. அரசியல் கருத்துக்களுகு மட்டும் பதில் சொல்லியிருக்கிறேன். இப்போது இந்த அவதூறுகளில் வேறு அமைப்புகளும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் பதில் கூற வேண்டிய கடமை எனக்கு உண்டு என்பதை உணர்கிறேன். இருப்பினும் கடந்த சில தினங்களாக நான் வெளி நாடு ஒன்றில் இருப்பதால் அதிலும் கணனி வசதிகளற்ற தொலைக் கிரமங்களில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டதல் விவாதங்களில் பங்காற்றவோ, அவதூறு குறித்து பதிலிறுக்கவோ இயலாத சூழல் இருந்தது. நான் திரும்பியதும் இது குறித்த விரிவான பதிலை எழுத எண்ணுகிறேன். அதுவரை நன்றிகள்..”
அதற்கு வந்த பின்னோட்டம்: (பதில்)
” Shiva
Posted on 09/05/2010 at 12:54 pm
நட்புடன் நாவலன்
தயவு செய்து பச்சைப் பொய்கள் எவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டுவது போதுமானது.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரித்து விளக்கப் பட்டு அவதூற்றுக்கான இணையத்தள அரங்கங்களில் காலத்தை வீணக்குவோருக்குத் தீனி போட மட்டுமெ உதவும்.
தயவு செய்து வீணர்களுடன் விவாத்த்தை வளர்க்காதீர்கள்.”
ஆனால், இக்கட்டுரையின் தொடக்கத்தில் இவர் இப்படி எழுதுகிறார்:-
” வயிற்றைக் குமட்டும் அருவருப்போடு, எழுதுவதா இல்லையா என்று ஆயிரம் தடவைகள் யோசித்த பின்னர் எழுத விரும்பாமல் எழுதுகின்ற பதிவு இது. கோபத்தோடும், துயரத்தோடும், இன்னோரன்ன உணர்வுகளோடும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். முதல் தடவையாக எழுத விரும்பாமல் எழுதுகின்ற இந்தக் கட்டுரை யாருடைய எழுத்து முறைக்கும் முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது.”
கட்டுரை முடிவில்…
”இவ்வாறான கட்டுரை ஒன்றை எழுதுதியதற்காக வாசகர்களிடமும், தோழர்களிடமும், எழுத்தாளர்களிடமும் மன்னிப்புக் கோரும் அதேவேளை அவர்களும் எனது இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்வார்கள் என நம்பிக்கை கொள்கிறேன்.”
இது கால்…
இடையில் நாவலன் (தனது) உண்மைகளைப் பேசியுள்ளார்…
இக்கட்டுரைக்கு முதல் நாவலன்,
” இப்போது இந்த அவதூறுகளில் வேறு அமைப்புகளும் தொடர்புபடுத்தப்பட்டிருப்பதால் பதில் கூற வேண்டிய கடமை எனக்கு உண்டு என்பதை உணர்கிறேன்.” (இக்கட்டுரையின் வரவு குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.)
பின் இக்கட்டுரையின் இறுதியில்..
‘ ”இவ்வாறான கட்டுரை ஒன்றை எழுதுதியதற்காக வாசகர்களிடமும், தோழர்களிடமும், எழுத்தாளர்களிடமும் மன்னிப்புக் கோரும் அதேவேளை …”
ஏனிந்த மாறாப்பு!
அப்படியாயின் இக்கட்டுரை யாருக்கு? எதற்கு??
இதைவிட சட்டம் பற்றி நாவலன் பேசுகிறார்!!
என்ன பேசுகிறார்?
” 4. சட்டரீதியான அணுகு முறை.
ஐரோப்பிய முதலாளித்துவச் சட்டங்களில் இதற்கான வழிமுறைகள் எல்லைக்கு உட்பட்டுக் காணப்படுகின்றன. புளொக் முறை உருவான காலத்தில் ஐரோப்பாவில் நடந்த இவ்வைகையான சம்பவங்கள் சட்ட வரம்பிற்கு உட்பட்டு கையாளப்ப்பட்டிருக்கின்றன.
நான் பெற்றுக்கொண்ட சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.”
என்று நாவலன் போடுகிறார் ஒருபோடு!
இச்சம்பவத்துடன் தொடர்புள்ள இரண்டு பத்திரிகையாளர்களின் : ‘சட்ட நடவடிக்கையும்’ , ‘சட்ட ஆலோசனையும்’ இங்கு பேசியுள்ளது…
நல்லது…
எனது அனுபவத்தின் படி…
‘இனியொரு’வில் எனது பின்னூட்டங்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, இதே ‘அரங்கத்தில்’ நான் மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தேன்.
இவ்வாறான ‘தணிக்கை’ப் பின்புலத்தைக் கொண்ட ‘இனியொரு’வில் ஏற்றப்பட்ட (பின்னூட்டங்களின்) பின்னூட்டக்காரரை இதே சட்டத்தின் முன் உங்களால் என்னசெய்யமுடியும்?
(இக்கேள்வி கூட நீங்கள் கூறும் ஐரோப்பிய முதலாளித்துவ சட்டத்துக்கு உட்பட்டதே)
ஒர் பத்திரிகையாளனுக்கு முதல் தேவை, ‘பத்திரிகை தர்மம்!’..
அது இல்லாமல் வாசகருக்குக் காட்டாதே, பூச்சாண்டி!
அடேங்கப்பா!.. ” இலங்கை அரசின் பாசிசத்திற்கு எதிராக எழுதும் நான் இலங்கை செல்ல முற்பட்டால் இதே என்கவுன்டரைப் பாவித்து (தேவை ஏற்பட்டால் ரயகரன் குகநாத ஆகியோரின் வாக்குமூலங்களோடு) இலங்கை அரச படைகள் என்னைக் கைது செய்யலாம். ஆக, அவதூறு என்பது காட்டிக்கொடுப்பு என்ற தளத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. இது எல்லை தாண்டிய விவகாரம்.”
என்று நாவலன் தனக்கு எதைத் தேடுகிறார்…
இந்தியாவில் நடந்த இந்த விவகாரத்தில் , அவரே எழுதுகிறார்..
”அருள் எழிலனின் கைத்தொலைபேசிக்கு அழைத்து கட்டுரை குறித்துக் கேட்டபோது, அவர்க் தான் கொமிசனர் அலுவலகத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அங்கே இலங்கைத் தமிழரான குகநாதனை தமது சட்ட முறைப்பாட்டின் பேரில் தமிழகப் பொலீசார் கைது செய்திருப்பதாகவும் அது தனது அண்ணனுக்குத் குகநாதன் தரவேண்டிய பணம்குறித்த முறைப்பாடு என்றும் தெரிவித்தார்.
