உலகில் ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் காணப்படும் சனாதிபதி முறைமையின் சாயல் கொண்டு காணப்படும் இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை அந்நாடுகளின் சனாதிபதிகளுக்கு இல்லாத அதைவிட மேலான அதிகாரங்களை கொண்டுள்ளமை அவதானிக்கத்தக்கது. இன்று இலங்கையில் நிலவும் மிகவும் மோசமான சட்டமில்லாத்தன்மை (Lawlessness), சர்வதிகார ஆட்சி என்பன நிறைவேற்று அதிகாரத்தின் விளைவு, எனவே இதுபற்றி ஓர் கருத்தாடல் செய்வதும் அவ்வதிகாரம் எவ்வாறு சனநாயகத்திற்கும், சனநாயக சட்டவாட்சிக்கும் சாவுமணியடித்துள்ளது, எவ்வாறு மீள்வது என்பன பற்றி அவதானம் செலுத்துவதும் இக் கட்டுரையின் நோக்கமாகும்.
சனாதிபதி, சட்டமாதிபர், பிரதம நீதியரசர் உட்பட பலர் நாட்டில் கலகங்களை ஏற்படுத்தி இராணுவ சதி ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்தனர். இராணுவமும் பொலிஸ் படையும் தயார் நிலையில் இருந்தது. ஆயுதங்கள் வரவழைக்கப்பட்டிருந்தன, களஞ்சியசாலைகளில் ஆயுதங்கள் காணாமல் போயிருந்தன, மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை வெளிப்படையாக அரசாங்கமே மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்தன. என்றாலும் அது பொலிஸ்மாதிபர், தேர்தல் ஆணையாளர் வினைத்திறனால் முறியடிக்கப்பட்டது. தவறு அமெரிக்காவும், இந்தியாவும் அச்சுறுத்தியதால் கைவிடப்பட்டதோடு மூட்டைக்கட்டிக்கொண்டு சொந்த வீட்டை நோக்கி நகரவேண்டிய நிர்ப்பந்தம் முன்னாள் சனாதிபதிக்கு ஏற்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓர் விடயம் இதில் எது உண்மை எது பொய் என்பது சந்தேகமானது.
அவைப்பற்றி அறியவும் நடவடிக்கையெடுக்கவும் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகள் இருக்கின்றனவா? என நோக்கும் போது, குறித்த விடயம் தொடர்பில் முறைப்பாடு உள்ளதால் (இல்லாவிட்டாலும்) சம்பந்தப்பட்டவர்களிடம் அதுபற்றி வாக்கு மூலம் பெறுவது சட்டரீதியானதே இதில் சட்டமாதிபர் , பிரதம நீதியரசர் முன்னாள் சனாதிபதியிடமும் வாக்குமூலம் பதியப்படலாம். இதற்கு அரசியலமைப்பில் எவ்விட தடங்களும் இல்லை. அதேபோல அவர்களுக்கெதிராக வழக்கு தொடர்வதற்கும் தடங்கள் ஏதும் இல்லை ஆனால் போதுமான சாட்சிகள் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது, முன்னாள் சனாதிபதியின், பிரதம நீதியரசர் என்போரின் கௌரவத்தையும் சிறப்புரிமையையும் பாதுகாக்க உதவும். எவ்வாறாயினும் இதன் உண்மைத்தன்மை பற்றி விசாரணைகளை புலனாய்வுப்பிரிவும், குற்றத்தடுப்புப் பிரிவும் மேற்கொண்டு வருகின்றன.
மேலே குறிப்பிட்டதுபோல இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி வரையறையற்ற அதிகாரம் கொண்டு காணப்படுகின்றார். ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இரண்டாம் மன்றங்கள் காணப்படுகிறன. இது சனாதிபதியின் அதிகாரமேவலுக்கு ஓரளவு தடையாக இருக்கும் இலங்கையில் அவ்வாறான தன்மை இல்லை. 43வது பிரதம நீதியரசர் பதவி நீக்கம் தொடர்பில் இலங்கையில் உருவான சட்டரீதியான விவாதத்தின் போது ‘இலங்கைப் பாராளுமன்றமே மீயுயர்ந்தது, இதற்கு ஆணைவழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை’ என உயர்நீதி மன்றம் தீர்த்தது. என்றாலும் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு மறுமுனையானது. அரசியலமைப்பின் பிரகாரம் ‘அரசியலமைப்பே மீயுயர்ந்தது ‘ எனக்கூறுகின்றது.
மறுபக்கம் சனாதிபதி 17ம் சீர்த்திருத்தத்தினை இல்லாமையாக்கி 18ம் சீர்த்திருத்தத்திற்கு ஊடாக இலங்கையில் இயங்கி வந்த சுதந்திர ஆணைக்குழுக்களையும், நீதித்துறையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த 18ம் சீர்த்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கியது இதே 43ம் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்க அம்மையார்தான். இவரது தீர்மானத்தினையும், ஏற்கனவே கொண்டுவர முனைந்த 19ம் சீர்த்திருத்தத்திற்கான சில அரசியலமைப்பு சார்ந்த பொருட்கோடல் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்புகளையும் ஒப்பிட்டு பார்த்தால் இது நன்கு தெரியும். அவர் செய்த பிழையின் விளைவை அவரே அறுவடை செய்து அனுபவித்துக்கொண்டார்.
