Tuesday, March 10, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

தேர்தல் திருவிழா : இராமியா

இனியொரு... by இனியொரு...
05/11/2016
in பிரதான பதிவுகள் | Principle posts, இன்றைய செய்திகள், அரசியல்
0 0
1
Home பிரதான பதிவுகள் | Principle posts

elections“தேர்தலில் வாக்களிப்பது ஜனநாயகக் கடமை” என்றும் “வாக்களியுங்கள்” என்றும் மட்டுமே பரப்புரை கொண்டு இருந்த முதலாளித்துவ அரசும் ஊடகங்களும், இந்த 2016ஆம் ஆண்டு, சட்ட மன்றத் தேர்தலில் ஒரு வளர்ச்சியைத் திணித்து உள்ளன. இப்பொழுது “வாக்களிப்போம்” அதுவும் “100% “நேர்மையாக” வாக்களிப்போம்” என்று மக்களே கூறுவதாகப் பரப்புரை செய்கிறார்கள்.

வழக்கம் போல மாவோயிஸ்ட் உள்ளிட்ட நக்சலைட்டுக் குழுக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்றும், மக்கள் புரட்சிக்கு அணியம் ஆகும்படியும் அறைகூவல் விடுத்துள்ளன.

மக்களும் வழக்கம் போல் நக்சலைட்டுகளின் அறைகூவலைக் கண்டு கொள்ளாமல், பெருவாரியாக வாக்களித்து உள்ளனர். மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் 80%க்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. இது மிகப் பெரும்பான்மையான மக்கள் ஒரு நாள் இல்லாவிட்டால் இன்னொரு நாள் தேர்தல் மூலம் விடிவு காலம் பிறக்கும் என்று நம்புவதைக் காட்டுகிறது; அல்லது தேர்தல் என்பதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு திருவிழா என்று நினைக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பின் கீழ் நடக்கும் தேர்தல்களின் மூலம் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியுமா?

முடியும் என்று ஸ்டாலினுடைய மரணத்திற்குப் பின் சிலர் வாதிட்டனர். முடியாது என்றும் சிலர் எதிர்வாதம் செய்தனர். இந்த விவாதம் நடந்து கொண்டு இருக்கையில் 1970ஆம் ஆண்டில் சால்வடார் அல்லெண்டே தேர்தலில் சிலி நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்றாமல், முதலாளித்துவ அமைப்புக்குக் கட்டுப்பட்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபராய்ப் பதவி ஏற்றதால், உழவும் தொழிலும் உழைப்பவர்க்கே சொந்தம் என்று உடனடியாக, ஒரே நாளில் சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் அதற்கான் பாதையைச் செப்பனிடத் தொடங்கினார். உள்நாட்டு எதிரிகளும், வெளிநாட்டு எதிரிகளும் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை. எதிர்ப்பதாக இருந்தாலும் அதை ஜனநாயக முறையில் தான் எதிர்க்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. உள்நாட்டு எதிரிகள் வெளிநாட்டு (அமெரிக்காவின்) உளவுத் துறை மற்றும் இராணுவ உதவியுடன் “ஜனநாயக” அரசைக் கவிழ்த்து விட்டு, ஒரு பொம்மை அரசை நிறுவினர்.

அதாவது முதலாளிகளுக்கு / முதலாளித்துவத்திற்கு ஆதரவானவர்களைத் தேர்ந்தெடுக்கத் தான் இந்தத் தேர்தலே ஒழிய, உழைக்கும் மக்களின் விடுதலைக்காக அல்ல என்று இந்நிகழ்வு தெளிவாகக் காட்டியது / காட்டுகிறது.

அப்படி என்றால் தேர்தலினால் எவ்விதப் பயனும் இல்லையா? நக்சலைட்டுக் குழுவினர்கள் கூறுவது போல் தேர்தலை முற்றிலுமாக நிராகரிப்பது தான் தீர்வா?

அப்படி எல்லாம் ஒரேயடியாகச் சொல்லி விட முடியாது. லெனின் வழக்கமாகக் கூறுவது போல் சூழ்நிலையைப் பொறுத்துத் தான் எது சரி என்று சொல்ல முடியும். இரஷ்யாவில் போல்ஷிவிக்குகள் தேர்தலில் / நாடாளுமன்றத்தில் பங்கு கொண்டார்கள். நாடாளுமன்றத்தைத் தங்கள் கொள்கைகளை மக்களிடம் சொல்வதற்கான மேடையாகப் பயன்படுத்தினார்கள்; நாடாளுமன்றச் செயல்பாட்டை வலுவிழக்கச் செய்தார்கள்; இறுதியில் அதைக் கலைக்கவும் வழிவகுத்தார்கள். அந்த அளவிற்கு போல்ஷிவிக்குகள் புரட்சிகரத் தத்துவத்தை மக்களிடையே பரப்பி வைத்து இருந்தார்கள்.

இந்தியாவில் உள்ள நிலை என்ன? இங்கு தேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சிகளும் உள்ளன. தேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகளுக்குக் “கூலி உயர்வு” என்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அக்கட்சிகளில் உள்ள தொண்ர்டகள் (அல்லது வேறு யாரோ கூட) அதைத் தாண்டிப் பேசிவிட்டால் “நக்சல் வாடை வீசுகிறது” என்று மற்றவர்களை “அச்சுறுத்தி” விடுவார்கள். இந்தப் பொதுவுடைமைக் கட்சிகளுக்குச் சோஷலிச சமூகத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லை என்பது மட்டும் அல்ல; சிறு சிறு சமூகச் சீர்திருத்தஙகளைக் கொண்டு வரவேண்டும் என்ற அக்கறையும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கூலி உயர்வு மட்டுமே.