குகநாதனுக்கும் அவரது அண்ணனுக்கும் என்ன தொடர்பு என்று கேட்ட போது, அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என்று தொலை பேசியை குகநாதனிடம் கொடுத்தார்.”
‘கொமிசனர் அலுவலகத்தில்’ -குற்றவாளியுடன் – (இச்சந்தர்ப்பத்தில்) பேசமுடிந்த நாவலனை (அதுவும் இன்னொரு பத்திரிகையாளரின் கைத் தொலைபேசியில்) ‘தமிழரங்கம்’ காட்டிக்கொடுத்ததாம்!!
(சென்னைப்பொலீசார் என்ன ‘இளிச்சவாயர்களா’?)
இல்லை இந்தியாபற்றி நாவலன் இதுவரை எழுதியது பொய்யா??
இதுவும் இல்லையென்றால், இலங்கை அரசியலில் நாவலன் எழுதிய இந்திய நிலைப்பாடு தமிழ்நாட்டு அரசியலுக்குப் பொருந்தாது என்ற நிலைப்பாடா? (தமிழ்நாட்டு அரசியல் வேறு) வைக்கோ, நெடுமாறன், …. முத்துக்குமரன்…. டி.அருள்செழியன்…
இன்னும் மர்மங்கள் இருக்கிறதா???
ரூபன்
080910
ரூபன்………….
நீங்க திருந்தறதுக்கு வழியே…………….. இல்ல!
சபா நாவலன் என்ற எழுத்தாளர் ஒருவரை அவதூறு செய்து தெருச் சண்டைக்கு ரஜகரன் அழைத்திருக்கிறார். இதனை எத்தனை எழுத்தாளர்களும் வலைப் பூக்களும் கண்டித்திருக்கின்றன? ரஜகரனை விடவும் இவர்கள் மோசமானவர்களாக எனக்குத் தெரிகிறது.
ரூபன்,
மாவோயிஸ்டுகள் கைதாகிய வேளையில் கமிசனர் அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் சென்று பேச்சுவார்த்தை நடத்திய அருந்ததி ராய் துரோகி! ஆர்ப்பாட்டத்திற்கு சென்னையில் அனுமதி மறுக்கப்பட்ட போது கமிசனர் அலுவலகத்தில் வழக்குத் தாக்குதல் செய்து வெற்றி பெறும் போராளிகள் துரோகிகள்!! டக்ளஸை கைதாக்க வேண்டுமென்று கமிசனர் அலுவலகத்தில் எப்.ஐ.அர் போட்டு பிடிவராந்து பிறப்பித்த வக்கீல்கள் துரோகிகள்!!!
தமிழகத்தில் முன்னர் தாக்குதல் செய்த வழக்கில் குகநாதன் கைது செய்யப்பட்ட போது அங்கு வக்கீல்களுடன் சென்று சமாதான பேச்சுவார்த்தை நடத்திய அருட்செழியன் செய்தது எல்லோரும் செய்வதுதான்.
ரூபன், நீங்கள் இழிச்ச வாய்களோ என்னவோ, உங்கள் ஊத்தைப் பற்கள் தெரிய நீங்கள் சிரிப்பது தெரிகிறது. உங்களுடைய நோக்கம் ரயாகரனைத் திருத்துவது கிடையாது. அவரை ஊக்கப்படுத்தி இப்படியான அவதூறுகளை எழுதச் சொல்லி மக்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்துவது மட்டும் தான்.
யார் என்ன எழுதினாலும் முஷ்டி கிளப்பிக்கொண்டு சண்டைக்கு வரும் உங்களுக்கு என்னதான் தேவையாக இருக்கிறது. உங்களின் நோக்கம் என்ன நண்பரே?
ரூபன் இவளவு பைத்தியக்காரத்தனமாக ரயாகரகரனின் ஜெராக்ஸ் பிரதியாக பேசாதீர்கள். பிரச்சனை என்னவென்றால் நாவலன் குகநாதனை நடத்தி கப்பம் கோரினார் என்கிறார். ரயா……… அதற்கு அவர் மறுப்பு எழுதுகிறார் சென்னை கமிஷனர் அலுவலகத்தின் என்ன நடந்தது என்று நீங்களாக ஒரு கற்பனையை அவிழ்த்து விடாதீர்கள். உங்களின் நோக்கம் எல்லாம் நாவலனை குறிவைப்பது….. அதற்கான காரணங்களைத் தேடிக் கண்டு பிடித்து எழுதுகிறீர்கள்.
ரூபன்
நான் (Posted on 09/05/2010 at 12:54 pm) சொன்னது:
நட்புடன் நாவலன்
தயவு செய்து பச்சைப் பொய்கள் எவை என்பதை மட்டும் சுட்டிக்காட்டுவது போதுமானது.
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் திரித்து விளக்கப் பட்டு அவதூற்றுக்கான இணையத்தள அரங்கங்களில் காலத்தை வீணக்குவோருக்குத் தீனி போட மட்டுமெ உதவும்.
தயவு செய்து வீணர்களுடன் விவாத்த்தை வளர்க்காதீர்கள்.”
என்னுடைய ஆலோசனையை நாவலன் ஓரளவு ஏற்றதனலேயே அவரது பதில் சுருக்கமாக உள்ளது என நம்புகிறேன்.
ரயாகரனுடைய பொய்கள் எலவே வேறொரு இடத்தில் மறுக்கப் பட்டுள்ளன. எனவே இப்போது அவரைப் பற்றிப் பலரும் அறிவர்.
ரயாகரன் “பிரண்யா” மீன் போல ஆள் தான். நீங்களும் அதில் சேர்த்தியா?
ரயாகரன்
பாவம், அவர் வைத்து கொண்டா வஞ்சகம் செய்கிறார்???. அரசியல் வறூமையால் செய்கிறார்.
தனது
தனிப்பட்ட தாக்குதல்களால் சுய இன்பம் காணூம் மனநோயாளியின் மீது கோபம் கொள்ள வேண்டாம். நல்ல மருத்துவரிடம் அவரை கூட்டிச்செல்வதே நாம் அவருக்கும் புரட்சிக்கு செய்யும் நன்மையாகும்!
எப்பொருள் யார் வாய் மெல்லினும்…..
நன்றி இனியொருவுக்கு.
கமிசார் சிறீ ரங்கநாதரும் (பி வி சி) வாயடைத்துப் போனாரா?
விந்தையிலும் விந்தையாயுள்ளதே!