ஆனால் பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை இலங்கைக்கு புதிதாக 18ம் சிர்த்திருத்தத்தின் மூலம் அறிமுகமாகிறது.
இது வரவேற்கத்தக்கது என்றாலும் உண்மையில் இது பாராளுமன்றத்துக்கு பொறுப்பு கூறுவதற்கா? அல்லது பாராளுமன்றத்தையும் கட்டுப்படுத்துவதற்கா?, எனும் கேள்வி கடந்த காலங்களில் உலகில் மிகப்பெரிய அமைச்சர்கள் குழுவோடு வேலை செய்யும் சனாதிபதியின் செயற்பாடுகளிலிருந்து எழுகிறது .தமக்கு தேவையானவருக்கு, அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவருக்கு அமைச்சுப்பதவி அல்லது பிரதி அமைச்சுப்பதவி அல்லது அமைச்சரவை அந்தஸ்து இல்லா அமைச்சுபபதவிகள் வழங்கப்பட்டன. இவை மோசடியில் ஈடுபடவும், ஈடுபட்டதை மறைக்கவும் பயன்படுத்தப்பட்டவையே.
இலங்கையில் எல்லா பதவிகளுக்கும் ஏன் இராணுவத்தில் சேர்வதற்குக் கூட கல்வித்தகைமை தேவை ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கும், அமைச்சராகவும் எந்த கல்வித்தகைமையும் தேவையில்லை. போதைப்பொருள் கடத்தல், பாதாள உலக கோஷ்டி உறவு,பணம்,பாலியல் துஸ்பிரயோகம் செய்தல், சிறுவர்கள்(400 பேரை) துஸ்பிரயோகம் செய்தல், உடலுறுப்புக்கள் விற்பனை, வியாபாரம், விபச்சாரம் செய்தல், சினிமாத்துறையிலிருந்தல் சனாதிபதியின் உறவினராயிருத்தல் எனும் தகுதிகளுக்கு மாத்திரமே மக்கள் அங்கீகாரம் வழங்குகின்றனர்.
பதிலாக மதுபானம், உணவு, சொகுசு வாழ்க்கை, பணம், ஒப்பந்தக்கார திட்டங்களை மக்கள் பெற்றுக்கொள்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல்தேசிய கம்பனிகள், மிகப்பெரிய வர்த்தகர்கள், பண முதலைகளே இவர்களை ஃஆட்சியாளர்களை தீர்மானிக்கின்றனர், என்பது சனநாயகத்தின் சாவுமணியும், சாபக்கேடுமாகும். நிறைவேற்றதிகாரம் என்றாலே அங்கு வலுவேறாக்கம், நீதித்துறை சுதந்திரம் இருக்காது. (இதற்காக மக்கள் சுதந்திரமாகவும் இன்பமாகவும் வாழும் ஆட்சிமுறைமை சனநாயக ஆட்சிமுறைமை எனக்கூற முற்படவில்லை. மாறாக ஓரளவேனும் சுதந்திரத்தினை எதிர்பார்க்கலாம்). சனநாயகம் என்பது பெரும்பான்மைவாதமாக மாறும்போது சிறுபான்மையினர் பாதிக்கப்படுவர். இலங்கையில் இது பல காலமாக நடைபெற்று வருகின்றது.
நிறைவேற்று அதிகாரம், எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களையும், கட்சிகளையும் பணம், பதவி என்பவற்றுக்காகவும் ஊழல் மோசடிகளை கண்டு கொள்ளாமலிருக்கவும் (என உறுதி மொழியுடன்) தன்னோடு இணைத்துக்கொண்டு, தனக்காக மாற்றி, ஆதரவினை பெற்றுக்கொண்டு சனநாயகத்தின் பேரில் தனக்கு தேவையானவற்றையெல்லாம் செய்கின்றனர். இதனை நாம் கடந்த காலங்களில் து.சுஇ பிரேமதாச, சந்திரிகா, மகிந்த என எல்லா நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிகளின் ஆட்சிகளிலும் கண்டு அனுபவித்துள்ளோம்.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன, பாராளுமன்றம் தனது அதிகாரத்தினை பிரயோகிக்காமை, சபாநாயகராக தமது உறவினரை நியமிக்கின்றமை, நீதித்துறையின் சுதந்திரமின்மையும் நீதியரசர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பும்,மக்களின் மௌனமும,; கண்டு கொள்ளாமையும், உயிரச்சுறுத்தலும் என இக்காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் இலங்கை அரசாங்கம் இராணுவத்திற்கு வழங்கிய அதிமுக்கியத்துவம் இந்நிலைமை மேலும் மோசமாக காரணமாயிருந்தது.
இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சினையை தீர்க்க அரசாங்கமும்,மக்கள் பிரதிநிதிகளும் ஒரு போதும்தயாரில்லாத நிலையில், இவர்கள் வாழ்வதற்கான உத்தியாக பொது எதிரியாக தமிழீழ விடுதலைப்புலிகளை பாவிக்கின்றனர். இதனை நாம் கடந்தகாலங்களில் நன்கு அனுபவித்தள்ளோம். டுவுவுநு இல்லை என்றால் அரசியலே இல்லை, தமிழர், தமிழ்மொழி இல்லை என்றால் இலங்கையில் வரலாறே இல்லை என்ற நிலைமையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
இன்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி அதனையே தொடர்கின்றார். தனது முதலாவது நியமனம் அரசியலமைப்பிற்கு முரணான அப்பட்டமான மீறல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெரும் கட்சியின் தலைவர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவைப் பெறும் நம்பிக்கையான ஒருவரே பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பொதுத்தேர்தல் போல பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இருக்கும் போது பாராளுமன்றத்தினை கூட்டாமலே பிரதமராக எதிர்க்கட்சி தலைவர் ரணில்விக்கிரமசிங்கவை நியமித்தார். இது தாய்ச் சட்டத்திற்கு முரணானது.
இலங்கையின் தாய்ச்சட்டம் அரசியலமைப்புச்சட்டம் அதுவே மீயுயர்ந்தது அதன்படி சனாதிபதி தொடர்ந்து ஒரு அமைச்சரவையை நியமித்தார் . இதன் போதும் பாராளுமன்றம் கூட்டப்பட்டிருக்கவுமில்லை. பெரும்பான்மை நிரூபிக்கப்படவும் இல்லை. இது அரசியலமைப்பினை வேண்டுமென்றே மீறியமை என்பதோடு குற்றமும் ஆகும். 43ம் பிரதம நீதியரசர் மீண்;டும் பதவியேற்றமை அடுத்த அரசியலமைப்பு மீறல் அதாவது ஏற்கனவே முன்னாள் சனாதிபதியினால் ஒருவர் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டு பதவி விலகாமல் பதவி விலக்கப்படாமல் இருக்கும் போது அது வரிதானது எனக் கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில், நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள ஒருவர் பிரதமநீதியரசராக பதவியேற்பது நீதித்துறையை கேள்விக்குட்படுத்துவதுடன் இலங்கையின் கறைபடிந்த நீதித்துறையை சுட்டிக்காட்டுகின்றது. இவ்விடயத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் சரியான முடிவினை எடுக்கத் தவறியுள்ளமையை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. புதவி நியமனம் வரிதானதென நீதிமன்றமே கூறவேண்டுமேயொழிய சனாதிபதி கூற முடியாது.
இலங்கையில் சட்டவாட்சி அதுவும் சனநாயக சட்டவாட்சி நீதித்துறை சுதந்திரம் என்பவற்றை இல்லா தொழித்தமையில் நீதித்துறைக்கு பாரிய பங்குண்டு பிரதம நீதியரசராக சரன் என் சில்வா பொறுப்பேற்ற பின்பே இந்நிலை மிகவும் மோசமாக உருவாகி, தலைவிரித்தாடத்தொடங்கியது. அதற்கு முன் உயர்நீதிமன்றம் பல உன்னதமான வழக்குத் தீர்ப்புகளை, பொருட்கோடல்களை துரனiஉயைட யுஉவiஎளைஅ கோட்பாட்டின் கீழ் வழங்கிவந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர்களை வெறும் பொம்மையாகவும்; சட்டத்தரணிகளையும் வெறும் பேச்சாளராகவும், கேட்போராகவும் மாற்றிய பெருமையும், தனக்கு தேவைப்போல தீர்ப்பு வழங்கி நாட்டில் பிரச்சினையை அதிகரித்தப் பெருமை முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவையே சாரும்.
அண்மைய காலங்களில் Executive Friendly Judiciary இது எவ்வாறானது என்றால் சனாதிபதியின் செயலுக்கு அவரே தீர்ப்பு சொல்லும் ஓர் விடயம் இதுவே இதுவரை நடந்து வந்துள்ளது. இலங்கை வரலாற்றில் தனது பிரத்தியேக ஆலோசகரை பிரதமநீதியரசராக நியமிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதிக்கு இருந்துள்ளது. அதற்கு எதிரான அரசியலமைப்பு ஏற்பாடுகளை அவர் இல்லாமலாக்கி பாராளுமன்றத்தினையும் மௌனமாக்கி சாதித்தார் .இதற்கு துணை நின்றவர் முன்னாள் பிரதமநீதியரசர் 43 சிராணி பண்டாரநாயக்க என்பது தான் வேடிக்கை. அதற்கான பிரதி உபகாரத்தையும் அவர் பெற்றுக்கொண்டார்.
தொடரும்…………..
mohanarajan23@gmail.com
சட்டத்தரணி எஸ்.மோகனராஜன்
LL.B (Hons) (Colombo), DIE (Col), DAPS (UK)