தேர்தலை நிராகரிக்கும் பொதுவுடைமைக் கட்சிகள் பல குழுக்களாக உள்ளன. இக்கட்சிகள் மன உறுதி கொண்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு உள்ளன. இவை தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை ஒவ்வொரு தேர்தலின் போதும் கேட்டுக் கொள்கின்றன. ஆனால் மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் பெருந்திரளாகச் சென்று வாக்களிக்கின்றனர். இக்குழுக்களில் எந்த ஒரு குழுவும் தாங்கள் சொல்வதை மக்கள் ஏன கேட்பது இல்லை என்று சுயவிமர்சனம் செய்து கொள்வதே இல்லை.

தேர்தலில் பங்கு கொள்ளும் பொதுவுடைமைக் கட்சிகள் “கூலி உயர்வு” வட்டத்தில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், தேர்தலில் ஈடுபடாத பொதுவுடைமைக் கட்சிகள், நடக்க வாய்ப்பு இல்லாத புரட்சிக்குத் “தலைமை தாங்கும்” கனவில் சிக்கித் தவிக்கிறார்கள்.

புரட்சி நடக்க வேண்டும் என்றால் அங்கே புரட்சிகரத் தத்துவம் இருக்க வேண்டும் என்று லெனின் கூறினார். இந்தியவில் மிக மிக …… மிகப் பெரும்பான்மையான மக்களுக்குப் புரட்சிகரத் தத்துவத்தின் அரிச்சுவடியே தெரியாது.

தெலங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தின் போது அவர்களை ஒடுக்க இந்திய அரசு இராணுவ வீரர்களையும், ஆயுதங்களையும் போராட்டக் களத்திற்குத் தொடர் வண்டிகளின் மூலம் கொண்டு சென்றது. இதைச் சுட்டிக் காட்டிய ஸ்டாலின் புரட்சிகர உணர்வை ஒரு சிறு பகுதியில் வளர்த்து எடுத்ததற்கு மாறாக நாடு முழுவதும் வளர்த்து எடுத்து இருந்திருந்தால், தொடர் வண்டித் தொழிலாளர்கள் தெலங்கானா போராட்டப் பகுதிகளுக்கு, இராணுவத்தையும் ஆயுதங்களையும் ஏற்றிச் செல்வதற்கு எதிராக வேலை நிறுத்தம் செய்ய முடிந்து இருக்கும் அல்லவா என்று கேட்டார்.

தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளும் சரி! பங்கு கொள்ளாத கட்சிகளும் சரி! ஸ்டாலினுடைய இந்த வினாவிற்கு விடை தேடப் பிடிவாதமாக மறுத்துக் கொண்டு இருக்கின்றன.

இன்று நம் முன் உள்ள பணி நம்முடைய பிரச்சினைகள் அனைத்துக்கும் சோஷலிச அமைப்பில் மட்டுமே தீர்வு காண முடியும் என்று மக்களுக்குப் புரிய வைப்பது தான். அப்பணி பெரும் அளவிற்குச் செய்து முடிக்கும் வரையில் தேர்தலில் பங்கு கொள்வதால் எந்த விதப் பயனும் ஏற்பட்டு விடப் போவது இல்லை. “மேற்கண்ட யாரும் இல்லை” (None Of The Above – NOTA) என்று வாக்களிப்பதும் கூட வீண் முயற்சியே.

பொதுவுடைமைத் தத்துவத்தின் பால் ஈர்க்கப்ட்டு உள்ள தோழர்களே! புரட்சிகரத் தத்துவம் மக்களிடையே நிலவாமல் புரட்சி வராது. ஆகவே மக்களிடையே புரட்சிகரச் சிந்தனையைப் பரப்புங்கள். இன்று மக்களை அழுத்திக் கொண்டு இருக்கும் எந்த ஒரு பிரச்சினைக்கும் முதலாளித்துவமே மூல காரணமாக உள்ளது; சோஷலிசமே அதற்குத் தீர்வாக உள்ளது. இதை மக்களுக்கு உணர்த்தி அவர்ளைப் புரட்சிகரத் தத்துவத்தின் பால் ஆற்றுப்படுத்துவதை முதன்மையான பணியாகக் கொள்ளுங்கள்.

பொது மக்களே! கடந்த 68 ஆண்டுகளாகத் தேர்தலில் வாக்களிக்கின்றீர்களே! ஏதாவது முன்னேற்றத்தைக் கண்டு இருக்கிறீர்களா? தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் உண்மையாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஆளும் வர்க்கமாக உள்ள முதலாளிகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் சேவகம் செய்வதற்கு, அவர்களுடைய நலன்களைக் காப்பதற்காக உங்களை அடக்கி ஒடுக்குவதற்கு வேலை ஆணையை (Appointment order) கொடுக்கிறீர்கள்.

இது தேவையா? சிந்தித்துப் பாருங்கள். தேர்தலைப் புறக்கணியுங்கள்.

இராமியா

(இக்கட்டுரை சிந்தனையாளன் மே 2016 இதழில் வெளி வந்துள்ளது.)

Share this:

  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Click to print (Opens in new window) Print
  • Pocket
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
டேவிட் கமரன் யாழ்பாணத்தில் தொடக்கிய சினிமா முடிவிற்கு வருகிறது

அற்புதமான ஊழல் நாடுகள் : பிரித்தானிய பிரதமர் பெருமிதம்

Comments 1

  1. Android Os Training says:
    10 years ago

    Nice post , I think the procedure for voting must be improved . Since most of the peoples working in other countries or states eventhough cities are not able to post their votes correctly .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...