இதில் வாயடைக்க என்ன இருக்கு?நாவலன் குறித்த பல வாறான தகவல்கள்(பணவிசயத்தில்)பிரான்சில் உலா வருகிறது.இத்தகைய தனிப்பட்ட நடாத்தைகளைத்தாண்டிக் கடத்தலெனப் பகரப்பட்டதோடு இணங்க மறுத்தே எனது விமர்சனம் எழுந்தது.அதை நாவலன் மறுத்தபோது உண்மைகளென அவர் சொல்வதை நம்புகிறேன்.மற்றும்படி நாவலனக்கும் எனக்கும் என்ன மச்சான் தனகலா?பொதுப் பிரச்சனையில் நாணயம் என்பது அவசியம்.அந்த நாணயம் இல்லாததனாற்றாம் நாம் இரண்டு இலட்சம் மக்களை அழியக் கொடுத்துவிட்டுக் குண்டி மண்ணைத் தட்டியதுபோல உரையாடுகிறோம்.
சிறீ ரங்கன்,
பூச்சி என்ற முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒரு சிறிய தொலைபேசி நிறுவனம் ஆரம்பித்த போது அதில் வேலையற்றிருந்த நானும் இணைந்திருந்தேன். அது நட்டமடைந்த போது அதற்குரிய நட்டத்தை நாம் இருவருமே ஏற்றுக்கொண்டோம். ஈ.பிஆர்.எல்.எப் அரச ஆதரவு நிலையை நான் விமர்சித்த போது அவர்கள் நான் பூச்சியை ஏமாற்றியதாக எழுதினார்கள். பின்னர் நமது “கொமிசார் நண்பர்” ரயாகரன் அதே வகையான அவதூறை எழுதினார். இது குறித்து ரமணன் பூச்சியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது அப்படியானஎந்த ஏமாற்றுச் சம்பவமும் நடைபெறவில்லை என்றும் எனக்கும் அவருக்கும் கொடுக்கல் வாங்கல் ஏதும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.
நான் சட்டநடவடிக்கை மேற்கொள்ளும் போது இந்த அவதூறையும் இணைப்பதற்கு எனது சட்ட ஆலோசகரிடம் பேசியுள்ளேன். சிறீரங்கன், நாங்கள் எமக்கிடையில் எதிரிகளல்ல. முதலில் அவதூறுகள் முன்வைக்கப்படும் போது நேரிடையாகத் தெளிவுபடுத்திவிட்டு பொதுத் தளத்தில் முன்வைக்கலாமே?
ஒரு கட்சியின் உள்ளமைப்பில் முன்வைக்க வேண்டிய தனிநபர் சார்ந்த விமர்சனங்களை பொது மேடையில் முன்வைக்கப்படும் போது குறைந்த பட்ச நாகரீகமாவது அவதூறுக் காரரர்களிடம் இருப்பதில்லை. ஒரு விடயத்திற்குப் பதில் சொன்னால் இன்னொன்றைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே அவர்கள் வாழ்கிறார்கள்.
ஒரு மூன்றாம்தர தமிழ் சினிமாவை வீடியோ ஒன்றில் 15 நிமிடத்தில் பார்த்து முடித்ததில் என்னைப் பொறுமையற்ற குட்டிபூர்சுவா என்று விமர்சித்தவர்கள் இவர்கள்.
கமிசார் பி வி சி என்னென்னவற்றிற்கெல்லம் துள்ளியடித்துக் கொண்டு இணையத்தள முட்டைகள் இடுவார்.
இது தனியே நாவலன் பற்றியதல்ல. அதனினும் முக்கியமாக. ஒரு அவதூறு பற்றியது. அந்த அவதூற்றுக்குப் பொறுப்பானவரைக் கண்டித்து ஒரு கவிதை வடிக்க மாட்டார? வேன்டம். ஒரு ஹைக்கூ? ஒரு குறள்? சின்னதாக ஒரு சுலோகம்? மூச்!
நாவலன், இந்த விஷயங்களிலிருந்து நான் கடந்துபோக விரும்புகிறேன்.நாம் அனைவருமே இந்தச் சமூகச் சாக்கடையிற்றாம் பிறந்தோம்.கம்யூனிஸ்டு என்பவர்கள் வானத்திலிருந்து பிறப்பதில்லை என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.நமக்குள் தனிப்பட்ட வாழ்வில்தப்புகள்-தவறுகள் நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. அவ்வண்ணம்,பொது அரசியல் வாழ்வில் நடந்த சதிகள்-அரசியல்பிறழ்வுகள் பொதுத் தளத்தில் விமர்சிக்கப்படவேண்டியதே. உங்களது விடையம் ஒரு பொது அரசியலாக்கப்பட்ட சூழலிற்றாம் நான் அதுள் விவாதத்தை முன்வைத்தேன்.
ஈழவிடுதலைப் போராட்ட அரசியல்வாழ்வில் நிறையக் கோபத்தோடு வாழ்கிறேன்.அக் கோபமானது நியாயமானதா இல்லைத் தப்பானதாவென காலம் பதிலளிக்கும்.
உங்கள்மீதான இன்றைய எனது அணுகுமுறையில் தவறுகள்உள்ளது. அதை,நீங்களே குறிப்பிட்டபடி தனிப்பட்டரீதியாகக் கேட்டுவிட்டுத் தொடர்ந்திருக்கலாம்.எனினும்,பொதுத் தளத்தில் விமர்சனத்தை வைத்த இரயாவின் விமர்சனத்துள் கடத்தலெனவும்,காசு-கப்பமெனவும் நீண்டவொரு குறிப்புச் சொல்லப்பட்டபோது அதை மறுத்தலெனும் போக்கிலேயே எனது கட்டுரை எழுதப்பட்டு உங்கள் கருத்துக்காக-உங்களைப் பேச வைப்பதற்காகப் பொதுத் தளத்தில் விடப்பட்டது.இரயாவினது கருத்துக்களில் உடன்பாடும் மறுப்பும் இயல்பாகவே எவருக்கும் இருக்கமுடியும்.எனக்கும் அப்படியே.சமகாலத்தில் தோழமையாக நாம் பயணித்தவர்கள்.அதன் தொடர்பில் இன்னும் பிரமிப்பும்,தோழமையும் உண்டு.அதுதற்காக அனைத்தையும் ஏற்றுத் தலையாட்டும் நிலையிலும் நான் இலஇலை!அது,ஈழவிடுதலைப் போராட்டத்துள் ஒரு பிரபாகரனை-உமா மகேஸ்வரனைத் தந்தது.அதேயொரு முனையில் இன்னொரு வணங்கா முடியை தகவமைப்பதற்கு நான் தயாரில்லை.இதையே எனக்கும்,அனைவருக்குமாக பொருத்துகிறேன்.
இத்தகைய சூழலில் தனிப்பட்ட வசை பாடலைக்கடந்து செல்லவே இப்போது விரும்புகிறேன்.எனது அணுகு முறையில் நானே உடன்பாடின்றி இப்போது தனித்தே இயங்குகிறேன்.பலதரப்பட்ட உள் நோக்கங்கொண்ட செயற்பாடுகள் தோழமையென்பதைச் சிதைக்கின்ற சூழலில் வெளியேறுவது இயல்பாகிறது.எனக்கு,எவர்மீதும் பழி சுமத்தி என்னைப் புனிதனாக்கும் எண்ணம்-நோக்கம் இல்லை! நான் கடையனுக்கும் கடையனாகவே இருக்கிறேன்-துரோகிக்கும் துரோகியாகவே இருக்கிறேன்,நாணயமற்றவனுக்கும் நாணயமற்றவனாகவே இருக்கிறேன்.
நீங்கள்,குறிப்பிடும் கருத்துக்கள்-உங்கள்மீது கூறப்பட்ட அல்லது சுமத்தப்பட்ட பழிகளை நீங்கள் இப்போது மறுப்பதை நான் பெரிதாக மதிக்கிறேன்.அது நாணயமான அரசியல் வழியில் நம்மைச் சந்திக்க வைக்கும்.இதேதாம் இரயாவின் அரசியல் அணுகுமுறைக்கும் எனது பதில்.இதில்,நானோ இரயாகரனோ அல்லது நீங்களோ தனித்து நின்று எதையுமே செய்வதற்கில்லை.எல்லோருமே ஒரு தளத்தில் மக்கள் சார்ந்து இயங்குபவர்கள்.எமது அரசியல் நாணயமாக மக்களது பக்கம்சார்ந்திருக்கும்போது இத்தகைய சேறடிப்புகள்-பழி சுமத்தலையுந்தாண்டி நாம் ஒரு அமைப்பாண்மை சார்ந்த தோழமையைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே என் கருத்து.இதுதாம் இன்றைக்கு நான்கொண்ட முடிவு.ஏனெனில், நாம் ஒடுக்கப்படும் வர்க்கத்தைச் சேர்ந்தோர்.இதைவிட வேறொரு தெரிவு நான் கோடிக்கணக்கான சொத்தைப் புரட்டி வைத்திருந்தால் ஏற்படலாம்.எனினும்,உண்மையான கம்யூனிஸ்டு அதைக் கட்சி நிதியாக்கி வர்க்க விடுதலைக்காகத் தன்னை அர்பணிப்பார்கள்.இதை வரலாற்றில் நாம் பார்த்தோம்.உங்கள் கருத்துக்கு நன்றி.
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
10.09.2010
“இத்தகைய சூழலில் தனிப்பட்ட வசை பாடலைக்கடந்து செல்லவே இப்போது விரும்புகிறேன்.” — PVசிறீ
“நாளை முதல் குடிக்க மாட்டேன்” என்ற மாதிரி ஒரு வார்த்தை.
அண்மையிற் கூட எத்தனை தனிப்பட்ட தாக்குதல்களில் பி.வி.சி. கொமிசார் இறங்கியிருக்கிறார் .
ஒரு அவதூற்றை நிபந்தனையின்றிக் கண்டிக்க இன்னமும் மனமில்லாதவராகவே தெரிகிற அவரே அதை மறந்திருக்கக் கூடும்.
பொறுத்திருந்து பார்ப்போமே.
இப்படியான அமைப்பாண்மைகள் பல கட்டிக் குட்டிசுவராகிய பின்பும் இன்னமும் புதியதைக் கட்டியெளுப்பும் நம்பிக்கை இருக்கிறதே, அது நல்லதுதான்.
நான்கு சுவருக்குள் இருந்துகொண்டு வாசகர்களைக் குஷியேத்த வதந்திகளையும் அரைகுறை தகவல்களையும் கொண்டு எதோ துப்பறியும்நாவல் போல் கதையெழுதி அபாண்டமாக பழி சுமத்தும் உங்கள் நண்பர்
இராயகரன் என்பதால் இந்த சமாளிப்பு சரிதானா? தனிநபர் தாக்குதலுக்கு இணயத்தளங்களில் இடம் கிடைக்காவிட்டால் இராயகரனிடம் எப்போதும் தஞசம் அடையலாம் என்பது உண்மைதானா?
சிலர் கனவு காண்கிறார்கள், பாதுகாப்பான அயரோப்பாவிலிருந்துகொண்டு எதையும் எழுதலாம் என்று. ஆனால் இங்குதான் அவதூறெழுதும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடபடிக்கை எடுத்தால் சரியான தண்டனை பெற்றுக்கொடுக்க முடியும்.
மேன்மை மிகு Dr .நம்பிக்கைக்கு,
மனசில என்னதான் நினைச்சிருக்கிறீர்? மனநோயாளி அது இது எண்டு…நீர் தான் லூசு!
போன பெளர்ணமி அன்றூ உலகப்புரட்சியாளர் மகாநாட்டிகு கட்டாயம் வரச்சொல்லி இருந்தார்கள்.
கமிசாரும் நானும் மாட்டு வண்டி பிடிச்சு சந்திர ம்ண்டலம் போனோம். தலைவர் கமிசார் திரட்டிப்போராடு, திரட்டிப்போராடு என்றூ பேசிய பேச்சக் கேட்டு லெனின் கண்கலங்கிப்போனார், ஸ்டாலின் கட்டிப்பிடடிச்சு முத்தம் கொடுத்தார், மாவோ காலைப் பிடிச்சு கதற அழுதார். அப்பேர்ப்பட்ட உலகப்புரட்சியாளரை பற்ற இனி எதாவது எழுதினீர்?……
எனது பின்னூட்டத்திற்கு பலரும் பதில் பின்னூட்டம் இட்டுள்ளார்கள்.
நான் ஏன் பின்னூட்டம் இடுகிறேன் என்பதற்கு அவர்கள் சில முடிபுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது.. (அடிப்படையில் இவர்கள் இது என்னுடைய கருத்துகள் என்று மறுக்கிறார்கள்)
இதை ஆரம்பம் முதலே இவ்விணையத்தளத்தில் நான் அவதானித்து வந்துள்ளேன். (‘கன்னை பரித்து’ கருத்துக்கள் இடப்படுவதாகவே நினைத்தே இங்கு பலர் பின்னூட்டம் இட்டிருப்பதாக எனக்குப் படுகிறது.)
‘தமிழரங்கத்தில்’ வெளியான (நாவல் தொடர்பான) இரயாவின் கட்டுரைக்கு, நாவலன் தனது நிலை தொடர்பான விளக்கத்தை எழுதிய பின்னரே எனது கருத்தை, கேள்விகளை பின்னூட்டமாக இட்டேன்.
இங்கே இக்கட்டுரையாளர், நாவலன்..
” நான் பெற்றுக்கொண்ட சட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் இதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.
ஆக. எனது தனிப்பட்ட நலன்களுக்காக மட்டுமன்றி, பொதுவான நோக்கத்தில் ரயாகரன், அவரது இணையத்தள உரிமையாளர் போன்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளே ஆக்கபூர்வமான விளைவுகளைத் தரும் என நம்புகிறேன், இது குறித்து இனியொரு வாசகர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.”
இதற்கான அடிப்படையிலேயே எனது கருத்தையும் முன்வைத்தேன். இது ‘பத்திரிகை தர்மத்தை’ கடைப்பிடிக்காமல் வாசகர்களுக்குப் பூச்சாண்டி காட்டுவதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இச்சம்பவங்கள் தொடபாக: அருள் எழிலனின் என்னற பத்திரிகையாளன், தாம் திட்டமிட்டே குகநாதனை வரவழைத்து சட்டத்தின் முன் மாட்டியதாகவும் இச்சம்பவத்தை வேறு ஒளிப்பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கருத்துத்தெரிவித்தும் இருந்தார்.
பின்னர் தனது கருத்தை வெளியிட்ட நாவலன், தாம் இதில் சம்மந்தபடவில்லை எனவும், தன்னைப்பற்றி இராவால் எழுதப்பட்டவை தன்னுடனா நெடுங்கோபம் காரணமாகவே எழுதப்பட்டதாகவும் இதனால் ஐரோப்பிய சட்ட ஆலோசனையை தான் பெற்றுள்ளதாகவும் கூறினார். இதன் அடிப்படையிலேயே ”இனியொரு வாசகர்களின் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.”
என்றும் எழுதியும் இருந்தார்….
இதில் நாவலன், ”இந்த சூழலில் குகநாதனின் மனைவியிடம் இரண்டு தடவைகள் உரையாடினேன் . அந்த உரையாடல்களை தவிர்க்க முடியாமல் பதிவுசெய்துள்ளேன்.” எனவும் எழுதியிருந்தார். (இப்பதிவு குகநாதனின் மனைவியின் அனுமதியுன் பதிவு செய்யப்பட்டதா என்பதை நாவலன் இங்கு குறிப்பிடவில்லை)
ஐரோப்பிய சட்டத்தின் படி ஒருவரின் அனுமதி இன்றி, (அவருக்குத் தெரியப்படுத்தாமல்) ஒலி, ஒளி, புகைப்பட பதிவுகள் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதை பத்திரிகைத்துறை, இணையத்துறை சார்ந்தவர்கள் செய்வது பாரதூரமான குற்றமாகக் கருதப்படுவதுடன் பத்திரிகை தர்மத்துக்கும் முரணானது. (இதை அவர்களின் அனுமதியின்றி வெளியிடுவது அதைவிட கடுமையான குற்றத்துக்கும் உரியது!)
இவற்றை வாசகரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கே எழுதுகிறேன்…
இதை எழுதும்போது, இணையத்தில் அவரது தொலைபேசி பதிவு நாவலனால் இடப்பட்டும் இருந்தது. (இதை பல பின்னூட்டக்காரரும் கோரியிருந்தது – பத்திரிகைதர்மத்துக்கு முரணாக – என்பதும் குறிப்பிடத்தக்கது!)
ஆதாரம்:
”குகநாதனின் மனைவியுடன் எனது முதலாவது உரையாடல் இங்கு பதியப்ப்படுகிறது. இவ்வாறு உரையாடல்களைப் பொதுத் தளத்தில் பதிவிடுதல் என்பது நாகரீகமானதாகக் கருதவில்லை என்றாலும் அருவருக்கத்தக்க அநாகரீகத்தைக் கையாள முதலாவதும் இறுதியுமாக ஒரு பதிவு வெளியிடப்படுவது தவிர்க்க முடியாததாகின்றது. எனது நீண்ட இரண்டாவது உரையாடல் தேவையேற்பட்டால் மட்டும் வெளியிடப்படும். முதலாவது உரையாடல் பதியப்பட்ட திகதி 17.09.2010 பிரித்தானிய நேரம் இரவு 11 மணி.
– எனக்கு எதிராகத் தொலை பேசியில் அவதூறுகள் பரப்பப்படுவதாக அறிந்ததும் ஒரு ஆதாரத்திற்காக சம்பவம் நடந்து பலநாட்களின் பின்னர் இவ்விரு உரையாடல்களும் பதிவுசெய்ய்ப்பட்டன. – ”
இதைப் பார்த்ததும் நாவலன் மீது எஞ்சியிருந்த மதிப்பும் அறவே அழிந்துவிட்டது (என்னளவில்). எப்பேற்பட்ட நிலையிலும் ஒரு பத்திரிகையாளன் பத்திரிகை தர்மத்தை காக்கவேண்டும்…
இனிச்செல்வதற்கு என்ன இருக்கிறது..
(வாசகர்களுக்கு ஓரளவு விளங்கியிருக்கும் எனவும், பத்திரிகைத்துறை சார்ந்தவர்களுக்கு -ஐரோபா – தெளிவாகப்புரிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்)
பி.கு
அருந்ததி ராய் போன்ற பத்திரிகையாளருடன், அருள் எழிலன் போன்றோரை ஒப்பிட்டு பின்னூட்டமிட்டு என்குக் கருத்துத் தெரிவித்த நன்பரை நினைக்க சிரிப்பும் பதிதாபமும் தான் என்கு ஏற்படுகிறது..
ரூபன்
100910
நட்புடன்,
சிறீரங்கனுக்கு…..
”நமக்குள் தனிப்பட்ட வாழ்வில் தப்புகள்-தவறுகள் நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. அவ்வண்ணம்,பொது அரசியல் வாழ்வில் நடந்த சதிகள்-அரசியல்பிறழ்வுகள் பொதுத் தளத்தில் விமர்சிக்கப்படவேண்டியதே. உங்களது விடையம் ஒரு பொது அரசியலாக்கப்பட்ட சூழலிற்றாம் நான் அதுள் விவாதத்தை முன்வைத்தேன்.”
(வாசகரின் கவனத்துக்கு… எனது கருத்துக்கள் (இச்சந்தர்ப்பத்தில் நாவலின் இக்கட்டுரைக்கு வெளியானது)…
தாழ்மையுடன் சிறிரங்கனுக்கு…
”’உட்சுற்று’ என்பது உங்களின்’ ‘நமக்குள் தனிப்பட்ட வாழ்வில்தப்புகள்-தவறுகள் ‘ நிகழ்வதென்பது சாத்தியம்.இதை நீங்கள் குறிப்பிடுவதுபோன்று உட்சுற்றில் விவாதிக்க வேண்டியதே. ”
தாழ்மையுடன் சிறீரங்கனுக்கு……
கட்சியில் இருக்கும் அல்லது புரட்சிக்காரரின்?!(தனிப்பட்ட) நாளாந்த ‘டயரியா’ உட்சுற்று!
நீங்கள் இதற்கு தெளிவாக்கப் பதிலிடவும், வாசகருக்கு…
நடைமுறை என்ற உரைகல் எங்கே இன்னும் கொல்லைப்புறத்திலா ‘சுருப்பிடித்துக்’ கிடக்கிறது!!!!!..
தனிப்பட்ட வாழ்க்கைக்கு ‘கட்சிக்குள்’ …. ”உற்சுற்று” உண்டா?
தெரியாமல் கேட்கும்…
ரூபன்
100910
ரூபன்
ஆதாரம் இல்லாமல் சபா நாவலன் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார் ரயாகரன் என்பவர். அதுவும் சும்மா குற்றமில்லை; ஒருவரை கடத்தி கப்பம் கேட்டதாக கிரிமினல் குற்றம்! அது பற்றி மூச்சுவிடக் கூட துணிவில்லாத பச்சோந்தியான நீங்கள், குகன்னாதனின் மனைவியின் குரலை பதிவுசெய்ததாக குற்றம் சாட்டுகிறீர்கள். ஆதரமில்லாமல் கிரிமினல் குற்றம் சுமத்தியதை ஆதரிக்கும் நீங்கள் தான் கிரிமினல்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தேவை?
ரூபன் நீங்கள் தெய்வத்திற்கு சமம். அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும். சும்மா நின்று அறு அறு என்று அறுக்கிறீர்களே.
ரூபன் ! நீங்கள் தெய்வத்துக்கு சமனானவர். அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும். அறுஅறு என்று அறுத்து தொலைக்கிறீர்கள்.
குகநாதன் பிழைப்பின் மர்மம் விலக இருபது ஆண்டுகளாயின!அப்போதெல்லாம் புலித் தோல் போர்த்தியிருந்தார்!”பாவத்தின் சம்பளம்”
கம்யூனிஸ்டு என்பவர்களுக்கு குகனாதனுடன் என்ன வேலை ஐய்யா ?
ரூபனின் பின்னூட்டங்களை வெளியிட்டு இனியொரு டொட்கொம் எம்மை வாட்டி வதைக்கிறது!
நான் கேட்டுக்கொண்டபடி தனது கருத்துக்களை நாவலன் பதிவு செய்திருக்கிறார்.அவருக்கு என் நன்றிகள். இங்கு நாவலன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை முழுமையாக மறுத்திருப்பதால் ரயாகரன் இதற்குரிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.அவ்வாறு முன்வைக்க அவர் தவறினால் அது ஆதாரமற்ற அவதூறாகவே கருதவேண்டியிருக்கும்.ஆனால் அதேவேளை தேசம் நெற் குகநாதனின் பேட்டியை பிரசுரம் செய்ததோடு நாவலன் மீது குற்றம் சுமத்தியுள்ளது.எனவே நாவலனோ அல்லது அருட்செழியனோ நடந்தது என்ன என்பதை அனைவரும் அறியும்வண்ணம் முழு உண்மைகளை ஆதாரத்துடன் வெளியிடுவது நல்லது என நான் கருதுகிறேன்.
உண்மைகளை நான் எழுதியிருக்கிறேன். இந்தப் பிர்சனை அருள் செழியன் குகநாதன் குறித்த பிரச்சனை. அருள் எழிலனுக்கு இன்றும் கூட நான் தொலைபேசினேன். நான் எழுதத் தாமதித்தற்குரிய காரணத்தையும் முன்னைய எனது பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன். இம்மாதன் 6ம் திகதிவரை நான் நேபாளத்தில் இருந்தேன். ஜெயபாலன் கீழ்த்தரமான சேறடிப்பில் அருள் எழிலன் கூலிக்கு வேலை செய்வது போல் கூட எழுதியுள்ளார். அரசியல் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்ள ஜெயபாலன் – ரயா – குகநாதன் கூட்டணி உருவாகியிருக்கிறது. நான் எதையும் எதிர்கொள்ளத் தயார்.
இரயாகரன்-நாவலன்,இடையில் நாம்…
நாவலன்,வணக்கம்!தங்கள் மீதான இந்த விஷயங்களை மறுத்துரைக்கும் உங்களை நம்புகிறோம்.நாம் இதைச் சொல்லித்தாம் உங்களுக்கு “நன் நடத்தை”முத்திரை தரவேண்டுமென்பதில்லை!ஜெயபாலன்,இராஜாகரன்,ஸ்ரீரங்கன் சுமத்தும் “பழி-அல்லது அவதூறு”நீங்கள் உண்மையாக இருக்கும்போது பலமற்ற பொய்களே!
உங்கள்மீது தவறாக நாம் அவதூறு செய்யுமிடத்து, அதற்கு மான நஷ்டவீடு செய்து வழக்குத் தொடங்க முடியுதானே?-அதைச் செய்யுங்கள்.
எனக்கு,இராஜகரனும்,ஜெயபாலனும், நீங்களும் என்னைப் போன்ற சக தோழர்களே-மக்களது பக்கஞ் சார்ந்திருக்கும்போது.இது,என்னைக் குறித்தும் உங்களுக்கும் அப்படியே!
உங்களது நேர்மையின்மீது அவசியமற்று இரஜாகரன்-ஸ்ரீரங்கன் அல்லது வேறொருவர் பழி சுமத்துவதாக நீங்கள் உணர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்.அது உங்கள் மானப் பிரச்சனை-மனிதவுரிமைக்குட்பட்ட உரிமை!
நான்,உங்களது கருத்துக்களை,நீங்கள் உங்கள்மீது சமத்தப்பட்ட பழிகளை மறுக்கும்போது, அதை வரவேற்கிறேன்-நம்புகிறேன்.
இரஜாகரன்மீது மீள மீளக்கருத்துகள்கூறாது, அவர் கூறியதன் “உண்மை-பொய்மை”த் தனத்தை நிரூபியுங்கள்.அல்லது, அவரே அதை நிரூபிக்கட்டும்.தவறாக மற்றவர்கள்மீது இரயா கருத்துக்கட்டினால் அதை நானே எதிர்ப்பவன்.
இன்று, இரயாவைப் புலிப்பினாமி-இன்போமர் எனச் சொன்னவனும் நான்தான்.அதே இடத்தில் தோழனெக் கொண்டாடுபவனும் நானே!
கடந்த கால் நூற்றாண்டில் இரயாகரன் முன் வைத்த அரசியல்சார் கருத்துக்கள் அசைக்க முடியாதவை.அவை குறித்து நீண்ட ஆய்வுகளுக்கூடாக என்னால் “சரியானதென” நிறுவ முடியும்.இது நிற்க.
தற்போது, இராயாவினது “பழி”சுமத்தலிலிருந்து நீங்கள் கருத்துக்களை முன்வைப்பது நாணயமானது.அதைச் செய்யும்போது இடையில் சகுனி வேலை செய்யும்”கொட்டைகள்-மசாலா”வென்றவர்களையெண்ணிக் கவலையாக இருக்கிறது.
நாம்,இராயாவைச் சந்தேகிக்கலாம்.ஆனால்,அவர் கூறிய அல்லது ஆய்வுக்குட்பட்ட அவரது கருத்துக்களை நீர்த்துப்போக வைப்பதை நான் வன்மையாக எதிர்க்கிறேன்.அதுபோல நியாயமின்றி இரயாகரன் மற்றவர்கள்மீது “பழி”சுமத்தினால் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.அது,இரயாவாக இருந்தாலென்ன அல்லது ஸ்ரீரங்கன்,நாவலன் இதையுங்கடந்து கடவுளாகவிருந்தாலென்ன!
அடுத்து, குகநாதன் எனது ஊரவன்.எனக்குத் தெரியும் அவரது நாணயம்.இன்று, புலம் பெயர் வர்த்தகர்களில் நாணயமற்றவர் எவரென உதராணம் தேடினால்,அது முதலில் குகநாதனையே குறித்துரைக்கும்.எனவே,குகநாதன் தரும் சாட்சியம் எப்பவும்போலவே சதி நிரம்பியது.இரயாகரன் குகநாதனை நம்பிக் கருத்துக் கூறியிருக்க முடியாது!
குகநாதனது திருகுதாளங்களை இரயா அறிந்தவரே.எனினும்,எதிரிகளென எவரையும் கொள்வதற்கில்லை.குகநாதனது உளவியல்சார்ந்தவொழுக்கம் இந்த முதலாளியச் சமூகத்தின் அறுவடை.அதுபேலவே “நமது”அணுகு முறையும் இந்த ஈழப்போராட்ட இயக்கவாத அணுகுமுறையின் தொடர்ச்சியே!
உண்மையும்,நேர்மையான அணுகுமுறையுமுள்ள எந்த மனிதரையும் எந்தக் கொம்பரும் அசைக்க முடியாது.அந்த நம்பிக்கையோடுதாம் நான் இதுவரை சமகாலப் போராட்டங்குறித்து விமர்சித்து வருகிறேன்.
உண்மையோடு இருக்கும் நீங்கள், இதையிட்ட அலட்டத் தேவையில்லை!
அதேபோல்,இரயாகரன் தானே “பழி”சுமத்தும் கட்டுரையை உங்களை நோக்கி எழுதியதால், அதன், நியாயத் தன்மையை நிலை நாட்டவேண்டும்.அவர் அதைச் செய்யாதுபோனால் நாம் அவரது கருத்துக்களையும்”பழி”சுமத்தல்களையும் இன்னும் வலுவாக அம்பலப்படுத்துவோம்.
இரயாகரன் தமிழ்ச் சூழலில் அரசியலைத் துறக்கும்படியான முறைமையில் செயல்முனையை விரிவாக்குவோம்.அவ்வண்ணமே,இது எனக்கும்-உங்களுக்கும் பொருந்தும்!
நன்றி
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
12.09.2010
அருள் செழியன் மற்றும் குகநாதன் என்ற இரண்டு ஊடகத்துறை வர்த்தகர்களிடையேயான பணப்பிரச்சனை வழக்குக் குறித்தான என்மீதான சேறடிப்புக் குறித்து தேசம் நெட் ஆசிரியர் ஜெயபாலனிடம் நான் தொலைபேசியில் உரையாடிய போது நான் ஐந்து சதமும் இதில் பெற்றிருக்க மாட்டேன் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஆனால் குகநாதன் விவகாரத்தில் நான் மௌனமாக இருந்தது குற்றம் என்றும் இதனாலேயே அவர் கட்டுரை எழுதியதாகவும் கூறுகிறார். நான் எழுதிய கட்டுரையில் அருள் செழியனைக் கண்டிக்கவில்லையாம். ஆனால் குகநாதனை அரச உளவாளி என்று எழுதியுள்ளேனாம். உண்மையில் ரயாகரன் எழுதிய கட்டுரைக்கான பதில் கட்டுரையே நான் எழுதியது. அதில் இலங்கை அரச சார்பு ஊடகம் நடத்தும் குகநாதனுடன் ரயாகரன் கூட்டுச் சேர்ந்திருப்பது குறித்தே நான் கூறியிருந்தேன். சம்பவம் குறித்து நான் எழுத முடியாது ஏனெனில் நான் அது குறித்து எனக்கு எதிவும் தெரியாது. எனக்கு இதுகுறித்து ஏதும் தெரியாது என்பதை அருள் எழிலன், அருள் செழியன் ஆகியோர் தெளிவாகக் கூறியுள்ளனர், ஆக தெரியாத சம்பவம் குறித்து நான் கருத்துக் கூற வேண்டிய தேவை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ரயாகரனின் அவதூறுகள் தனக்குப் பயனுள்ளவையாக அனமையும் போது மவுனங் காத்து அந்த நேர்மையீனம் அம்பல்கமானதும் ஜெயபாலன் நொண்டிச் சாட்டுச் சொல்லுவது நல்ல மனிதர்களின் செய்லல்ல.
“இரயாகரன் – நாவலன்,இடையில் நாம்” — இதென்ன பம்மாத்து.
ஒரு அவதூறு – அதற்கு ஆதாரபூர்வமான மறுப்பு. இதற்கிடையில் நிற்கப் பி.வி.சி. என்ன இலங்கைச் சுப்பிறியங்கோட்டு நீதவானா?
பி.வி.சி. இன்றுவரை ரயாகரனின் அவதூறுகளையும் தான் அவருடன் ஒத்தூதியதையும் பற்றி மனம் வருந்தியோ அவதூறுகளைக் கண்டித்தோ ஒரு சொற் பேசியவரல்ல. ரயாகரன் கையும் மெய்யுமாக அகப் ப்ட்டுச் செமத்தியாக வாங்கிக் கட்டுகிற இத் தருணத்தில் சபா நாவலனுக்கு “நற்போதனைகளை” வழங்குகிறார்.
ரயாகரனின் சாயம் கழருகிறது, வேடம் கலைகிறது. அவரது பொய்களைப் பகிரங்கமாகக் கண்டிக்க ஆயத்தமற்ற எவரும் கொட்டுகிற அனுதாபச் சொற்கள் வஞ்சகமானவை என்றே சொல்வேன்.
றயாகரன் என்னதான் எழுதியிருப்பினும் அது குறித்து றயா நேரடியாகத் தனது கருத்துக்களை-உண்மைகளை நிறுவ வேண்டுமேயொழியத் தேசம் நெற்றில் ஜெயபாலன் எழுதியதை வைத்துத் தனது கருத்துக்களைச்சீரமைக்க முடியாது.
குகநாதனை எந்த வகையிலுமே நம்புவதற்கான நாணயமான மனிதனாகக்கொள்வதற்கில்லை!
எத்தனை பித்தலாட்டம்,இந்தப் பிரச்சனையின் நிமித்தம் அரங்கேறுகிறது-யாரிந்தக் குகநாதன்?
குகநாதனுக்கும் மக்கள் அரசியலுக்கும் என்ன தொடர்பு?
குகநாதன் பிரச்சனையில் நாவலனை உரைப்பது எதன் நோக்கத்திலிருந்து?
இடதுசாரிய அரசியல் பேசும் எவரையும் ஓரங் கட்டுவதென்பது மக்கள்நல-எதிர்ப்பு அரசியல் நடவடிக்கையாக இருக்க முடியுமா?
றயாகரன் தனது கட்டுரைக்கான விளக்கங்களைத் தானே தந்து,நாவலன் “கடத்தல்-கப்பம்” கேட்கும் “சமூகவிரோதிதான்” என்று நிறுவ வேண்டும்.
இதை அவர் செய்ய வக்கின்றி இருக்கும் இந்த நேரத்தில்.
தேசம் நெற்றை இதுவரை திட்டித் தீர்த்துவிட்டதை மறந்து சந்தர்ப்வாத அரசியலைத் திட்டமிட்டு நடத்துறார்.
தமிழரங்க றயா தேசம் நெட்டின் கட்டுரையை-பேட்டியை வெட்டி ஒட்டித் தனது கட்டுரைக்குப் பலம்-ஆதாரம் தேடுகிறாரா?
குறித்து றயாகரன் எந்தவுரிமையுடன் தேசம் நெற்றைப் பயன் படுத்துகிறார்?
ஜெயபாலனை இந்திய உளவாளியென்று”அம்பலப்”படுத்திய நேர்மைமிகு றயாவுக்கு தேசம் நெற்றின் உளவு அவசியம்?
“ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரை”என்று தேசம் நெற்றைத் தனது வங்கோரத்து அரசியலுக்குப் பலமாகப் பயன் படுத்துவதில் கவனம்றயாகரப் புரட்சிக்கு அதிகமாகிறது!
அடப்பாவமே….
இவ்வளவு சந்தர்ப்பவாதியை இதுவரை எவருமே காண முடியாது.றயாகரனுக்குத் தேவை தனது பொய்களை நிலைப்படுத்துவது.அதன்படி எவரையும்- எதையும்,எப்படியும் பயன் படுத்தித் தனது பொய்யை உண்மையாக்குவது.சுப்பர் அண்ணே-சுப்பர்!
என்ன பிழைப்பு இது?
தேசம் நெற்றுக் கட்டுரையை-பேட்டியை வெட்டித் தனது தமிழ் அரங்கத்தில் போடுறவர்,இதுவரை தேசம் நெற்றின் மற்றைய எத்தனையோ நல்ல கட்டுரைகளைப் பேட்டிகளை வெளியிடாதவர்-வெட்டி ஒட்டாதவர் என்பது கவனிக்க வேண்டியது.
றயாவின் அரசியலே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய சந்தர்ப்பவாதம்.இதில வந்து… மற்றவர்களை ஓரம்கட்டுவதற்கு எவருடனும் கூட்டணி…
றயாவைத் தவிர எவருமே இப்படி”புரட்சி”பேச முடியாது-உண்மை பேச முடியாது!
குகநாதன் வேலனை ஊரைச் சுருட்டி வெளீநாடு வந்தவர் ஊரிலேயே இவர்களூக்கு கள்ளர் குடும்பம் என்றூதான் பெயர் இந்த சுத்து மாத்துக்காரனை தர்மராக காட்டுவதை தர்மம் தாங்காது.
நாவலன் இதில் தொடர்பில்லை என்பதை உறுதியாகச் சொல்கிறார்.
சம்பவத்தோடு தொடர்புள்ள அருள் எழிலன் அருள் செழியன் போன்ற இருவருமே இதை உறுதிப் படுத்துகிறார்கள். இன்று நாவலன் மீது அவதூறு செய்ய அரச கூலிகள் என்ற அளவில் தேசம்நெற்றுக்கும் எதிரி என்ற வகையில் ரஜாகரனுக்கும், அரச ஆதரவு வியாபாரி என்ற அளவில் குகன்னாதனுக்கும் தேவை இருக்கிறது. இவர்களின் அவதூறுகள் நாவலனை கீரோ ஆக்கி இருக்கிறது. புதிய திசை, இனி ஒரு , குரல் வெப் , சன்ரைஸ் ஆகியவற்றின் முக்கியத் துவத்தை காட்டி னிற்க்கிறது.
ப.வி.ஸ்ரீரங்கன் கருத்து மட்டும் இப்போது கவனத்தை தூண்டுகிறது.
என்.எல்.எப்.ரி குமார் யார் தெரியும்மோ ***
ஒரு வருடத்திற்கு முன் வரை தேசம்னெடின் விளம்பரம் குகநாதன் ஐயாவின் டான் டிவியில் போட்டார்கள். பிறகு அவர்களின் கொன்ஸ், ஜயபால் கொம்பனியின் லிட்டில் எய்ட் விளம்பரம் வந்தது. இப்போ தேசம்னெட்டில் குகநாதனின் பேட்டி வருகிறது. எப்படி முடிச்சு? முடிச்சை அவிட்டல் டக்ளசின் படம் தெரியும். ரயாண்ணை குந்தி இருந்து சிரித்து கொண்டிருப்பார்.
முருகா ! நீயும் *** புகையிலை விற்றதால் தானோ இபபடி கோவணத்தோடு நிற்கிறாய் ?
என்று ஒரு கேலி பேச்சு உண்டு.
கொமிசார் ரயாகரன் நாவலன் குகநாதனின் மனைவியிடம் சர்வதேச சட்ட வல்லுனர்களைப் பொறுப்பு நிக்கச் சொன்னது கப்பம் கேட்டதற்கு சமமாகும் என்று சொல்கிறாரே?
நாவலனை குகநாதனின் மனைவி பொறுப்பு நிற்க சொல்லிக் கேட்டதற்கு, அதை மறுத்த அவர் அப்படி வேண்டுமானால் சர்வதேச சட்ட வல்லுனர்களை அணுகலாமே என்று சொல்லியிருக்கிறார். இதைப் போய்க் கப்பம் என்று சொல்லுகிறதே இந்த மனநோய்! இதற்கெல்லம் பதில் எழுத வெளிக்கிட்ட நாவலனைத் தான் குறை சொல்ல வேண்டும்.
இவர்கள் இப்படி அடிபட்டுக் கொள்வதைப் பார்த்தால் எனக்கு வெறுப்பாக இருக்கிறது. மக்கள் இனிமேல் உங்கள் இணையத்தளங்களைப் பார்க்க மாட்டார்கள். இப்படிப் பப்ளிக்கில் அடிபடுவதை விட்டுவிட்டு எங்காவது சந்தித்துக் குத்துப்பட்டுச் செத்துப் போங்கள்.